குறள் கதை - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
குறள் கதை
PattuDate: Saturday, 01 Feb 2014, 4:57 PM | Message # 1
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
படித்தால் மட்டும் போதுமா?

  கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
                           நற்றாள்தொழாஅர் எனின்.

விளக்கம் : "கல்வியறிவுள்ள ஒருவன், தன்னைப் படைத்த இறைவனை நன்றியறிதலுடன் வணங்க மறுப்பானேயானால், அவன் கற்றதனால் பயன் ஒன்றுமில்லை.

ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள்
பெற்ற அறிவாளி. தர்க்க சாஸ்திரத்தில் வல்லவன். முற்போக்கு சிந்தனைகள் உடைய
சீர்த்திருத்தவாதி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம்
செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு
நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும்
என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம்
நடத்துனர் கூறினார்.

ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த
ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு
அழைத்துச் சென்றார்.

அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, "சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும்
நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள்" என்றர்.

ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன்
"நிலத்தில் பாடுபட்டது நீ...நெல் விளைவித்தது நீ...என்னை உணவருந்த அழைத்தது
நீ...அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு
நன்றி தேவையில்லை" என்றான்.

விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, "நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர  மழை
பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி
தானியமானது அவன் செயலே! நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன்.
நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது.

அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள்
சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்?? என்று கூறினார்.
இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 01 Feb 2014, 5:02 PM | Message # 2
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
அடுத்தவரை குறை கூறும் முன்...

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும்  இறைக்கு.

விளக்கம்: தன்னிடமுள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது.”

 இரவில் மாறு வேடத்தில் தலைநகரத் தெருக்களில் உலவுவது மன்னர் நெடுஞ்செழியனுக்கு வழக்கம். அதுபோல் ஒருநாள் மாறுவேடத்தில் உலவும் போது, தன் ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் பகைவர்களின் நாட்டுப் போர் வீரன் ஒருவனுடன், ஒரு பாழடைந்த கோயிலில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு சினந்தார். தன்னுடைய உப்பைத் தின்று வாழும் ஒருவன் தன் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய துரோகச் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, உருவிய வாளுடன் அவர்கள் மீது பாய்ந்தார்.
 
உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட, ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் தன்னைத் தாக்க வருவது மாறுவேடத்திலுள்ள தனது மன்னர்தான் என்று அறியாமல், தன் வாளை உருவிக் கொண்டு அவருடன் சண்டையிட முற்பட்டான். இதைக் கண்டு ஓடி வந்த சிலர், சத்ருக்கனனுக்குத் துணையாக மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மன்னருடைய வாள் கை நழுவி விழுந்தது.

மிகுந்த கோபத்திலிருந்த சத்ருக்கனன், மன்னருடைய கைகளைப் பிடித்துக் கொண்டு “முட்டாளே! காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பகைவர்களுடைய வீரனை தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து, அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத் திட்டமிட்டிருந்தேன். விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடி விட்டான். உன்னுடைய அறிவற்ற செயலால் நல்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே! யார் நீ?” என்று வசை பாடினான்.

அப்போது சுற்றியுள்ள வீரர்கள் தீவர்த்தியைத் தூக்கி மன்னர் முகத்தருகே காட்ட, அது தன்னுடைய மன்னர் என்று அறிந்து இடி விழுந்தவன் போல் ஆனான் ஒற்றர் தலைவன். “ஐயோ! மகாராஜா! நீங்களா? உங்களை இருட்டில் யார் என்று தெரியாமல் மிகவும் தரக் குறைவாக நடந்து கொண்டேனே! உங்களை வசைபாடிய என் நாக்கை இப்போதே அறுத்து விடுகிறேன்!” என்றவனை மன்னர் தடுத்தார்.

“சத்ருக்கனா! உன் மீது எந்தத் தவறுமில்லை! ஒற்றர் தலைவனாகிய நீ உனது கடமையை சரியாகச் செய்துள்ளாய்! நான்தான் அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்தேன். உன்னை சந்தேகித்தது என் முதல் தவறு. தீர விசாரிக்காமல் குறுக்கிட்டது இரண்டாவது தவறு. ஆக, குற்றம் புரிந்தவன் நானே! உன்னிடம் குற்றம் காணுமுன், என்னுடைய குற்றங்களை நீக்கிக் கொள்ளத் தவறி விட்டேன். ஆகவே மன்னிக்க வேண்டியது நீதான்! இனி, இத்தகைய தவறுகளை நான் புரிய மாட்டேன்! தலைவனுக்குரிய இயல்புகளோடு நடந்து கொள்வேன்! என்னை மன்னித்து விடு சத்ருக்கனா!” என்றார் மன்னர்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
RAWALIKADate: Saturday, 01 Feb 2014, 5:08 PM | Message # 3
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சூப்பர் பட்டு
 
shanDate: Saturday, 01 Feb 2014, 5:55 PM | Message # 4
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நீதி கதைகள் அருமை பட்டு ...
 
priDate: Sunday, 02 Feb 2014, 12:40 PM | Message # 5
Lieutenant
Group: Checked
Messages: 65
Status: Offline
இரண்டு கதையுமே சூப்பர் லதா... yes

With Love,
Priya
 
PattuDate: Sunday, 02 Feb 2014, 5:56 PM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு .

இதன்பொருள்: 

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;
அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.

 ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.

‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.

வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:35 PM | Message # 7
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
எது சிறந்தது - அன்பா, செல்வமா, வெற்றியா?

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு


அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

ஒரு ஊரில் கோபு  தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று நபர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

கோபுவின் தந்தை 'வாருங்கள்' என்றார்.

ஐயா! 'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது!. யாராவது ஒருவர் தான் வரமுடியும்.

என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்.. எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

கோபுவின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் கோபுவோ ...'அப்பா! பணத்தையே உள்ளே அழைக்கலாம் நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும் வெற்றி உட்பட அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் கோபுவின்  தாயோ 'வேண்டாம் அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர். உடனே கோபுவின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'


அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Feb 2014, 5:17 PM | Message # 8
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நேர்மையின் பரிசு

அன்றுசூரிய வெப்பம் மிக அதிகமாக
இருந்தது. அப்பா தனக்குப் பிறந்த
நாள் பரிசாகத் தந்த சின்னஞ்சிறிய குடையைப்
பிடித்தபடி வீதியின் வலது பக்கத்தில் ஓரமாக
நடந்து சென்றான், ரவி. 
ரவி
ஒரு நல்ல சிறுவன்.

எப்போதும்உண்மையே பேசும் இயல்புடையவன். யாருடனும்
சண்டைக்குப் போகமாட்டான். வகுப்பில் அமைதியாக இருந்து பாடங்களைக் கவனமாகப்
படிப்பான். அதனால் எப்போதுமே வகுப்பில்
முதல் மாணவனாக வருவான்.

எந்தஒரு வேலையையும் ஒழுங்காகவும் கவனமாகவும் செய்வதால் ஆசிரியர் அவனை வகுப்புத் தலைவனாகவும்
நியமித்திருந்தார். எனினும், அதனால் அவன் கர்வம்
கொள்ளாமல் எல்லா மாணவர்களையும் சமமாகவும்
அன்பாகவும் நடத்தினான். அதனால் அவனை எல்லோரும் விரும்பினார்கள்.

ரவி பாடசாலையில் மட்டுமில்லாமல் வீட்டிலும் நல்ல பிள்ளையாகத்தான் நடந்துகொள்வான்.
தன் சின்னத் தங்கை கலாவுடன்
அன்போடு விளையாடுவான். அவள் ஊஞ்சலாடும் போது
அவனும் கூடவே நின்று அவளை
மகிழ்விப்பான். அவளுடைய குறும்புகளைப் பொறுத்துக்
கொள்வான்.

பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடனும் அவன் ஒற்றுமையோடு விளையாடுவான்.தன் வீட்டுத் தேவைக்காகக் கடைக்குச் சாமான் வாங்கப் போகும்போது
அடுத்தவீட்டு மாமிக்குத் தேவையான சாமான்களையும் வாங்கிவந்து
கொடுப்பான். இப்படி எல்லோருக்கும் உதவி
செய்யும் பழக்கமுடைய ரவியை அனைவரும் நேசித்தார்கள்.

பாடசாலைவிட்டுப் பாதையில் நடந்து வந்த ரவி,
எதிர்ப்பக்கமிருந்த பஸ் தரிப்பிடத்தை அடைவதற்காக
மஞ்சள் நிற வீதிக்கடவை அருகே
நின்றான். வலது இடது ஆகிய
இரு பக்கங்களையும் கவனமாகப் பார்த்து வீதியைக் கடந்தபோது, எதிர்ப்பக்கமாய் இருந்த கடையருகில் நின்றிருந்த
மனிதர் தன் காற்சட்டைப் பையிலிருந்து
கைக்குட்டையை இழுத்தெடுத்ததையும் அப்போது அவரது பணப்பை
கீழே விழுந்ததையும் ரவி தற்செயலாகக் கண்டான்.

தன்னுடைய பணப்பை விழுந்ததை அந்த
மனிதர் கவனிக்கவில்லை. எனவே, பாதையைக் கடந்த
ரவி, அவசரமாக அந்த இடத்துக்கு
விரைந்து அவரின் பணப்பையைப் பொறுக்கி
அவரிடம் ஒப்படைத்தான். ரவியின் செய்கையால் மனம்
மகிழ்ந்த அம்மனிதர் ரவியைப் பாராட்டி விலைமதிப்புடைய
ஒரு பேனாவைப் பரிசாகக் கொடுத்ததோடு, ரவியைப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
அங்கு கூடியிருந்தவர்களும் ரவியைப் பாராட்டினார்கள்.

ஒருவாரம் கழிந்தது. மறுவாரப் பத்திரிகையில் ரவியின் புகைப்படமும் அவனின்
நேர்மைக் குணம் பற்றிய குறிப்பும்
பிரசுரமாகி இருந்தன. அதைக் கண்டு ரவியின்
அம்மாவும் அப்பாவும் மிகுந்த பெருமிதமும் மகிழ்ச்சியும்
அடைந்தார்கள். ரவியைப் போலத் தம்
பெற்றோருக்குப் பெருமைத் தேடித்தரும் நல்ல பிள்ளைகளைப் பற்றித்தான்
நமது திருவள்ளுவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் - தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.'

பொருள்:

தன் மகனைநற்பண்பு நிறைந்தவன் என்று பிறர் சொல்வதைக்
கேட்கும் ஒரு தாய், தான்
அவனைப் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியை விட
அதிகமாக மகிழ்வாள்.
 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 3:53 PM | Message # 9
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Super..... maamy
 
PattuDate: Wednesday, 05 Feb 2014, 5:00 PM | Message # 10
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
ஏரோட்டம் இல்லாமல் காரோட்டம் இல்லை!

 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

விளக்கம்:

“செய்யும் தொழில்களில் விவசாயமே மனித சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமானது.”

நகர்ப்புறத்திற்கு உயர்கல்வி பயிலச் சென்றிருந்த குமரன் விடுமுறைக்கு ஊர் திரும்பினான். அவனுடைய தந்தை சங்கரனுக்கு தன் மகனுடைய வருகை மகிழ்ச்சியை அளித்தாலும், அவனுடைய புதிய கருத்துகள் வருத்தத்தை அளித்தன. அதிலும், தன் மகன் தங்களுடையப் பரம்பரைத் தொழிலான விவசாயத்தைப் பற்றி இழிவாகப் பேசியது பிடிக்கவில்லை.

“தந்தையே! சேற்றிலும், சகதியிலும் நின்று நாள் முழுதும் பாடுபடுவது ஒரு கேவலமான தொழில்! நகர்ப்புறத்தில் நான் அரசுப் பணியில் அமரப் போகிறேன். விவசாயத் தொழிலில் கிடைப்பது போல் பல மடங்கு வருமானம் எனக்குக் கிடைக்கும்.

 நீ இனி நெற்றி வியர்வை சிந்த விவசாயம் செய்ய வேண்டியதில்லை. என்னுடன் நகரத்திற்கு வந்து விடு! உன்னை நான்கு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வேன்! உனது தொழிலை இன்றுடன் விட்டு விடு!” என்றான்.

சங்கரன் பதில் பேசாமல் மௌனம் சாதித்தார். பின்னர், இருவரும் உணவருந்த அமர்ந்தனர். தனது இலையில் வடித்த சோறை இட்ட சங்கரன், தன் மகனது இலையில் சோறு பரிமாறாமல், நாணயங்களை வைத்தார். பிறகு தன் மகனை நோக்கி, “மகனே! நான் மிக உயர்வாக நினைக்கும் விவசாயத் தொழிலில் கிடைத்த சோற்றினை நான் உண்பேன். நீ உயர்வாக மதிக்கும் பணத்தினை உண்பாய்! என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான் குமரன். அவனிடம், "என்னப்பா விழிக்கிறாய்...எது கேவலமான தொழில்? மக்கள் உயிர்வாழ மிகவும் தேவையான உணவினை உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிலையா கேவலமாக நினைக்கிறாய்? உணவில்லாமல் நீ பணத்தை உண்ண முடியுமா? உன்னைப் போல் அனைவரும் பட்டினியால் சாக வேண்டியதுதான்!

எங்கள் ஏரோட்டம் நின்றுபோனால், உங்கள் காரோட்டமும் நின்றுவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்! உனக்குப் பிடிக்க வில்லையெனில் நீ விவசாயத்தில் ஈடுபட வேண்டாம்! ஆனால் மிகப் புனிதமான தொழிலான விவசாயத்தைத் தயவு செய்து இனி தாழ்வாக எண்ணாதே!” என்றார்.

இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த குமரன், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அன்று முதல் விவசாயத்தை இழிவுபடுத்திப் பேசுவதை நிறுத்தி விட்டான். தனது ஓய்வு நேரங்களில் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தை கவனித்தான்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்காக... » குழந்தைகளுக்காக... » குறள் கதை (நீதி கதைகள்)
Search: