நீதிக் கதைகள்
|
|
Pattu | Date: Wednesday, 12 Mar 2014, 6:13 PM | Message # 41 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| நாய் வாலை ....
குமாரபுரம் என்று ஒரு சிறு கிராமம் இருந்தது.அது மிகவும் அழகான கிராமம்.அந்த ஊரின் புறத்தே அழகிய காடு ஒன்று இருந்தது. அழகு மிகுந்த அந்தக் காடு குமாரபுரிக்கே ஒரு அரணாகவும் அழகு தருவதாகவும் இருந்தது.
ஆனால் அந்தக் காட்டுக்குச் செல்லவோ அதன் அழகை அனுபவிக்கவோ முடியாதபடி அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராக்ஷசன்இருந்து கொண்டு தடுத்து வந்தான்.
யாராவது தெரியாதவர்கள் அங்கு போய்விட்டால் அவர்களை விழுங்கிவிடுவான் அந்த அரக்கன். இதனால் மக்கள் மிகவும் பயத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வந்தனர்.
அந்த அரக்கனை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று பலரும் முயற்சி செய்தும் பயனேதும் உண்டாகவில்லை.
"அப்படி ஒன்றும் அந்த அரக்கன் நியாயமில்லாமல் மனிதர்களைக் கொல்ல வில்லை அவன் என்ன கேட்கிறான், எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள் வேலையில்லாமல் நான் இருக்கமாட்டேன் என்றுதானே கேட்கிறான். இதைச் செய்ய நமக்கு என்ன கஷ்டம்?"என்று கிராமத் தலைவரும் கூறி வந்தார்.
அழகிய இயற்கைச் சூழ்நிலை இருந்தாலும் அங்கு சென்று அதை அனுபவிக்க யாரும் துணியவில்லை. அதற்கு அந்த அரக்கன்தான் காரணம்.அவன் அந்தக் காட்டில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.அவனை வென்று வருவதாகச் சொல்லிச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பவில்லை.
அந்த அரக்கனுக்கு உணவாகிப் போனதுதான் மிச்சம்.இந்த நிலையில் அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு ஏழை அந்தணன் பிழைப்பைத் தேடி வந்தான்.ராமசர்மா என்பது அவனது பெயர்.
வறுமையால் வாடிய அவனை ஒருநாள் அந்த ஊர் தலைவர் அழைத்தார்."இதோபார் ராமசர்மா, உன் வறுமை நீங்க ஒரு வழி சொல்கிறேன்.ஊர் எல்லையில் உள்ள காட்டில் ஒரு அரக்கன் இருந்துகொண்டு இந்த ஊரை அச்சப் படுத்திக் கொண்டிருக்கிறான் .
அவனை நீ வென்றுவிட்டால் உனக்கு வேண்டிய பணம் கொடுப்போம்.' என்று ஆசை காட்டினார்.ராமசர்மாவும் உடனே சம்மதித்தான்.
ஒருநாள் கிராமமக்கள் வழியனுப்பிவைக்க ராமன் காட்டை நோக்கிப் புறப்பட்டான்.நடுக்காட்டை அடைந்தான்.சற்று சிந்தித்தான்.
சற்று நேரம் அந்தக் காட்டின் அழகை ரசித்துக் கொண்டு நின்றான்.காட்டின் நடு நடுவே அழகிய மரங்கள் முறிந்தும் நசுங்கியும் இருப்பதைப் பார்த்தான்.அதெல்லாம் அந்த அரக்கனின் வேலை என்பதைப் புரிந்து கொண்டான்.
திடீரென்று பெருங்குரல் கேட்டது. இடியிடிப்பது போன்ற குரல் கேட்டு ராமன் சற்று நடுங்கியபடி மரத்தின் மறைவில் சென்று மறைந்து நின்று கொண்டான்.பெரும் உறுமலுடன் சத்தத்துடன் அட்டகாசமாக அந்த அரக்கன் வந்து கொண்டிருந்தான்.
இங்குமங்கும் பார்த்தான். "யாரது என்னிருப்பிடம் வந்துள்ளது?" என்று உறுமினான்.சற்று நேரத்தில் சற்றே நடுங்கிய உடலுடன் ராமசர்மா அவன் முன் நின்றான்.
"யார்நீ?எனக்கு வேலை கொடுக்க உன்னால் முடியுமா?சீக்கிரம் வேலை கொடு. இல்லையேல் உன்னை விழுங்கிவிடுவேன்"என்றபடியே ராமசர்மாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் அரக்கன்.
ராமசர்மாவின் அறிவு விழித்துக் கொண்டது.தன குரலைக் கனைத்துக் கொண்டான்."உடனே இங்கே ஒரு அழகிய அரண்மனை கட்டு" என்றான்.
உடனே ஒரு எஜமானிடம் காட்டும் மரியாதையைக் காட்டி நின்ற அரக்கன் உடனே அங்கே ஒரு அழகிய அரண்மனையைக் கட்டிமுடித்தான்.அடுத்தநொடி எனக்கு அடுத்த வேலை கொடு என்று நின்றான்.
"இங்கு ஒரு அழகிய தோட்டம் அமைத்துக் கொடு" என்றான்.அதுவும் அடுத்த நொடியில் நடந்து முடிந்தது.செல்வமும் பணியாட்களும் நிறைந்தனர். அந்தக் காடே ஒரு நகரமாயிற்று.ஆனாலும் வேலையில் அரக்கன் சலிப்புக் காட்டவில்லை.
ராமசர்மா சிந்தித்தான் இனியும் என்ன வேலை கொடுப்பது என்று தெரியவில்ல. திடீரென்று அவன் முன் ஒரு நாய் ஓடிற்று.அதைப் பார்த்ததும் ராமசர்மா,
"ஏ அரக்கனே, இந்த நாயின் வால் வளைந்துள்ளது அதை நிமிர்த்திவிட்டு வா." என்று சொல்ல அந்த அரக்கனும் நாயின் பின்னே ஓடினான்.நாயின் வாலை நிமிர்த்தவே முடியவில்லை.
அரக்கன் ஓடியே சென்று விட்டான். அந்த இடத்துக்குவந்த கிராம மக்கள் அவனை அந்த இடத்துக்கே அரசனாக முடிசூட்டினர்.ராமசர்மா வெகுகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.
எவ்வளவோ செயல்களைச் செய்து முடித்த அரக்கனாலேயே நாயின்வாலை நிமிர்த்த முடியாமல்போனது.இதுபோல சிலரை நம்மால் மாற்றவே முடியாது. இதைப் புரிந்து கொண்டு வாழவேண்டும்.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Thursday, 13 Mar 2014, 5:11 PM | Message # 42 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| மன்னிப்பு என்கிற காத்து
இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டுருந்தனர். அப்போ அவங்களுக்குள்ள சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு நண்பர் பளார்னு இன்னொரு நண்பரின் கன்னத்தில் அறைந்தார்.
கன்னத்தில் அரை வாங்கிய நண்பர் கொஞ்சம் வருத்தப்பட்டு எதுவும் பேசாம மணலில் "இன்னிக்கு என் நண்பன் அறைஞ்சுட்டான்னு" எழுதினார்.
தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும் போது ஒரு பாலைவனச்சோலை தென்பட்டது. அங்கே அவங்க இரண்டு பேரும் குளிக்க நினைச்சு இருக்குற குட்டையில் இறங்கினாங்க.
அறை வாங்கிய நண்பர் சகதில மாட்டிக்கிட்டு அந்த சகதி மண்ணு உள்ளே இழுக்க கத்தினாரு. உடனே பக்கத்துல இருந்த நண்பர் கையை புடிச்சு இழுத்து காப்பாத்தினாரு.
சகதியிலிருந்து வெளியே வந்த பிறகு பக்கத்துல உள்ள கல்லுல "என் நண்பன் என் உயிரை காப்பாத்திட்டான்" அப்படின்னு எழுத, டேய் நீ முன்னாடி அறை வாங்கும் போது மண்ணுல எழுதின இப்போ கல்லுல எழுதுற... என்ன காரணம் அப்படின்னு கேட்டாரு ?
அதுக்கு இந்த நண்பர் யாரவது நம்மை வருத்தப்பட செய்தால் அதை மண்ணுல எழுதணும், அது மன்னிப்பு என்கிற காத்து அடிச்சு நம்மை மனசுலேந்து வெளியே போகும்.
இது மாறி நல்ல விஷயங்களை கல்லுல எழுதினா எந்த காத்துனாலும் அழிக்க முடியாது, நம்ம மனசுல என்னைக்கும் பசுமையா நினைவில் இருக்கும்.
நம்ம வாழ்க்கைல உள்ள மகிழ்ச்சியான விஷயங்களை மட்டும் மனசுல வெச்சுட்டு கவலை தந்த விஷயங்களை மறந்துருவோம்... சந்தோஷமா வாழலாம்...
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Friday, 14 Mar 2014, 7:18 PM | Message # 43 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம். மங்களபுரி மன்னன் சூரசேனன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு காட்டி நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான்.மக்களும் தங்கள் மன்னனை உயிருக்கும் மேலாக எண்ணி வாழ்ந்து வந்தனர்.
செண்பகபுரி மன்னன் சிவபாலன் சூரசேனன் மீது பொறாமை கொண்டு அவன்மீது படையெடுத்தான்.ஆனால் சூரசேனனை வெல்ல முடியாததால் தோற்று ஓடினான்.
அடிக்கடி படையெடுத்து தொல்லை கொடுத்துவந்த சிவபாலனை அடக்க எண்ணிய சூரசேனன் அவன் மீது படையெடுத்தான்.ஆனால்சரியான பயிற்சியும் படைபலமும் இல்லாததால் தோற்று நாட்டை விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்து வாழ்ந்தான்.
ஆனாலும் அடிக்கடி வீரர்களைத் திரட்டி செண்பகபுரியுடன் போரிட்டு வந்தான்.எப்படியாவது தன தாய்நாட்டை மீட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் படைதிரட்டிவந்தான் சூரசேனன். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவி ஓடினான்.
ஒருநாள் களைப்புடன் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தான் சூரசேனன்.தனக்குள் எண்ணிக் கொண்டே நடந்தான்.
" பல முறை போராடியும் சிவபாலனை வெல்ல இயலவில்லையே.என் படையும் பெரிதாகத்தானே இருக்கிறது. என்ன காரணம் புரியவில்லையே." என்று நடந்தபடி சிந்தித்தவனுக்கு காட்டுக்குள் வெகு தொலைவு வந்தது கூடத் தெரியவில்லை.
களைப்புடன் ஒரு பாறையில் அமர்ந்தான்.பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.சற்றுத் தொலைவில் ஒரு குடிசை வீடு தென்பட்டது.
ஆவலோடு அந்த வீட்டுக்கு சென்று சற்றுத் தொலைவில் நின்றபடி "அம்மா" என அழைத்தான்.அந்த வீட்டுக்குள்ளிருந்து எழுபது வயதுள்ள ஒரு மாது வெளியே வந்தார்.
அவரிடம் "அம்மா.மிகுந்த களைப்பாக இருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது ஏதேனும் கொடுத்து உதவினால் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்று சொல்லி அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.
"ஐயோ பாவம்! இரப்பா வருகிறேன்.ஏழையின் வீட்டில் களிதான் இருக்கிறது. அதையே தருகிறேன்.தின்று பசியாறு."என்றவள் உள்ளே சென்று ஒரு தட்டில் சூடானகளியை வைத்து அதில் சூடான குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.
நல்ல பசியோடிருந்த சூரசேனன் அதை வாங்கி தன ஐந்து விரல்களாலும் களி உருண்டையை அழுத்தினான். நல்ல சூடாக இருந்த களி அவன் கையை நன்கு சுட்டு விட்டது "ஹா! ஹா!" வெனத் தன கையை உதறியபடி விரல்களை வாயிலும் வைத்துக் கொண்டான்.
இதைப் பார்த்து அந்தப் பாட்டி சிரித்தாள். அத்துடன் "ஏனப்பா நீ களி தின்பது எங்கள் மன்னன் சூரசேனர் படையெடுப்பது போல் இருக்கிறது." இதைக் கேட்டு சூரசேனன் ,"என்னம்மா சொல்கிறீர்கள்?நீங்கள் சொல்வது புரியவில்லையே." என்றான் ஆவலாக.
" பின்னே என்னப்பா, களியை அதைச் சுற்றிலும் ஓரமாகவே தின்று வந்தால் குறைந்து கொண்டே வரும் முழுவதும் ஆறிக்கொண்டே வரும்.சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கலாம்,அதைவிட்டு நடுவில் கைவைத்தால் சுடாதா?" என்றாள் சிரித்தவாறே. "இதற்கும் மன்னரின் படையெடுப்பிற்கும் என்ன சம்பந்தம்?" "புரியவில்லையா, படையெடுத்து எல்லையில் இருக்கும் நாடுகளைப் பிடித்தபின்னரே தலைநகரில் நுழையவேண்டும் அப்போதுதான் பகைவரின் படைபலம் குறையும் நமக்கும் வெற்றி கிடைக்கும்." என்றாள் புன்னகையுடன்.
பாதி தின்றவுடன் களியை அப்படியே வைத்த சூரசேனன் உடனே புறப்பட்டான். "தாயே, தங்கள் அறிவுரைக்கு நன்றி. இப்போதே செல்கிறேன் நீங்கள் சொல்லியபடியே போராடி வெற்றி வாகை சூடி உங்களை சந்திக்கிறேன்.வருகிறேன்." அவளை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான்.
ஒரு சிறு படையுடனேயே தலைநகரின் சுற்றியிருந்த கிராமங்களைப் பிடித்த சூரசேனன் விரைவில் சிவபாலனின் தலைநகரையும் கைப்பற்றினான்.தனக்குக் கப்பம் கட்டச் செய்து தன நாட்டில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தான்.
உடனே காட்டுக்குச் சென்று அந்த மாதரசியை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.அவளுக்குப் பொன்னும் பொருளும் தந்து தன மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான்.
மூத்தோர் சொன்ன சொல் என்றும் பயன்படக்கூடியது என்பதை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும்.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Saturday, 15 Mar 2014, 6:29 PM | Message # 44 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| மின்னுவதெல்லாம் பொன்னல்ல
பூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.
அவரை கொடைவள்ளல் என்றும் தாராளப் பிரபு என்றும் வானளாவப் புகழ்ந்தனர்.எந்த உதவிஎன்றாலும் தனகொடியைக் கேட்டால் கிடைக்கும் என்று நம்பியிருந்தனர்.அந்த தனவந்தரிடம் முனியன் என்று ஒரு வேலைக்காரன் இருந்தான்.
பல வருடங்களாக அவரிடம் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.தன மகன் வேலுவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று முனியன் விரும்பினான்.வேலுவும் பள்ளியில் நன்றாகப் படித்து வந்தான்.
அவ்வூரின் தனவந்தர் தனகோடியின் மகனும் அதே வகுப்பில் படித்து வந்தான்.ஆண்டு முடிவில் தேர்வு முடிவுகள் வந்தபோது வேலு அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலாவதாக வந்திருந்தான்.
தனகொடியின் மனம் பொறாமையில் தவித்தது.தன்னிடம் உதவி கேட்டு வந்த முனியனைக் கடுமையாகப் பேசினார்."முனியா, உன் மகனுக்கு என்னிடமே வேலை போட்டுத் தருகிறேன்.
அவன் வருமானம் வந்தால் உனக்கு வசதியாக இருக்குமே. மேல் படிப்பெல்லாம் வேண்டாம். வீணாகச் செலவு செய்யாதே."என்று வேலுவின் மேல்படிப்புக்குப் பணஉதவி செய்ய முடியாது என்பதை ஜாடையாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்டு முனியனும் வேலுவும் கவலையும் கூடவே கோபமும் கொண்டனர்.உனக்கு இஞ்சினீயர் சீட்டு கெடைச்சும் பணமில்லாததாலே படிக்க முடியலையே.முதலாளி உதவி செய்வாருன்னு நினைச்சிருந்தேனே.புள்ளைய படிக்க விடாமே செஞ்சிட்டாரே."என்று புலம்பினான்.
ஆனால் வேலுவோ கலங்காமல் தன தந்தையைத தேற்றினான்."அப்பா, நான் வேலைசெய்து பணம் சேர்த்துப் படிப்பேன் அப்பா, நீங்க வருத்தப்படாதீங்க."என்று தேற்றினான்.
"தன பிள்ளைக்கு சீட்டுக் கிடைக்கலையின்னு பொறாமையிலே உன்னைப் படிக்க விடாம செஞ்சுட்டாரே.இவரோட பொறாமை பிடிச்ச மனசாலே இவுரு எவ்வளவு நல்ல காரியம் செஞ்சு நல்ல பேரு எடுத்து என்ன புண்ணியம்?"
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனியனும் வேலுவும் முதலாளி வீட்டு வாயிலில் நின்று வருந்திக் கொண்டிருந்தனர். "அப்பா, நம்ப முதலாளி உண்மையிலேயே ஜனங்களுக்கு நல்லது செய்ய நினைக்கலேப்பா. அவரை நாலு பேரு புகழணும்னுதான் இப்படி செஞ்சிட்டு வராரு."
"இருக்கும். அவுக எப்படியானும் இருக்கட்டும் உனக்கு படிப்பு நிக்கிதே" மன வருத்தத்துடன் நின்றான் வேலு.செய்வதறியாமல் சிந்தனையுடன் முனியனும் நின்றிருந்தான்.
அப்போது அந்தவீட்டு தோட்டக்கார முத்துராஜா அங்கே வந்தார்.அறுபது வயதைத் தாண்டினாலும் இளமையோடு காட்சியளிப்பவர். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பவர். "என்ன வேலு, காலேஜிலே சேரலியா.எப்போ சேரப்போறே?"
"அதுக்குத்தான் முதலாளிகிட்டே பணம் கேட்டேன் தாத்தா." "குடுத்தாரா?" வேலுவும் முருகனும் பெருமூச்சுடன் நின்றனர்.
"விடு தம்பி.எவ்வளவு கட்டணும்னு சொல்லு நான் அந்தப் பணத்தை உனக்குக் குடுக்குறேன்.நம்ம ஏழை ஜாதியிலே ஒருத்தன் படிக்க நான் உதவினேன் அப்படீங்கர திருப்தியே எனக்குப் போதும்பா." "தாத்தா"என்று ஆசையுடன் அழைத்தபடியே அவரை நன்றியோடு கட்டிக் கொண்டான் வேலு.
முனியனோ "ஐயா நீங்க ஆயிரக்கணக்கான பணத்தை எப்படிப் புரட்டுவீங்க"என்றான் சந்தேகத்தோடு.புன்னகை புரிந்த முத்துராஜா, "எங்க பூர்வீக சொத்தை வித்து வந்த பணம் அது." "ஐயா,அது உங்க பொண்ணு கலியாணத்துக்குன்னுல்ல சொன்னீங்க "தடுமாற்றத்துடன் கேட்டான் முனியன்.
புன்னகையுடன்முத்துராஜா, "படிப்புக்கு அப்புறம்தாம்பா மத்ததெல்லாம் கலியாணத்துக்கு ஆண்டவன் வேற வழி காட்டுவாரு. நீ நாளைக்கே போயி காலேஜிலே சேர்ந்துடு என்ன. யோசிக்காதே வேலு! நீ நல்லாப் படிச்சு இந்த ஊருக்கு நல்லது செய்யணும்தம்பி "என்று சொன்னவர் வேலுவின் தலையில் கை வைத்து ஆசிகூறி நடந்தார்.
தெய்வமே நடந்து போவது போல் உணர்ந்தனர் முனியனும் வேலுவும். வேலு தந்தையிடம் கண்களில் நீர் மல்க,"அப்பா, கடவுள்தான் தாத்தாவா வந்திருக்குராருப்பா.ஊருக்கெல்லாம் உதவுற பணக்காரருக்கு இல்லாத நல்ல மனசு இந்த தாத்தாவுக்கு இருக்குதேப்பா."
"நாம நம்ம முதலாளி உதவி செய்வாருன்னு நம்பிட்டமேப்பா". "இதைத்தாம்பா மின்னுவதெல்லாம் பொன்னல்ல அப்பிடீன்னு பழமொழியாச் சொல்லியிருக்காங்க.பணக்காரரும் உதவல்லே.அவரு பணமும் நமக்கு உதவல்லே."
நீ சொல்றதும் சரிதான் என்றபடி நிம்மதியுடன் படுத்துக் கொண்டான் முனியன். வேலுவும் தாத்தா சென்ற திசை நோக்கி வணங்கி விட்டுத் தானும் பாயில் தந்தையின் அருகில் படுத்துக் கொண்டான். இனிமேல் முத்துராஜாதானே அவனுக்குத் தெய்வம்.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
Pattu | Date: Sunday, 16 Mar 2014, 7:05 PM | Message # 45 |
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| கடவுளை நம்பினோர் கைவிடப் படார்
வளமையான ஒரு சிற்றூர். அந்த ஊரில் சாந்தோபா என்ற ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார்.அவர் ஒரு முறை துக்காராம் மகாராஜ் அவர்களின் சரித்திரத்தைக் கேட்டார். அவரைப் போலவே தாமும் பற்றற்று வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இந்த எண்ணம் நாளும் வளரலாயிற்று.எனவே தன செல்வம் அனைத்தையும் ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டுக் காட்டை நோக்கிச் சென்று தவம் செய்யத் தொடங்கினார்.இவரது தாயாரும் மனைவியும் எவ்வளவு தடுத்தும் இவர் கேட்கவில்லை.
சிலநாட்கள் சென்றன.ஒருநாள் உறவினன் ஒருவன் சாந்தோபா காட்டில் இருக்கும் இடத்தைக் கண்டு வந்து சொன்னான்.உடனே சாந்தோபாவின் தாய் தன் மருமகள் யசோதாவிடம் கணவன் மனதை மாற்றி அழைத்து வருமாறு கூறினாள். யசோதாவும் கணவனைத் தேடிக் காட்டுக்கு வந்தாள்.
நிஷ்டையில் இருக்கும் கணவர் முன் அமர்ந்து கொண்டு அவர் கண் திறக்கும் வரை காத்திருந்தாள் யசோதா. கண் திறந்த சாந்தோபா தன மனைவியைப் பார்த்துத் திகைத்தார். அவளிடம் நீ ஏன் இங்கு வந்தாய்?திரும்பிப் போ"என்றார்.
அவளோ "ராமன் இருக்குமிடமே அயோத்தி.நான் தங்களை விட்டுப் போகப் போவதில்லை "என்றாள் பிடிவாதமாக. அவளது சொற்களைக் கேட்டு மகிழ்ந்த சாந்தோபா "என்னைப் போலவே பற்றுகளை விட்டு என்னுடன் இருக்கவேண்டும்" என்றார். யசோதாவும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு வாழ்ந்து வரலானாள்.
தினமும் ஊருக்குள் சென்று பிக்ஷை ஏற்றுக் கொண்டு வந்து தன் கணவருக்குப் பணிவிடைகள் செய்து வரலானாள்.அந்த ஊரிலேயே சாந்தோபாவின் சகோதரி வாழ்ந்து வந்தாள்.அவள் இல்லத்திற்குப் பிக்ஷைக்குப் போனாள் யசோதா.
தன் அண்ணன் மனைவியை உள்ளே அழைத்து நெய், சர்க்கரை சேர்த்துச் செய்த அடைகளைக் கொடுத்தாள் அவற்றை வாங்க யசோதா மறுத்த போதும் பிடிவாதமாக அவள் புடவையில் வைத்துக் கட்டி அனுப்பிவிட்டாள்
தங்கள் இருப்பிடம் வந்த யசோதா கணவரிடம் நடந்ததைக் கூறி அடைகளைக் காட்டினாள் .அவளிடம்," நீ உடனே இவைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வா" என்று கூறவே யசோதா அப்படியே தன் நாத்தியிடம் அவைகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.
வரும் வழியில் மழையும் காற்றும் பலமாக வீசியது. நதியில் வெள்ளம் அதிகரிக்கவே அதைக் கடக்க இயலாமல் யசோதா திகைத்து நின்றாள்.அவள் மனம் இறைவனை வேண்டியது.
அப்போது ஓர் ஓடக்காரன் அங்கு வந்தான். கவலையுடன் நிற்கும் யசோதையிடம் வந்தான். "அம்மா, அக்கரைக்குப் போகவேண்டுமா?நான் கொண்டுபோய் விடுகிறேன்.வாருங்கள்" என்று அழைத்தான்."பாண்டுரங்கா," என்று இறைவன் நாமத்தைச் சொல்லியவாறே அவனுடைய ஓடத்தில் ஏறினாள் யசோதா.
அக்கரை வந்து சேர்ந்தவுடன் கரை இறங்கிய யசோதா ஓடக்காரனைக் காணாது திகைத்தாள்.ஓடம் நின்ற இடத்தில் ஒரு மயிலிறகு கிடந்தது.அதை மிகுந்த பக்தியுடன் எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள்.வந்தவன் அந்தப் பாண்டுரங்கனே என்று புரிந்து கொண்டாள்.
இந்த அற்புதத்தைக் கணவனிடம் சொன்ன போது சாந்தோபா கண்ணீர் விட்டான். தன மனைவி செய்த புண்ணியம் தான் செய்யவில்லையே.என்று மிகவும் வருந்தினான்.
தனக்கும் அவன் காட்சி தரும் வரை உணவு உண்பதில்லை என்று நோன்பிருக்கத் தீர்மானித்தான்.அதேபோல் கண்களை மூடி அமர்ந்துகொண்டான்.நாட்கள் கடந்தன. சாந்தோபாவின் உடல் வாடியது.இளைத்துத் துரும்பாகிவிட்டான்.
ஒருநாள் பாண்டுரங்கன் சங்கு சக்ர கதா தாரியாய் இவன் முன் தரிசனம் தந்து"அன்பனே நான் என்றும் உன்னுடனேயே இருக்கிறேன்.வருந்தாதே"என்று ஆசி கூறி மறைந்தார்.மனம் மகிழ்ந்த சாந்தோபா தன மனைவியுடன் மீண்டும் பிக்ஷை எடுப்பதும் தவம் செய்வதும் இறைவன் நாமத்தைப் பாடுவதுமாக வாழ்ந்து வரலானார்.
அத்துடன் மக்களின் துயர் துடைப்பதும் அவர்களை நல்வழிப் படுத்துவதுமாகக் காலம் கழித்துப் பின் பேரின்பப் பெருவீட்டை அடைந்தார். இத்தகைய பெரியவர்களின் வாழ்க்கைத் தத்துவம் நமக்கெல்லாம் கடவுளை நம்பினோர் ஒருக்காலும் கைவிடப்படார் என்ற உண்மையை விளக்குகிறது.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
lakshmi | Date: Tuesday, 20 May 2014, 2:40 PM | Message # 46 |
Major
Group: Users
Messages: 92
Status: Offline
| சந்தோசம் எதில்...?
ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொருபலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், "இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை".
நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும் ...
நன்றி: கதம்பம்
|
|
| |
shan | Date: Saturday, 24 May 2014, 6:40 PM | Message # 47 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| மனிதனுக்கு எது தேவை .....குட்டி கதை அருமை லஷ்மி
|
|
| |