KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 3:44 PM | Message # 31 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 3:44 PM | Message # 32 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 3:45 PM | Message # 33 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| கருத்தரிக்க உதவும்
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 03 Feb 2014, 3:45 PM | Message # 34 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 04 Feb 2014, 10:53 AM | Message # 35 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| தேங்காய் எண்ணெய்
தலையை நல்ல முறையில் காக்க தேங்காய் எண்ணெய் மட்டுமே போதும்.
இரவில் படுக்கப் போகும் முன்பு தேங்காய் எண்ணெயை இளம் சூடான பதத்திற்குக் காய்ச்சி தலையில் நன்றாகத் தேய்த்து பிறகு காலையில் தலையை அலசவும்.
வாரம் ஒரு முறை இதைச் செய்தால், முடியில் பிளவு மற்றும் பொடுகுகளையும் விரட்டலாம்.
தேங்காய் எண்ணெய் புறத்தோலை அடைத்து விடுவதால் பல்வேறு பிரச்சினைகளை தடுக்கும்
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 04 Feb 2014, 10:54 AM | Message # 36 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| ஆரோக்கியத்தைப் புதுப்பிக்கும் உருளைக்கிழங்கு!
எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன்செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்த்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 04 Feb 2014, 10:55 AM | Message # 37 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்! வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சயைாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும். இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும்.
உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 04 Feb 2014, 10:55 AM | Message # 38 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 04 Feb 2014, 10:57 AM | Message # 39 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| வாத நோய் குணமாகும்! இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.
அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 04 Feb 2014, 10:57 AM | Message # 40 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| நீண்ட நாள் மலச்சிக்கல் தீர…. கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |