அம்மா ரெசிபி! - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அம்மா ரெசிபி! (அம்மா ரெசிபி! - தொடர் - நன்றி டாக்டர் விகடன்)
அம்மா ரெசிபி!
SLKDate: Thursday, 20 Feb 2014, 5:51 AM | Message # 21
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
thanks for the awesome recipes pa..
 
RAWALIKADate: Thursday, 20 Feb 2014, 2:48 PM | Message # 22
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சோர்வை நீக்கும் உளுத்தம் புட்டு

அம்மா ரெசிப்பி

'எங்க வீட்ல, குழந்தைங்கள்ல இருந்து... பெரியவங்க வரை, அவங்களுக்கு வரக்கூடிய சின்னச் சின்ன உடல் உபாதைகளைக்கூட, உணவு மூலமாகவே என் பாட்டி சரிசெய்திடுவாங்க. சோர்வா இருந்தாலும் இடுப்பு வலி எடுத்தாலும் வாயுத் தொல்லை வந்தாலும் உடனே உளுத்தம் புட்டு, முள்ளங்கிச் சட்னி செய்து கொடுப்பாங்க. வீட்டுல பொண்ணுங்க வயசுக்கு வந்துட்டா, ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு தொடர்ந்து 30 நாளைக்கு, இந்த உளுத்தம் புட்டைச் செய்து கொடுப்பாங்க. என் திருமணத்துக்குப் பிறகு, என் புகுந்த வீட்டிலும் இந்த உணவை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுறாங்க'' என்று உற்சாகமாகச் சொல்லும் மதுரை வாசகி கீதா சுந்தரேசன், உளுத்தம் புட்டு செய்முறையை விளக்குகிறார்.

தேவையானவை: 

தோல் உள்ள உளுந்து - 200 கிராம், புழுங்கல் அரிசி - 100 கிராம், தேங்காய் - ஒரு மூடி, நெய், நல்லெண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் - தேவையான அளவு.

செய்முறை: 

உளுந்தையும் அரிசியையும் தனித்தனியே நன்றாக ஊறவைத்து, கழுவிச் சுத்தம் செய்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கவும். இதில், தேவையான அளவு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக, சற்றே கரகரப்பான பதத்தில் எடுக்கவும். பிறகு, ஆவியில் புட்டு மாதிரி உதிராக வேகவைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும்.


புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சூடாகச் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமல், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.சித்த மருத்துவர் தணிகை ராஜ்:

உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச் சத்தும் கிடைக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண் களுக்கு, கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும். ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.- படங்கள்:  எ.கிரேசன் எபினேசர்
 
NathasaaDate: Thursday, 20 Feb 2014, 4:14 PM | Message # 23
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
tnx fr the rcpe
 
RAWALIKADate: Tuesday, 04 Mar 2014, 10:54 AM | Message # 24
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிப்பி- வடிகஞ்சி சூப்

''செலவே இல்லாத சூப் இது. அந்தக் காலத்துல என் அம்மா, சாதத்தை வடிச்சதும், அந்த வடிகஞ்சியில் மிளகு, சீரகம் பொடிச்சுப் போட்டு, தினமும் காலையில் எங்களுக்குத் தருவாங்க. நல்ல தெம்பா இருக்கும். இதனால் எங்கள் வீட்டில் யாருக்கும் வயிறு தொடர்பான பிரச்னையே வந்தது இல்லை. இப்போ, என் கணவருக்கும் மகனுக்கும் கஞ்சியில் காய்கறிகளைச் சேர்த்து, சூப் மாதிரி செஞ்சு தர்றேன். ருசியோட வாசனையாவும் இருக்கும். உடலுக்கு ரொம்பக் குளிர்ச்சி.'' என்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்ரமணியன்.

வடிகஞ்சி சூப் செய்யும் முறை:  

தேவையானவை: சாதம் வடித்த கஞ்சி - 2 கப், புளித்த மோர் - அரை கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2 முதல் 3, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, விரும்பிய காய்கறிக் கலவை - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சியை நீளவாக்கில் நறுக்கவும். எண்ணெயில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கி, காய்கறிக் கலவையையும் சேர்த்து, வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு இறக்கிவைத்து, கடைந்த மோரை அதனுடன் சேர்க்கவும். இறுதியாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

டாக்டர் வேலாயுதம், சித்த மருத்துவர்: வடிகஞ்சி சூப், உடலை உரமாக வைத்திருக்க உதவும். காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், நார்ச் சத்து மற்றும் கஞ்சியில் உள்ள கார்போஹைட்ரேட், குளூகோஸ், தையமின் போன்றவை உடலால் நேரடியாகக் கிரகிக்கப்படும். இஞ்சி சேர்ப்பதால், காலையில் குடிப்பதன் மூலம், மதியம் பித்தம் ஏறாமல் தடுக்கலாம். மோர், நல்ல பாக்டீரியாவைக் கொடுப்பதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது.

படங்கள்: எஸ்.தேவராஜன்
 
MeenatchiDate: Thursday, 06 Mar 2014, 9:18 AM | Message # 25
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hi rawalika,
   thanks for ur receipe.enga amma enaku koduthu irukaga athil just salt matum sethu....


Meenatchi .S
 
laksDate: Thursday, 13 Mar 2014, 10:15 PM | Message # 26
Lieutenant
Group: Users
Messages: 40
Status: Offline
vithyasamana aanal udambukku nallathu seyyum recipe. thanks.
 
RAWALIKADate: Tuesday, 01 Apr 2014, 12:45 PM | Message # 27
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
"வல்லாரைக் கீரை சாதம்"

அம்மா ரெசிப்பி



''என் வீட்டில் எல்லா கீரைகளையும் பயன்படுத்தி, கலந்த சாதமாகச் செய்வேன். சமையலில் என் பாலிசி என்ன தெரியுமா? 'சுவையோடு, சமையல் சத்து நிறைஞ்சதா இருக்கணும்' என்பதுதான். பிள்ளைங்களுக்குத் தேர்வுக் காலம் நெருங்கிட்டிருக்கு. வல்லாரைக் கீரை சாதம் செஞ்சு கொடுங்க. ஆல் பாஸ்தான்!'' என்று ஆலோசனை தரும் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த பூங்குழலி நித்யகுமார், அதன் செய்முறை விளக்கத்தையும் சொன்னார்.  



வல்லாரைக் கீரை சாதம்

தேவையானவை: உதிரியாக வடித்த சாதம் - 4 கப், வல்லாரைக் கீரை - 2 கப், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு _ தேவையான அளவு, நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்.

செய்முறை: கீரை காம்பைக் கிள்ளி, நன்றாக அலசவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்ஊற்றிக் காய்ந்ததும் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். அதே கடாயில் காய்ந்த மிளகாய், இஞ்சி, கீரையை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். வறுத்த பருப்பு மற்றும் வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு உப்பு, புளி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு, மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, கீரை விழுதைச் சேர்த்து நன்றாகக் கலந்து பிசிறவும். வல்லாரை ரைஸ் ரெடி!

சரவணன், சித்த மருத்துவர்: வல்லாரைக் கீரையே மூளை வடிவத்தில் இருப்பதுதான் இயற்கையின் அதிசயம். இது, மூளை மற்றும் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. ஞாபகசக்தியைத் தூண்டும். உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குழந்தைகளுக்கு வரும் கணைய நோயைச் சரி செய்யும். வல்லாரையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால், சருமப் பாதிப்பைத் தடுக்கும்.  

படங்கள்: எஸ்.கேசவசுதன்
 
RAWALIKADate: Tuesday, 01 Apr 2014, 12:48 PM | Message # 28
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
அம்மா ரெசிபி

''எங்கள் வீட்டில் தினமும் காலை உணவுக்கு சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துவதுதான் வழக்கம். தினை, கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரைவாலி, இவற்றில் ஏதாவது ஒன்றில் சாதம், கஞ்சி, பொங்கல், இட்லி, தோசை, பணியாரம் என்று ஏதாவது ஒரு டிபன் செய்வோம். இவற்றில் ராகி வெஜிடபிள் புட்டு செய்வதும் சுலபம்... ருசியும் ஆரோக்கியமும் அபாரம்' என்கிற சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த இந்திராணி தங்கவேல், புட்டு செய்யும் முறையை  விளக்கினார்.



தேவையானவை: ராகி மாவு - ஒன்றரை கப், பப்பாளி காய் துருவல், கேரட் துருவல், பீன்ஸ் துருவல் மூன்றும் சேர்த்து - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நல்லெண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: ராகி மாவுடன் காய்கறி துருவல் உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசிறினால் தண்ணீர் தேவைப்படாது. காய்கறிகளில் இருக்கும் நீரே போதுமானது. தேவைப்பட்டால் சிறிது நீரைத் தெளித்து பிசிறி, 10 நிமிடம் நன்கு ஊறவிடவும். பிறகு, புட்டு குழல் அல்லது புட்டு மேக்கரில் தேங்காய் துருவலை முதலில் சேர்க்கவும். பிறகு பிசறிய மாவை அடைத்து மிதமான தீயில் வேகவிட்டு 15நிமிடம் கழித்து எடுக்கவும்.  எண்ணெய் சேர்த்திருப்பதால் தொண்டையை அடைக்காது.  காய்கறிகள் கலந்திருப்பதால் சைடு-டிஷ் தேவையில்லை.  அப்படியே சாப்பிடலாம்.

சித்த மருத்துவர் கண்ணன்: வளரும் குழந்தைகளுக்கு ராகி புட்டு மிகவும் நல்லது. எலும்பு வளர்ச்சிக்கு உதவும். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். கார்போஹைட்ரேட், கால்சியம் அதிக அளவு இதில் உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடச் சிறந்த உணவு. உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும்.

படங்கள்: ஆ.முத்துக்குமார்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » அறுசுவை » அறுசுவை » அம்மா ரெசிபி! (அம்மா ரெசிபி! - தொடர் - நன்றி டாக்டர் விகடன்)
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Search: