KV's தகவல் பெட்டகம் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » KV's தகவல் பெட்டகம் (KV's தகவல் பெட்டகம்)
KV's தகவல் பெட்டகம்
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:48 PM | Message # 21
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
இதை அகற்றவது எப்படி?

1. பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல்லதா, நெருப்புக் குச்சி நல்லதா?

2. இவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசி புண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:48 PM | Message # 22
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
3. காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர்தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட(Waxol, Cerumol)காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்தப்படுத்தலாம்.

Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:49 PM | Message # 23
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
இவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் சிறிய ஆயுதம் மூலம் அகற்றக் கூடும். அல்லதுஅதனை கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும்
(Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றவும் முடியும்.தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 2:49 PM | Message # 24
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா?

அதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு முறை குளிக்கும் போது கையால் ஒரு சிரங்கை நீரை காதுக்குள் விட்டுக் கழுவுவது அதனை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிருமித் தொற்றுள்ளவர்களும், செவிப்பறை துவாரமடைந்தவர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.

அடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காதுக் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசிதமானது.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 3:40 PM | Message # 25
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Inline image 1

காலில் பித்த வெடிப்பா?

கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 3:41 PM | Message # 26
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 3:42 PM | Message # 27
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 3:42 PM | Message # 28
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 3:43 PM | Message # 29
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 3:43 PM | Message # 30
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.


Regards and Thanks

Kothai Suresh
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » KV's தகவல் பெட்டகம் (KV's தகவல் பெட்டகம்)
Search: