நீதிக் கதைகள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » நீதிக் கதைகள் (நீதி சொல்லும் கதைகள்)
நீதிக் கதைகள்
PattuDate: Saturday, 01 Feb 2014, 5:16 PM | Message # 1
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
காகமும் நாய்க்குட்டியும்

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க்
குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன்
அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின்
செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து
துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல
குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.

உண்மைதான்! என்றது நாய்க் குட்டி
 
பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப்
பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக்
கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக்
கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும்.
உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை
வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல்
அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே
முன்னிற்கும்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 01 Feb 2014, 5:20 PM | Message # 2
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
துன்பத்தை உதறித் தள்ளு

 ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.

ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

நீதி: மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Sunday, 02 Feb 2014, 6:00 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
கெடுவார், கேடு நினைப்பார்!

ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.

ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.

நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது

ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது

சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது

தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து

ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.

ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .

தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

நீதி:

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:33 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
முள்ளம் பன்றியும் ஓநாய்யும்

தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

நீதி:

"வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Feb 2014, 5:21 PM | Message # 5
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
வெற்றிக்கனி! |  

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார்.
ஒரு
ஆற்றங்கரையைக் கடக்க
வேண்டிய நேரத்தில், அரசவை
ஜோசியர், “மன்னா,
இன்றைக்கு நாள்
நன்றாக
இல்லை.
அடுத்த
திங்கள்கிழமை போருக்குப் போனால்
வெற்றி
நிச்சயம்” என்று
சொன்னார்.
 
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி
உஷாராகிவிடுவான். அவன்
எதிர்பாராத நேரத்தில் உடனே
தாக்கினால்தான் வெற்றி.
ஆனால்,
ஜோசியர் சொன்ன
பின்
சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை
கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம்
சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை
வருடம்
உயிரோடு இருப்பீர்கள் என்று
சொல்ல
முடியுமா?” என்று
கேட்டான்.

“இன்னும் இருபது
வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை
உருவி
அவர்
கழுத்தில் பதித்து, “இந்த
விநாடியே உங்கள்
ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று
கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று
அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா
ஜோசியம்! உங்களுக்கு எதிரான
எந்த
ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று
புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி
கொண்டார்.
 
வீண்
சந்தேகங்களை விலக்கி, உங்கள்
மீது
நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும்
வெற்றிக்கனி!

 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 3:51 PM | Message # 6
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Arumaiyaana neethik kathaikal 
pakirvukku nanri
 
PattuDate: Wednesday, 05 Feb 2014, 4:55 PM | Message # 7
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்|

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர்

வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள்

மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த தக்காளி பையை எப்போதும் உனக் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் .

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.

மெல்லப் புன்னகைத்த ஆசிரியர், ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.

நாம் ஒவொருவரும் இப்படி தான் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு

பகைமை மறப்போம் பகுத்தறிவோடு பயில்வோம் நன்றி




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 06 Feb 2014, 5:02 PM | Message # 8
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
வீண் பழியும் இலவம்பஞ்சும்

ஒரு ஊரில் வெட்டுபுலி  என்ற ஒருவன்
இருந்தான். அவன்
ஒரு
முறை
தேவையில்லாமல் ஒரு
கிராமவாசி மீது
பழி
சொல்லி
பஞ்சாயத்தைக் கூட்டினான்.
 
பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை
கிடைத்தது. பின்,
வீட்டிற்கு வந்த
வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை
உறுத்தியது. கிராமவாசி மீது
தான்
பழி
சொன்னதை எண்ணி
வருந்தினான். எனவே,
தன்
பாவத்திற்கு ஏதாவது
பிராயச்சித்தம் உண்டா
என்று
தேடினான்.

என்ன
பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே,
அந்த
ஊரிலிருந்த ஒரு
துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான்
இந்தக்
கிராமத்தில் வசிக்கும் ஒருவர்
மீது
வீண்
பழி
சொல்லிவிட்டேன். அது
என்
மனத்தை
உறுத்துகிறது. அந்தப்
பழி
சொன்ன
பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு
வழி
கூறுங்கள்!” என்று
கேட்டான்.

துறவி
சிறிது
யோசித்துவிட்டு, “இன்று
இரவு
மூன்று
கிலோ
இலவம்
பஞ்சை
எடுத்துப் போய்
அந்த
கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு
பரப்பிப் போட்டுவிட்டு வந்து
விடு.
நாளை
வந்து
என்னைப் பார்,”
என்று
கூறினார்.

வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு
சென்று
கிராமவாசியின் வீட்டின் முன்
பரப்பி
விட்டான். பின்
மறுநாள் சென்று
துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என்
பாவம்
போய்
இருக்குமா இந்நேரம்?” என்று
கேட்டான்.

உடனே
துறவி,
“வெட்டுபுலி! நீ
இப்போது அந்த
கிராமவாசியின் வீட்டிற்குச் செல்.
அவன்
வீட்டு
முன்
நீ
நேற்றிரவு பரப்பி
வைத்த
பஞ்சை
மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,”
என்று
கூறினார்.

வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால்,
ஒரு
விரல்
அளவு
பஞ்சு
கூட
அங்கு
இல்லை.
எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக்
கண்ட
வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி
வந்தான்.

“துறவியாரே! நேற்றிரவு நான்
கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த
பஞ்சில் ஒரு
துளிப்
பஞ்சாவது இப்போது அங்கு
இல்லை.
என்ன
செய்வது?” என்று
கேட்டான்.

துறவி
சிரித்துவிட்டு, “வெட்டுபுலி! நீ
விரித்துப் போட்டுவிட்டு வந்த
பஞ்சை
இப்போது மீண்டும் எப்படி
அள்ள
முடியாதோ, அதே
போல,
நீ
ஒருவர்
மீது
கூறிய
பழியையும் அதனால்
உனக்கு
ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற
முடியாது. திருப்பி வார
முடியாத பஞ்சைப் போன்றது தான்
உன்
பழிச்
சொற்களும். அவற்றையும் இனித்
திருப்பி வார
முடியாது. இறைவனிடும் உன்
தவறுக்காக மன்னிப்பு கேள்,”
என்று
கூறினார்.

வெட்டுபுலிக்கு உண்மை
புரிந்தது. அன்று
முதல்
மற்றவர்கள் மீது
பழி
சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர்
மீது
வீண்
பழி
சுமத்துவதால் பலன்
ஏதும்
கிடைக்கப்போவதில்லை என்பதை
உணர்ந்தான் வெட்டுபுலி.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 07 Feb 2014, 5:14 PM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
மரங்கொத்திப் பறவை

சோம்பலால்
வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச்
சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி
வேண்டினான்.

அவனது
சோம்பலை உணர்ந்த அந்த மகான்
அவனுக்கு அதை உணர்த்த ஒரு
கதையைக்கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய
அலகால் டொக் டொக்கென்று மரத்தைக்
கொத்திக் கொண்டே அந்த மரத்தின்
மேல் தாவித் தாவி ஏறியது. 
அதைப் பார்த்த ஒரு மனிதன்,
""மூடப் பறவையே, எதற்காக மரம்
முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?''
என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே
நான் என் உணவைத் தேடுகிறேன்.
தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை
போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த
பிறகு, அந்த மனிதனைப் பார்த்து,
""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும்,
மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும்
தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான்,
""நீயும் இந்தப் பரந்த உலகத்தில்
தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக
இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
vinodhaDate: Sunday, 09 Feb 2014, 9:18 AM | Message # 10
Sergeant
Group: Users
Messages: 24
Status: Offline
Hi Pattu,
Arumaiana kathaigal.
Thanx for sharing it.


Regards,
Vinodha.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » நீதிக் கதைகள் (நீதி சொல்லும் கதைகள்)
Search: