குறள் கதை - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
குறள் கதை
MeenatchiDate: Thursday, 06 Feb 2014, 3:29 PM | Message # 11
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
hi frds,
I got from net.hope it ll be useful......

thirukural kathaikal


Meenatchi .S
 
PattuDate: Thursday, 06 Feb 2014, 4:54 PM | Message # 12
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
 
விளக்கம்:

மக்கள் தன்னை ஏர் கொண்டுஉழுதுக் காயப்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும்
பூமியைப் போல, தன் மீது
குற்றம் சாட்டி இகழ்பவர்களின் செயல்களைப்
பொறுப்பது ஒரு தலைமகனுக்கு அழகு
தரும்!
 
 மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா
நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை
மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது
அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்
நிகழ்த்துகையில், மனோகரனும் அங்கு அமர்ந்து தனது
கருத்துக்களை வெளியிடுவான். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற
மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது
தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச
தயங்க மாட்டான்.
 
தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை.
பலமுறை அவள் மனோகரனைக் கண்டிக்கும்
போது மன்னர் அவளைத் தடுத்து
விடுவார். ஒருநாள் சபையில் புருஷோத்தமன்
தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார்.
அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
 
அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா,
அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால்
மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல்.
உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி
ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய
நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க
வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு
எதிர்மாறான கருத்தைக் கூறினான். அத்துடன் மன்னரின் மற்ற நலத் திட்டங்களையும்
விமர்சனம் செய்தான்.
 
சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி
தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு
என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு
இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள்.

 
ஆனால் அவளைத் தடுத்த மன்னர்,
"அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில்
பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான்
மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது
தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து
மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன்
புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்"
என்றார்.
 
அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே
நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில்
வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது.
 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Friday, 07 Feb 2014, 11:41 AM | Message # 13
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi maamy

"தன் கருத்துப்படி தான்
மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று  நினைப்பது
தவறு.
  பொறுமையாக  புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து
 திட்டங்களை வகுக்க வேண்டும். "


unmaiyile nadaimuraiku thevaiyana oru vidayamum....
kathaiyum kooda arumai.....
pakirvukku nanri
 
PattuDate: Friday, 07 Feb 2014, 5:11 PM | Message # 14
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நட்புக்கு அழகு

                    கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
                    
முன்னின்று பின்னோக்காச் சொல்

விளக்கம்:

ஒருவனுடைய தவறை அவனிடமே நேரிடையாகக் கடுமையாகக் கூறலாம். ஆனால் அவன் நேரில் இல்லாத போது அவனைப் பற்றி குற்றம் கூறக் கூடாது.

பாபுவும் மணியும் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய நண்பர்கள். பாபுவிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. யாரிடமிருந்தும் எதையும் இரவல் வாங்கினால், அதைத் திருப்பித் தர மாட்டான். அந்தப் பொருளை தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற இழிந்த நோக்கத்தால் அல்ல; இரவல் வாங்கியதையே மறந்து விடுவான், அவ்வளவு தான்!

மணியிடம் அடிக்கடி பேனா, பென்சில் ஸ்கேல் என அடிக்கடி இரவல் வாங்குவான் பாபு. ஆனால் வாங்கிய பிறகு அதைத் திருப்பித் தர வேண்டும் என்ற நினைவே வராது. இதைப் பற்றி பாபுவிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று மணி பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் அதை பாபு தவறாக எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணத்தால், மணி இரவல் கொடுத்ததை கேட்பதேயில்லை.

ஒருமுறை மணியிடம் பாட புத்தகமொன்றை பாபு வாங்கிச் சென்றான். எடுத்துச் சென்று பல நாட்களாகியும் அதை அவன் திருப்பித் தரவில்லை. அது மிக முக்கியமான புத்தகம் என்பதால் மணிக்கு தர்மசங்கடமகி விட்டது. ஒருநாள் மற்றொரு நண்பனான முரளியிடம், " பாபு என் விஞ்ஞான புத்தகத்தை எடுத்துச் சென்று பத்து நாட்கள் ஆகின்றன. இன்னும் திருப்பித் தரவில்லை. அவனது இந்தப் பொறுப்பற்ற குணம் எனக்குப் பிடிக்கவில்லை," என்று புலம்பினான்.

முரளி சும்மாயிருக்காமல், இந்த விஷயத்தை வகுப்பிலுள்ள பல நண்பர்களிடம் கூறி விட்டான். வகுப்பிலுள்ள நண்பர்கள் "என்னடா பாபு, உனக்கு இரவல் மன்னன்
பட்டம் கொடுக்கலாம் போலிருக்கே. நீ சொந்தமாக எதையும் வாங்க மாட்டாயா" என
கிண்டலடித்தனர். இதனால் பாபுவுக்கு ஆத்திரமும், அவமானமும் ஏற்பட்டது.

தன்னைப் பற்றி அவதூறு பரப்பியது மணி தான் என நினைத்துக் கொண்டு, அவனிடம்
சென்று " இது வரை நீ இரவல் கொடுத்ததற்கு நன்றி. எனக்கு மறதி இருப்பது
உனக்குத் தெரியும். அப்படியிருந்தும் நீ என்னிடம் நேரடியாக வந்து கேட்காமல்
மற்றவர்களிடம் குறை கூறியது தவறு" என கோபமாகக் கூறி புத்தகத்தை திருப்பிக்
கொடுத்தான்.

அன்றுடன் அவர்களது நட்பும் முறிந்தது. பாபுவின் தவறை நேரடியாக அவனிடம் கூறியிருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காதே என, மணி
மனம் வருந்தினான்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 11 Feb 2014, 5:14 PM | Message # 15
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அழிவற்ற செல்வம்!

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை!

விளக்கம்:

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.

கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே! அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

ஒருநாள் இருவரையும் அழைத்து, “எனக்கிருப்பது ஒரு வீடும், இரு ஏக்கர் நலமுமே! நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா?” என்று கேட்டார்.

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், “அப்பா! நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்!” என்றான். இளையவன் முத்து, “எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்!” என்றான்.

இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், “தம்பி! கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம்.

நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல! பணம் எனும் செல்வம் நிலையற்றது.

உனக்குக் கிடைத்த தொகையில் என்னைப்போல் நீயும் உயர் கல்வி பயின்றிருக்கலாம்! ஆனால், நீ அதை வியாபாரத்தில் முதலீடாக வைத்து விட்டாய்! நீ செய்தது தவறு என்று கூறவில்லை. ஒருவேளை உன்னுடைய வியாபாரம் வெற்றிகரமாகவும் இயங்கலாம் என்று எண்ணியே நான் உன்னைத் தடுக்கவில்லை.

ஆனால் வியாபாரத்தில் லாபம் ஈட்டவும் செய்யலாம்; நட்டமும் ஆகலாம்! கல்வி அவ்வாறு அல்ல! நடந்ததை நினைத்து வருந்தாதே! இப்போதும் நீ இளைஞன்தான்! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை. என்னைப்போல் நீயும் உயர்கல்வி பயில நான் உனக்கு உதவி செய்கிறேன். அதன்பிறகு, என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை நீ முடிவு செய்வாய்!” என்றான்.

தன் சகோதரன் சொல்வதில் உள்ள நிதர்சனத்தை புரிந்து கொண்ட முத்து, உயர்படிப்புக்கு ஆயத்தமானான்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ


Message edited by Pattu - Tuesday, 11 Feb 2014, 5:15 PM
 
PattuDate: Wednesday, 12 Feb 2014, 5:16 PM | Message # 16
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
                      நாவினாற் சுட்ட வடு

விளக்கம் :

“நெருப்பில் சுட்டுக் கொள்வதால் ஏற்படும் புண் கூட குணமாகிவிடலாம்! ஆனால், தகாத வார்த்தைகள் கூறி ஒருவர் மனத்தைப் புண்படுத்தினால் அது என்றும் ஆறாது.”

 சேதுபதியும், சபாபதியும் சகோதரர்கள். மூத்தவனான சேதுபதி படித்து முடித்த பிறகு ஒரு நிறுவனத்தில் விற்பனையாளனாகப் பணியில் சேர்ந்தான். சிவகாமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின், அவனுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. சபாபதி படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். சேதுபதி, தன் தம்பியான சபாபதியையும் தன்னுடனே வைத்துக் கொண்டு பராமரித்து வந்தான்.

சேதுபதிக்கு வேலைப்பளு அதிகமாயிருந்ததால் அவனால் வீட்டைக் கவனிக்கவே முடியவில்லை. காலை வீட்டை விட்டுக் கிளம்பினால், நாள் முழுதும் அலைந்து திரிந்து இரவு வெகு நேரங்கழித்து வீடு திரும்புவான். அதனால், படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சபாபதி வீட்டு வேலைகள் அனைத்தும் பொறுப்புடன் செய்து அண்ணிக்கும், அண்ணனுக்கும் பெருமளவில் உதவி செய்து வந்தான்.
 
அப்படியிருந்தும், அண்ணி சிவகாமிக்கு தன் கொழுந்தனைக் காணும் போதெல்லாம், தன் கணவன் வேலை செய்து அலைந்து திரிய, இவன் வீட்டிலேயே உட்கார்ந்து நன்றாக மூன்று வேளை சாப்பிடுகிறானே என்று ஆற்றாமை ஏற்பட்டது. அதுவும் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு தன் சமையலை சபாபதி ரசித்து உண்ணும்போது அவளுக்கு எரிச்சல் உண்டாகியது.

நாளடைவில் அவள் சபாபதிக்கு வெறும் பழைய சோறு மட்டுமே போடத் தொடங்கினாள். ஒருநாள், நண்பகல் சபாபதி பழைய சோறை மோருடன் கலந்து உண்ணும்போது, “அண்ணி, சிறிது ஊறுகாய் தாங்க!”  என்று வேண்டினான். அன்று வரை சிவகாமி அடக்கி வைத்திருந்த கோபம் அன்று வார்த்தைகளாக வெளிப்பட்டது. “உன் அண்ணன் சோறு, தண்ணி கூட சாப்பிட நேரமில்லாமல் இரவு பகலாய் உழைக்கிறார்! நீ வேலைவெட்டியின்றி தண்டச்சோறு சாப்பிடுகிறாயே, உனக்கு வெட்கமாயில்லை? உனக்கு ஊறுகாய் ஒரு கேடா?” என்று சாடினாள்.

தீயினால் சுட்டிருந்தால் கூட அப்படியொரு வேதனை ஏற்பட்டிருக்காது! ஆனால் தன் அண்ணி நாவினால் தன்னைச் சுட்ட வேதனை சபாபதியால் பொறுக்க முடியவில்லை. கையை உதறி விட்டு எழுந்தவன், வீட்டை விட்டுப் போய் விட்டான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவேயில்லை!

அவன் போன பின் வீட்டைப் பராமரிக்க முடியாமலும், அத்தியாவசிய வேலைகளைச் செய்ய முடியாமலும் சிவகாமி திணறினாள். இதனால் சேதுபதிக்கும் அவளுக்கும் தினந்தோறும் சண்டை மூண்டது.  நாவடக்கமின்றி தன் கொழுந்தனை வார்த்தைகளால் சுட்டுப் புண்படுத்தியதை நினைத்து சிவகாமி காலமெல்லாம் வருந்திக் கொண்டேயிருந்தாள்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 13 Feb 2014, 6:48 PM | Message # 17
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நீதி தவறிய மன்னன்

                         மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
                         உயிர் நீப்பர் மானம் வரின்

விளக்கம்:

தன் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்தாலும் உயிர் துறக்கும் கவரிமானைப் போல, தன் பெயருக்கு இழுக்கு நேர்ந்தால் சான்றோர்கள் தன்னுயிரையே மாய்த்துக் கொள்வார்கள்.

மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும்ம் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், "அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன்.

தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும்" என்றான்.

ஆனால் அந்த வேடனோ, "அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை" என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

"வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா?" எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான்.

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், "அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா...துருப்பிடித்திருக்கிறது.

வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது" என்றார்.

இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 14 Feb 2014, 4:58 PM | Message # 18
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
குணம் நாடுதல் பெருங்குணம்.

பரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள்  அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில்
பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அவரின் செல்லப் பெண்.எனவே அவள்  கேட்டதையெல்லாம்
வாங்கித் தருவார். 

அவளும் தேவையற்றதைக் கேட்காமல் தனக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்டுப் பெறும்
குணமுடையவளாக இருந்தாள்.அதனால் இந்த அவளின் நல்ல குணத்தை அறிந்திருந்த அவளின் தந்தை அவள்
எது கேட்டாலும் காரணம் கேட்காமல் வாங்கித் தருவார்.


ஒருமுறை பொங்கல் பண்டிகை வந்தது.பரிமளத்திற்கு அவள் அப்பா பட்டுப் பாவாடை வாங்கித் தருவதாகச்
சொல்லி கடைக்கு அழைத்துச் சென்றார்.ஆனால் கடைக்குச் சென்றதும் பரிமளம் தனக்கு ஒரு பட்டுப்
பாவாடைக்குப் பதில் மூன்று சாதாரணப் பாவாடை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டு அதேபோல்
வாங்கிவந்தாள்.

தன மகள் பட்டுப் பாவாடை கட்டிப் பார்க்க ஆசைப்பட்ட அவளின் அம்மா பரிமளத்தைக் கடிந்து கொண்டார். 
ஆனால் புன்னகையையே பதிலாகத் தந்து விட்டு அந்த உடைகளை வாங்கிச் சென்று விட்டாள் பரிமளம்.

மறுநாள் பொங்கல் பண்டிகையன்று பரிமளத்தின் பள்ளித் தோழிகள் அவள் வீட்டுக்கு
வந்தனர்.அவர்களை உபசரித்து அமரச் சொல்லி பொங்கல் வடை கரும்பு பணம் முதலியன
கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பினாள்  பரிமளம்.

அவளுடன் படிக்கும் வள்ளிக்கு தான் வாங்கிவந்த உடைகளில் ஒன்றைக் கொடுத்தாள் . வள்ளியின் முகத்தில்
அப்போது தோன்றிய  மகிழ்ச்சியையும் நன்றிக் கண்ணீரையும் கண்டு பரிமளத்தின்
பெற்றோரே மனம் நெகிழ்ந்தனர்.

அவளது இந்தப் பண்பைப் பார்த்து அவளின் பெற்றோர் மிகவும் பெருமைப் பட்டனர்.மகளின்
இயற்கையான உயர்ந்த பண்பைக் கண்டு அவர்கள் மனம்
மகிழ்ச்சியடைந்தது.பரிமளமும் தன பெற்றோர் தனக்குத் துணையாக இருப்பதை
உணர்ந்து மிகவும் மகிழ்ந்தாள்.

இவளது இந்த உதவும் பண்பை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள நினைத்தாள் ஜோதி என்ற பள்ளித் தோழி.

அவள் அடிக்கடி தன உறவுக்காரப் பெண் ஒருத்தி மிகவும் கஷ்டப் படுவதாகக் கூறி
பரிமளத்திடம் உதவி பெற்று வந்தாள். எப்போதும் முகம் சுளிக்காமல் அவள் கேட்ட
உதவிகளைச் செய்து வந்தாள்  பரிமளம்.

இவளின் தோழிகளில் ஒருத்தி ஜோதியின் கெட்ட எண்ணத்தை அவளிடம் கூற அதைப் பெரிதாக
எடுத்துக் கொள்ளாத பரிமளம் 'எப்படியோ யாருக்கோ உதவி செய்யணும் அப்பிடின்னு
நினைக்கிறாள் இல்லையா?அந்த நல்ல குணம் இருக்கு இல்லையா? அதுபோதும் எனக்கு.'
என்று சொல்லிவிட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வந்தாள் .

ஏதேனும் தேவைப் பட்டால் இப்போதெல்லாம் சில சிறுமியர் பரிமளத்திடம் கேட்காமல் ஜோதியிடம் கேட்டுப் பெறத் தொடங்கினர். நல்ல உள்ளம் படைத்த பரிமளம் எப்படியோ பிறருக்கு உதவ முடிந்தால் போதும் என்று வழக்கம்போல ஜோதிக்கு உதவி செய்து வந்தாள்.

ஒருமுறை ஜோதி 'ஒரு ஏழைப் பெண்ணின் வீடு தீப்பற்றிக் கொண்டது நாம் ஏதேனும்
உதவணும் பரிமளா' என்று கூறி நிறைய உடைகள் கொஞ்சம் கணிசமான பணம் வேண்டும்
என்று கேட்டுப் பெற்றாள். பரிமளமும் தன தந்தையாரிடம் கேட்டு வாங்கிவந்து
ஜோதியிடம் கொடுத்தாள்.

பல நாட்களாக சேமித்த பணம் ஜோதியிடம் இருந்தது.பணம் சேர சேர ஜோதியின் ஆசையும்
அதிகமாயிற்று. ஏழைக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற்ற உடைகளைக் கூட ஜோதி
கடையில் விற்றுப் பணமாக்கிக் கொண்டாள் 
அந்தப் பணத்தை மறைத்து வைத்துக் கொள்வதிலும் இன்னும் பணம் சேர்ப்பதிலும் கவனமாக இருந்ததால் ஜோதிக்கு  படிப்பில் கவனம்  குறைந்தது.

அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.அன்று தேர்வு எழுத ஜோதி பள்ளிக்கு
வரவில்லை.காரணம் கேட்டபோது அவள் தந்தையாரை காவலர் பிடித்துச் சென்றதாகக்
கூறினார்கள்.அவர் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலையில் இருந்தார். அங்கு பணம்
திருட்டுப் போய் விட்டதாகவும் ஜோதியின் வீட்டில் அந்தப் பணம் கண்டெடுக்கப்
பட்டதாகவும் கூறினார்கள்.

அதனால் அவரைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் காவலர்கள் 
அது என்பணம் என்று ஜோதி எவ்வளவு சொல்லியும் அதை நம்பவில்லை காவல் அதிகாரி.
இந்த செய்தி காதில் விழுந்தவுடன் பரிமளம் தன தந்தையை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றாள்..

அங்கே அழுதுகொண்டு நின்றிருந்த ஜோதியையும் அவள் தாயாரையும் பார்த்து ஆறுதல் கூறினாள் 
தன்னுடன் இரண்டு தோழிகளையும் அழைத்து வந்திருந்தாள்  பரிமளம்.
நேரே காவல் அதிகாரியிடம் சென்றாள் 

அவரை வணங்கினாள் அவர் என்னம்மா?என்றதும் பேசத் தொடங்கினாள் 
"ஐயா, நாங்கள் ஜோதியுடன் படிக்கிறோம்.அவர்கள் வீட்டில் நீங்கள் கண்டெடுத்த பணம்
நாங்கள் சேர்த்த பணம்.கொஞ்ச நாள் முன்னேதான் ஒரு விபத்தில் சிக்கிய
பெண்ணுக்கு உதவ நாந்தான் ஆயிரம் ரூபாய் வரை என் தகப்பனாரிடம் கேட்டுக்
கொடுத்தேன்.

அதனால் அது திருட்டுப் பணம் இல்லை.நாங்கள் சேர்த்த பணம். அத்துடன் ஜோதிதான் பலருக்கும் உதவி செய்கிறாள் அதனால் அவளிடமே  இந்தப்
பணத்தையும் கொடுத்து ஏழைக்கு உதவுமாறு சொன்னேன்.எங்கள் தந்தையாரையும்
கேட்டுப் பாருங்கள்."

பரிமளத்தின் துணிவான பேச்சைக் கேட்டு காவலர் மனம் மாறினார்.ஜோதியின் தந்தையாரை
விடுவித்து அனுப்பினார்.அத்துடன் ஏழைகளுக்கு உதவும் நற்பண்புடைய ஜோதியையும்
பாராட்டினார்.
தவறு செய்து வந்த ஜோதியை புகழேணியில் ஏற்றிவிட்டாள்  பரிமளம்.

கண்களில் நீருடன் நன்றிப் பெருக்குடன் பரிமளத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்  ஜோதி.
மறுநாள் பள்ளிக்கு வந்த பரிமளத்தை சூழ்ந்து கொண்ட பிற தோழிகள் "உன்னை ஏமாற்றிப்
பணம் பறித்துவந்த ஜோதிக்கு நீ நல்ல பெயரைத் தேடித் தந்து விட்டாயே பரிமளா
"என்ற போது பரிமளம் சிரித்தாள் 

"அவள் நல்ல குணம் உங்களுக்குத் தெரியவில்லை.எவ்வளவு கஷ்டப் பட்டு சேமித்திருக்கிறாள்.
இதேபோல எல்லோருக்கும் சேமிக்கும் குணம் வளரவேண்டும் என்கிற எண்ணத்தை  எல்லோரும்
கற்றுக் கொள்ளுங்கள் யாரிடமும் உள்ள நல்லதைப் பார்க்கணுமே தவிர குறைகளைப்
பார்க்கக் கூடாது.

அந்த வகையில் ஜோதி ஒரு நல்லபெண்" என்று கூறியதை அனைவரும் ஒப்புக் கொண்டாலும்
" நீ எல்லோரிடமும் உள்ள நல்லதையே பார்க்கிறாய் பரிமளா, உனது இந்த பண்பும்
எங்களுக்கு வேண்டும்" என்று சொன்னதைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள்
பரிமளம்.

ஜோதி பள்ளிக்கு வந்ததும் நேரே பரிமளத்திடம் சென்றாள் அதுவரை அவளை ஏமாற்றிச் சேர்த்த பணத்தை பரிமளத்திடம் சேர்த்தாள் .

  "என் குற்றத்தையும் குறையையும் பாராமல் அதிலும் நிறைவைப் பார்த்த உன் நல்ல
குணம் தெரியாமல் தவறு செய்துட்டேன்.என்னை மன்னிச்சுடு. இனிமேல் நாம்
ரெண்டு பெரும் சேர்ந்து மற்றவருக்கு உதவி செய்வோம்.

முதலில் இந்தப் பணத்தைத் தலைமையாசிரியரிடம் கொடுத்து ஏழைப் பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கித்
தரச் சொல்வோம் வா"என்று பரிமளத்தின் கையைப் பற்றிக் கொண்டு ஓடினாள்  ஜோதி..

                     " குணமநாடி  குற்றமும்   நாடி  அவற்றுள் 
                       மிகைநாடி   மிக்க    கொளல் "

என்ற வள்ளுவரின் கருத்தமைந்த பண்பை  பரிமளத்திடமிருந்து நாமும் கற்றுக் கொள்வோம்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 15 Feb 2014, 5:54 PM | Message # 19
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நன்றியுள்ள நண்பன்

                           நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
                                
அன்றே மறப்பது நன்று.

விளக்கம் : ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் செய்த தீமையை அக்கணமே மறந்து விடுவது நல்லது.

மருத நாட்டு இளவரசன் வீரசிம்மனும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த கலைதாசனும் ஒரே குருகுலத்தில் பயின்ற போது இணைபிரியா நண்பர்களாக இருந்தனர்.

வீரசிம்மன் மன்னனாக முடிசூடியதும், பழைப நட்பை மறக்காமல் கவிதைகள் புனைவதில் வல்லவனான கலைதாசனை தனது ஆஸ்தான கவிஞனாக்கினான். அன்று முதல் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு வசதியான வாழ்க்கையை கலைதாசன் வாழ்ந்தான்.

அரசவையில் இடம் கிடைத்தாலும், கடவுள் அளித்த கவிதை எழுதும் திறமையை கடவுளுக்காக மட்டுமே பயன்படுத்துவதில் உறுதியாக இருந்த கலைதாசன், கடவுள் துதிப் பாடல்கள் எழுதுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினான்.

கலைதாசன் மீது பொறாமை கொண்டிருந்த மற்ற அரசவைக் கவிஞர்கள் இதனை சாதகமாக்கிக் கொண்டு, அவனைப் பற்றி மன்னனிடம் தவறாக சொல்லிக் கொடுத்தனர்.

அதனால் வீரசிம்மன் மனம் சஞ்சலமடைந்தது. ஒரு நாள்  கலைதாசனை அழைத்த வீரசிம்மன், தன்னைப் பற்றி புகழ்ந்து கவிதை பாடுமாறு கேட்டான். ஆனால் தான் கடவுளைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடுவதில்லை என கலைதாசன் மறுத்து விட்டான்.

ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்த வீரசிம்மன் இப்போது கடும் கோபம் கொண்டு கலைதாசனை பதவியிலிருந்து நீக்கியதோடு, அவனை நாடு கடத்தி காட்டில் வாழும்படி உத்தரவிட்டான்.
சில மாதங்கள் கழித்து காட்டுக்கு வேட்டையாடச் சென்ற வீரசிம்மன், பாதை மாறிச் சென்று வழி தெரியாமல் காட்டுக்குள் திண்டாடினான். அப்போது சூறைக் காற்று வீசியதால் மரம் ஒன்று முறிந்து அவன் மீது சாய்ந்தது.

பலத்த காயங்களோடு மரத்திறன் அடியில் தவித்துக்கொண்டிருந்தான். காட்டில் வசித்து வந்த கலைதாசன் அவ்வழியே செல்லும் போது வீரசிம்மனைப் பார்த்து அவனைக் காப்பாற்றி தன் குடிசைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தான்.

கலைதாசனின் பராமரிப்பால் உடல் நலம் தேறிய வீரசிம்மன் கண்ணீர் மல்க, " நண்பா, உனக்கு தீங்கிழைத்த போதும் நீ என் மேல் இவ்வளவு பரிவு காட்டுகிறாயே.. என் மீது கோபம் இல்லையா?" எனக் கேட்டான்.

"அரசே, ஏழையாய் இருந்த என்னை ஆஸ்தானக் கவிஞனாக்கி நல்வாழ்வு அளித்தீர்கள். அரசருடைய கட்டளையை ஏற்காதவன் தண்டனைக்கு உரியவனாவான். அதன் அடிப்படையில் நீங்கள் செய்தது தீங்கல்ல.

ஆகவே தான் நீங்கள் அளித்த தண்டனையை உடனே மறந்து விட்டேன். நீங்கள் எனக்கு செய்த நன்மையை மட்டுமே நினைவில் வைத்துள்ளேன்" என கலைதாசன் பதிலளித்தான்.

இதைக் கேட்டு தன் செயலுக்காக வருந்திய வீரசிம்மன், " நண்பா! உன்னுடைய தண்டனையை இந்த வினாடியே ரத்து செய்கிறேன். உடனே அரண்மனைக்கு திரும்பு" எனக் கூறி கலைதாசனை கட்டியணைத்துக் கொண்டான்.



 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Sunday, 16 Feb 2014, 11:33 PM | Message # 20
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi latha kaa smile
pakirvukal yaavum arumai
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
Search: