இயற்கை உணவு / சிறுதானிய உணவு - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இயற்கை உணவு / சிறுதானிய உணவு (இயற்கை உணவு / சிறுதானிய உணவு)
இயற்கை உணவு / சிறுதானிய உணவு
MeenakshiDate: Thursday, 13 Feb 2014, 6:40 PM | Message # 11
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
hello rawa

kambai uravaithu araithu seithal innum taste irrukkum, mudiyatha pachathil kambu mavu use panni seiyalam. chinna vayasula gramathukku pogum pothu paati seivanga appo ellam enna pattikadu samayal panni podarenu solli thittuvom, ippo athoda arumai theriuthu aana USAla kidaikka mateguthu.

Added (13 Feb 2014, 6:40 PM)
---------------------------------------------
கம்பு இட்லி



என்னென்ன தேவை?

கம்பு அல்லது கம்பரிசி - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
ஆமணக்கு விதை -  6 (விருப்பபட்டால்),
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

முழு கம்பு எனில் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கம்பரிசி எனில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்து 3  மணிநேரம் ஊறவைக்கவும். உளுந்தை அரைமணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் முதலில் வெந்தயம், ஆமணக்கு போட்டு 10 நிமிடம்  அரைக்கவும். வெந்தயம் நுரைத்து வரும்போது கம்பு சேர்த்து இட்லிமாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். உளுந்தை நுரைக்க அரைத்து எடுத்து, கம்பு  மாவுடன் கலந்து 6 மணி நேரம் வைக்கவும். மாவில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வைத்து பிறகு இட்லியாக ஊற்றவும்.

கத்தரிக்காய் கொத்சு, தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 4 ஆமணக்கு விதை இட்லியை மிருதுவாக்கும். தோலுடன் இருந்தால் கம்பு முழுதாக  அரைபடாது, கலரும் சிறிது வேறுபடும். எண்ணெய் தடவி இட்லி வார்ப்பதைத் தவிர்க்கவும். இட்லியின் மேல் பகுதி வறண்டு விடும். துணியில்  ஊற்றினால் மிருதுவாக கம்புக்கு உண்டான வாசனையுடன் சுவையாக இருக்கும். உப்பை கடைசியில் சேர்ப்பதால் மாவு அதிகம் புளிப்பதைத்  தவிர்க்கலாம்

hello friends intha recipe konjanalikku munnal veru oru sitel potten oru friend seithu parthuttu romba nalla vanthathunu sonnanga neengalum try panni parunga pa. antha friend first ulunthai uravithu araithu athanudan kambu mavu 1:4 ratio serthu pannatha sonnanga.


Message edited by Meenakshi - Thursday, 13 Feb 2014, 9:02 PM
 
RAWALIKADate: Thursday, 13 Feb 2014, 10:01 PM | Message # 12
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Meenakshi ()
hello rawa kambai uravaithu araithu seithal innum taste irrukkum,

நன்றி நன்றி

இப்போ என்னை பார்த்து இளிக்கும் அந்த கம்பு பாக்கெட ஒரு வழி பண்ணறேன்.
 
NathasaaDate: Thursday, 13 Feb 2014, 11:45 PM | Message # 13
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
hi meena
thnks for sharing the recipes

let me try and tell
 
MeenakshiDate: Saturday, 15 Feb 2014, 7:59 AM | Message # 14
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
திணை அடை

தேவையான பொருட்கள்:
திணை அரிசி – 1 கப்கடலைப் பருப்பு – 1 கப்உளுத்தம்பருப்பு – 3/4 கப்ப. மிளகாய், மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு – எல்லாம் வழக்கமான அடைக்குப் போடும் அதே அளவு

திணை அரிசி, பருப்புகள் எல்லாவற்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியைத் தனியாகவும், இரண்டு பருப்புகளையும் கலந்தும் அரைக்க வேண்டும். அரிசி அரைக்கும் போது மிளகாய் சமாச்சாரங்களையும் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நான் எப்போதும் மாவோடு சேர்த்தே கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை இரண்டையும் அரைத்து விடுவது வழக்கம்.  பிறகு பருப்புகளை மைய்ய அரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மாவைக் கலந்து வைத்து விடலாம். ஒரு அரை மணி நேரமாவது மாவை அப்படியே வைத்திருந்தால் அடை நன்றாக வரும். வெங்காயம், சுரைக்காய், முட்டை கோஸ் என மேலதிக சமாச்சாரங்கள் அவரவர் விருப்பம் போலக் கலந்துகொண்டு அடையை வார்க்க ஆரம்பிக்கலாம். மாவை கெட்டியாக அரைத்து கையில் எடுத்து கல்லில் தட்டுவது ஒரு விதம். கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக் கொண்டு தோசை போலவே வார்ப்பது ஒரு விதம். அவரவர் வழக்கப்படி அடையை தட்டவோ வார்க்கவோ செய்யலாம்.

பின் குறிப்பு 1: ரெகுலர் அடை அளவுக்கு மொறு மொறுப்பு இருக்காதே தவிர்த்து ருசியில் எந்தக் குறையும் இருக்காது.


Message edited by Meenakshi - Saturday, 15 Feb 2014, 8:01 AM
 
MeenakshiDate: Saturday, 15 Feb 2014, 8:03 AM | Message # 15
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
திணை தோசை:

திணை அரிசி – 1 கப்புழுங்கல் அரிசி – 1/2 கப்உளுத்தம் பருப்பு – 1/2 கப்வெந்தயம் – 1 ஸ்பூன்

இவை எல்லாவற்றையும் தனித் தனியாக மூன்று மணி நேரமாவது ஊற வைக்கவும். தோசைக்கு மாவு அரைப்பது போலவே அரைத்து, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 4 மணி நேரமாவது மாவு புளிக்க வேண்டும். பிறகென்ன,  தோசை வார்க்க வேண்டியதுதான்.


Message edited by Meenakshi - Saturday, 15 Feb 2014, 8:04 AM
 
MeenakshiDate: Monday, 17 Feb 2014, 2:52 AM | Message # 16
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
பச்சைப் பயறு புலாவ்

என்னென்ன தேவை?

அவல் ஊறவைத்தது - 1 கப், 
முளைகட்டிய பச்சைப் பயறு - 2 கப், 
தேங்காய்த் துருவல் - 1 கப், 
பூண்டு - 3 பல், 
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், 
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன், 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, 
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?  

தேங்காய்த் துருவல், பூண்டு, மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் இவற்றை ஊறவைத்த அவலுடன் சேர்த்துப் பச்சைப் பயறு சேர்க்கவும். அதோடு,  உப்பு மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்துக் கிளறவும்.

மூலம், மலச்சிக்கல், சிறுநீர்க் கடுப்பு ஆகியவற்றுக்கு சிறந்த உணவு.
 
NathasaaDate: Wednesday, 19 Feb 2014, 9:09 PM | Message # 17
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnx u for the recipe post meena
 
MeenakshiDate: Thursday, 20 Feb 2014, 7:13 AM | Message # 18
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
ஓட்ஸ் டயட் ரொட்டி

ஓட்ஸ் - 2 கப்
கோதுமை மாவு - ஒரு கப்
தேவையான அளவு - உப்பு
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடித்த ஓட்ஸ் மாவும் கோதுமை மாவும் 2:1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து மூடி வைத்துவிட வேண்டும்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு கல்லில் போட்டு எடுத்தால் டயட் ரொட்டி தயார்.


Message edited by Meenakshi - Thursday, 20 Feb 2014, 7:14 AM
 
MeenatchiDate: Thursday, 20 Feb 2014, 10:44 AM | Message # 19
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
ஹாய் மீனாக்ஷி தேங்க்ஸ் உங்க ரெசிப்பிக்கு.இன்னைகு அப்போ ஓட்ஸ் ரொட்டி தான் nightku?

Meenatchi .S
 
NathasaaDate: Thursday, 20 Feb 2014, 1:06 PM | Message # 20
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
thnx for the oats diet rotty
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இயற்கை உணவு / சிறுதானிய உணவு (இயற்கை உணவு / சிறுதானிய உணவு)
Search: