இயற்கை உணவு / சிறுதானிய உணவு - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இயற்கை உணவு / சிறுதானிய உணவு (இயற்கை உணவு / சிறுதானிய உணவு)
இயற்கை உணவு / சிறுதானிய உணவு
RAWALIKADate: Thursday, 20 Feb 2014, 2:22 PM | Message # 21
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote RAWALIKA ()
நன்றி நன்றி இப்போ என்னை பார்த்து இளிக்கும் அந்த கம்பு பாக்கெட ஒரு வழி பண்ணறேன்.
Quote Meenakshi ()
hello rawa kambai uravaithu araithu seithal innum taste irrukkum, mudiyatha pachathil kambu mavu use panni seiyalam.

மீனாக்ஷி 

நிஜமாவே கம்பு என்னை பார்த்து இளிச்சிடுச்சு.

நான் அடைக்கு அரைச்சது கடைசில தோசைக்கு ஆகிடுச்சு!

எப்படியோங்க கம்பு உள்ள போனா சரி....ஹிஹிஹி
 
MeenakshiDate: Tuesday, 25 Feb 2014, 7:39 AM | Message # 22
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
அவல் தோசை



அவல்-1 கப்
தயிர்-1 கப்
பச்சரிசி-1 கப்
புழுங்கல் அரிசி-1 கப்
சாதம்-1ஸ்பூன்
உப்பு

அவல் மற்றும் தயிரை மிக்ஸ் செய்து ஊற விடவும். பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியை தனியாக ஊற விடவும். இதனுடன் வேக வைத்த ஒரு ஸ்பூன் சாதத்தை சேர்த்து அரைக்கவும். 

அவல் மிக்சையும் தனியாக அரைத்து அனைத்தையும் கலந்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
 
MeenakshiDate: Wednesday, 26 Feb 2014, 4:25 AM | Message # 23
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
கேழ்வரகு புட்டு

தேவையானவை:
கேழ்வரகு மாவு_ஒரு கப்
சர்க்கரை_தேவைக்கு
தேங்காய்ப்பூ_2 டீஸ்பூன்
ஏலக்காய்_1
உப்பு_ துளி அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவில் துளி  உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்),தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.
தண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும்.தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.
பிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமி மூடி வைக்கவும்.
பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.இல்லையென்றால் பிசறிய மாவை மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து  ஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் நைஸாகிவிடும்.அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு மாவை அவிக்கவும்.

ஆவி வந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ,சர்க்கரை,ஏலத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.இப்போது சத்தான,சுவையான,இனிப்பான‌ கேழ்வரகு புட்டு சாப்பிடத்தயார்.


Message edited by Meenakshi - Wednesday, 26 Feb 2014, 4:27 AM
 
MeenakshiDate: Monday, 03 Mar 2014, 5:26 AM | Message # 24
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
உளுந்தங்கஞ்சி


உடைந்த உளுந்து - கால் கிலோ
அரிசிக்குருணை - 1 கப்
வெந்தயம் - 25 கிராம்
பூண்டு - 10 பல்
தேங்காய் - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
தேங்காயை துருவிக் கொள்ளுங்கள். உளுந்து, அரிசி, வெந்தயத்தைச் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். வெந்து வரும்போது உப்பு, பூண்டு, தேங்காய்ப்பூவைப் போட்டு மேலும் 2 கொதிவிட்டு இறக்கி விடுங்கள். சுவையும் மணமும் நிறைந்த உளுந்தங்கஞ்சி ரெடி!
 
MeenakshiDate: Friday, 21 Mar 2014, 8:18 AM | Message # 25
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
அத்திப்பழப் பணியாரம்


என்னென்ன தேவை? 

அத்திப்பழம் - 6, 
மைதா மாவு - 2 கப், 
அரிசி மாவு - 1 கப், 
வெல்லம் - 2 கப், 
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, 
உப்பு, நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கேற்ப, 
தேங்காய்ப் பால் - 1 கப்.
எப்படிச் செய்வது?

அத்திப் பழத்தின் தோல் நீக்கி மசிக்கவும். மைதா, அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும். அதில் வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதையும் விட்டு  தேங்காய்ப் பால், ஏலக்காய் தூள் சேர்த்து அப்பம் மாவு பதத்துக்குக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு மாவை  ஊற்றி சுட்டு எடுக்கவும். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
 
MeenatchiDate: Saturday, 22 Mar 2014, 7:40 PM | Message # 26
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hi meenakshi,
  thanks for ur healthy dishes....


Meenatchi .S
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இயற்கை உணவு / சிறுதானிய உணவு (இயற்கை உணவு / சிறுதானிய உணவு)
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Search: