சித்தம்... சிவம்... சாகசம்! - இந்திரா சௌந்தரராஜன்
|
|
SLK | Date: Monday, 03 Feb 2014, 5:21 AM | Message # 11 |
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
| wow.. thanks viji.. again pa.. pdf thareengala???
|
|
| |
RAWALIKA | Date: Monday, 03 Feb 2014, 8:23 AM | Message # 12 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote SLK ( ) wow.. thanks viji.. again pa.. pdf thareengala??? Hi SLK
Again enna again...thodar mudinja kandippa ungaluku naan pdf tharen
|
|
| |
jeyanthi | Date: Tuesday, 04 Feb 2014, 12:29 PM | Message # 13 |
Private
Group: Userss
Messages: 18
Status: Offline
| Hi Rawalika,
Thanks for sharing IS thodar. Eagerly expecting the next episode.
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 19 Feb 2014, 0:08 AM | Message # 14 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| சித்தம்... சிவம்... சாகசம்! Thanks - Vikatan
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம் கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின் மேற்கொள்ளலாம் கட்செவி எடுத்தாட்டலாம் வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாது உலகத்து உலவலாம் விண்ணவரை ஏவல் கொள்ளலாம் சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்றொரு சரீரத்தினுள் புகுதலாம் சலமேல் நடக்கலாம்; கனல்மேல் கிடக்கலாம் தன்னிகரில்லா சித்தி பெறலாம் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது! சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேஜோ மயானந்தமே!’- தாயுமானவர் சித்தனாய் வந்த சிவபெருமானின் முதல் சாகசம் மதுரையம்பதியில்தான் நடந்தது. இதனை வரலாறும் திருவிளையாடற் புராண நூலில் அழகாய் பதிவு செய்துள்ளது. முன்னதாக, சில சிந்தனைப் பகிர்வும் இவ்வேளையில் அவசியமாகிறது. மதுரை திருவிளையாடலுக்குப் பேர் பெற்ற நகரம். ஒன்றல்ல இரண்டல்ல... 64 திருவிளையாடல்களை இந்த மண்ணில் நிகழ்த்தினார் சிவபெருமான். மனித வாழ்வில் வெற்றி- தோல்வி அறிமுகமாவது விளையாட்டுகளில்தான். கூர்ந்து கவனித்தால்... அதனுள் ஒரு நுட்பமான உண்மை ஒளிந்திருக்கும். விளையாட்டில் நாம் அடையும் வெற்றியோ தோல்வியோ நிலையானதல்ல. அது மாறிமாறி வரும். எனவே, வெற்றி பெற்றவரின் சந்தோஷமும் சரி, தோல்வியுற்றவரின் துன்பமும் சரி... தற்காலிகமான ஒன்றே! இதனால் கர்வப்படுவது என்பதோ, சோர்ந்துவிடுவது என்பதோ ஏற்படுவது இல்லை. விளையாட்டில் ஏற்படும் இந்த அனுபவமே, வாழ்வில் ஏற்படும் இன்ப- துன்பங்களையும் 'இதுவும் நிலையானது அல்ல; மாறிவிடும்’ என்று எடுத்துக்கொண்டு நிதானமாய் மனிதர்களை நடக்கவைக் கிறது. மனித வாழ்வின் சாதாரண விளை யாட்டுக்கே, இப்படி மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் இருக்கும்போது, மொத்த மனித உயிர்களையும் ஆற்றுப் படுத்த எண்ணும் இறைவனின் விளையாட லில் எத்தனை மேன்மை இருக்கும்? அத னாலேயே அவனது விளையாட்டை 'திரு விளையாடல்’ என்கிறோம். அதில் ஒரு விளையாட்டை அவன் சித்தனாக வந்து செய்ததில்தான், நாம் சிந்திக்க நிறையவே உள்ளது. சிவபெருமான் சித்தனாக வரும்முன் மதுரையில் எவ்வளவோ அருட்செயல்கள் நடந்துள்ளன. அருளாளர்களும் முனிவர் களும் ரிஷிகளும் அந்த நகரில் வலம் வந்துள்ளனர். உலகிலேயே மானுடர்களின் மொழிக்கென்று இலக்கணம் வகுக்கப்பட்டு, சங்கம் அமைக்கப்பட்டதெல்லாமும் மதுரையில்தான். இப்படிப்பட்ட மதுரையில் எவ்வளவோ சாகசங்களும் நடந்துள் ளன. அவற்றை அருள்மாயம் என்றும், இறை மாயம் என்றும்தான் கூறினர்.
ஆனால், ஆய கலைகள் அறுபத்துநான்கில் சித்துக்கு விளக்கமோ உதாரணமோ இல் லாதிருந்தது. அதற்கு உதாரணமாகவும் விளக்கமாகவும் இருக்க விரும்பியே முதல் சித்தனாக வந்தார் சிவபெருமான்.
அப்போது, அபிஷேக பாண்டியனின் ஆட்சி மதுரையில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. எல்லாச் செல்வங்களும் இருந்தும், அபிஷேக பாண்டியனுக்குப் பிள்ளைச் செல்வம் மட்டும் இல்லை. அதைக் கோரி, திருச்சந்நிதியில் அவன் உருகாத நாளுமில்லை. அதற்கு அருள் புரியவே சிவபெருமானும் சித்த உருக்கொண்டு வந்தார். இதை இப்படியும் கூறலாம்... 'இனி வரும் நாட்களில் முனிவர்கள் ரிஷிகள் நடமாடிடும் சாத்தியம் குறைவு. அருளாளர் என்போர் சித்த வடிவம் கொண்டே வருவர். உலகம் உய்ய தங்கள் வாக்காலும் வாழ்வாலுமே பதில் தருவர்’ என்பதுதான் சிவபெருமான் சித்தனாய் வந்ததன் அடிப்படை நோக்கம். அப்படி வந்த நிலையில், சித்த சாகசங்கள் எப்படி இருக்கும் என்று உலகத்தவர் தெரிந்துகொள்ள வேண்டாமா? சாகசம் ஆரம்பமாயிற்று. சாகசம் புரியும் முன், தோற்றத்திலும் ஒரு மாற்றம்!
அதாவது, பார்த்ததும் பரவசப்படுத்தும் எழில் தோற்றம். நெற்றியில் மட்டும் வெகு திருத்தமாய் இட்டுக்கொண்ட விபூதியும், நடுவில் தீச்சுடர் போல் குங்குமமும் பளிச்சிட்டன. தெருவில் நடந்து செல்கையில் ஜவ்வாது வாசம் அலை அலையாய்ப் பரவிற்று. பார்த்தவர் பார்த்தபடியே இருக்க... பலர் தங்களை மறந்து அவர் பின்னால் சென்றனர். மெய்ம்மறப்பது என்பதை, அவர் ஒரு வலம் வந்து ஊராருக்கு நிகழ்த்திக் காட்டிவிட்டு, அவ்வாறு மெய்ம்மறந்தோரைப் பார்த்துச் சிரித்தபோது... கொடியில் பூத்திருந்த மலர்கள் எல்லாமும்கூட உதிர்ந்து சிலிர்த்துப் போயின. மிகுந்த பிரயாசைக்குப் பின், சிலர் அந்த சிவச் சித்தனை நெருங்கி, 'யார் நீ?' என்று கேட்டனர். 'பார்த்தால் தெரியவில்லையா... உங்களைப் போல் ஒரு மனிதன்.'
'இல்லை. நீ ஒரு மாயன்!' 'இதுவும் என் பெயரில் ஒன்றுதான்.' 'உனது ஊர்?' 'அது மிக உயரமான இடத்தில் உள்ளது.' 'ஊருக்குப் பெயர் எதுவும் கிடையாதா?' 'கயிலாயம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.' 'நம்பமுடியவில்லை.' ''என்ன செய்தால் நம்புவீர்கள்?' ''எங்கே... விண்ணில் பறந்து காட்டு!' உடனேயே பறந்தும் மிதந்தும் காட்டிவிட்டுச் சிரித்தார் சிவச்சித்தன். 'இது ஏதோ மாயம்...' என்றனர் அவர்கள்.
'இது மாயமில்லை; சித்தம் தெளிந்தால் நீங்களும் வானேறலாம்; பொதிபோல் மிதக்கலாம். அவ்வளவு ஏன்... நீர் மேல் நடக்கலாம்; நெருப்பிலும் கிடக்கலாம்...'
'சித்தம் தெளிந்தால் என்றால்?' 'போகப் போக அறிவீர்கள்...' 'உம்மால் இன்னும் என்னவெல்லாம் மாயம் செய்ய ஏலும்?' 'அதோ தெரிகிறதே குன்று... அதை அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கமாய் தள்ளி வைக்கமுடியும். அதோ மிதக்கின்றனவே மேகங்கள்... அவற்றை அருகில் அழைத்து மழை பெய்விக்க முடியும்...' 'நிஜமாகவா?' 'ஐயம் எதற்கு... இப்போதே பாருங்கள்...'
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 19 Feb 2014, 0:08 AM | Message # 15 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| சிவச்சித்தனின் சாகசம் தொடர்ந்தது. மலை இடம் மாறியது; மேகங்கள் அருகே வந்து நீரைப் பொழிந்தன. மொத்த மதுரையம்பதியே உறைந்து போனது. அந்தச் செய்தி மன்னன் அபிஷேக பாண்டியனையும் அடைந்தது. 'யார் அந்தச் சிவச் சித்தன்..? இதுவரை கேள்விப்பட் டிராத இனத்தவன். அவனை உடனே அழைத்து வாருங்கள்!' என்று ஆணையிட்டான். ஆனால், அழைக்கச் சென்றவர்கள் பாவம், பாடாய்ப்பட்டுத் திரும்பி வந்தனர். 'அரசே! ஒன்றை அறிய ஒருவர் விரும்புகிறார் என்றால், அவர் மாணாக்கர். அறிவுறுத்த வேண்டிய வர் குருநாதர். குருவைத் தேடி மாணாக்கன்தான் வரவேண்டும்; குருவல்ல!' என்று சிவச் சித்தன் கூறிவிட்டதாகச் சொல்லினர்.
அபிஷேக பாண்டியன், தன் கட்டளைக்குக் கீழ்ப்படியாத ஒருவரைத் தனது வாழ்வில் முதல்முறையாகக் காண்கிறான். அது மட்டுமா? அவனது ராஜ கர்வமும் புழுக்கத்துக்கு உள்ளானது. அன்று ஆலயத்தினுள் தரிசனம் செய்தபோதும் அதன் நிரடல்!
'இறைவா... மன்னவன் என்னையே ஒரு மாயாவி வருத்தம்கொள்ளச் செய்துவிட்டான். எனக்கு இது இழிவா, இல்லை விடிவா என்று தெரியவில்லை' என்று புலம்பிவிட்டு, கோயில் பிராகாரத்தை வலம் வரத் தொடங்கினான்.
என்ன ஆச்சரியம்... எதிரிலேயே அந்த சிவச் சித்தன். மன்னனின் உடனிருந்தோர், 'அரசே... இவனேதான் தங்களுக்குப் பணிய மறுத்த சித்தன்' என்றனர்.
அபிஷேக பாண்டியனும் மாறாப் புழுக்கத் துடன் சித்தரை ஏறிட்டான். ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்தில், மனத்தில் ஒரு பரவசம். சிவச்சித்தனிடமும் ஒரு புன்னகை. மன்னன் சார்பாக மந்திரிப்பிரதானியர் பேசினர்.
'நீர்தான் மதுரையம்பதியையே மயக்கித் திரியும் சித்தனோ?'
'நான் சித்தன் மட்டுமல்ல... பித்தன், எத்தன், முத்தன் என்று எனக்குப் பல பெயர்கள்...''
''அடக்கத்தோடு பேசு! உன் எதிரில் இருப்ப வர் இந்த நாட்டு மன்னர்...''
''அதனாலென்ன... மூப்பும் திரையும் வரும் போது முடிந்து போகப்போகிறவர்தானே?’
''நீ மட்டும் என்ன... வாழ்வாங்கு வாழ முடிந் தவனோ?''
''அதிலென்ன சந்தேகம்? சித்தன் என்றாலே வாழ்வாங்கு வாழ முடிந்தவன் என்றும் பொருள் உண்டே..!''
''சித்தன்... பெரிய சித்தன்... எங்கே உன் ஆற்றலை அரசர் முன் காட்டு, பார்ப்போம்...''
''அதனால் எனக்கு ஆவது ஒன்றுமில்லை. அடுத்து, எதைச் செய்தும் உங்களை நான் அடக்கத் தேவையும் இல்லை.''
''இது, அதிகப் பிரசங்கம். இப் போதே கைது செய்து சிறையில் அடைக்கவா?''
''முடிந்தால் செய்யுங்கள்...''
அந்தப் பதிலைத் தொடர்ந்து, வீரர்கள் அந்தச் சித்தரைக் கைது செய்ய முயன்றனர். ஆனால் சிவச்சித்தன், 'நில்லுங்கள்’ என்று சொன்ன மாத்திரத்தில் கல்லாய்ச் சமைந்து நின்று விட்டனர். அருகிலேயே ஆலய கோபுரத்தைத் தாங்கி நிற்கும் இந்திரன் தோட்டத்து யானைகளில் ஒன்றாய் ஒரு கல் யானை. அதைச் சிவச்சித்தன் பார்க்கவும், அதற்கு உயிர் வந்தது. தும்பிக்கையை விசைத்து அசைத்த அதற்கு, அந்தரத்தில் இருந்து கரும்பை வரவழைத்து நீட்டினார் சிவச்சித்தன். அதையும் அது உண்டது.
நடந்ததை எல்லாம் பார்த்து, மன்னன் அபிஷேக பாண்டியன் விக்கித்துப் போனான். இருந்தும், தனக்கு எதிரில் தெரிவது நிஜமான யானையா அல்லது பொய்த் தோற்றமா என்று அறிய விரும்பி, அதன் முன் சென்று பார்த்தபோது... அந்த யானை மன்னனின் கழுத்து முத்துமாலையைப் பறித்து அதையும் கரும்புபோல் கருதி விழுங்கிவிட்டது.
அபிஷேக பாண்டியனும் அரச கர்வத்தை விலக்கி, 'அன்பரே... யார் நீவிர்? எதை உணர்த்த இந்தச் சாகசங்கள்?’ என்று கேட்ட நொடியில், அந்தச் சிவச்சித்தனும் சொக்கலிங்கநாதர் சந்நிதியில் புகுந்து மறைந்து, 'வந்தது நானே...’ என்பதை உணர்த்தினார். அப்படியே பாண்டிய மன்னனுக்குப் பிள்ளை வரமும் அளித்தார்.
முதல் சித்தராய் வந்து சாகசம் புரிந்த ஈசன் அபிஷேக பாண்டியனுக்கு உணர்த்திய செய்தி என்ன? 'தன் கருணையானது சித்த வடிவிலும் இனி வெளிப்படும். அதே வேளையில், சித்தத்தை வென்றுவிட்டாலோ, நான் புரிந்ததைப் போன்ற சாகசங்களை எல்லோராலும் புரிய முடியும்’ என்பதுதான் அந்தச் செய்தி.
இது போதாதென்று, மதுரைக்கு அருகே உள்ள திருப்பூவனத்திலும் சிவபெருமான் சித்து வேலை புரிய முன்வந்தார். மதுரைக்குத் தென்கிழக்கில் இருக்கிறது இந்தத் திருப்பூவனம். வைகை பாயும் திருத்தலம். வைகைக்கு இங்கே காசிக்கு உண்டான குணம்! அதே நேரம், உயிர் நீத்தவர்களுக்கான இறுதிச் சடங்கு இங்கே நடப்பதும், இந்த ஆலயத்தில் மோட்ச விளக்கு ஏற்றுவதும் ஐதீகம்.
இந்த ஆலயத்தில் ஒரு தேவதாசி இருந்தாள். 'பொன்னாச்சி’ என்பது அவள் பெயர். இறைவனுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே தேவதாசிகள். ஆடல்- பாடல் எனும் கலை மூலமாக இறைவனைத் தொழுவார்கள். வேத மந்திரங்களாலான வழிபாட்டு முறை போலவே ஆடல்- பாடல் கொண்ட வழிபாட்டு முறையும் அன்று வழக்கில் இருந்தது. கர்ப்பக்கிரகத்தினுள் சிலா ரூபத்தைத் தொட்டு பூஜிக்கும் உரிமையும் அவர்களுக்கு இருந்தது. அதனால் ஊரே அவர்களை பயபக்தியுடனும் மரியாதையுடனும் பார்த்து, அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தது.
ஒரு நீதிபதியைப் போலவும் இவர்கள் திகழ்ந் தனர். பொன்னாச்சியும் திருப்பூவனநாதர் சந்நிதி தேவதாசியாய்- திருப்பூவனத்து நீதி தேவதையாய்த் திகழ்ந்தாள். இவளுக்குள் ஒரு மேலான ஆசையும் இருந்தது. திருப்பூவனம் கோயில் திருச்சந்நிதிக்குள் கல் வடிவத்தில் உள்ள உத்ஸவ மூர்த்தியை அசல் பொன்னில் செய்து ஆலயத்தில் வைத்து பூஜிக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம்!
அவள் எங்கே விரும்பினாள்? அவனல்லவா அவளுக்குள் புகுந்து அப்படி விரும்பச் செய்தான்! அப்படி அவள் விரும்பினால்தானே, ஒரு சித்தன் மனது வைத்தால் செப்பைக் கூடப் பொன்னாக்க முடியும் என்பதை இந்த உலகத்துக்கும் உணர்த்த முடியும்?
அந்த ரசவாத சாகசம் அடுத்த இதழில்...
- சிலிர்ப்போம்...
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 19 Feb 2014, 0:13 AM | Message # 16 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| சித்தம்... சிவம்... சாகசம்!
'வெள்ளியுருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத் தட்டானார் - கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழியே சென்று வள்ளியுண்ணாவில் அடக்கி வைத்தாரே...’- திருமந்திரம்
பொன்னாலே ஓர் உத்ஸவ மூர்த்தி திருஉருவம். அதைத் திருப்பூவனநாதர் திருச்சந்நிதிக்குத் தன் உபயமாய் வழங்கவேண்டும் என்று நினைத்த பொன்னாச்சி, அதற்காக எவ்வளவு பொன் தேவைப்படும் என்று பொற்கொல்லர் ஒருவரை அணுகி வினவியபோது, அவர் சொன்ன பதில் அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தது.
காரணம், பல தோலாவுக்கு (ஓர் அளவு) தங்கம் வாங்க வேண்டும். அரசர்களுக்கு மட்டுமே சாத்தியப்படுகிற விஷயம் அது. அதைத்தான் பொற்கொல்லரும் கூறினார்.
''தாயே... உனக்கெதற்கு இந்த ஆசை? உன் சொத்தையெல்லாம் விற்றுப் பணம் திரட்டினாலும், உத்ஸவச் சிலையை அதற்குரிய லட்சணங்களோடு காண்பது கடினம். எனவே, உன் எண்ணத்தை மாற்றிக் கொள்'' என்றார்.
அந்த பதில், பொன்னாச்சியை வெகுவாக யோசிக்க வைத்துவிட்டது. அன்று திருச்சந்நிதியில் ஆடி முடித்தவள், கோயில் பட்டரின் மரியாதையை ஏற்கும் நேரத்தில், உள்ளிருக்கும் புவனநாதரைப் பார்த்து கண்ணீர் சிந்தத் தொடங்கினாள்.
''பொன்னம்பலத்தவனே... பொன்மணியா கவே உன்னைக் காண என் மனம் ஏனோ பெரிதும் விரும்புகிறது. ஆனால், அது அரசர்களுக்கே சாத்தியம் என்கிறார் பொற்கொல்லர். அதுவும் உண்மைதான்! என்னிடம் அந்த அளவு நிதி இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! நான் எனக்கென்று எப்போதும் எதற்கும் ஆசைப்பட்டதில்லை. உன்னிடம் அதற்காகக் கோரிக்கை வைத்ததுமில்லை. இன்று உன்னை அடைய உன்னிடம் கோருகிறேன். என் விருப்பத்தை எப்படியாவது ஈடேற்று'' என்று கண்ணீர் பெருக்கினாள்.
அதைக் கண்ட பட்டரும், ''அம்மா... உன் விருப்பம் மிகவும் உயரியது. ஆனால், சாத்தியம் இல்லை. அரசர்களால் செய்ய முடிந்தாலும், செய்துபார்க்க விரும்பமாட்டார்கள். காரணம் ஒன்றுதான். எதிர்பாராமல் திருமேனி களவு போனால், தங்கம் என்பதற்காக, திருமேனி என்றும் பாராமல் மிலேச்சர்கள் அதை உருக்கி விடுவார்கள். அது பெரும் பாவம் அல்லவா? ஆனால், கோயில் விமானத்தைத் தங்கத்தால் வேய்வார்கள். காரணம், அதைக் களவாடுவது அவ்வளவு சுலபமில்லை'' என்றார். அதைக் கேட்ட பொன்னாச்சிக்குள் மேலும் மேலும் கேள்விகளே முளைத்தெழுந்தன.''பட்டரே... கள்வர்களுக்கு பயந்தா அந்த பொன்னம்பலன் பொன்னுருக்கொள்ளாமல் இருக்கிறான்?' என்று திருப்பிக் கேட்டாள்.
''அச்சம் அவனுக்கேதம்மா..? அச்சமே அவனைக் கண்டு அஞ்சுமே! அச்சம் எல்லாம் நமக்குத்தான்!''
''அப்படியென்றால், அவன் மேல் நம்பிக்கை நமக்கு இல்லையா? நம்மை எல்லாம் காக்கத் தெரிந்தவனுக்கு தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாது என்பதுதான் அவன் வரையில் நாம் உணர்ந்து வைத்திருக்கும் உண்மையா?''
''உன் கேள்விக்கு என்னால் பதில் கூற முடிய வில்லை, பொன்னாச்சி! ஒன்று மட்டும் உறுதி; சொர்ண விக்கிரகம் என்பது சாத்தியமில்லை; அதை மறந்துவிடு! அதற்காக நீ முனைந்தால், தினந்தோறும் நீ சிவனடியார்களுக்கு அமுது படைப்பது என்பது இயலாது போகும்'' என்றார். பொன்னாச்சி தன் அமுதுப் படையல் தொண்டினைத் தொடர்ந்தாள். ஆனால், மனத்துக்குள் அந்தத் தங்க விக்கிரக ஆசை இருந்தபடியேதான் இருந்தது.
''இறைவா... நீ எத்தனைக் கருணையானவன்! உன் உள்ளம் பொன் போன்றது. ஆனால், உன் உரு மட்டும் ஏன் செப்பிலும் தாமிரத்திலும் இருக்க வேண்டும்? அது பொன்னில் இருப்பதுதானே சரி? இந்த மாந்தர்கள் தங்கள் அணிகலனுக்குப் பொன்னைப் பயன்படுத்தலாம்; உன் உருவுக்குப் பயன்படுத்தக் கூடாதோ?'' என்று, சதாசர்வ காலமும் சிந்தித்தபடி இருந்தாள்.
அவளது இந்த சிந்தனைத் தீவிரம், மதுரையம்பதியில் ஒரு சித்தனாய் வலம் வந்தபடி இருந்த சிவபெருமான் திருவுள்ளத்தில் சென்று எதிரொலித்தது. அடுத்த நொடியே, திருப்பூவனத்தில் ஓர் அடியார் வடிவில் தோன்றியதோடு, பொன்னாச்சியின் அமுத விருந்து நடக்கும் இடத்தையும் அடைந்தார். ஆனால், அந்த விருந்தில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இதைக் கவனித்த பொன்னாச்சியும் அவரிடம் சென்று வினவினாள். ''அடியவரே.. அமுதுச்சாலைக்கு வந்தும் அமுதுண்ணாமல் இருப்பது ஏன் என்று நான் அறியலாமா?'' ''ஒரே காரணம்தான் பெண்ணே! அடியவர்களுக்கு அமுதூட்டும்போது மனத்தில் சிறு வருத்தமும் இருக்கக்கூடாது. ஆனால், உன் மனத்தில் ஒரு பெரும் பாரம் இருக்கக் காண்கிறேன். பிறகு, நான் எப்படி அமுது செய்வேன்?''
அடியார் வேடத்துப் பரமனின் கேள்வி பொன்னாச்சியை சிலிர்க்கச் செய்தது. இதுவரை ஆயிரமாயிரம் அடியார்கள் அமுது செய்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரும் அவள் உள்ளத்துக்குள் இருந்ததை ஊடுருவிப் பார்த்திடவில்லை. பார்த்திடுவது என்பது ஒரு வல்லமை. அது பலருக்கு இல்லை என்பதும் ஒரு காரணம்.
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 19 Feb 2014, 0:14 AM | Message # 17 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| ஆனால், இப்போது அவளது மனத்தில் புதைந்திருந்த ஆசையை வெளிக்காட்டியது அந்த ஈசன் அல்லவா? அவரிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை பொன்னாச்சி. அடுத்த நொடியே, 'உண்மைதான் ஸ்வாமி...’ என்று மனம் உடைந்து அழுதாள்.
''ஒரு பொன் மேனி காண விரும்புகிறேன். ஆனால், எல்லோரும் அது இயலாது என்கின்றனர். அப்படி இயலாத வண்ணம் என்னை ஏழையாகப் படைத்துவிட்டானே அந்த ஈசன் என்பதே என் வருத்தம்.'' ''அப்படியென்றால், நீ செல்வச் செழிப்பை வேண்டுவது சுக போகமாய் வாழ அல்ல... அப்படித்தானே?''
''இந்த மண்ணுலகின் சுக போகம் நிலையானதில்லையே ஸ்வாமி? இதை நான் விரும்பினால், அந்த ஈசனை வணங்குவதிலும் பொருள் இல்லையே?''''உன் மனம் பொன் என்பது புரிகிறது. ஆனால், உன்னிடம் பொருளாக பொன் இல்லை. அப்படித்தானே?''
''ஆம் ஸ்வாமி! எனக்கு வேண்டுமளவு பொன்னைத் தர, இந்தப் பாண்டி மண்டலத்தில் வர்த்தகர்களும் இல்லை. ஏதாவது மாயம் நிகழ்ந்தால்தான் உண்டு!''
''அப்படியே ஆகட்டும்! உன் விருப்பத்தை ஈடேற்ற, நானே அந்த மாயம் புரியத் தயாராக இருக்கிறேன்.''
''மாயம் என்று நான் ஒரு பேச்சுக்குச் சொன்னால், நீங்களும் அதையே பிடித்துக் கொண்டுவிட்டீர்களே? மாயத்தில் வருவது நிலைத்து நிற்குமா?'''சித்த மாயம் நிலையானது. கவலைப் படாதே..!'
''சித்த மாயமா..? இது என்ன புதிய பதம்?''''சித்தனான நான் புரியப்போகும் மாயத்தைதான் சித்தமாயம் என்றேன்.''
''நீங்கள் சித்தனா? அடியார் என்றல்லவா எண்ணினேன்.''''சித்தனும் அடியவன்தான் பெண்ணே!''''எல்லாமே புதிராக உள்ளது. தயவுசெய்து என் விருப்பத்தோடு விளையாடாதீர்கள்...'
''திருவிளையாட்டை தாராளமாய் ஆடலாம். நீ போய் உன் இல்லத்தில் இருக்கும் உலோக பாத்திரங்கள் அவ்வளவையும் இங்கே கொண்டு வா!''''ஸ்வாமி...''
''தயங்காதே... பொன்னை அணைத்து நீ பொன்னணையாளாக ஆகிட வேண்டாமா?''
அவரின் கேள்விக்கு அதற்கு மேல் மறுமொழி கூற பொன்னாச்சி தயாராக இல்லை. அவரது மாயத்தை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டாள். அப்போதே அவர் முன் குவிந்தது பொன்னாச்சியின் உலோக பாத்திரங்கள். சட்டி சருவத்தில் இருந்து அண்டா, அடிப்பெருக்கிவரை அவ்வளவும் அவர் முன் வைக்கப்பட்டன.
அவரும் தன் வசமிருந்த விபூதியை எடுத்தார். நெற்றியின் பால் வைத்து தியானிப்பது போல் நடித்தார். தியானமே தியானித்த காட்சியைக் காண பொன்னாச்சிக்குக் கொடுத்து வைத்திருந்தது. பிறகு, தியான விபூதி அவ்வளவு பாண்டங்கள் மேலும் அவரால் தெளிக்கப்பட்டது.
''பெண்ணே... இவற்றை நீ இன்று இரவு முழுக்கத் தீயில் போட்டு வை. விடிந்த பின் பார்... இவை அவ்வளவும் தங்கமாகி இருக்கும்.'' என்றார்.
''தாங்கள் தெளித்த விபூதிக்கு அவ்வளவு சக்தியா?''- பொன்னாச்சி கேட்டாள்.
''அதை நாளை காலையில் நீயே பார்த்துத் தெளிந்து கொள். இதற்குப் பெயர் ரசவாதம்...''
''விவாதம் அறிவேன்; உடலை முடக்கும் முடக்குவாதமும் அறிவேன்; ரசவாதம் என்பதை இப்போதுதான் கேட்கிறேன்.''
''ஒலிப்பது நாதம், ஒளிர்வதோ வாதம்.''
''அருமையான விளக்கம். விவாதத்திலும் கருத்து ஒளிர்கிறது; உடல் வாதத்தில் இயக்கமற்ற தன்மை ஒளிர்கிறது.''
''இங்கே உலோகம் ஒளிரும். நான் வரட்டுமா?''
''ஸ்வாமி... இது பொன்னாகும் வரை இருக்கக்கூடாதா?''
''எனக்கு இருக்க விருப்பம்தான். ஆனால், மீனாட்சியைப் பிரிந்தல்லவா வந்திருக்கிறேன்...''
''அது யார் மீனாட்சி?''
''சரிதான்... அவள் ஆட்சியில் வாழ்ந்து கொண்டு இப்படி ஒரு கேள்வியா..?'' என்று கேட்டவர், அப்படியே மாயமானார்.
அதன் பிறகுதான் பொன்னாச்சிக்கு, வந்தது ஈசன் என்பதும், அவர் புரிந்தது திருவிளையாட்டு என்பதும் புரிந்தது. உச்சி முதல் பாதம் வரை புளகாங்கிதத்தில் பூரித்தாள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 19 Feb 2014, 0:14 AM | Message # 18 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| மறுநாள் காலையில், அவ்வளவு உலோகப் பாத்திரங்களும் பொன்னாகி மின்னின. அதை உவப்போடு அள்ளிப் பொற்கொல்லர் வசம் தந்தாள். ஈசன் தன்னிடம் பேசும்போது, 'மீனாட்சியைப் பிரிந்தல்லவா வந்திருக்கிறேன்’ என்று பிரிய விரும்பாத விருப்பத்தை வெளிக் காட்டியதை உத்தேசித்து, அந்த ரசவாத தங்கத்தைக் கொண்டு சோமாஸ்கந்த உருவைச் செய்ய விரும்பினாள். அதன்படி, சோமனுடன் உமையும், இருவருக் கும் நடுவே கந்தமூர்த்தி நிற்கும் கோலத்தோடு, பொன்னாலே உத்ஸவ விக்கிரகமும் தயாராகியது.
அதை அப்படியே அள்ளி அணைத்து மகிழ்ந்தாள். கன்னத்தையும் உணர்ச்சிப் பெருக்கில் கிள்ள முற்பட்டாள். குழைந்து கொடுத்தார் ஈசனும். அதனால் பொன்னாச்சியின் நகக்குறி கன்னத்தில் பதிந்தது. இன்றும் இந்தத் திருவுருவம் திருப்பூவனநாதர் ஆலயத்தில் காணக் கிடைக்கிறது. தன் விருப்பத்தை ஈடேற்றிய பொன்னாச்சி பிறகு 'பொன்னணையாள்’ என்று வரலாற்றில் பதியலானாள்.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூலில் இந்த திருவிளையாடல் 36-வது படலமாக காணக் கிடைக்கிறது.
இந்த ரசவாத லீலையை அந்த ஈசன் மதுரையம்பதியில் ஏன் நிகழ்த்தவில்லை? திருவாரூர், காஞ்சி, ஆனைக்கா, சிதம்பரம், காளத்தி என்று பிற தலங்களிலும் ஏன் நிகழ்த்தவில்லை? திருப்பூவனத்தில் இதை ஏன் நிகழ்த்தினான் என்பதன் பின்னே சூட்சும காரணங்கள் நிறைய உள்ளன.
அதற்குத் திருப்பூவன தல பெருமையை அறிதல் முக்கியம். ஆவிபோன பின், அது வாழ்ந்த வீடாகிய தேகத்தை சுட்டுச் சாம்பலாக்கி, அதைப் பிறகு காசியில் கரைப்பது என்பது மானுடர்க்கான பித்ரு கர்ம வரையறை.
காசியில் பாயும் கங்கை நீருக்கு அலாதி குணங்கள் உண்டு. அவனியில் பாயும் நதிகளில் கங்கை மட்டுமே உருகிப் பெருகி வரும் நதி. மற்றவை மழை பொழிவால் மலைமேல் வீழ்ந்து, பின் பாய்ந்து ஓடி வருபவை.
ஆனால், கங்கையோ உறைபனி கதிரவனால் உருக்கப்பட, ஓடிவரும் நீராகும். அதனுள் அக்னிக் கங்கின் குணமுண்டு. பாவ எண்ணங்களையும் அந்தக் கங்கினால் கரைத்துவிடுகிறோம் என்பதே சூட்சுமப் பொருள்.
அப்படிப்பட்ட கங்கையானது தென்புலம் பாயாததால், தென்புலத்தவர்களுக்கு எல்லாம் கங்கை நீராடல் ஒரு பெரும் பிரயாசைக்குரிய ஒன்றாக இருந்து வந்தது. எனவே, பித்ரு கர்மங்களைச் செய்யவும் காசி வரை செல்லப் பெரும் காலம் தேவைப்பட்டது. பொருளும் தேவைப்பட்டது.
அந்தக் குறையைப் போக்க விரும்பிய ஈசன், மதுரையம்பதியில் தன் கையை வைத்த இடத்தில் ஒரு நதியைப் படைத்தான். கை வைத்ததால் வந்த அந்த நதி 'வைகை’ ஆயிற்று. கங்கை ஈசனின் கருணை மிகுந்த சிரசில் இருந்து வருவதாக ஓர் ஐதீகம் உண்டு. வைகையோ அருள்மிகுந்த கரத்தில் இருந்து வந்தது. இதற்கும், காசிக்கும் மேலான பாவம் போக்கும் குணம் உண்டு என்பதை உலகத்தவர் உணர, அவன் எண்ணம் கொண்டான்.
அதற்கேற்ப தன் மூதாதையரின் அஸ்திக் கலசத்துடன் காசிக்குப் பயணம் மேற்கொண்ட ஓர் அந்தணர், திருப்பூவனத்தில் பாயும் வைகை ஆற்றில் நீராடுகையில்... அந்த அஸ்திக் கலசத்தை ஒருவர் கையில் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொல்லிவிட்டு நீராடச் சென்றார்.
அதை வாங்கிக்கொண்டவருக்கு, கலசத்தில் இருப்பதைத் திருட்டுத்தனமாய் பார்க்கும் ஆசை ஏற்பட்டது. பொன்னோ பொருளோ தான் இருக்கவேண்டும் எனும் எண்ணத்துடன் அதைத் திறந்து பார்த்தார்.
உள்ளே இருந்த அஸ்திச் சாம்பலும் எலும்புத் துண்டுகளும் மணக்கின்ற மலர்களாக அவருக்குக் காட்சியளித்தன. இதையா பாதுகாக்கச் சொன்னார் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அந்தணர் குளித்துவிட்டு வரவும் அவரிடமே கேட்டும்விட்டார்.
'பூக்கலசத்தை பொன் கலசம் போல பாதுகாக்கச் சொல்லிச் சென்றீரே... அப்படி என்ன சிறப்பு இந்தப் பூக்களுக்கு இருக்கிறது? இந்த உலக வனத்திலே இல்லாத பூக்களா இவை?'' என்று கேட்டார்.
அந்தணர் விக்கித்துப் போய் கலசத்தைத் திறந்து பார்க்க, அவருக்கும் பூக்களே காட்சி தந்தன. இது என்ன மாயம் என்று அவர் நெஞ்சு பரவசப்படுகையில் அசரீரி முழங்கிற்று.
'அப்பனே.. நீ உன் கர்ம காரியத்தை இந்த வைகையிலேயே செய்யலாம். இதுவும் கங்கைக்கு நிகரானதே! சொல்லப்போனால் காசிக்கு ஒரு வீசம்கூட என்றும் கொள்ளலாம்.
இதை உணர்த்தவே சாம்பலைப் பூவாக்கினேன். மண்ணில் மலர்பவை பூப்ப தால் பூக்கள் எனப்படும். மரணித்த உடம்பு நெருப்பில் பூப்பதால் அந்தச் சாம்பலும் பூவாகவே கருதப்படும். அந்தப் பூ இங்குள்ள வைகையம்பதியில் கலந்திடும்போது திருப்பூவாகிடும். இந்த வைகைப்புறமும் ஆதலால் திருப்பூவனம் என்றாகட்டும்’ என்று ஒலித்து அடங்கிற்று அசரீரி.
அந்தத் திருப்பூவனக் கரையிலேயே இறைவனும் பூவனநாதனாய் கோயில் கொண்டான். கங்கைக்கரையில் விஸ்வநாதன். இங்கே பூவனநாதன்!
எத்தனைப் பாவம் செய்திருந்தாலும், இங்கே கர்மச் செயல் செய்ய... அதைச் செய்தவருக்கும் முக்தி - செய்யப்படுபவருக்கும் முக்தி.
சாதாரண உலோகம் தங்கமாவது என்பது உலோகத்துக்கான முக்தி. சாதாரண மனிதன் தங்கமாவது என்பது பிறப்புக்கான முக்தி. அதை உணர்த்த இறைவன் தேர்வு செய்த இடமே திருப்பூவனம்!
இந்தத் திருப்பூவனத்து ரசவாத சாகசம், மானுட முக்திக்கும் வழிகாட்டுகிறது. ஈசன் செய்த இந்த சாகசத்தை, அதாவது ரசவாதத்தை சித்தர் பெருமகன் ஒருவர் தன் வாழ்நாளில் செய்து காட்டினார். அது...?
- சிலிர்ப்போம்
|
|
| |
RAWALIKA | Date: Friday, 28 Feb 2014, 11:56 PM | Message # 19 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| சித்தம்... சிவம்... சாகசம்! 'பாரேது புனலேது அனலு மேது பாங்கான காலேது வெளியு மாகும் நாரேது பூவேது வாச மேது நல்ல புட்பந் தானேது பூசை யேது ஊரேது பேரேது சினமு மேது ஓகோகோ அதிசயந்தா னென்ன சொல்வேன் ஆறேது குளமேது கோயி லேது ஆதிசிவத்தை யறிவதனா லறியலாமே...’- கருவூர் சித்தர்.ரசவாத சாதுர்யத்தில் பொன்னணையாளைத் தொட்டு பல சித்தர் பெருமக்கள் வித்தை காட்டியுள்ளனர். ஆனாலும், முதல் வித்தைக்காரன் அந்த ஈசனே!சித்த சாகசங்களிலேயே எல்லோரும் பெரிதாகக் கருதிடும் சாகசம் ஒன்று இருக்க முடியுமானால், அது ரசவாத சாகசமே! செப்பைத் தங்கமாக்கும் வித்தையை அறிவதற்காகவே சித்தர் பெருமக்களைத் தேடிச் சென்று, தங்களைச் சீடர்களாகச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி கெஞ்சி நின்றவர்கள் பலர் உண்டு.ஆனால், அந்த உலோக ரகசியமோ, இன்றுவரை அறியப்படாத ரகசியமாக- பெரும் புதிராகவே உள்ளது. இன்று 'மெட்டலர்ஜி’ எனப்படும் உலோகவியல் கல்வியில் உச்சம் தொட்டவர்கள்கூட மண்ணிலிருந்து கிடைக்கும் தங்கத்தைத் தவிர்த்து, ஏனைய உலோகங்களை வைத்து அதன் குணத்தை மாற்றி தங்கம் செய்வது என்பது அசாத்தியம் என்கிற கருத்தையே கொண்டுள்ளனர்.செயற்கையாகத் தங்கம் செய்ய முனைந்து, அதில் ஓரளவு சாதித்தவர்கள்கூட... இயற்கையாகத் தோண்டி எடுப்பதைவிட செயற்கைத் தங்க முயற்சி பல மடங்கு கூடுதல் செலவைத் தருவதால், அந்த முயற்சியைத் தொடரவில்லை. மாறாக, 'சூப்பர் கண்டக்டிவிடி மெட்டீரியல்’ எனும் எடைகுறைவான, அதேநேரம் மிக பலமான ஓர் உலோகத்தைக் கண்டறிவதில்தான் மிகவும் சிரத்தை காட்டி வருகின்றனர். இந்த சூப்பர் கண்டக்டிவிடி மெட்டீரியல் கண்டறியப்பட்டுவிட்டால் விமானம், பேருந்து, ரயில் என்று சகலத்திலும் அது பயன்படுத்தப்பட்டு, எரிபொருள் செலவினம் மிகக் குறையும். அடுத்து, மின்சாரத்தைக் கடத்துவதில் ஏற்படும் விரயம் தவிர்க்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது முழுவது மாய் பயன்படுத்தப்படும்.எனவே, தங்கமாக்கும் விஞ்ஞான முயற்சிகள் மிக மிகப் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. ஆனால், தங்கத்தின் மேல் உள்ள மதிப்போ நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறது. உலகின் பொதுப் பணமாக இதைக் கருத முடிவதும் ஒரு காரணம். இன்று எந்த நாட்டிடம் அதிகக் கையிருப்பு தங்கம் உள்ளதோ, அந்த நாடே உண்மையான பொருளாதார பலமுள்ள செல்வச் செழிப்பான நாடாகும். அந்த வகையில், நம் பாரத தேசத்தை உலகிலேயே மிக அதிக தங்கம் கொண்ட ஒரு நாடாக தாராளமாகச் சொல்லலாம். இங்கேதான் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களிடம் கூடக் குந்துமணி தங்கமாவது உள்ளது. தங்கத்தை மிகத் தெய்விகத் தன்மை பொருந்தியதாகக் கருதும் கலாசார அடிப்படை இன்னொரு காரணம்.வாழ்வின் எல்லா முக்கிய தருணங்களிலும் தங்கம் இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது.ஆண்- பெண் சேர்க்கைக்குக் காரணமான திருமணத்துக்கே தங்கம்தான் பிரதான காரணியாக உள்ளது. சுமாரான அழகுடன் பிறந்துவிட்ட பெண்களை எல்லாம் இல்வாழ்க்கை எனும் கடலைக் கடக்கவைக்கும் பெரும் காரணியாக தங்கமே உள்ளது. ஒருவருடைய அந்தஸ்தை இதுவே தீர்மானிக்கிறது.எந்த விஷயத்துக்கும் ஓர் அளவு உண்டு என்பார்கள். அந்த அளவு என்பது கணக்காக, அதாவது எண்ணாக உள்ளது. மொழி என்பது எழுத்தாக உள்ளது. இந்த இரண்டும் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. இதை வைத்தே, 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ எனும் வாக்கு தோன்றிற்று. இந்தக் கண்ணான எண்ணின் அளவீட்டில், கண்ணுக்குப் புலன் ஆகாத ஒரு தூசி எடைக்கும் கீழான எடை கொண்ட தங்கத்துக்கும் பெரும் மதிப்பு இருப்பதுதான் விந்தை!தங்கம் என்று ஒன்று இல்லாதபட்சத்தில், அப்படி ஒரு அளவீட்டையே பயன்படுத்தும் ஒரு நிலைப்பாடு மனித இனத்துக்கு ஏற்பட்டிருக்காது. எண்ணின் தொடக்கமாய் இங்கே ஒன்றுதான் உள்ளது. அதன் கீழான அளவுகள் அரை, கால், காலேஅரைக்கால் என்பதுதான். அந்த காலேஅரைக்காலுக்குள் பல காலேஅரைக்கால்கள் இருப்பதெல்லாம்கூட தங்கத்தை எடையிடும்போதே உணரப்படுகிறது. இதனால் தான், பொற்கொல்லர் வீட்டுக்கு அருகில் உள்ள சாக்கடைகூட சிலரால் அரித்தெடுக்கப்படும் நிலைக்கு உள்ளாகிறது.மிக நல்ல ஒரு மனிதரை மெச்ச முற்படும் போது அவரை நல்லவர், தூயவர், சிறந்தவர் என்று எவ்வளவு சொன்னாலும் ஏற்படாத ஒரு நிறைவு, 'தங்கமான மனிதர்’ என்றவுடன் வந்துவிடுகிறது. இப்படி பூமியின் பெரும் செல்வமாய், அழகின் இருப்பிடமாய், ஒளியின் நிலைக்களனாய், குன்றாத மதிப்போடு ஒவ்வொரு நாளும் உயர்ந்தபடியே இருக்கும் ஒரே வஸ்து தங்கம் மட்டுமே!இன்று மட்டுமல்ல, உலகில் மனித நாகரிகம் தொடங்கிய நாளில் இருந்தே இதுதான் நிலை. பூமியில் மட்டுமின்றி, பூமிக்கு அப்பால் விண்ணகத்தே இருப்பதாக நம்பப்படும் மற்ற புவனங்களிலும் தங்கத்துக்குதான் முதல் மதிப்பு; முதல் இடம்! குபேர நிதியில் இதுவே பிரதானம். பொருளைப் புறந்தள்ளிய பெரும் ஞானியர்கூட கடவுளிடம் வேண்டிப் பெற்றது இதைத்தான். தனக்குப் பிட்சையிட ஏதுமில்லாத ஓர் ஏழையின் பொருட்டு மனமிரங்கி, ஆதிசங்கரர் பாடியதுதான் கனகதாரா ஸ்தோத்திரம். இந்த நிதியைப் பெறுவதற்காகவே வித்யாரண்யர் துறவறம் பூண்டார். திருமகளைத் தியானித்து இந்த நிதியையும் பெற்றார். தன்னைச் சோதிக்க நினைத்தவர்களுக்குப் பாடம் புகட்ட விரும்பிய வேதாந்ததேசிகன், ஸ்ரீஸ்துதி பாடினார்; பொன்னும் மழையாகப் பொழிந்தது.இப்படிப்பட்ட சிறப்புக்குரிய பொன்னுக்குரிய கிரகமாகவும் கிரகாதிபதியாகவும் திகழ்பவர் குருபகவான். 'பொன்னன்’ என்பது இவருக்கான இன்னொரு பெயர். குரு என்பவர் நம்மை எல்லாம் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்பவர். அறியாமை இருளை நீக்குபவர். எனவே, ஒளிமிகுந்த தன்மையை குணமாகக் கொண்ட குருவே தங்கத்துக்கு அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் குறையும் போதும், இவரது சஞ்சாரம் தவறாகும் போதும் தங்க நகைகள் தொலைவது, திருடு போவது போன்றவை நிகழும். உடனேயே எப்பாடுபட்டாவது நாம் தங்கத்தை வாங்கி விடும்பட்சத்தில், குருவருள் குறைய நேர்ந்தாலும், அதை எப்பாடுபட்டாவது அடைந்துவிடும் சக்தி நமக்கு இருப்பதை அது உணர்த்தும்.இந்திரலோகத்தில் தர்பாரில் இந்திரன் அமர்ந்திருக்க, அரம்பையர் கூட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. உல்லாசமான சூழல். அப்போது சபைக்கு, பிரஹஸ்பதியாகிய குரு பகவான் வருகிறார். அவரை அந்த உல்லாச சூழ்நிலையில், இந்திரன் வரவேற்க மறக்கிறான். தான் வந்திருப்பதை பிரஹஸ்பதி குறிப்பால் உணர்த்தியும் அவனிடம் அலட்சியமே தொடர் கிறது. உடனே பிரஹஸ்பதி, 'இனி இந்த அமர லோகம் பக்கமே நான் வரமாட்டேன்’ என்று கூறி, கோபித்துச் செல்கிறார்.குரு நீங்கியதால், இந்திரனின் செல்வம் குறைகிறது. நிரம்பிய பொன் பேழைகளில் உள்ள பொற்காசுகள்தான் முதலில் மாயமாகின்றன. அதன்பின், அவன் பாடாய்ப்பட்டு ஓடாய்த் தேய்ந்து இந்திர உலகை விட்டு பூவுலகு வந்து, இன்றைய மதுரையான அன்றைய கடம்ப வனத்தில் உள்ள சொக்கலிங்க சுயம்புமேனியைத் தரிசித்து, பாவ விமோசனம் அடைகிறான். அப்படியே, அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்துப் பொற்றாமரைகளால் லிங்க ரூபத்துக்கு அர்ச்சனையும் புரிகிறான். அப்படி அவன் அர்ச்சனை புரிந்து வழிபட்டது ஒரு சித்ரா பௌர்ணமி நன்னாளில்..! அன்றிலிருந்து இன்றுவரை, மதுரை சொக்கநாதப் பெருமானை சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரன் வந்து தரிசித்து வணங்கிச் செல்வதாக ஐதீகம்.
|
|
| |
RAWALIKA | Date: Friday, 28 Feb 2014, 11:57 PM | Message # 20 |
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| சூரியனின் கதிர் பட்டு, கூரிய தாமரை மொட்டு அவிழ்ந்து, இதழ்கள் அனைத்துப் பக்கமும் பிரியும். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் அது. இதனாலேயே மனத்தை தாமரையோடும் ஒப்பிடுவர்.மனமும் அறிவொளியால் மலர்கிறது. தான் மலரக் காரணமான குளம் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், தாமரை அதனுள் மூழ்கி விடுவதில்லை. மனமும் அறிவொளியால் மலர்ந்தால், அஞ்ஞானத்தில் மூழ்குவதில்லை. இப்படித் தாமரைக்கும் மனத்துக்கும் அநேக ஒற்றுமை உண்டு. மலர்த் தாமரைக்கே இப்படி என்றால், ஒளிமிக்க பொற்றாமரைக்கு இன்னும் எத்தனை விசேஷம் உரியது என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதன் பிரகாசம், அதன் திண்மை எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்கவே இயலவில்லை. அது நம் கற்றலுக்கு வெளியே உள்ளது.அப்படிப்பட்ட பொற்றாமரைகள் பூத்த குளம் உடைய சொக்கலிங்கநாதர் கோயிலும் இந்திரனால் கட்டப்பட்டு, அவனாலேயே குடமுழுக்கும் செய்யப் பட்டது. குடமுழுக்கு நாளில் அந்த ஆதிசிவன் தன் சிரசிலிருந்து அமுதமாகிய மதுரத்தையே எடுத்து ஆலயம் மீதும், அது அமைந்த ஆலவாய் நகர் மீதும் தெளித்தார். அந்த மதுரத் துளிகள் பட்டு ரட்சணை பெற்றதாலேயே அந்த நகர் 'மதுரை’ என்றானது. அதனாலேயே இம்மண்ணில் அந்த சிவனின் திரு விளையாடல்கள் நிகழ்ந்தன; அமிழ்தான தமிழ்மொழியும் இங்கு சங்கம் கண்டது. கங்கைக்கு நிகராக, இறைவன் கை வைக்க 'வைகை’யும் பாய்ந்து வந்தது.காலங்கள் பல உருண்டுவிட்ட நிலையிலும், அந்த அமுதத்தின் குணம் காரணமாகவே இன்றும் இம்மண்ணில் இயலும், இசையும், நாடகமும் பிற இடங்களைக் காட்டிலும் தூக்கலான தரத்திலும், தன்மையிலும் இருந்து வருகிறது. பொன்னை குணத்தில் மட்டுமே கொண்டிருந்த தெய்விக குணத்தவர்கள் இருந்த வரையில் பொற்றாமரையும் பூத்த வண்ணம் இருந்தது. கலிமாயை காரணமாக அந்த எண்ணிக்கை குறைந்து முற்றாக இல்லாது போகவும், அதுவும் மறைந்தது.ஆனாலும், இன்றும் பொன் வேண்டுவோரும் குருவருள் வேண்டுவோரும் மதுரையம்பதி வந்து அந்த சிவபிரானையும், தீயில் பூத்த அன்னை மீனாட்சியையும் துதிக்கும்போது, அவர்களுக்கான விருப்பம் நிறைவேறத் தேவை யான அருளும் உருவாகிறது.இந்தப் பொன்னை தன் ஸித்தியினாலே அந்தப் பெருமானும் பொன்னணையாள் வரையில் உருவாக்கித் தந்து சென்றான். இவனுக்கே பொன்னம்பலன் என்று ஒரு பெயரும் உண்டு. இந்த பொன்னம்பலனின் பொன்னம்பலம் இருப்பது சிதம்பரத்தில்! பஞ்ச பூதத்தில் ஆகாய தத்துவத்துக்குரிய தலம் இது. ஆகாயமே முதல் பூதம்; பெரும் பூதம். அது இருப்பதாலேயே அதனுள் பூமி மிதக்கிறது. அதனைக் காற்றும் சுற்றி வளைக்க முடிகிறது. மழை மேகங்களும் தோன்றி மழையைப் பொழிந்திட... சூரிய- சந்திரர்களின் சுழற்சியாலே இரவு- பகலை உருவாக்க முடிகிறது.எனவே பெரிதான- எல்லையில்லாத, இருந்தும் இல்லாத ஆகாய பூதத்தலத்தில் அதன் பொருட்செறிவோடு உலக இயக்க கதியையும் விளக்கும் முகமாய் திருநடன கோலத்தோடு நடராஜ மூர்த்தியாக சேவை சாதிக்கிறான் அவன். இந்த நடன தோற்றத்தை அனுதினமும் ரசிப்பவர்கள் விண்ணுலகில் நால்வரே! அவர்கள் இதை ஒரு வரமாகவே பெற்றுவிட்டார்கள்.ஒருவர்- பதஞ்சலி. மனித உருவம், பாம்புச் சிரம் இவரது தோற்றம். அடுத்து பிருங்கி முனிவர், வியாக்ரபாதர், நந்தீசர். இவர்களில் ஒருவருக்குக் கொம்பு சிறப்பு; ஒருவருக்குப் புலிக்கால்கள் சிறப்பு; ஒருவருக்குக் காதுகள் சிறப்பு.ஆனால்... பாவம், பதஞ்சலி! இவருக்குக் காலும் இல்லை, காதும் இல்லை, கொம்பும் இல்லை. கண்கள் மட்டுமே!இவர், 'ரஜித ஸ்ருங்க ஸ்தோத்திரம்’ என்று ஒரு துதியாலே பொன்னம்பலத்தில் உறையும் இறைவனைப் பாடுகிறார்! எப்படிப் பாடுகிறார் தெரியுமா? தான் பாடும் துதியில் எங்கும் கொம்பெழுத்துக்களோ, 'கால்’ எனப்படும் துணை எழுத்தோ இல்லாதபடி வார்த்தைகளை அமைத்துப் பாடுகிறார். அது ஒரு வியப்பூட்டும் ஸ்லோகம்.ஏன் இப்படிப் பாடவேண்டும் என்பதற்கு, நமது மகாபெரியவர் வேடிக்கையாக ஒரு கருத்தைக் கூறியுள்ளார்!- சிலிர்ப்போம்
|
|
| |