இயற்கை உணவு / சிறுதானிய உணவு - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இயற்கை உணவு / சிறுதானிய உணவு (இயற்கை உணவு / சிறுதானிய உணவு)
இயற்கை உணவு / சிறுதானிய உணவு
JeniliyaDate: Friday, 07 Feb 2014, 9:34 AM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
இயற்கை உணவு / சிறுதானிய உணவு பற்றிய தகவல்களை பகிரவும்
 
MeenakshiDate: Friday, 07 Feb 2014, 7:32 PM | Message # 2
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
அருகம்புல் சர்பத்



என்னென்ன தேவை?

இளசான அருகம்புல் - ஒரு கட்டு, 
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன், 
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன், 
தேன் - ஒரு கரண்டி,
 இஞ்சி - சிறு துண்டு, 
உப்பு - 1/2 சிட்டிகை.
எப்படிச் செய்வது?

அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மெல்லிதாக அரைக்கவும். அரைத்த பிறகு அதை வடிகட்டி எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு, 
ஐஸ் சேர்த்துப் பருகவும். 

*பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமம்.
 
shanDate: Saturday, 08 Feb 2014, 8:01 AM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் மீனு ,
உடல் நிலைக்கு தேவையான சர்பத் .....
 
MeenakshiDate: Saturday, 08 Feb 2014, 9:30 PM | Message # 4
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
கொய்யா சட்டினி


என்னென்ன தேவை?

கொய்யாப் பழம் - 4, 
காய்ந்த மிளகாய் - 3, 
சீரகம் - 1/4 டீஸ்பூன், 
தேங்காய் துருவல்  - 2 டீஸ்பூன், 
வெல்லம் - சிறிதளவு, 
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

கடாயில் சிறிதளவு எண்ணெயை விட்டு மிளகாய், சீரகம், கொய்யா துண்டுகளை சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.  அதில் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும்.
 
MeenakshiDate: Monday, 10 Feb 2014, 6:38 AM | Message # 5
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
திணை பேடா

என்னென்ன தேவை? 

திணை மாவு - 1/2 கப், 
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
பொடி செய்த வெல்லம் - 1/4 கப், 
ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன், 
நெய் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 20 மி.லி., 
முந்திரி - 25 கிராம்.
எப்படிச் செய்வது?  

திணை மாவுடன் தேங்காய்த் துருவல், வெல்லப் பொடி, ஏலக்காய்த் தூள், நெய், தேங்காய்ப் பால் விட்டுக் கலந்து பிசையவும். பேடாவாகத் தட்டும்  அளவுக்கு பதம் இருக்க வேண்டும். வட்ட வடிவில் திணை மாவுக் கலவையை தட்டி, நடுவில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

நார்ச்சத்து மிகுந்த உணவு. நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லது.மலச்சிக்கலைத் தீர்க்கும்.
 
shanDate: Monday, 10 Feb 2014, 3:31 PM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai meenu,
எளிமையான உணவு
 
MeenakshiDate: Tuesday, 11 Feb 2014, 6:34 AM | Message # 7
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
கம்பு தோசை


கம்பு - 200 கிராம், 
உளுந்து - 50 கிராம், 
பெரிய வெங்காயம் -2, 
பச்சை மிளகாய் -2, 
கொத்தமல்லி -சிறிது, 
கடுகு,
கறிவேப்பிலை, 
எண்ணெய் - தாளிக்க, 
உப்பு - சுவைக்கேற்ப.
கம்பையும், உளுந்தையும் கழுவி, சுத்தம் செய்து, 6 மணி நேரம் ஊற வைத்து, ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மாவில் கொட்டி, தோசையாக வார்க்கவும்.
 
MeenakshiDate: Wednesday, 12 Feb 2014, 2:11 AM | Message # 8
Sergeant
Group: Checked
Messages: 35
Status: Offline
கம்பு அடை

தேவையானப் பொருள்கள்:
கம்பு மாவு_ஒரு கப்
சின்ன வெங்காயம்_7
பச்சை மிளகாய்_1
பெருஞ்சீரகப் பொடி_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
கறிவேப்பிலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு
நல்லெண்ணெய்_தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு  நொறுக்கிப் பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும்.பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசையவும்.சப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும்.கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இதற்கு எல்லா வகையான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.About these ads


Message edited by Meenakshi - Wednesday, 12 Feb 2014, 2:12 AM
 
vinodhaDate: Wednesday, 12 Feb 2014, 3:38 PM | Message # 9
Sergeant
Group: Users
Messages: 24
Status: Offline
Hi Meena,
Thanx for the recipies


Regards,
Vinodha.
 
RAWALIKADate: Wednesday, 12 Feb 2014, 5:10 PM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Meenakshi ()
கம்பு அடை

கம்பு மாவிற்கு பதிலா ஊறவைத்த கம்பை அரைத்து இந்த அடை செய்யலாமா?

அப்படி மாவு வேண்டும் என்றால் அப்படியே கம்பை அரைத்துவிடலாமா???

சீக்கிரம் சொன்னீங்கன்னா இன்னிக்கோ இல்ல நாளைக்கோ நம்ப வீட்டுல கம்பு அடை ....சாப்பிட வாங்க

கம்பு தோசை நல்ல இருக்கு தோழிகளே...

இப்போ அடுத்த பாகெட் கம்பும் என் AK என்னை பார்த்து சிரிக்கறாங்க...ஹிஹிஹி
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » இயற்கை உணவு / சிறுதானிய உணவு (இயற்கை உணவு / சிறுதானிய உணவு)
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Search: