இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் (நாவல்களும் சினிமாவும்)
இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும்
LayaDate: Monday, 03 Feb 2014, 4:34 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் என்ற இப்பகுதியில் நாவல்களாக வந்த கதைகள் பல சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது
 
இதை பற்றி உங்கள் பார்வையில்..
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:24 PM | Message # 2
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
திரைப்படம்: இருவர் உள்ளம்
 வசனம்:  கலைஞர் கருணாநிதி
நடிகர்கள்: சிவாஜி கணேசன், சரோஜாதேவி, எம்.ஆர். ராதா
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
இயக்குனர்: ஐ.வி. ப்ரசாத்
Year - ஆண்டு: 1963


*  அழகு சிரிக்கின்றது
* ஏனழுதாய் ஏனழுதாய்
* இதய வீணை தூங்கும் போது
* கண்ணே கண்ணே உறங்காதே
* கண்ணெதிரே தோன்றினாள்
*  நதி எங்கே போகிறது
*  பறவைகள் பலவிதம்
* புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை


பெண் மனம் என்கிற லக்‌ஷ்மியுடைய கதையை திரைப்படமாக எடுத்த படம்தான் இது.

கதை என்னனா, சிவாஜி ஒரு ப்ளே பாய். பணக்காரன், ஊர் சுற்றிக்கொண்டு பல பெண்களுடன் பழகிக்கொண்டு, உறவு வைத்துக்கொண்டும் இருப்பவர்.

* 1) பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

என்கிற பாடல்மூலம் இவர் லீலைகள் சொல்லப்படும். இவருடைய நண்பன் பாலாஜியும் இதே
ரகம்தான். ரெண்டு பேரும் அழகான எந்தப்பெண்னையும் விடுவதில்லை. சும்மா சுத்த
வேண்டியது கழட்டி விடவேண்டியது.

இந்த மாதிரியான ஜாலியான் சிவாஜி வாழ்க்கையில் திடீர்னு ஒரு பெண் வந்துவிடுவாள் சிவாஜி, ஒரு ஏழை டீச்சர்,
சரோஜாதேவியை எதேச்சையாக சந்திப்பார். எந்தப்பெண்ணையும் விடாத சிவாஜி
இவரையும் காதலிக்க ஆரம்பித்துவிடுவார். திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவார்.
தான் பணக்காரன், அழகா இருப்பவன், தன்னை ஆசையுடன் சரோஜாதேவி மணந்துகொள்வார்
என்று அவர் போடும் கணக்கு தப்புக்கணக்காகிவிடும்.

சரோஜாதேவிக்கு அவரையும் அவர் நடத்தையும் சுத்தமாக பிடிக்காது. சரோஜாதேவின் அப்பா, ”அய்யா
தெரியாதையா” ராமாராவ். அவர் ரெண்டாந்தாரம் ஒரு இளம் மனைவியை கல்யாணம்
செய்துகொண்டு மகள் சரோஜாதேவியிடமும் அக்கறையுடன் இருப்பார்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:27 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
சிவாஜியின் ஆசையை சரோஜாதேவியிடம் சொல்லிப் பார்ப்பார். சரோஜாதேவி, சிவாஜியை மணப்பது முடியவே முடியாது என்று உறுதியாக சொல்லிவிடுவார். சிவாஜி,
எப்படியாவது அவரை மணந்தே ஆகனும்னு நிப்பார்.

ஒரு நாள் சிவாஜி தன் தங்கைக்கு ட்யூசன் சொல்லிக்கொடுக்க என்று பொய்சொல்லி சரோஜாதேவியை வீட்டில்
யாரும் இல்லாத நேரம் அழைத்துவருவார். வீட்டில் யாரும் இருக்கமாட்டாங்க
என்பதால் தன் விருப்பத்தை, சரோஜாதேவியை மணம்முடிக்க ஆசை என்று மறுபடியும்
நாகரீகமாகத்தான் சொல்லுவார்.

சரோஜாதேவி அவரை கண்ணா பின்னானு திட்டி அனுப்பிவிடுவார். ஆனால் எதார்த்தமாக வீட்டிற்கு திரும்பிவந்த சிவாஜி
லிலேடிவ்ஸ் அவர்கள் சூழ்நிலையை தவறாக பலர் புரிந்துகொள்வார்கள்.
சரோஜாதேவியும் சிவாஜியும் விரும்பிப் பழகுவதுபோல் நினைத்து இவர்கள் உறவு
ஊருக்குத்தெரியும். பிரச்சினை வேறு கோணத்தில் மாறும்.

சிவாஜி அப்பாவாக ரங்காராவ். சிவாஜி ஒரு வழியா
தன் அம்மாவை கண்வின்ஸ் பண்ணி, அப்பாவுடைய "அர்ச்சனை" களுடன், அண்ணன்
(நடிகவேள்) ஆசியுடன் சரோஜாதேவியை மணம் முடித்த்துக்கொள்வார்.

ஆனால், கல்யாணம் ஆன பிறகும் சரோஜாதேவி அவரை அடியோடு வெறுப்பார். இருவருடைய
தாம்பத்ய வாழ்க்கையும் நரகமாகப் போகும். சிவாஜி, நல்லவராக திருந்தினாலும்
அவரை நம்பமாட்டார் சரோஜாதேவி.

சிவாஜி, முதலிரவில் பாடும் பாடல்

* 2) கண்ணெதிரே தோன்றினாள், கனிமுகத்தைக் காட்டினாள். நேர் வழியில் மாற்றினாள்.

இந்தப்பாடல் முடிந்தவுடன், சரோஜாதேவி அழுவார். சிவாஜி தன்னை ஃபோர்ஸ் பண்ணி
மணந்துகொண்டார் என்று குற்றம் சாட்டுவார். சிவாஜிக்கு தன் கணக்கு தப்பு
என்பது இப்ப்போத்தான் புரியும். ஹி வில் ஃபீல் கில்ட்டி.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:28 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அடுத்து வீட்டில் ஒரு விசேஷத்தில் எல்லாரும் இருக்கும்போது, சரோஜாதேவியை ஒரு பாட்டுப் பாடச்சொல்வார்கள்.

* 3) இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா?

அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே!
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே! ( படத்திலேயே பெஸ்ட் சாங் இதுதான்!) பாடலை அழுதுகொண்டே பாடுவார்.

இந்த பாடலின் வரிகளில் இருந்து (கண்ணதாசன்) சிவாஜி-சரோஜாதேவி உறவில் உள்ள
பிரச்சினை, அப்போது அங்கே இருந்த சிவாஜியின் கண்டிப்பான அப்பா
ரங்காராவுக்கு, மற்றும் எல்லோருக்கும் தெரிந்துவிடும். சிவாஜிமேல்
எந்தவிதமான நல்லெண்ணமும் இருக்காது அவர் அப்பா ரங்காராவுக்கு. தன் மகன்
பொறுக்கி என்று அவர் மேலெப்போதுமே வெறுப்பாத்தான் இருப்பார் ரங்காராவ்.

சரோஜாதேவி அப்பப்போ சிவாஜி மேல் கொஞ்ச நம்பிக்கை வந்து ஒவ்வொரு சமயம் நல்லா
நடந்துகொள்வார். அந்த சூழ்நிலையில் இந்த இரண்டு டூயட் பாடல்கள் வரும்.

* 4) நதியெங்கே போகிறது கடலைத்தேடி

* 5) அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கிறது

ஒருமுறை சரோஜாதேவிக்கு ஜுரம் வந்து அவர் கஷ்டப்படும்போது சிவாஜியின் பணிவிடைகளைப்
பார்த்து சரோஜாதேவி நெகிழ்ந்து அழுவார். அதையும் சிவாஜி தவறாகப்
புரிந்துகொண்டு பாடும் பாடல்

* 6) ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய்?

மரணம் வந்தால் தெரிந்துவிடும்
நான் மனிதன் என்று புரிந்துவிடும்
ஊர் சுமந்து போகும்போது உனக்கும்கூட விளங்கிவிடும் (கண்ணதாசன் வரிகள்)


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:29 PM | Message # 5
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
இந்தப்படத்தில் இன்னொரு சிறப்பு என்னனா, நடிகவேள், வித்தியாசமான ஒரு ரோல் ல நடித்து இருப்பார். சிவாஜியின் அண்ணன், நடிகவேள். ஒரு "வீணாப்போன"
லாயராக நடித்து இருப்பார். இவருக்கு ஜோடி டி பி முத்துலச்சுமி. இவர்களுக்கு
நெறைய குழந்தைகள் இருக்கும்.

* 7) ஆராரோ ஆராரோ இந்த அசட்டுப் பயபுள்ள ஆராரோ (ஏ எல் ராகவன்) என்கிற காமெடிப் பாட்டு இவர்களுக்கு.

கடைசியில் டிப்பிகல் நம்ம கல்ச்சரில் நடப்பதுபோல் திருமணம் முடிந்த பிறகு சிவாஜி
திருந்திவிட்டார் என்று தெரிந்தவுடன், அவரை ஏற்றுக்கொள்ள ரெடியாவார்
சரோஜாதேவி. ஆனால் ஒரு கொலைக்கேஸில் மாட்டிக்குவார். சிவாஜி,
ஒரு தான் செய்யாத கொலையில் மாட்டிக்குவார். கொலை செய்தது டி ஆர்
ராமச்சந்திரன்.

அதாவது சிவாஜியுடைய பழைய கேர்ள் ஃப்ரெண்டு (மணமானபிறகும்), மறுபடியும் அவரை உறவுக்கு அழைப்பார். சிவாஜி முடியாதுனு சொல்லியபிறகும்
விடமாட்டார். தன் மனைவி நடத்தைமேல் கோபம் கொண்ட கணவர் டி ஆர் ராமச்சந்திரன்
இவரை கொலை செய்துவிடுவார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து சிவாஜியை
இதில் ஃப்ரேம் பண்ணிவிடுவார்கள். சரோஜாதேவி சிவாஜியை ஏற்றுக்கொள்ளும்
நேரத்தில் கொலைக்கேஸில் மாட்டிக்குவார்.

சிவாஜியின் தந்தை ரங்காராவ், நீதிபதி, சிவாஜிதான் கொலை செய்து இருப்பார் என நம்புவார்.
சிவாஜியின் அண்ணன், நடிகவேள்தான் கடைசியில் சிவாஜிக்காக வாதாடுவார்.

கடைசியில் கொஞ்சம் சினிமாட்டிக்கா, சிவாஜிமேல் முழு நம்பிக்கை கொண்டுவிட்ட சரோஜாதேவி
போய் கொலையாளியை கண்டுபிடித்து கொண்டுவந்து அவருக்கு தண்டனை
வாங்கிக்கொடுத்து சிவாஜியை கொலைத்தண்டனையிலிருந்து காப்பாற்றுவார்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
beulaDate: Monday, 03 Feb 2014, 6:41 PM | Message # 6
Major
Group: Checked
Messages: 80
Status: Offline
pattu maami,
superb...! apdiye movie effect...pinnitteenga....!


Subha Jayanth
 
beulaDate: Monday, 03 Feb 2014, 6:42 PM | Message # 7
Major
Group: Checked
Messages: 80
Status: Offline
pattu maami,
superb...! apdiye movie effect...pinnitteenga....!


Subha Jayanth
 
beulaDate: Monday, 03 Feb 2014, 6:42 PM | Message # 8
Major
Group: Checked
Messages: 80
Status: Offline
pattu maami,
superb...! apdiye movie effect...pinnitteenga....!


Subha Jayanth
 
PattuDate: Monday, 03 Feb 2014, 8:04 PM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Hi subha

indha padam enakku romba romba pidikkum.
nadiththa anaivarume character aagave maari iruppaanga.

Lakshmi mam ezhuthiya pen manam kathaiyai eththanai murai padiththeno  enakke theriyaathu.
aanaal indha padaththai 20 muraiyaavathu  paarththiruppen.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
RAWALIKADate: Monday, 03 Feb 2014, 8:28 PM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Pattu ()
Lakshmi mam ezhuthiya pen manam

எவ்வளவு காலம் ஆனாலும் என்றும் பலரால் விரும்பி பதிக்கப்படும் கதை

எனக்கு ரொம்ப பிடிச்ச கதை
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » சினிமா » இணைந்த கைகள் - நாவல்களும் சினிமாவும் (நாவல்களும் சினிமாவும்)
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Search: