ஆன்மீக ஞானம் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » ஆன்மீக ஞானம் (ஆன்மீக கருத்துக்கள் மற்றும் குறிப்புகள்)
ஆன்மீக ஞானம்
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:48 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 எப்படி சாப்பிடுவது?


ஒருவன் தனது வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அவனது கல்வி வளரும்.

மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு செல்வம் பெருகும்.

வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு நோய் வளரும்.

தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு அழியாத புகழ் உண்டாகும்.

இது எப்படி சாத்தியம்?

கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது.

மேற்கு செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது.

வடக்கு சிவனுக்கு உரியது.

தெற்கு யமனுக்கு உரியது.

தனது வீட்டைத்தவிர,ஒருவன் தனது உறவினர் நண்பர்கள் வீட்டில் மேற்கு திசையை
நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது.

அப்படி சாப்பிட்டால் அந்த நண்பன் அல்லது உறவினர் நட்பு கெட்டு-பகையாகிவிடும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:51 PM | Message # 12
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 திருமணப்பந்தலில் வாழை மரம் கட்டுவது ஏன்?

திருமணப்பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் வாழைமரம் கட்டுவது ஐதீகம்.  

தம்பதியர் தியாகம்

முக்கனிகளுல் ஒன்றான வாழை எல்லா காலங்களிலும் கிடைக்கும் கனி. மற்ற இரண்டு கனிகளின் மரங்களை விட வாழை மரம் அதிக பயன்தரக்கூடியது.வாழை, தன்னை
அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும். இதுபோல், தம்பதியர்
ஒருவருக்கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பதன்
அடையாளமாக வாழை மரம் உள்ளது. குடும்ப விருத்திக்காகவும், வாழை மரத்தை
கட்டுவதுண்டு.

வாழையடி வாழை

வாழையின் இலை, காய், பூ, பட்டை, தண்டு, நார் என அனைத்தும் பயன்தரக்கூடியது.
சில பகுதிகள் மருந்தாகவும் பயன்தரக்கூடியது. ஏனைய மரங்களில் இருந்து ஒரு
வகையில் வாழை வித்தியாசமானது. ஒரு வாழையை நட்டால் போதும் வாழையடி வாழையாக
அதன் குலம் தலைக்கும்.

பெரியோர் வாழ்த்து

மனிதன் தலைமை பெறவேண்டும், தன்னைச்சார்ந்திருப்பவர்களுக்கு பலவகைகளிலும்
பயன்தரவேண்டும் என்றும் அவன் குலம் வழி வழியாக தழைக்கவும் என்பதை
உணர்த்துவதற்காகத்தான் சுபகாரியப்பந்தலில் வாழை மரம் கட்டுகின்றனர்.
மணமக்களை ஆல் போல தழைத்து அருகு போல் வேரோட வேண்டும் என்று வாழ்த்தும்
நெஞ்சத்தின் புலப்பாடகத்தான் வாழைமரம் கட்டுவதை கருத வேண்டும்.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 29 Jan 2014, 6:56 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தானங்களால் ஏற்படும் பலன்கள்

1.ஆடைகள் தானம்:

ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில்
ஆடைதானம் செய்வது மிக நன்று.

வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:

புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா
பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்)
சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்:

பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால்
அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய
வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்:

இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும்
மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும்
பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்:

பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது
பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ
அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

6.கம்பளி-பருத்தி தானம்:

வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால்
நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்)
செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 31 Jan 2014, 5:25 PM | Message # 14
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மஞ்சள் கயிறு மாற்றுவதால் என்ன லாபம்?

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலை நேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை தான் மிஞ்சும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 4:39 PM | Message # 15
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
செடி, கொடி, இலைகளிலும் இறைவன் உறைகிறான் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

நமது இந்திய கலாசாரத்துக்குப் பெருமையே, அனைத்து பொருட்களிலுமே பகவான் ஊடுருவி அமர்ந்துள்ளான் என்னும் தத்துவம்தான். ஆகவேதான், தெய்வங்களை
மட்டுமில்லாமல் செடிகள், கொடிகள், மரங்கள், இலைகள் என
அனைத்தையும்-அனைத்தாலும்- பூஜை செய்கிறோம்.

பசுவின் உடல் நிறையப் பால் இருந்தாலும் அதன் மடிமூலமே அதனைப் பெற முடிகிறது. அதுபோன்றே அனைத்து
பொருட்களிலும் கடவுள் இருப்பினும், அவரது அருளை ஒரு சில பொருட்களின் மூலமே
பெறமுடியும்.

சிவபெருமானுக்கு உகந்தது - விபூதிப் பச்சிலை, கொன்னை, வில்வம் போன்றவை.
அம்பாளுக்கு வேப்ப இலை சிறப்பானது. விநாயகருக்கு வன்னி இலை மற்றும்
அருகம்புல் சிறப்பானது.

சூரியனுக்கு எருக்க இலை சிறந்தது... என்று வகைப்படுத்துவதன் மூலம், சிலவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
அவ்வளவுதான்! இறைவனின் தொடர்பு இல்லாத சிருஷ்டி என்று எதுவுமே கிடையாது.

நம்மைப் போல தாவரங்களும் உணர்கின்றன என்கிறது அறிவியல். ரமணர் உட்பட பல
மகான்களும் இதை உணர்த்தியிருக்கிறார்கள்.





Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 4:41 PM | Message # 16
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மற்ற செடிகளை விட, துளசிக்கு அப்படியென்ன சிறப்பு?

மகாவிஷ்ணுவின் அம்சம் நிறைந்துள்ள துளசிச் செடி, விஷ்ணுவின் மனைவி. இவளுக்கு, பிருந்தா
என மற்றொரு பெயரும் உண்டு. பிருந்தா, கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள்.
பிருந்தையாகிய துளசிதேவி, மகாவிஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத
சுக்லபட்ச துவாதசி திதி.

ஆகவேதான், அன்றைய தினத்துக்கு ‘ப்ருந்தாவன த்வாதசீ’ என்று பெயர். எந்த ஒரு பொருளைத் தானம் செய்யும் போதும், அந்தப்
பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்வதால், கொடுக்கும் பொருளின்
அளவும் மதிப்பும் கூடுகிறது என்கிறது சாஸ்திரம்.

தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் அன்னம் போன்ற உணவுப்பொருளில் துளசி
இதழைப் போட்டால், அது அசுத்தத்தை நீக்கி சுத்தமாக்கும். துளசிக்கு
நிர்மால்ய தோஷம் கிடையாது என்பதால், மற்ற இலைகளைப் போலல்லாமல்
பறித்ததிலிருந்து மூன்று நாட்கள் வரை வைத்திருந்து துளசியால் விஷ்ணுவை
அர்ச்சனை செய்யலாம். துளசியை வளர்த்து பூஜை செய்யும் வீட்டில் -
துர்மரணங்கள் நிகழாது, விஷ ஜந்துக்கள் அண்டாது.

வாழ்க்கையின் இறுதியில் துளசி கலந்த ஜலத்தைச் சாப்பிட்டால், வாழ்நாளில்
செய்த அனைத்து பாபங்களும் விலகிவிடும். தினசரி மதியம் சாப்பிட்டவுடன் ஒரே
ஒரு துளசி இலையை வாயில் போட்டுக் கொண்டால் - சாப்பிட்ட உணவில் இருந்த
அசுத்தம் நீங்கி சுத்தத் தன்மை ஏற்படும், நன்கு ஜீரணமாகும்.

துளசிக்கு நிகரான பொருள் வேறில்லை. கிருஷ்ண பகவான் தனது பிரியைகளான
சத்தியபாமா, ருக்மணி ஆகிய இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
ருக்மிணி தேவி கிருஷ்ணர் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும்
கொண்டிருந்தாள்.

சத்ய பாமாவோ, கண்ணனை தனக்கே உரிமையாக்கிக் கொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தட்டின் ஒருபுறமும், மற்றொரு தட்டில்
பொன், மாணிக்கம், நவரத்னங்கள் என தனது செல்வம் முழுவதையும் வைத்தாள்.
ஆனால், தராசு சமமாகவில்லை.

அப்போது அங்கு வந்த ருக்மிணி, கண்ணனுக்குப் பிடித்த துளசி இலை ஒன்றை
தராசுத் தட்டில் வைத்த போது, தராசு சமமாகியது என்று படித்திருப்போம்.
அதுமுதல் துளசியின் மகிமை உலகுக்கு வெளிப்பட்டது.

துளசியைப் பற்றி சில முக்கிய தகவல்கள்...

பூஜை செய்யும் துளசிச் செடியிலிருந்து துளசியைப் பறிக்கக் கூடாது. மற்ற துளசிச் செடியிலிருந்து துளசியைப் பறிக்கும் போதும்
மந்திரம் சொல்லித்தான் துளசியைப் பறிக்க வேண்டும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 4:42 PM | Message # 17
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிராத்தம் என்பது நம் வீட்டில் செய்ய வேண்டிய ஒன்றுதானே?
இதை சில புரோகிதர்சள் தங்கள் வீட்டிலேயே செய்து வைக்கிறோம் என்கிறார்களே!


அவரவர்களின் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சிராத்தத்தை அவரவர் தாங்கள் வசிக்கும்
வீட்டிலேயே செய்ய முயற்சிக்க வேண்டும். தற்காலத்தில் தக்க நபர்களை
வீட்டுக்கு வரவழைத்து கால் அலம்பி வஸ்திரம் தந்து, (வீட்டில் சமையல்
செய்து) சாப்பாடு போட்டு முன்னோர்களுக்குச் செய்ய, முடிக்க வேண்டிய
சிராத்தத்தை முறையாகச் செய்ய மனம் மற்றும் பணம் இருந்தாலும் இடவசதி இல்லை.
பலரும் ஒன்றாகக் கூடி ப்ளாட்டில் வசிக்கும்போது இவ்வித செயல்களைச் செய்ய
இயலவில்லை.

ஆகவே, திருமணம் போன்ற பல்வேறு செயல்களுக்கும் தனித்தனியாக இடங்கள்
ஏற்படுத்தப்பட்டதைப் போல் சிராத்தத்துக்கும் தனியாக இடங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சிலர், தாங்கள் வசிக்கும் இடத்திலும்
சிராத்தத்தைச் செய்ய அனுமதிக்கிறார்கள்.

ஆசாரத்துக்குக் குறைவில்லாமல் மன நிம்மதியுடன் சிராத்தம் செய்ய இயலும் என்றால், இப்படிப்பட்ட இடங்களில்
சிராத்தம் செய்வதில் தவறேதும் இல்லை. சிராத்தத்தை, செய்யாமல் விட்டுவிடக்
கூடாது என்னும் நோக்கத்தில் இதை அணுகினால், இதில் தவறேதுமில்லை.

ஆனாலும், சிராத்தத்தில் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய ஆசாரம் இதில்
முக்கியம். கூர்ந்து கவனித்தால், அவரவர் வசிக்கும் இடத்தில் சிரத்தையுடன்,
ஆசாரத்துடன் (சிறிய அளவில்) சிராத்தத்தைச் செய்தாலும் போதும். அதையும்
பித்ருக்கள் பெரிதாகவே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே,
சிராத்தத்தை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே செய்ய முயற்சிக்கலாம்
.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 4:44 PM | Message # 18
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
திருப்பதிப் பெருமாளுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டவர்கள்,
வேறு இடங்களில் உள்ள பாலாஜிக்கு அதைச் செலுத்தலாமா?


ஏழுமலை என்னும் திருமலையில் இடங்கொண்ட பெருமாள், ஸ்ரீநிவாஸன், வெங்கடேஸ்வரர் என்ற பெயருடன் பல்வேறு ஊர்களில் அமைந்துள்ள ஆலயங்களில்
காட்சி தருகிறார். ஊர் வேறுபட்டிருந்தாலும் ஆலயத்திலுள்ள பெருமாளின்
அருட்சக்தியிலும் வழிபாட்டு முறையிலும் எந்த ஒரு மாற்றமுமில்லை.

ஆகவே, அனைத்து தெய்வமும் ஒருவர்தான் என்பதால், எந்த ஊரிலும்
அமைக்கப்பட்டிருக்கும் தெய்வத்துக்குச் செய்யலாமே என்று தோன்றும். ஆனால்,
இது முழுமையாக சரியாகாது.

ஏனென்றால், ஒரு ஆலயத்தின் மகிமை, 1)ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வம், 2)ஆலயம் அமைந்துள்ள இடம், 3)ஆலயத்தின் (அபிஷேகம்
போன்றவைகளுக்காக உபயோகிக்கப்படும்) புஷ்கரிணி என்னும் தீர்த்தம் ஆகிய
மூன்றின் பெருமைகளையும் உள்ளடக்கியது.

ஆகவே, நாம் செய்து கொள்ளும் பிரார்த்தனையானது - மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் சேர்ந்த
ஆலயத்தில்தான் என்பதால், அதே இடத்தில், அதே ஆலயத்தில், அதே
தீர்த்தக்கரையில் வீற்றிருக்கும் தெய்வத்திடம்தான் நிறைவேற்ற வேண்டும்.
இதுவே - சரியான, முழுமையான பலனைத் தரும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
luluDate: Sunday, 16 Feb 2014, 4:40 PM | Message # 19
Private
Group: Users
Messages: 15
Status: Offline
pattu
ungal anmeega karuthugalukku nandri!
lakshmi
 
PattuDate: Thursday, 20 Feb 2014, 5:15 PM | Message # 20
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
செவ்வாய், வெள்ளி ராகுகாலம் இரண்டும் ஏன் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?

நவகிரங்களுக்குள் புதன் கிரகம் வலிமையானது. புதனைவிடச் செவ்வாயும், செவ்வாயைவிட சனியும், அதைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சூரியனும் பலம் பெற்றது. சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலமுள்ள கிரகங்கள் என்கிறது ஜோதிஷ சாஸ்திரம். ஆகவே, ராகு கிரகமும் அதனால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் மற்ற கிரகங்களைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

பன்னிரண்டு ராசிகளில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்தமாக வீடு என்று உண்டு. ராகு கேதுகளுக்கு தனியாக வீடு என்பது இல்லை (இதில் கருத்து வேறுபாடு உண்டு). இதேபோல் கிழமை விஷயமும்.

ஒவ்வொரு கிரகத்துக்கும் தலா ஒவ்வொரு கிழமை வீதம், மொத்தம் ஏழு கிழமைகள்தான். ராகு கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்.

அதாவது ஒவ்வொரு நாளும் முப்பது நாழிகையுடைய பகலின் (12 மணி நேரத்தின்) எட்டில் ஒரு பகுதியான மூன்றே முக்கால் நாழிகை (1.30 மணி நேரம்) ராகு காலம் என்று அழைக்கப்படுகிறது.

இது பகல் பொழுதின் அளவான 12 மணி நேரத்துக்கு கணக்கிடப்பட்டுள்ளது. பகல் பொழுதின் அளவில் நிகழும் ஏற்ற இறக்கங்களையொட்டி, ராகு காலத்தில் சிற்சில நிமிடங்கள் வேறுபடலாம்.

ராகு கிரகத்துக்கு அதிதேவதையாக துர்கை கூறப்பட்டுள்ளாள். மேலும் குஜவத் ராகு: சனிவத் கேது: (இதை மாற்றிச் சொல்வோரும் உண்டு) என்னும் வசனப்படி, செவ்வாயைப் போலவே ராகுவுக்கு பலனைச் சொல்ல வேண்டும் என்றும், சனியைப் போலவே கேதுவின் பலன் அமையும் என்றும் கூறுகிறது ஜோதிஷம்.

இதை கவனிக்கும்போது செவ்வாய் கிரகத்துக்கும் ராகு கிரகத்துக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது நன்கு புலப்படும், ஆகவேதான் செவ்வாய்க்கிழமையன்று ராகு கிரகத்துக்கான ப்ரீதிகள் (துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுதல், நாகத்துக்கு (பாம்பு புற்றுக்கு) பால் வார்த்தல், அம்மனுக்கு நெய்தீபம் போடுதல் போன்றவை நடத்தப்படுகின்றன.

ஸ்வர் பானு என்னும் அசுரன்தான் ராகு என்று பெயர்மாற்றமடைந்துள்ளான் என்கிறது புராணம். அனைத்து அசுரர்களுக்கும் தலைவராக குருவாக இருந்து அசுரர்களை வழி நடத்தியவர் சுக்கிரன் என்னும் கிரகம். ஆகவே, ராகுவும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் நட்புடன் கூடியவர்கள்.

தனது நண்பரான - குருவான - சுக்கிரனின் ஆதிக்கத்துக்குட்பட்ட வெள்ளிக்கிழமையில் தனக்கான பரிகாரத்தை செய்தால், ராகு அதிகமான மகிழ்ச்சியடைகிறார். ஆகவே தான், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் ராகு காலம், மற்ற நாட்களை விட அதிகமான பலம் வாய்ந்தவை.





Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » ஆன்மீக ஞானம் (ஆன்மீக கருத்துக்கள் மற்றும் குறிப்புகள்)
Search: