கேள்வி பதில் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Forum moderator: Jeniliya, Laya  
கேள்வி பதில்
JanviDate: Monday, 17 Nov 2014, 9:35 PM | Message # 1
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
விவசாயம், கால்நடை, மீன்வளர்ப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு கேள்விகளும் அதற்கான பதில்களும் இந்தத் திரியில் பகிரப்படும்.
 
JanviDate: Monday, 17 Nov 2014, 9:40 PM | Message # 2
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
கேள்வி :
''எங்கள் நிலம், தொழிற்சாலைக் கழிவு நீரால் கெட்டுப் போய் விட்டது. அதை எப்படி சரிசெய்து வளமாக மாற்றுவது?'' 


பதில் :
வெட்டிவேர் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவரும், வீட்டுத் தோட்ட ஆலோசகருமான கோயம்புத்தூரைச் சேர்ந்த வின்சென்ட், பதில் சொல்கிறார்.
''தொழிற்சாலைக் கழிவு நீரால் நேரடியாக பாதிக்கப்பட்ட
நிலங்களையும், மாசுபட்ட நிலத்தடி நீர் காரணமாக வளம் இழந்த நிலங்களையும்,
வளமாக்கும் வல்லமை... வெட்டிவேருக்கு உண்டு. மண் அரிப்பைத் தடுக்கவும்,
கோடைகாலத்தில் வெப்பத்தைத் தணிக்கவும் மட்டுமே வெட்டிவேரை பயன்படுத்தி
வருகிறோம். ஆனால், வெட்டிவேரை தமிழ்நாட்டில் இருந்து, அமெரிக்காவுக்கு
எடுத்துச் சென்ற ஆராய்ச்சியாளர்கள், மாசுபட்ட நிலத்தை வளமாக மாற்றுவதற்காக
உபயோகப்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க இதை பரப்பி வருகிறார்கள்.
நிலத்தில் படிந்துள்ள பாதரசம், காட்மியம்... உள்ளிட்ட கடின உலோகங்களின்
பாதிப்புகளைக்கூட வெட்டிவேர் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ரசாயன உரம்
தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால், வளம் இழந்த நிலங்களையும் செழிக்க வைக்கும்
தன்மை வெட்டிவேருக்கு உண்டு
உங்கள் நிலத்தின் பாதிப்பு எந்த அளவு உள்ளது என்பதைப் பொருத்து, ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை, நிலத்தில் வெட்டிவேரை சாகுபடி செய்ய
வேண்டும். இப்படி சாகுபடி செய்யப்பட்ட வெட்டிவேரை அறுவடை செய்து
விற்பனையும் செய்யலாம். இந்த வேர் மூலம் பொம்மை, பிரஷ், வாசனைத்
திரவியம்... என பலவிதமானப் பொருட்கள் தயாரிக்க முடியும். தாய்லாந்து,
வியட்நாம், சீனா... போன்ற நாடுகள் வெட்டிவேரை மக்களிடம் பரப்புவதற்காக
புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. வெட்டிவேர் சம்பந்தமாக உலக அளவில்
நடைபெற்று வரும் ஆராய்ச்சித் தகவல்களையும், அதன் பயன்பாடுகள் பற்றியும்
தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.''
தொடர்புக்கு, செல்போன்: 98940-66303.

--- நன்றி பசுமை விகடன்
 
JanviDate: Monday, 17 Nov 2014, 10:10 PM | Message # 3
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
கேள்வி 
''சொட்டுநீர்ப் பாசனம் மூலம் மரவள்ளி சாகுபடி செய்துள்ளோம். மழை பெய்தால், செடியில் உள்ள இலைகள் பழுத்துக் கொட்டி
விடுகின்றன. இதற்கு என்ன காரணம்?'' 

பதில் 
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர். புகழேந்தி, பதில் சொல்கிறார்.

''இந்தப் பிரச்னைக்கு எளிய முறையிலேயே தீர்வு கண்டுவிட
முடியும். பொதுவாக வளர்ந்த மரவள்ளிச் செடியின் இலைகள் கொட்டுவதற்கு... நோய்
தாக்குதல், சத்துக் குறைபாடு ஆகியவை மட்டும் காரணம் அல்ல. இந்த
மாவட்டங்களின் நிலத்தடி நீர் உப்புத் தன்மை அடைந்து விட்டது. இந்த நீரை, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கொடுக்கும்போது... வேர் நேரடியாக எடுத்துக் கொள்ளும். அதேநேரம், நீரில் உள்ள உப்புத் தன்மை மண்ணில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து கொண்டே வரும். மழை பெய்தவுடன் ஒரே இடத்தில் இருந்த
உப்பு, மண்ணில் பரவி விடும். 'மழை பெய்து விட்டது’ என்று நாம் பாசனம்
செய்யாமல் விடும்போது, மண் காயக்காய... உப்புக்கள் செடிகளின் வேரை அழுத்தி
கொஞ்சம் கொஞ்சமாக வேருக்குள் செல்லத் தொடங்கும். இதனால்தான் இலைகள் பழுத்து
கொட்டத் தொடங்குகின்றன.
மழை பெய்தாலும், பாசனத்தை நிறுத்தாமல் செய்து வந்தால்,
மண்ணில் நீரோட்டம் அதிகரித்து, உப்புக்களின் தாக்குதலைக் குறைக்கலாம். இது
சம்பந்தமாக மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், எங்கள் ஆராய்ச்சி மையத்தைத்
தொடர்பு கொள்ளலாம்.''
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி
மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம். தொலைபேசி:
04282-293526.
 
JanviDate: Monday, 17 Nov 2014, 10:11 PM | Message # 4
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
''நாட்டுக் கோழிகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி எங்கு கொடுக்கப்படுகிறது?''

'நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தைத் அணுகினால், பயிற்சி பற்றிய விவரங்களைப் பெறலாம்.'
தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345.
 
JanviDate: Monday, 17 Nov 2014, 10:19 PM | Message # 5
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சாகுபடி செய்ய நினைக்கிறேன். இதன் நாற்றுகள் எங்கு கிடைக்கும்'' என்று தஞ்சை மாவட்டம், குருவிக்கரம்பையில் இருந்து வி.சண்முகநாதன் கேட்டுள்ளார்.

ஆழியாறு, தென்னை ஆராய்ச்சி நிலைய முதுநிலை ஆராய்ச்சியாளர் வசுமதி பதில்
தருகிறார். ‘‘மலைப் பிரேதசங்களிலும், அதையட்டிய தட்பவெப்ப நிலை நிலவும்
அடிவாரப்பகுதிகளிலும்தான் ஜாதிக்காய் உட்பட மற்ற வாசனைப் பயிர்கள் நன்கு
வளரும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொள்ளாச்சி பகுதியில் மட்டுமே ஜாதிக்காய்
ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. தஞ்சை உள்ளிட்ட உள் மாவட்டங்களில்
ஜாதிக்காய், கிராம்பு போன்றவை வளருமா? என்று ஆய்வு செய்யப்படவில்லை.
தென்னையைப் பொறுத்தவரை நான்கு மரத்துக்கு ஒரு ஜாதிக்காய் கன்று வீதம் நடவு செய்யலாம். ஏழாம் ஆண்டு முதல் அறுவடை
செய்யலாம். ஜாதிக்காய் உள்ளிட்ட நறுமணப் பயிர்ச் செடிகள் கன்னியாகுமரி
மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கும்.’’ தொடர்புக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
பேச்சிப்பாறை, கன்னியாகுமரி மாவட்டம். தொலைபேசி 04652-271509.

-- நன்றி பசுமை விகடன்


Message edited by Janvi - Monday, 17 Nov 2014, 10:20 PM
 
JanviDate: Monday, 17 Nov 2014, 10:21 PM | Message # 6
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
'ஆடு, மாடு கடிக்காத உயிர் வேலி அமைப்பது எப்படி... உயிர் வேலிக்கான கன்றுகள் எங்கு கிடைக்கும்?'' என்று குடவாசலிலிருந்து எம்.கார்த்திக் கேட்டிருக்கிறார். ஈரோடு-முத்தூரைச்
சேர்ந்த முன்னோடி விவசாயி சி.சுப்பிரமணியன் பதில் தருகிறார்.
‘‘கிளுவை, கிளா, கள்ளி என்று ஒவ்வொரு பகுதிக்கும் தக்கவாறு உயிர்வேலிகள் நிறையவே
இருந்தன. ஆனால், பல பகுதிகளில் இதன் பயன் தெரியாமல் கைவிட்டுவிட்டனர்.
விவரம் தெரியாமல் அழித்துவிட்டு, கடன் வாங்கி கம்பி வேலி போடுபவர்களும்
உண்டு.
எங்கள்
மாவட்டத்தில் கிளுவை மரச்செடியைத்தான் இப்போதும் கூட பரவலாக பயன்படுத்தி
வருகிறோம். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியிலும்
பரவலாக இதைப் பார்க்க முடியும். சிவகங்கை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளி
வேலியை பார்க்கலாம்.
கிளுவையைப்
பொறுத்தவரை குறிப்பாக மானாவாரி நிலத்தில் இது அருமையாக வளரும். தண்ணீர்
தேங்கி நிற்கக் கூடிய நிலத்தில் வளராது. இதை நடவு செய்வதற்கு ஆடி, ஆவணி
மாதங்கள் ஏற்றது. பருவமழைக் காலத்தில் நடவு செய்தால் உடனே வேர் பிடிக்கும்.
ஆடு, மாடுகள் கடிக்காது (வெள்ளாடு மட்டும் கடிக்கும்). மண் அரிப்பைத்
தடுக்கும், நிரந்தர வேலியாகவும் இருக்கும். தூதுவளை, கோவைக்காய், சிறுகோவை
போன்றவற்றை இதன் மீது படரவிட்டு, வருமானம் பார்க்கலாம்.
கம்பி வேலி, கல்வேலி என்று செலவு பிடிக்கும் சமாச்சாரங்களைக் காட்டிலும், கிளுவை போன்ற உயிர் வேலிகளே மிகச் சிறந்தவை.
கிளுவைக்
குச்சிக்காக பெரிதாக அலையத்தேவையில்லை. அக்கம் பக்கத்தில் கூட விசாரித்தால்
யாராவது ஒரு விவசாயி அதைக் கடைபிடித்துக்கொண்டிருப்பார். அவரிடமே கூட
விதைக்குச்சிகளைக் கேட்டுப் பெறமுடியும். உங்கள் பகுதியில்தான் இருக்கிறது
பட்டுக்கோட்டை. அங்கேயும் முயற்சிக்கலாம். எங்கும் கிடைக்காத பட்சத்தில்
என்னைத் தொடர்பு கொள்ளவும்.'' அலைபேசி 98947-55626.

--- நன்றி பசுமை விகடன்
 
JanviDate: Monday, 17 Nov 2014, 10:23 PM | Message # 7
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தீவனப்பயிர் பயிரிட விரும்புகிறேன். தீவன விதைகள் மற்றும் விதைக் கரணைகள் எங்கு கிடைக்கும்'' என்று ஆரணியிலிருந்து எம்.சரவணன் கேட்டுள் ளார். இவரின் கேள்விக்கு பதில்
சொல்கிறார் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி
டாக்டர்.பி.குமாரவேல்.
‘‘தீவனப் பயிர்களில் கோ-3 என்ற ரகம் அதிக விளைச்சல் கொடுக்கிறது. எல்லா
வகையான நிலத்திலும் இது வளரும். ஏக்கருக்கு 15 ஆயிரம் கரணைகள் தேவைப்படும்.
50 செ.மீ இடைவெளியில் கரணைகளை பார் பிடித்து நடவு செய்யவேண்டும். ஒரு
ஏக்கரில் கிடைக்கும் பசுந்தீவனங்களைக் கொண்டு 5 மாடுகளை தாராளமாக உணவு
கொடுத்து வளர்க்கலாம்.
தீவனப்புல் கரணைகள் மற்றும் தீவன விதைகளை 'வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், காட்டுப்பாக்கம், காட்டாங்குளத்தூர், அஞ்சல், காஞ்சிபுரம் மாவட்டம்' என்ற
முகவரிக்கு தொடர்புகொண்டு வாங்கலாம். மையத்தின் தொலைபேசி எண்
044-27452371.''

--- நன்றி பசுமை விகடன்
 
JanviDate: Monday, 17 Nov 2014, 10:24 PM | Message # 8
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
''மலர்களிலிருந்து சாறு எடுக்கும் தொழில் லாபகரமானதா?'' என்று மூலப்பாளையத்தில் இருந்து இ.அருண் என்பவர் கேட்டிருக்கிறார். இவருக்குப்
பதில் சொல்கிறார் கோவையில் சென்ட் தொழிற்சாலை நடத்திவரும் அனில்.
‘‘இது லாபகரமான தொழில்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிகமாக
மலர் சாகுபடி நடைபெறும் இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தொழிற் சாலை
அமைத்து, தரமான வாசனை திரவியங்களைத் தயாரித்துக் கொடுத்தால், நல்ல லாபத்தை
தொடர்ந்து பெறமுடியும். குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் முதலீடு இருந்தால்
தொழிற்சாலையை தொடங்கலாம். விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் மலர்களை
வாங்கினால்தான் தங்குதடையின்றி தொழில் நடத்தமுடியும். எந்தளவுக்கு மலர்கள்
மலர்ந்திருக்கின்றனவோ, அதற்கு தகுந்தபடி திரவியம் கிடைக்கும்.

கோவையில் சென்ட்
தயாரிப்பு ஆலைகள் பத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. மதுரையில்,
குண்டுமல்லியிலிருந்து சென்ட் எடுக்கும் ஆலைகள் பல உள்ளன. தமிழ்நாட்டில்
தயார் செய்யப்படும் வாசனை திரவியங்கள், ஐரோப்பாவுக்கு அனுப்பப்படுகிறது.
குறிப்பாக பிரான்ஸ் நாட்டுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது. அங்கு
மதிப்பூட்டப்பட்டு, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
மல்லியைப்
பொறுத்தவரை பறித்த இரண்டு மணி நேரத்துக்குள் சென்ட் எடுத்துவிடவேண்டும்.
காலதாமதம் செய்தால் தரம் குறையும். மலர்களைப் பொறுத்தவரை
சம்பங்கியிலிருந்து தயாரிக்கப்படும் சென்ட், உலகிலேயே அதிக விலைக்குப்
போகிறது. இதைவிட தாமரை சென்ட் இன்னும் விலை கூடுதல்தான். ஆனால், 100 கிலோ
தாமரையிலிருந்து 100 கிராம் கூட சென்ட் தயாரிக்க முடியாது என்பதால், இதில்
பலரும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.
விலையைப் பொறுத்தவரை சந்தையில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், கையைக் கடிக்கும் அளவுக்கு விலை குறைந்துவிடாது.'’

--- நன்றி பசுமை விகடன்
 
JanviDate: Tuesday, 10 Feb 2015, 5:57 PM | Message # 9
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தென்னை மரத்தைத் தாக்கும் 'பென்சில் பாயின்ட் நோய்' ஏன் ஏற்படுகிறது.
இதைக்  கட்டுப்படுத்த
என்ன செய்ய வேண்டும்?


 இக்கேள்விக்கு, இந்தியாவில் தென்னை ஆராய்ச்சியில் முதல் டாக்டர் பட்டம் பெற்ற ‘தென்னை விஞ்ஞானி’ ஹென்றி லூயிஸ்
பதில் சொல்கிறார


இதை 'இலைக் கருகல் நோய்' என்பார்கள். எலிட்டிஸ் என்ற பூஞ்சையை
இது உருவாக்குகிறது. நன்றாக வளர்ந்த மரத்தையும் ஒரு கை
பார்த்து விடும். இந்த நோய் இல்லாத பகுதியே தமிழ் நாட்டில்
இல்லை என்று சொல்லலாம்.

இந்த நோய் வந்த கடைசிக் கட்டத்தில் மரம் பார்ப்பதற்கு
பென்சில் சீவிய முனை போல் ஆகிவிடும். அதனால்தான் 'பென்சில் பாயின்ட்'
என்று பெயர் வைத்துள்ளனர்.

நோய் அறிகுறி தெரியும் பட்சத்தில் மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில்
வட்ட பாத்தி எடுங்கள். இதில் 'போர்டோ மிக்சர்' என்கிற
பூஞ்சைக் கொல்லியை போட்டால் நோய் கட்டுப்படும்.''

தொடர்புக்கு: டாக்டர். ஹென்றிலூயிஸ், 48/2, ஞானமுத்தகம்,
ராமன் புதூர், நாகர்கோவில், கன்னியாகுமரி-629002. தொலைபேசி
: 04652-2262024, அலைபேசி: 98422-33602.
 
JanviDate: Tuesday, 10 Feb 2015, 6:00 PM | Message # 10
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தர்பூசணி சாகுபடியில் அதிக லாபம் பெற என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விக்கு, இருபது ஆண்டு காலமாக தர்பூசணி பயிரிட்டு வரும் திண்டிவனம் விவசாயி ஆர்.பாண்டியன் பதில் சொல்கிறார்.

இதுதான் தர்பூசணி சீஸன். வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை
800 ரகங்கள் பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில் 300 ரகங்கள்
பயிரிடப்படுகின்றன. மதுபாலா, அபூர்வா போன்ற பெயர்களில்
தர்பூசணி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.  தர்பூசணி
சாப்பிடு கிறவர்களுக்கு அதனுடைய கொட்டைகள் பெரும் இடைஞ்சலாக
இருக்கும். திராட்சையில் 'சீட்லெஸ்' எனப்படும் 'விதையில்லா'
பழங்கள் இருப்பதுபோல் இதிலும் இருந்தால் நன்றாக இருக்குமே
என்று நிறைய பேர் யோசித்திருக்கக் கூடும். அது போன்றவர்களுக்கு
குஷியூட்டும் வகையில், இந்த ஆண்டிலிருந்து விதை இல்லாத தர்பூசணி
பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ரகத்துக்கு மதுமிதா என்று
பெயர் சூட்டியுள்ளனர்.

தர்பூசணி சாகுபடியைப் பொறுத்தவரை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி
மாதங்களில் தர்பூசணிகளை நட்டால் அடுத்த 60-ம் நாள் அறுவடைக்கு
வந்து விடும். வெயில் அதிகம் இருந்தால் உடனே பழம் பழுக்க
தொடங்கி விடும். நல்ல லாபமும் கிடைக்கும். இதுவே அக்டோபர், நவம்பரில் விதைத்தால் 80 நாட்கள் ஆகும். குளிர்காலம்
என்பதால் அறுவடைக்கு வர கூடுதலாக 20 நாட்கள் பிடிக்கும்.
எனவே லாபத்தில் கொஞ்சம் இடிக்கத்தான் செய்யும்.

பொதுவாக ஏக்கருக்கு 15 டன் வரை மகசூல் எடுக்க முடியும்.
டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 30 ஆயிரம் ரூபாய்
வருமானம் வரும். இதில் 15 ஆயிரம் செலவு போக 15 ஆயிரம்
லாபம் கிடைக்கும்.''

பாண்டியனிடம் பேசி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஆர்.பாண்டியன், 132, செஞ்சிரோடு, திண்டிவனம்-604001.
தொலைபேசி : 04147-222075, செல்: 94432 - 43075
 
  • Page 1 of 3
  • 1
  • 2
  • 3
  • »
Search: