ஆன்மீக ஞானம் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » ஆன்மீக ஞானம் (ஆன்மீக கருத்துக்கள் மற்றும் குறிப்புகள்)
ஆன்மீக ஞானம்
PattuDate: Thursday, 20 Feb 2014, 5:16 PM | Message # 21
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline

பில்லி சூன்யம் என்று கூறுகிறார்கள். ஜாதகத்தைப் பார்த்து அவ்வாறு உள்ளது என்று கூற முடியுமா?

மந்திரங்கள் என்பவை கூர்மையான ஓர் ஆயுதம். இதைப் பயன்படுத்தி நன்மையையும் கெடுதலையும் கூட செய்ய முடியும். இருக்குமிடத்தைப் பொறுத்தே ஆயுதங்களின் பயன்பாடு அமையும். அதைப்போல்தான் மந்திரங்களும்.

ஆகவே ஒருவர் மந்திரங்களை ஜபம், ஹோமம் செய்து, ஸித்தி செய்து கொள்வதன் மூலம், தனக்கும் மற்றவருக்கும் நன்மையைச் செய்ய முடியும் என்பதைப் போலவே, மற்றவரைத் துன்புறுத்தும் செயல்களையும் செய்ய முடியும் என்பதே உண்மை.

ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை, ஜாதகத்தில் அவர் பிறந்த ராசியை (சந்திர லக்னத்தை) கொண்டும், அவ்வப்போது மாறும் (சனி- குரு) கிரகப் பெயர்ச்சிகளைக் கொண்டும், அந்தச் சமயத்தில் நடைபெறும் தசா புக்திகளைக் கொண்டும், கோசார பலன்கள் மூலமாக ஆராய்ந்து ஓரளவு கண்டுபிடித்துவிட முடியும். பிறந்த (ஜன்ம) லக்னம் மூலம் ஆராய்ந்தால் இதைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பது இயலாது.

ஆனால், இவ்வாறு மற்றவரால் ஏவப்படும் தீவினைகள் அனைத்தும், நேர் வழியில் தர்மத்தை மீறாமல் நியாயமாக சம்பாதித்து வாழ்க்கையை நடத்துபவரையும், தெய்வத்துடன் நெருக்கமாகத் தொடர்பு வைத்திருப்பவரையும், எவ்விதத்திலும் பாதிக்காது.

அந்தத் தீவினை அதை ஏவிய நபரிடமே திரும்பச் சென்றுவிடும். ஒருவர் எப்போது தீய வழியில் செல்லத் தொடங்குகிறாரோ, அப்போது, சமயம் பார்த்து தீவினைகள் செய்வினைகள் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி ஏவச் செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதா என்றால், செய்தவர்கள், செய்யச் சொன்னவர்கள் இருவருக்கும் பின்னாளில் பாதிப்பு உண்டு.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 21 Feb 2014, 6:01 PM | Message # 22
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
குழந்தைகள் கல்வியில் சிறக்க மந்திரம், ஸ்லோகம் ஏதேனும் உண்டா?


கல்வியில் சிறக்க வேண்டும் எனில், படித்த விஷயங்கள் மனதில் பதிய வேண்டும். அப்படி பதிந்து விட்டால், தேவைப்படும் தருணத்தில் படித்தது நினைவுக்கு
வந்து விடும். சரி... படித்தது மனதில் நன்கு பதிய என்ன செய்ய வேண்டும்?
முழு ஈடுபாட்டுடன், தடுமாறாமல் கவனமாகப் படிக்க வேண்டும். இதற்கு மனதுக்கான
பயிற்சி அவசியம்.

காலையில் ஐந்து மணிக்கு குழந்தைகளை எழுப்பி, கை-கால், முகம் கழுவச் சொல்லி,
முடிந்தால் நீராடச் சொல்லலாம். பிறகு சம்மணமிட்டு அமர்ந்தபடி, கண்களை
மூடிக் கொண்டு, 'நமசிவாய' என்றோ, 'நமோ நாராயணாய' என்றோ சுமார் முந்நூறு
முறை மந்திரத்தை தியானிக்கச் சொல்ல வேண்டும்.

வாரத்துக்கு ஒரு முறை, எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, சுமார் ஆயிரம் முறை மந்திரத்தைச் சொல்லும் வகையில்
குழந்தைகளைப் பயில்விக்க வேண்டும். இந்தப் பயிற்சி, மனதை ஒருமுகப்படுத்த
உதவும்.

மனதை ஒருமுகப்படுத்தப் பழகினால், கல்வியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த
வாழ்விலும் வெற்றி பெறலாம். தடுமாறும் மனதுக்கு இதுவே உரம். மனம்
திருந்துவதற்கான மார்க்கமும் இதுவே!

இந்த இரண்டு மந்திர வார்த்தைகளை விடவும் நம்பிக்கைக்கு உரிய வேறு வார்த்தைகள் வேண்டுமா என்ன?

ஸ்லோகங்களை உதட்டளவில் சொல்லாமல் ஆத்மார்த்தமாகச் சொல்ல வேண்டும்.
பயிற்சியை இறையருள் வழங்காது; ஆனால், பயிற்சிக்குப் பிறகான மாற்றங்களை
இறையருள் உண்டு பண்ணும்!

இன்னொரு விஷயம்... இறையருள் இருப்பினும் முயற்சியும் முக்கியம்.
கண்ணபிரானின் அருளைப் பெற்ற அர்ஜுனன் தனது முயற்சியால்தான் போரில் வெற்றி
பெற்றான். எனவே, குழந்தைகளுக்கு பயிற்சியையும் முயற்சியையும் சேர்த்து
பழக்கப்படுத்துங்கள்!




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
saiDate: Sunday, 18 May 2014, 6:35 PM | Message # 23
Lieutenant colonel
Group: Users
Messages: 137
Status: Offline
Thank u for ur information mam.I have no peace of mind there is any answer for this problem mam.
 
JanviDate: Wednesday, 13 Aug 2014, 4:12 PM | Message # 24
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பட்டு நீங்க சொல்வது சரி. ஸ்லோகங்களை தினந்தோறும் படிக்கும்போது மனம் ஒரு நிலைப் பட உதவும்.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » ஆன்மீக ஞானம் (ஆன்மீக கருத்துக்கள் மற்றும் குறிப்புகள்)
  • Page 3 of 3
  • «
  • 1
  • 2
  • 3
Search: