நீதிக் கதைகள் - Page 4 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » நீதிக் கதைகள் (நீதி சொல்லும் கதைகள்)
நீதிக் கதைகள்
PattuDate: Sunday, 02 Mar 2014, 6:01 PM | Message # 31
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாற்று கோணம் நமக்கு முக்கியம்

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது.

ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார்  ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Mar 2014, 5:16 PM | Message # 32
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தன்னுடைய மதிப்பை மாற்றி கொள்ளாமல் தக்கவைத்து கொள்

ஒரு மேடைபேச்சாளர் தன்னுடைய சட்டைபையிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து இது என்ன என பார்வையாளர்களை பார்த்து கேட்டார் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் பின்னர் அதனை தரையில் கசக்கி வீசி எறிந்தபின் அதுஎன்ன என கேட்டார் 

அப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் பிறகு அதன்மீது ஒரு முத்திரையை குத்தி இப்போது இது என்னவென கேட்டார் இப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் 

உடன் அம்மேடை பேச்சாளர் பார்த்தீர்களா ஒரு 500 ரூபாய்தாளானது நாம் என்ன செய்தாளும் அது தன்னுடைய மதிப்பை மாற்றி கொள்ளாமல் தக்கவைத்து கொண்டுள்ளது 

அவ்வாறே நாம் அனைவரும் நம்முடைய குணத்தை திறனை எந்த இக்கட்டு [சூழ்நிலை ] வந்தாலும் எந்த சூழலிலும் மாற்றிகொள்ளாமல் நம்முடைய அவரவர்களின் தனித்தன்மையை பராமரிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்

பின்னர் இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும் என கேட்டார் உடன் அனைவரும் எனக்கு எனக்கு என தத்தமது கைகளை உயர்த்தினார் ஆயினும் ஒரு இளம் வாலிபன் தடதடவென மேடைக்கு ஓடிவந்து அந்த 500 ரூபாய் தாள் தனக்கு வேண்டுமென தன்னுடைய கையை நீட்டி பறித்து கொண்டார் 

உடன் அம்மேடை பேச்சாளர் பார்த்தீர்களா நம் அனைவருமே அந்த 500 ரூபாய் தாளை விரும்புகின்றோம் ஆனால் இந்த இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார் ஆம் நம்மை சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன அவைகளை ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி கொண்டு தம்முடைய வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கின்றனர்

மற்றவர்கள் அந்த வாய்ப்பு நம் கையில் தானாக வந்த விழும் அதன்பின் நாம் பயன்படுத்தி கொள்வோம் என சோம்பேறியாக இருக்கின்றோம் என்பதே உண்மை நிலவரமாகும்




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Mar 2014, 5:03 PM | Message # 33
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
ஒருவனை எதிர்கொள்ள உருவம் தடையல்ல..!

உருவத்தில் சிறியவனாக இருப்பதால் யாரையும்  ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு ஒரு வகையில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.

பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு அருகே செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் கீறுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு 'ஈ'  ஏய் !  நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் முடியுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது.

ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் கடிக்க முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே கீறிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை பாடாய் படுத்தி பாடம் புகட்டிவிட்டதே!. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 05 Mar 2014, 7:00 PM | Message # 34
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
குயில் , காக்கா , ஆந்தையார்

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன.

ஒரு நாள், ""அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?'' என்றது.

""நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் தூங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்,'' என்றது தாய் ஆந்தை.

""ஏனம்மா கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்துவிட்டார்?'' என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு.

""கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றது தாய் ஆந்தை.

""அப்படி என்ன தவறு செய்தார்?'' என்று கேட்டன குஞ்சுகள்.

""ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் சென்றனர்.

""குயில் டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டது.

""இவர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர்.

ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.

""பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்து நன்கு தூங்குவது... இரவில் எழுந்து வெளியே செல்வது... இப்படியே இருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டியிருக்கிறது.

""அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலை செய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்க வேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

""அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.

""நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை,'' என்றது தாய் ஆந்தை.

""அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,'' என்றனர்.

செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 06 Mar 2014, 5:30 PM | Message # 35
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.
 
அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி, "நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும்தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 07 Mar 2014, 6:01 PM | Message # 36
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
வியாபார தந்திரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான்.

அவனுக்கு நல்ல விற்பனை! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும்.

அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன்.

அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 08 Mar 2014, 7:52 PM | Message # 37
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய்.

ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள்
ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தான். ஆசிரியர் அவனைக் கண்டார். அவன் ஏதோ கற்பனை உலகத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவனை தன்னருகில் வரச் சொன்னார்.

" பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக் கேட்டார். அதற்கு அம் மாணவன் தனது வீட்டில் அழகிய காளை ஒன்று இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினான்.

ஆசிரியர் அதற்கு அவனிடம்"அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார்.

அம் மாணவனும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து காளையை எண்ணியபடி இருந்தான். சாதாரணமாக இல்லை ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தான்.

அதன் பின் இப்படி இருப்பது அவனுக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றான்.
பள்ளிக்கு வந்தவன், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தான்.

ஆசிரியர் அவனிடம் "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்து விட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம் மாணவன் "இனிமேல் நான் குன்றுக்கு போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது"என்றான்.

இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவன் " எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றது " என்றான்.

இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவனுடைய மனம் அவனையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது.

ஆக, ஒருமுகப்படுத்தப்பட்ட மனதால் முடியாதது எதுவுமேயில்லை. தெய்வத்தின் மீதும், நல்ல எண்ணங்களின் மீதும் மனதை  ஒருமுகப்படுத்துவோமேயானால் நாம் பேரின்பத்தைப் பெறுவோம் என்பது உண்மை.

மாறாக தீய எண்ணங்களில் மனதை செலுத்தினால் அழிவு நிச்சயம். எனவே இன்றிலிருந்தே மனதை நல்ல எண்ணங்களின் மீதும் தெய்வத்தின் மீதும் செலுத்தி, நன்மைகளை அடைவோம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 09 Mar 2014, 7:15 PM | Message # 38
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அறிவுத்திறனும், உடல் பலமும்

ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன்.

ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.

ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும் பாராட்டினார்.

பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது.

நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.

"முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம் நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?" என்று முதலாளியும் குழம்பினார்.

அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்:

"நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?'' ரங்கன் சொன்னான்: "இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை அய்யா!

நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமே!''

முதலாளி சொன்னார்: "ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே செய்யமுடியாது.

நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க வேண்டி வரலாம்.

ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்!''


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Sunday, 09 Mar 2014, 7:16 PM
 
PattuDate: Monday, 10 Mar 2014, 6:53 PM | Message # 39
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
 சல்லடையா? முறமா?

பல ஆண்டு காலம் பயின்றுவிட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்குச் செல்லும் மாணவன் ஒருவனைப் பார்த்து அந்த குரு சொன்னார்: "நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!"

இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கசடுகளையும் கல்லையும் மண்ணையும், தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!

நீங்கள் யார்? சல்லடையா? முறமா?



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 11 Mar 2014, 7:45 PM | Message # 40
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மாற்ற வேண்டியது உலகை அல்ல உங்களை

இது வெறு‌ம் கதைய‌ல்ல. ந‌ம் வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான ஒரு தகவ‌ல்.
 
நிறைய பே‌ர் உலக‌ம் இ‌ப்படி இரு‌க்‌கிறதே, ம‌னித‌ர்க‌ள் இ‌ப்படி இரு‌க்‌கிறா‌ர்களே எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் எ‌ப்போதுதா‌ன் மாறுவா‌ர்களோ, இவ‌ர்க‌ள் எ‌ப்படி‌த்தா‌ன் ‌திரு‌ந்துவா‌ர்களோ எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். ஆனா‌ல் உல‌க‌த்தை மா‌ற்ற முய‌ற்‌சி‌ப்பதை ‌விட, ந‌ம்மை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள மு‌ய‌‌ற்‌சி‌ப்பதுதா‌ன் ‌சிற‌ந்தது.

இத‌ற்கு உதாரணமாக ஒரு கதை:

ஒரு கால‌த்‌தி‌ல் ம‌ங்கலாபு‌ரி எ‌ன்ற நகர‌த்தை ஒரு ம‌ன்ன‌ன் ஆ‌ண்டு வ‌ந்தா‌ன். அவ‌ன், ஒரு நா‌ள் வெகு தொலை‌வி‌ல் உ‌ள்ள பகு‌திகளு‌க்கு சு‌ற்றுலா செ‌ன்றா‌ன். அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வாகன‌ங்க‌ள் ஏது‌ம் இ‌ல்லாததா‌ல் பல இட‌ங்களு‌க்கு நட‌ந்தே செ‌ல்ல வே‌ண்டியதா‌‌யி‌ற்று.

தனது பயண‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு அர‌ண்மனை‌க்கு வ‌ந்த ‌ம‌ன்ன‌ன், த‌ன் கா‌ல்க‌ளி‌ல் கடுமையான வ‌லியை உண‌ர்‌ந்தா‌ன். இதுதா‌ன் அவ‌ன் அ‌திகமான தூர‌ம் நட‌ந்து செ‌ன்ற முத‌ல் பயணம் எ‌ன்பதாலு‌ம், அவ‌ன் செ‌ன்று வ‌ந்த பகு‌‌திக‌ள் பல கரடுமுரடாக இரு‌ந்ததா‌லு‌ம் கா‌ல்வ‌லியை அவனா‌ல் தா‌ங்கவே முடிய‌வி‌ல்லை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ம‌ன்ன‌ன் ஒரு ஆணை‌யி‌ட்டா‌ன். அதாவது, "இ‌ந்த நகர‌ம் முழுவது‌ம் உ‌ள்ள அனை‌த்து சாலைகளையு‌ம் ‌வில‌ங்‌கி‌ன் தோலை‌ கொ‌ண்டு பர‌ப்‌பி ‌விட வே‌ண்டு‌ம்" எ‌ன்பதாகு‌ம்.

இ‌தனை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கு ஏராளமான ‌வில‌ங்குகளை கொ‌ல்ல வே‌ண்டி வரு‌ம், மேலு‌ம் இத‌ற்கு ஏராளமான பண‌ம் செலவாகு‌‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம்.

இதனை உண‌ர்‌ந்த ம‌ன்ன‌னி‌ன் ப‌ணியாள‌ர் ஒருவ‌ர், ‌மிகு‌ந்த ப‌ணிவுட‌ன் ம‌ன்ன‌னிட‌ம் செ‌ன்று, ‌நீ‌ங்க‌ள் கூ‌றியபடி, நகர‌ம் முழுவதையு‌ம் தோலா‌ல் பர‌ப்‌பினா‌ல் ஏராளமான பொரு‌ட்செலவாகு‌ம். உ‌ங்க‌ள் ஒருவரு‌க்காக இ‌ப்படி நகர‌த்தையே மா‌ற்றுவது தேவை‌யி‌ல்லாத செல‌வின‌ம். அத‌ற்கு ப‌திலாக ‌நீ‌ங்க‌ள் ‌‌மிகவும ‌‌மிருதுவான ஒரு தோலை‌க் கொ‌ண்டு கால‌ணி செ‌ய்து கொ‌ள்ளலாமே எ‌ன்று ஆலோசனை‌க் கூ‌றினா‌ன்.

ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ல் மூ‌ழ்‌‌கிய ம‌ன்ன‌ன், இறு‌தியாக தனது ப‌ணியாள‌ரி‌ன் ஆலோசனையை ஏ‌ற்று‌க் கொ‌ண்டு தன‌க்காக ஒரு கால‌ணியை தயா‌ரி‌க்க சொ‌ன்னா‌ன்.

இது வெறு‌ம் கதைய‌ல்ல. ந‌ம் வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான ஒரு தகவ‌ல். அதாவது, இ‌ந்த பூ‌மியை ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியான உலகமாக நா‌ம் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள முடியு‌ம், அத‌ற்காக நா‌ம் ந‌‌ம்மை‌த்தா‌ன் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டுமே‌த் த‌விர, இ‌ந்த உலக‌த்தை அ‌ல்ல எ‌ன்பதுதா‌ன் அது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » நீதிக் கதைகள் (நீதி சொல்லும் கதைகள்)
Search: