KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Wednesday, 17 Sep 2014, 4:09 PM | Message # 171 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| உங்களுக்கு நீரிழிவு வர வாய்ப்பு உண்டா? ஒரு சின்ன டெஸ்ட்
வயது மதிப்பெண் 35 வயதுக்குள் ------------------- 0 35 மூதல் 49 வரை---------------10 50 வயதுக்கு மேல்-------------- 20
தொப்பை அளவு ஆண் 90-செ.மீ.க்குக் குறைவு - பெண் 80.செ.மீ,க்குக் குறைவு------------- 0 ஆண் 90 முதல் 99 செ.மீ - பெண் - 80 முதல் 89 செ.மீ ----------------10 ஆண் 100 செ.மீ.க்கு மேல் - பெண் 90 செ.மீக்கு மேல் -------------------20
உடல் இயக்கம் கடும் உடற்பயிற்சி / கடும் உடல் உழைப்பு -------------------------0 நடுத்தர உடற்பயிற்சி / நடுத்தர உடல் உழைப்பு----------------------10 உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லை------------------------- 30
குடும்ப வரலாறு யாருக்கும் நீரழிவு இல்லை--------------------0 பெற்றோரில் ஒருவருக்கு---------------------10 பெற்றோர் இருவருக்கும்-----------------------20
உங்கள் மதிப்பெண் 30-க்கும் கீழ் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு வரும் வாய்ப்பு இல்லை. 30 லிருந்து 50க்குள் இருந்தால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்புண்டு. 60 க்கும் மேல் இருந்தால் கடுமையான வாய்ப்புள்ளது. வாய்ப்புள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை சற்றே மாற்றிக் கொள்ள தயாராகுங்கள்!
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 13 Nov 2014, 2:00 PM | Message # 172 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட நாடு...தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள்.. ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ... # டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கமஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம் வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமஇப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு, இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோமATM - Anju Time Mattum (அஞ்சு டைம் மட்டும்)குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க.. கிணத்த தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!! இப்ப கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!! இவனுகளே மண்ண போட்டு மெத்திருப்பானுகளோ!! # 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில், கீரை விலை ஏறாமல் சில்லறயில் கிடைப்பது, நம் உடல் ஆரோக்கியத்துக்க ு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி வரைக்கும் தூக்கம் வரும் சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # விதிபியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான் போகனுமா? என்னம்மா இப்படி பண்றிங்களேமா
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
Nathasaa | Date: Thursday, 13 Nov 2014, 5:55 PM | Message # 173 |
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| thnQ kothai aunty for ur valid infos
|
|
| |
honey | Date: Thursday, 13 Nov 2014, 7:14 PM | Message # 174 |
Major general
Group: *Checked*
Messages: 383
Status: Offline
| Hi kvsuresh,
thanks for the informations.
|
|
| |
kvsuresh | Date: Friday, 11 Mar 2016, 10:13 PM | Message # 175 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் கிரீன் டீ
உடலும், மனமும் சோர்வடைந்த நிலையில், ஒரு கப் டீ குடித்தால், புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது, அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண டீயை விட, கிரீன் டீ யை பருகுவதால் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன, என்கிறது மருத்துவ ஆய்வுகள். பசுந்தேயிலையின் கொழுந்து, இளம் இலையில் இருந்துதயாரிக்கப்படும் கிரீன் டீயில், ஆறு விதமான பாலிபீனால்கள் என்ற சத்துப் பொருள் கலந்துள்ளன. அதில், எபிகேட்சின், கேலோகேட்சின், கேட்சின், எபிகேட்சின் கேலட், எபிகேட்சின் கேலோகேட்சின், எபிகேலோ கேட்சின் என்ற சத்து கலந்துள்ளது. கேபின், தியோபுரோமின், தியாபிலின் போன்ற, ஆல்கலாய்டு என்ற நுண் சத்தும் கலந்துள்ளன. இவை, மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாமல், மனித உயிர்களை காக்கும் சஞ்சீவிகளாகவும் செயல்படுகின்றன என, மருத்துவர்கள் புகழ்கின்றனர்.கிரீன் டீயின் ரகசியமே, அதில் அதிகளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் (நோய் எதிர்ப்பு சக்தி) தான். பழம், காய்கறி, கீரைகளில் உள்ளதை விட, பல மடங்கு சத்துகள், கிரீன் டீயில் உள்ளன. ஒரு கப் கிரீன் டீ, 10 கப், ஆப்பிள் பழச்சாறுக்கு சமம் என, கூறப்படுகிறது. சீனர்கள், கிரீன் டீயை தொடர்ச்சியாக பருகுவதால் தான், அவர்களின் சராசரி வயது, 90ஐ தாண்டியுள்ளது என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.கிரீன் டீயின் நன்மைகள்* ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து, தேவையற்ற கொழுப்பை குறைத்து, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது.* இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள தியோபிளவின் என்ற நுண் சத்து, ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, குளூக்கோஸ் வினையை ஊக்கப்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து, சோம்பலை போக்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது; இதில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது. ரத்தப்புற்று, நுரையீரல் புற்று, தொண்டை புற்று, வயிறு, குடல், ஈரல் புற்று மற்றும் மார்பகப்புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது. * எலும்பில் உள்ள தாது பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து, எலும்பை பலப்படுத்துகிறது. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது; வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. இதில் உள்ள எபிகேலோ கேட்சின் என்ற நுண்சத்து, மூளையின் செயல் திறனை அதிகரித்து, நினைவாற்றலை பெருக்குகிறது. சருமத்தை பாதுகாத்து, இளைமையாக வைக்கிறது; முகப்பரு, வறண்ட சருமம், சரும அலர்ஜிக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.* ரத்த அழுத்தம், பக்கவாதத்தை தடுக்கிறது. எலும்புகள் பலமடையவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது; மூட்டு வலியை தடுக்க உதவுகிறது; உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது. இதில் உள்ள பாலிபீனால்கள் மன இறுக்கத்தை போக்கி, மூளையில், ஆல்பா அலைகளை தூண்டி மனதுக்கு அமைதி தருகிறது.
Regards and Thanks
Kothai Suresh
Message edited by kvsuresh - Friday, 11 Mar 2016, 10:14 PM |
|
| |
kvsuresh | Date: Friday, 11 Mar 2016, 10:15 PM | Message # 176 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சிதம்பர ரகசியம்
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..? இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!! சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான். (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ). (2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம். (3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. ((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). (5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும். (6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது. (7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது, (8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. (9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது. (10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 11 Mar 2016, 10:17 PM | Message # 177 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| மலச்சிக்கல் பிரச்னையா முள்ளங்கியில் தீர்வு
முள்ளங்கியை பயன்படுத்துவோர், அதன் இலைகளை தூக்கி எறிந்து விடுகின்றனர். முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளன. இதன் கிழங்கு பகுதியில் இருப்பதை விட, ஆறு மடங்கு வைட்டமின் இ இதன் கீரைகளில் இருக்கிறது.100 கிராம் கீரையில் சுமார், 28 கலோரிகள் கிடைக்கிறது. இதில், 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன. புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. முள்ளங்கிக் கீரையை சமைக்காமல், மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக, சாலட் போலவும் சாப்பிடலாம்.முள்ளங்கி கிழங்கை போன்றே, அதன் கீரையும் இரைப்பை கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றன. நீரிழிவு நோய்க்கும், இது சிறந்த மருந்தாக உள்ளது. மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல், இந்தக் கீரைக்கு உண்டு.முள்ளங்கிக் கீரையை அடிக்கடி, உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும். முள்ளங்கி கீரையின் சாற்றை, 5 அல்லது, 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள், ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து, வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும். ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வந்தால், நீர் அடைப்பு தொல்லை தீரும். தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை, 1 ஸ்பூன் எடுத்து, 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால், நல்ல முன்னேற்றம் தெரியும்.யாருக்கு கூடாது? வாத நோய்க்காரர்கள், முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது. ஆனால், முள்ளங்கிக் கிழங்கை பகலில் மட்டும் சாப்பிடலாம். சளி தொல்லை உடையவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் அதிகமாக சாப்பிடவேண்டாம். வாயு தொல்லை உள்ளவர்கள் பூண்டு சேர்க்காமல், சமைக்கப்பட்ட முள்ளங்கி கீரையோ, சமைக்காமல் சாலட் போன்று உண்ணுவதையோ தவிர்த்து கொள்ள வேண்டும். பொதுவாகவே எந்தக் கீரைகளும் இரவில் சாப்பிடக் கூடாது என்றாலும், முள்ளங்கிக் கீரையை கண்டிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது. முள்ளங்கியும் அதுபோலவே, இரவில் சாப்பிட்டால் தீங்குதான் விளையும். சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது
Regards and Thanks
Kothai Suresh
Message edited by kvsuresh - Friday, 11 Mar 2016, 10:18 PM |
|
| |
kvsuresh | Date: Friday, 11 Mar 2016, 10:20 PM | Message # 178 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சத்தான பிரேக்ஃபாஸ்ட்
இட்லி, சாம்பார் தான் சத்தான பிரேக்ஃபாஸ்ட்: ஆய்வில் தகவல்,,,சென்னை: 3 இட்லி, ஒரு கப் சாம்பார், ஒரு டம்ப்ளர் ஃபில்டர் காபி சென்னை மக்களின் பாரம்பரிய காலை உணவு மட்டுமில்லை இது பிற மெட்ரோக்களில் உள்ள மக்களின் உணவோடு ஒப்பிடுகையில் மிகவும் சத்தானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியா பிரேக்பாஸ்ட் ஹேபிட்ஸ் ஸ்டடி என்ற பெயரில் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய 4 மெட்ரோக்களில் சத்தான காலை உணவு குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.இந்த கணக்கெடுப்பில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3,600 பேர் கலந்து கொண்டனர். அந்த தகவலை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது-கெலாக்ஸ் ஸ்பான்சர்மும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் கல்லூரியின் ஆய்வு இயக்குனர் மாலதி சிவராமகிருஷ்ணன் நடத்திய இந்த ஆய்வை கெலாக்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.1,காலை உணவுஇந்திய மக்களில் 4ல் ஒருவர் காலை உணவை சாப்பிடுவதில்லையாம். சென்னைவாசிகளில் குறைவான நபர்களே காலையில் சாப்பிடுவதில்லையாம்.2.சத்தான உணவு இல்லைகணக்கெடுப்பில் கலந்து கொண்ட மும்பைவாசிகளில் 79 சதவீதம் பேர் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லை. இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த 76 சதவீதம் பேரும், கொல்கத்தாவைச் சேர்ந்த 75 சதவீதம் பேரும், சென்னையைச் சேர்ந்த 60 சதவீதம் பேரும் சத்தான காலை உணவை சாப்பிடுவதில்லையாம்.3.மைதாகொல்கத்தா மக்களின் பாரம்பரிய உணவில் அதிகம் மைதா உள்ளது. அதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. அதே சமயம் மிகக் குறைவான புரோட்டீன் உள்ளது. மேலும் அதில் நார் சத்து என்பதே இல்லை.4.பராதாடெல்லி மற்றும் மும்பைவாசிகள் காலை உணவாக சாப்பிடும் பராதாவில் அதிக எண்ணெய் உள்ளது. மேலும் அவர்கள் அதிகம் சாப்பிடும் பிரெட்டில் கார்போஹைட்ரேட்டை தவிர வேறு எதுவுமில்லை.5.இட்லி, சாம்பார் சென்னைவாசிகள் காலையில் சாப்பிடும் இட்லி, சாம்பார் அதிக சத்துக்கள் உள்ள உணவாம். அரிசியும், உளுந்தும் புரோட்டீன்கள் நிறைந்தது. சாம்பாரில் உள்ள பருப்பு மற்றும் காய்கறிகளும் சாத்தானவையாம்.கூல்ட்ரிங்க்ஸ்,,, சென்னையில் வசிக்கும் இல்லத்தரசிகளில் 50 சதவீதம் பேர், வயதானவர்களில் 30 சதவீதம் பேர், வேலைக்கு செல்பவர்களில் 20 சதவீதம் பேர் காலையில் வெறும் கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடிக்கிறார்களாம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 11 Mar 2016, 10:22 PM | Message # 179 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| உடல் நலம் காக்க தினம் ஒரு கொய்யா!
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும், கொய்யா பழத்தை, தினமும் மதிய உணவுடன், 200 கிராம் சேர்த்துக்கொள்வதால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. ஆரஞ்சுப் பழத்திலிருக்கும், வைட்டமின் சி போல, கொய்யா பழத்தில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் உதவுகிறது. இரவு உணவுக்குப் பின், நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்களை சாப்பிடுவதால், மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, கொய்யாப் பழங்களை தினமும் சிறிதளவு கொடுப்பதால், பற்கள் மற்றும் ஈறுகள் உறுதியாகிறது. கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டைகளிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு, இவை பெரிதும் உதவுகிறது. கொய்யா மரத்தின் இலைகளை, அரைத்து காயத்தின் மேல் தடவினால், அவை விரைவில் ஆறி விடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யா இலைகள் மூலம், தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தினமும் இரண்டு முறை, குருமிளகு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறுடன் கனிந்த கொய்யா பழத்தை ஜூஸ் செய்து குடித்தால், உடல் வலுப்பெறும். ஒரு மாதத்துக்கு தொடர்ந்து மதிய உணவுக்கு பின், 250 கிராம் கொய்யா பழத்தை எடுத்துகொண்டால் உடலில் அரிப்புகள் குணமாகும். பெண்களின் வயிற்று வலிக்கு, எட்டு முதல் பத்து கொய்யா இலைகளை நன்றாக அரைத்து தண்ணீருடன் சேர்த்து அருந்தி வந்தால், வயிற்று வலி குறையும். வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கு, கொய்யா பழத்தின் விதைகளை நீக்கி, அதனுடன் நான்கு சொட்டு பூண்டு சாறு கலந்து வெறும் வயிற்றில் இரண்டு நாட்கள் சாப்பிட வேண்டும். கொய்யா பழத்தில் சட்னி, சிரப், ஜாம் மற்றும் ஜூஸ் தயாரித்து சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை கட்டுப்படுத்த முடியும். கொய்ய பழத்தை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. கொய்யாவின் தோலில் அதிகசத்துக்கள் உள்ளதால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்துக்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்கி, இளமை தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது. உணவருந்துவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிடாலம். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால், பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 11 Mar 2016, 10:26 PM | Message # 180 |
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள்
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும். பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |