வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் (வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்)
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
JanviDate: Saturday, 30 Aug 2014, 3:02 PM | Message # 21
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
நகர்ப்புறங்களில் வீட்டுமனைகளை பார்ப்பதே அரிதாகி விட்ட நிலையில் வீட்டு தோட்டம் அமைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளே அதிக அளவில் பெருகி வருவதால் தோட்டம் அமைத்து அதில் சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்க முடியாது. தொட்டியில் அலங்கார செடிகளை வளர்ப்பது போலவே காய்கறி செடிகளையும் வளர்த்து சமையல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
தக்காளி–வெங்காயம்
இருப்பினும் தொட்டியில் எல்லா வகையான காய்கறி செடிகளும் செழிப்பாக வளரும் என்று சொல்லி விட முடியாது. தோட்டத்தில் மண் பரப்பில் வளர்வது போல தொட்டிகளிலும் நன்றாக வளர்ந்து அதிக காய்கறிகளை விளைவிக்கும் செடிகளும் இருக்கின்றன. அவைகளை தேர்ந்தெடுத்து தொட்டியில் வைத்தால் வீட்டு காய்கறி தேவைகளை ஓரளவு சமாளித்து கொள்ளலாம். அந்த வகையான காய்கறி செடிகளை  பற்றி பார்ப்போம்.
தொட்டியில் செழிப்பாக வளரும் காய்கறி செடிகளுள் முதன்மையானது தக்காளி செடி ஆகும். இவை தொட்டியிலும் நன்றாக வளர்ந்து அதிக தக்காளி பழங்களை விளைவிக்கும். எனினும் தக்காளி விதையை விதைக்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. நீளமாக வளரும் தக்காளி செடியை தவிர்த்து குட்டையாக வளரும் தக்காளி செடியின் விதைகளை தூவி தொட்டியில் வளர்த்தால் அதிக விளைச்சலை எதிர்பார்க்கலாம்.
வெங்காயமும் தொட்டியில் நன்றாக வளரும் தன்மை கொண்டது தான். பெரிய அளவிலான தொட்டியை பயன்படுத்துவது நல்லது. அப்போது தான் வெங்காயம் செழிப்புடன் வளரும். அதிக வெங்காயமும் கிடைக்கும். ஒரே தொட்டியில் நான்கைந்து வெங்காய செடிகளை வளர்ப்பதை விட ஐந்து, ஆறு தொட்டிகளில் வளர்த்து வருவது நல்லது. அவற்றை சுழற்றி முறையில் வளர்த்தால் சமையல் தேவையை பூர்த்தி செய்ய  ஏதுவாக இருக்கும்.  
கொத்தமல்லி–துளசி
வீட்டு சமையல் தேவையின் ஒரு அங்கமான கொத்தமல்லியையும் தொட்டியில் வளர்க்கலாம். இயற்கை உரக்கலவை கலந்த தரமான  மண்ணை தொட்டியில் நிரப்பி கொத்தமல்லி விதைகளை தூவ வேண்டும். ஒரே இடத்தில் கொத்தமல்லி விதைகளை மொத்தமாக தூவி விடாமல் ஓரளவு இடைவெளி விட்டு மண்ணுக்குள் விதைக்க வேண்டும். விதைகள் முளைத்து துளிர்விடும் வரை தொட்டியில் இருக்கும் மண் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டியையும் ஓரளவு சூரிய  வெளிச்சம் விழும் இடத்தில் வைக்க வேண்டும். அப்போது தான் கொத்தமல்லி செடி நன்றாக முளைக்கும்.
 மூலிகை செடிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் துளசி செடியையும் தொட்டியில் வளர்க்கலாம். இதன் விதைகளையும் தொட்டி  மண் பரப்புக்குள் விதைத்து செடியாக வளர்க்கலாம். இந்த செடிக்கும் சூரிய வெளிச்சம் அவசியம்.
பீட்ரூட்–புதினா செடி
பீட்ரூட்டை கூட தொட்டிகளில் வளர்க்கலாம். அவை நன்கு வளரும் செடி வகையை சார்ந்தது ஆகும். எனினும் தொட்டியில் சிவப்பு நிற பீட்ரூட் தான் வேகமாக வளரும். தொட்டியும் பெரிதாக இருக்க வேண்டும். அதன் ஆழமும் 10 அங்குலத்துக்கும் மேற்பட்டதாக இருக்க வேண்டும். அப்போது தான் வேரூன்றி வளர்வதற்கு ஏதுவாக இருக்கும். விளையும் பீட்ரூட்டும் பெரியதாக இருக்கும்.
தொட்டியில் எளிதில் வளரக்கூடிய கிழக்கு வகை தாவரங்களில் முள்ளங்கியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதையும் அகலமான தொட்டியில் வளர்க்கலாம். முள்ளங்கி விதைகளை தொட்டியில் விதைத்து வளர செய்யலாம். தொட்டியில் இருக்கும் மண் ஈரப்பதம் குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். புதினா செடியும் தொட்டியில் வளர்ப்பதற்கு ஏற்ற செடி தான். இதை விதையாக விதைக்காமல் அதன் வேருடன் இணைந்த தண்டு பகுதியை தொட்டிக்குள் ஊன்றி வளர்க்கலாம். இது வளர்வதற்கு சீரான இடைவெளியில் தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.

-- நன்றி தினத்தந்தி
 
JanviDate: Saturday, 30 Aug 2014, 3:50 PM | Message # 22
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வீட்டுத் தோட்டம் போட வேண்டும்' என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், 'அதெல்லாம் லேசுப்பட்ட விஷயமில்ல...', 'அதையெல்லாம் நம்மளால பராமரிக்க முடியுமா?' இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடை தேடாமலே... விஷயத்தை முடித்துவிடுவார்கள்.
ஆனால், 'நகரத்தில் இருந்தால் என்ன..? நாமும் அமைக்கலாம் ஒரு குட்டித் தோட்டம். தேவை ஆர்வமும் முயற்சியும் மட்டுமே!’ என்று நம்பிக்கையூட்டுகிறார், சுற்றுச்சூழல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில். சென்னைப் புதுக்கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர், மண்புழு விஞ்ஞானி என்கிற பெருமைகளைப் பெற்றிருக்கும் இஸ்மாயில்... மண்புழு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி உரையாற்ற, பயற்சி அளிக்க உலக அளவில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர். இங்கே வீட்டில் தோட்டம் அமைப்பது முதல், பராமரிப்பது வரை மணிமணியான தகவல்களைப் பகிர்கிறார்.
''பெரிய பெரிய கட்டடங்களில், துளிகூட மண் இல்லாத நிலையிலும், கிடைக்கும் சின்னச் சின்ன வெடிப்புகளில் அரச மரம் வளர்வதைப் பார்த்திருப்போம். அப்படியிருக்கும்போது காய்கறி மற்றும் பூஞ்செடிகள் வளர்க்க அதிகபட்சமாக எவ்வளவு மண் தேவைப்படப் போகிறது? பிடியளவு மண்ணில்கூட கொத்துக் கொத்தாக காய்கள் பறிக்கலாம். நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டப்பாக்கள், வாட்டர் பாட்டில்கள், பெயின்ட் வாளிகள் இவற்றில் எல்லாம் கொஞ்சம் மண்ணும் இயற்கை உரமும் போட்டால் போதும்... அதிலிருந்து உருவாகும் அழகான தோட்டம்!

முதல் தேவை... எரு!
தோட்டம் போடுவதற்கு முன், முதலில் எரு தயாரிக்க வேண்டும். முதல் வேலையாக ஏழு தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தொட்டியிலும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என எழுதுங்கள். சமையலுக்கு நறுக்கும் காய்கறிக் கழிவுகளை அன்றைய தினத்துக்குரிய தொட்டியில் போடுங்கள்.
அதை மக்க வைப்பதற்கு, சிறிதளவு மண்ணைத் தூவுங்கள் அல்லது புளித்த தயிரை, தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள். இதேபோல அந்தந்த நாளுக்குரிய தொட்டிகளில் கழிவுகளைப் போட்டு வாருங்கள். நான்கு முதல் ஏழு மாதத்துக்குள் இந்தக் கழிவு சேகரிப்பு... எருவாக மாறிவிடும்.
இப்போது நமக்கு ஏழு தொட்டிகளில் உரம் ரெடி (ஒரு தொட்டிக்கான கழிவுகளை ஒரே நாளில் உங்களால் போட முடிந்தால்... நான்கு முதல் ஆறு வாரங்களில் உரம் தயாராகிவிடும்)!
அப்புறம் என்ன... கொஞ்சம் மண்ணைத் தூவி வீட்டிலிருக்கும் அழுகியத் தக்காளியைப் பிழிந்தால்... தக்காளிச் செடி முளைக்கும், வெந்தயத்தைப் போட்டால் வெந்தயக்கீரை முளைக்கும். சந்தையில் விற்பனையாகும் விதவிதமான காய்கறி விதைகளைத் தூவியும் பயிர் செய்யலாம். கூடவே இன்னொரு ஏழு தொட்டிகள் வாங்கி மீண்டும் உரம் தயாரிக்க ஆரம்பித்துவிடுங்கள்.
தண்ணீரை சேமிக்கும் தேங்காய் நார்!
வீட்டுக் கழிவை உரமாக்கிவிட்டோம். அடுத்தது, தண்ணீர். பெருகி வரும் தண்ணீர் பஞ்சத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை, இதில் செடிக்கு ஏது நீர் என்கிறீர்களா..? வழி செய்வோம். தேங்காய் நார் ஒரு மிகச் சிறந்த தண்ணீர் தேக்கி. நாம் ஊற்றும் தண்ணீரை இரண்டு, மூன்று நாட்கள் வரையிலும்கூட தேக்கி வைத்துக்கொள்ளும்.
அதனால் தொட்டியில் மண்ணுடன் தேங்காய் நாரையும் சேர்த்தால் செடிக்கு விடும் தண்ணீர் மிகக்குறைந்த அளவே தேவைப்படும். தொட்டிக்கு அடியில் துளை போட்டு வைப்பது, அதிகப்படியான நீரை வெளியேற்றி செடி அழுகாமல் காக்கும்.

நீங்களே தயாரிக்கலாம் பூச்சிவிரட்டி!
'அட என்னங்க நீங்க? உரம், தண்ணீர் இதைவிட பெரிய பிரச்னை... பூச்சிதாங்க. அதனால, குழந்தைங்க இருக்குற வீட்டுல தோட்டம் வைக்கவே பயமா இருக்கு?' என்று தயங்குபவரா நீங்கள்? கவலையே வேண்டாம். பூச்சிகளையும் ஓடஓட விரட்டி விடலாம். அதற்காக நிறைய பணம் கொடுத்து அபாயம் நிறைந்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை வாங்கவே கூடாது. இயற்கை முறை பூச்சிவிரட்டிகளை நாமே தயாரிக்கலாம்.
100 கிராம் இஞ்சி, 100 கிராம் பூண்டு, 10 கிராம் பெருங்காயம்... இவை மூன்றையும் அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் 15 நாட்கள் ஊற வையுங்கள். பசுவின் கோமியம் கிடைத்தால்... 1 லிட்டர் கோமியத்துடன் 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற வையுங்கள். இதுதான் பூச்சிவிரட்டி. இதை, 9 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்கிற விகிதத்தில் கலந்து தெளியுங்கள். அளவுக்கு அதிகமாக தெளிப்பதும் ஆபத்து. அது, செடியையே கருக வைத்துவிடும். தோட்டத்துக்கு நடுவில் சாமந்திப்பூ செடியை வைத்தாலும் பூச்சிகள் நெருங்காது.
பராமரிப்பு ரொம்ப முக்கியம்!
பூந்தொட்டிகளுக்கு அடியில் பிளாஸ்டிக் ட்ரே வைப்பதன் மூலம் உபரி நீர் சிந்தி தரை அழுக்காவதை தவிர்க்கலாம். மழைக் காலங்களில் வானம் பார்த்தவாறு பூந்தொட்டிகளை வைக்க வேண்டாம். கொல்லைப்புற தோட்டங்களில் சேரும் சருகுகள், தேவையற்ற தழைகளைத் திரட்டி, அவற்றையும் உரம் தயாரிக்கப் பயன்படுத்துங்கள். வீட்டின் பின்புறம் குழி எடுக்க வசதியுள்ளவர்கள் குழிக்குள் இவற்றை போட்டுக் கொண்டே வந்து உரமாக்கலாம். அப்படி வசதியில்லாதவர்கள் பெரிய டிரம்களில் கொட்டி ஒவ்வொரு தரமும் அதன் மீது மண்ணைப் போட்டு மூடிக்கொண்டே வருவதுடன் அடிக்கடி அதை குச்சியால் கிளறி மக்க வைத்தும் உரம் தயாரிக்கலாம்'' என்ற இஸ்மாயில்,
''வீட்டுத் தோட்டம் என்றாலே பூச்சிகள் உள்ளிட்டவை வரும் என்கிற பயம் தேவையில்லை. தோட்டத்தில் குப்பைகளை சேரவிடாமல் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்'' என்று வழிகாட்டினார்!
என்ன... இனி, உங்கள் வீட்டில் மல்லிகை மணக்கும்... ரோஜாப்பூ கண் சிமிட்டும்... வெண்டைக்காய், பரங்கிக்காய் பளீரிடும்... சரிதானே!
(Thanks to Vikatan)
 
JanviDate: Saturday, 30 Aug 2014, 4:54 PM | Message # 23
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வீட்டில் இருக்கும் காய்கனி கழிவுகளை வைத்து உரம் தயாரிக்கும் செய்முறை. YouTube வீடியோ உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் 

https://www.youtube.com/watch?v=-7IM5sWl9GY
 
JanviDate: Monday, 01 Sep 2014, 8:04 PM | Message # 24
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
டெல்லி: விவசாயிகள் பயன் பெறும் வகையில் ‘கிஸான்' என்ற பெயரில் தனி சேனல் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்படுகிறது. 2014-15 பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
தாக்கல் செய்தார்.

அதில் விவசாயிகளுக்கென பல சிறப்பு திட்டங்களை அவர் அறிவித்தார். அதில்
ஒன்று தான் கிஸான் தொலைக்காட்சி.

Read more at: http://tamil.oneindia.in/news....48.html
 
JanviDate: Monday, 01 Sep 2014, 8:06 PM | Message # 25
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline


சென்னை: நாட்டின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு வேளாண்துறையில் முதலிடத்துக்கான விருதை இந்தியா டுடே குழுமம் வழங்கியுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியா டுடே
குழுமத்தின் மேலாண்மை ஆசிரியர் ராஜிவ் சந்தித்து, இந்தியா டுடே குழுமத்தின்
சார்பில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில், பத்தாண்டுகளில் மிக
முன்னேறிய மாநிலம் என்ற வரிசையில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் கிடைத்து
இருப்பதாகவும், பெரிய மாநிலங்களில் வேளாண்மைத் துறையில் தமிழ்நாட்டிற்கு
முதல் இடம் கிடைத்து இருப்பதாகவும் தெரிவித்து அதற்கான விருதுகளை நேரில்
வழங்கினார்.

மேலும், இந்தியா டுடே குழுமத்தின் சிறந்த நகரத்திற்கான விருது வழங்கும்
விழா டெல்லியில் வரும் 22-ந் தேடி நடைபெறவுள்ளதாகவும், கல்வி மற்றும்
ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த நகரமாக சென்னையும், கல்வி மற்றும்
சுற்றுச்சூழலில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக மதுரையும், முதலீட்டை
ஈர்ப்பதில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக கோயம்புத்தூரும்
தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, இந்தப் பரிசுகளை நேரில்
பெற்றுச் செல்ல அமைச்சர்களை அனுப்பி வைக்குமாறு இந்தியா டுடே குழுமத்தின்
மேலாண்மை ஆசிரியர் முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டார்.

இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியரின் வேண்டுகோளினை ஏற்று, நிதி
அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்
துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி
வைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Read more at: http://tamil.oneindia.in/news....26.html
 
JanviDate: Monday, 01 Sep 2014, 8:11 PM | Message # 26
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
2010-il vantha news-ai thanthirukken. Ithil sollapatta nerukadigal ethuvum maarala, aatchi maatrathai thavira. 25 uzhavar santhaigal thiraka pattiruka? Illai vivasayigalin uzhaippu idai tharagargal vayitruku pogutha?

சென்னை: தமிழகத்தில் மேலும் 25 உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என்று
வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

விவரம்:இயற்கை பேரழிவு, பூச்சி நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிக்காமல்
தடுக்க கோவை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி,
திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் 92 ஆயிரத்து 500
ஏக்கர் தென்னை சாகுபடி பரப்பில் ரூ.265.52 லட்சம் செலவில் தென்னை
காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் மேலும் 25 உழவர் சந்தைகள் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
சந்தையின் அமைவிடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

திருச்சி, மோகனூர், ஸ்ரீவைகுண்டம், சின்னமனூர் ஆகிய இடங்களில் வாழையை
பழுக்க வைக்கும் மையங்கள் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.

செம்மை நெல் சாகுபடியினை 21.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்வதற்கான
செயல்விளக்கம் 50 ஆயிரம் இடங்களில் ரூ.15 கோடி செலவில்
செயல்படுத்தப்படும்.

பயறு வகைகளில் 2 சத டி.ஏ.பி. கரைசல் தெளிக்கும் திட்டம் 28 மாவட்டங்களில் 5
லட்சம் ஏக்கரில் செயல்படுத்தப்படும்.

பயறு உற்பத்தியை பெருக்குவதற்கான வரைவு திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊடுபயிராக இல்லாமல் துவரையை தனிப்பயிராக பயிரிட ஊக்குவிக்கப்படும்.

2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,650 கிராமங்களில் தரமான விதை
கிடைக்க விதை கிராம திட்டம் தொடங்கப்படும்.

வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களுக்கு இந்த ஆண்டு 100 ஜீப்புகள்
வழங்கப்படும்.

மா, சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.22,500, மானியம் ரூ.30
ஆயிரம் ஆகவும், முந்திரி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.15
ஆயிரம் மானியம் ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சுய உதவி குழுக்களுக்கு மானியத்தில்
வழங்கப்படும்..." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம்
ஹெக்டேர் ஆகும். இதில் சுமார் 51 லட்சம் ஹெக்டேர்தான் சாகுபடிக்கு உள்ளது.
நிகர பாசன பரப்பு 68.63 லட்சம் ஹெக்டேர்.

மேட்டூர் அணை நிரம்பி உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பருவ மழை
பொய்க்காமல் இருந்தால் மட்டுமே 28.63 லட்சம் ஹெக்டேர் பாசனம் சாகுபடி
செய்யப்படும். 22.37 லட்சம் ஹெக்டேர் மானாவரி சாகுபடி நிலப்பரப்பு ஆகும்.

தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 930 மி.மீ. ஆக உள்ளது. இந்த அளவு மழை
பெய்யாவிட்டால் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய மாநிலமாக தமிழ்நாடு
இருக்கிறது..." என்றார்.

Read more at: http://tamil.oneindia.in/news....licham.


Message edited by Janvi - Monday, 01 Sep 2014, 8:13 PM
 
srkDate: Tuesday, 02 Sep 2014, 8:52 PM | Message # 27
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
பயனுள்ள தகவல்கள், நன்றி ஜான்வி.

Life is God's Gift
 
JanviDate: Tuesday, 02 Sep 2014, 8:59 PM | Message # 28
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
nandri srk. Ungalathu comments inum pala news share seiya encourage pannuthu.
 
JanviDate: Wednesday, 03 Sep 2014, 4:22 PM | Message # 29
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வீட்டுத் தோட்டத்தில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்க....
ரோஜா மலரை விரும்பாத பெண்கள் எவருமே இல்லை எனலாம். நமது மனம் கவர்ந்த இந்த ரோஜா
மலர் வளர்ப்பதில் பலருக்கு ஆர்வமுள்ளது. ஆனால் அது பற்றிய வழிமுறைகள்
பலருக்குத் தெரிவதில்லை. இதோ உங்களுக்குச் சில டிப்ஸ்:

ரோஜா இன்று பல வண்ணங்களில் வளர்கின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள்,
வெள்ளை நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை நாம்
பார்த்திருக்கின்றோம். நம் வீட்டிலும் இப்படிப் பூத்துக் குலுங்காதா என்று
நம்மில் பலர் ஏங்குவதுமுண்டு.

பொதுவாக ரோஜாக்கள் வீட்டு முற்றத்தில் அழகுத் தாவரமாகவே
வளர்க்கப்படுவதுண்டு. வீட்டு முற்றம் இல்லாதவர்கள் சட்டித் தாவரமாக இதனை
வளர்ப்பர். எவ்வாறாயினும் ரோஜா செடியின் வேர்ப் பகுதி இறுக்கமாக இல்லாமல்
இலேசாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.

காற்றோட்டம் இருப்பது அவசியம். வீட்டில் காய்கறி, இலைக் கழிவுகள்
என்பவற்றையே உரமாகப் பாவிக்கலாம்.

இவை தவிர கடலைப் புண்ணாக்கு" என்று ஒரு வகை உள்ளது. மருந்துக் கடைகளில்
கேட்டுப் பார்க்கலாம். அதனைப் போட்டால் பூக்கள் பெரிதாகப் பூக்கும் என்று
கூறுவார்கள். அதே போன்று எறும்பு மற்றும் பூச்சித் தொல்லைகளைத் தவிர்க்க
வேப்பம் புண்ணாக்கு (இதுவும் மருந்து கடைகளில் கேட்டு வாங்கலாம்) பெரிதும்
உதவும் என்று கூறுவர்.

ரோஜா செடி செழிப்பாக வளர நீர்த் தேங்கி நிற்காமல் ஈரப்பதம் இருந்தாலே
போதுமானது. ஆண்டுக்கு ஒரு முறை செடியின் மூன்றில் ஒரு பகுதியை வெட்டி
விடலாம்.

ரோஜா பூங்கன்றுகள் மண்ணோடு சேர்த்துப் பைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
அவற்றை வாங்கி வந்து பூஞ்சாடிகளில் நட்டு விட்டால் மட்டும் போதாது,
கூடியவரை அவற்றைப் பராமரித்துக் காக்கவும் வேண்டும். நாம் கொஞ்சம் சிரத்தை
எடுத்துக் கொண்டால் போதும். நம் வீட்டுத் தோட்டத்திலும் சாடிகளிலும்
ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை நாமும் ஆசைதீர பார்க்கலாம். எங்கே கிளம்பி
விட்டீர்கள்? ரோஜாக் கன்றுகள் வாங்கவா...?

நன்றி - தினகரன் 
 
JanviDate: Wednesday, 03 Sep 2014, 5:19 PM | Message # 30
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மொட்டை மாடியில் போன்சாய் தோட்டம்!
மனிதன் இயற்கையை வணங்கிய காலத்தில் சீனர்கள் மரங்களை வழிபட ஆரம்பித்திருந்தனர்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன  நிலப்பகுதிகளில் ஆட்சி
செய்தவர்கள் இதற்காக மலைப் பகுதிகளுக்கு சென்று, சிறிய அளவிலான வளர்ந்த
மரங்களை சேகரித்திருக்கிறார்கள். அதை  மண் சட்டிகளில் நட்டு தங்கள்
வழிபாட்டு இடங்களில் வளர்த்திருக்கிறார்கள். கூடவே தங்கள் அரண்மனைகளில்
சிறிய மலைக்குன்றுகளை  உருவாக்கி, இயற்கையாகவே மரங்கள் வளரும்படி
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு கலையாகவே செய்து
வந்தார்கள் என்பதுதான்  முக்கியம்.


அப்படிப்பட்ட கலை வடிவம்தான் ‘போன்சாய்’ வளர்ப்பு. ‘புன்சாய்’ என்று சீன மொழியில் இருந்து
வந்தது தான் ‘போன்சாய்’ என்ற ஜப்பானிய சொல்.  ‘போன்’ என்றால் டிரே அல்லது
அகன்ற பாத்திரம் என்று பொருள். ‘சாய்’ என்றால் மரம். அதாவது, அகன்ற டிரே
வடிவிலான பாத்திரத்தில் உள்ள மரம்  என்பதே ‘போன்சாய்’. சீனாவில் போன்சாய்
மரம் வளர்ப்பது ஒரு பாரம்பரிய கலையாகவே இருந்து வருகிறது. புத்த மதத்தின்
ஆதிக்கம் சீனாவில்  தொடங்கியபோது அவர்கள் போன்சாய்க்கு அதிக முக்கியத்துவம்
அளித்தனர்.

800 வருடங்களுக்கு முன்பு ஜப்பானுக்கு சென்ற இந்தக் கலை, கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஐரோப்பா 
உள்ளிட்ட நாடுகளில் பரவிய பின்னர் இந்தியாவுக்கு வலது காலை எடுத்து வைத்து
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நுழைந்தது. இன்று குமரி மாவட்டம்
நாகர்கோவிலில் போன்சாய் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்றவராக விளங்குகிறார்
ரவீந்திரன். இவரது வீட்டு  மாடியில் ஆல், அரச மரம் முதல்ஆப்பிரிக்க
காடுகளில் அகன்ற தடியுடன் வளரும் ‘போபாப்’, இந்தோனேஷியாவின் ‘கான்டில்
ட்ரீ’ உள்ளிட்ட 40  ஆண்டுகள் பழமைவாய்ந்த மரங்கள் வரை ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று போன்சாய் வளர்ப்பு தொடர்பான பயிற்சியையும் இவர்
அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ‘‘சாதாரண செடிகளை வளர்க்க
இருந்த ஆர்வம்தான், போன்சாய் வளர்க்கவும் காரணம். 1970களில் கேரளாவிலுள்ள
வேளாண்மை கல்லூரி யில்  படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பேராசிரியராக
இருந்த கே.பி.மாதவன் நாயர், போன்சாய் மரங்கள் வளர்ப்பு தொடர்பாக எனக்கு
அறிவுரைகள்  வழங்கினார். அன்று இது தொடர்பான புத்தகங்களோ, பயிற்சியாளர்களோ
இல்லை. எனவே, சுய அறிவுடன் எளிதில் கிடைத்த மரங்களை கொண்டு  போன்சாய்
வளர்ப்பைத் தொடங்கினேன்.

10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் இது தொடர்பான புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானில் உள்ள ஒமியாவில் நடந்த
பயிற்சிக்கு  ஒருமுறை சென்று வந்தேன். எனது ஆர்வமும் பார்வையும் விரிய
ஆரம்பித்தது. போன்சாய் என்பது ஒரு கலை. கர்நாடக இசையை கற்பது போல்தான் 
போன்சாய் வளர்ப்பையும் கற்க வேண்டும் என புரிந்து கொண்டேன்.  போன்சாய்
வளர்ப்பில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று இயற்கையில்  வளரக்கூடிய மரங்களின்
கிளைகளை வெட்டி, ஷேப் செய்து அதனை அகன்ற தொட்டிகளில் வளர்ப்பது.

மற்றொன்று விதையில் இருந்து உருவாகும்போதே ஜப்பானிய முறையான வயரிங் டெக்னாலஜி
முறையில் போன்சாயாக மாற்றுவது. இந்த இரு  முறைகளுக்குமே போதிய பயிற்சி
தேவை. போன்சாய் மரங்கள் ‘பார்மல் அப்ரைட்’, ‘இன்பார்மல் அப்ரைட்’,
‘ஸ்லேண்டிங் ஸ்டைல்’, ‘கேஸ்கட்’, ‘செமி  கேஸ்கட்’ என ஐந்துவிதமான
வடிவங்களில் வளருகின்றன. ‘பார்மல் அப்ரைட்’ என்பது பக்கவாட்டில் கிளைகளை
பரப்பி சவுக்கு மரங்களை போன்று  நேராக வளருகின்ற மரங்கள். நேராக வளர
வேண்டிய மரங்கள் வெளிச்சம் கிடைக்கின்ற பகுதியை நோக்கி சற்று சரிந்து
வளருவது ‘இன்பார்மல்  அப்ரைட்’. ‘ஸ்லேண்டிங் ஸ்டைல்’ என்பது நடுத்தண்டு
வளைந்து நிற்கின்ற மரம். ‘கேஸ்கட்’ என்பது அருவி போன்று மேலிருந்து கீழாக
வளருகின்ற  மரங்கள்.

‘செமி கேஸ்கட்’ என்பது மேலிருந்து கீழாக வந்து பின்னர் மேல் நோக்கி அதாவது, ஆங்கில எழுத்தான ‘யு’ வடிவில் வளருகின்ற
மரங்கள்.ஆல், அரசு,  புளி, உடைமரம், சவுக்கு போன்ற மரங்களை எளிதில்
போன்சாயாக மாற்ற முடியும். ஆலமரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட வகைகள்
உள்ளன.  அவை அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. ஒவ்வொரு போன்சாய் மரத்தையும்
உருவாக்குவது கடினம். ஆனால், அவற்றை பராமரிப்பது எளிது.  தேவையற்ற கிளைகளை
ஆண்டுக்கு ஒருமுறை வெட்ட வேண்டும்.

தேவையற்ற வேர்களையும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நீக்கி, புதிதாக மண் நிரப்ப வேண்டும். இப்படி
வளர்ச்சியை குறைக்கும் அதேசமயத்தில்  பூப்பது, காய்ப்பது உள்ளிட்ட
மரங்களின் இயல்பு தன்மையில் இருந்து மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 30
முதல் 40 வருடங்கள் வரை ஒரு  மரத்தை வளர்த்தால், அதன் மதிப்பு அளவிட
முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும். கடந்த 10 வருடங்களாக வணிக ரீதியாக
போன்சாய் மரங்களை  வளர்ப்பது அதிகரித்துள்ளது. இருப்பினும் இவற்றுக்கு தனி
சந்தைகள் ஏதும் இல்லை. போன்சாய் கிளப்புகள் மூலம் நடைபெறுகின்ற
கண்காட்சிகளில்  விற்பனையும் நடைபெறும்.

ரூ.500ல் இருந்து ரூ.10 லட்சம் வரை போன்சாய் மரங்களுக்கு மதிப்புண்டு. அதனால்தான் இப்போது
பூங்காக்களில் போன்சாய்க்கு என்று தனிப்  பிரிவை ஏற்படுத்தி வருகின்றனர்.
மும்பையில் நேரு பார்க், மைசூரில் உள்ள பூங்கா, தில்லியில் போதி கார்டன்
ஆகிய இடங்களில் போன்சாய்  மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஊட்டி பொட்டானிக்கல்
கார்டன், திருவனந்தபுரம் ராஜ்பவன் ஆகிய இடங்களுக்கு நான் போன்சாய்
மரங்களை  வழங்கியுள்ளேன். ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கும்
எனது தயாரிப்புகள் சென்றுள்ளன.

கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு பயிற்சிக்காக வருவார்கள். சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட
இடங்களுக்கு நேரில்  சென்று பயிற்சி அளிக்கிறேன். தில்லியில் நடந்த பயிற்சி
முகாமிற்கு வந்த போன்சாய் பயிற்சியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டர்
ஜாய்,  நாகர்கோவில் வந்து சில நாட்கள் தங்கினார். அப்போது எனது படைப்புகளை
கண்டு அவர் வியந்ததை என்னால் மறக்க முடியாது. என்னிடம்  ஆயிரத்துக்கும்
மேற்பட்ட தயாரிப்புகள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில்
இருக்கும். இவற்றை கொண்டு போன்சாய் மியூசியம் ஒன்று தொடங்க திட்டமிட்டுள்
ளேன்...’’ என பரவசத்துடன் பேசுகிறார், ரவீந்திரன்.

போன்சாய் கிளப்புகள்

‘வேர்ல்டு போன்சாய் ஃபிரெண்ட்ஸ் பெடரேஷன்’, ‘போன்சாய் கிளப் இன்டர்நேஷனல்’ ஆகிய
அமைப்புகள் உலக அளவில் போன்சாய் ஆர்வலர்களை  கண்டறிந்து அவர்களுக்கு
தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த
அமைப்புகள் கூடும். இந்தியாவில்  சுமார் 3 ஆயிரம் பேர், போன்சாய்
வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இந்திய அளவில் தில்லி,
திருவனந்தபுரம் ஆகிய இடங்களில்  போன்சாய் கிளப்புகள் உள்ளன.

வளர்ப்பு முறை

போன்சாய் மரங்களை வளர்க்க 15 செ.மீ. உயரமுள்ள அகன்ற தொட்டி தேவை. உடைந்த செங்கல்
துண்டுகளின் மீது மண், மக்கிய சாணம், இலை  மக்கு ஆகியவற்றை சம அளவில்
கலந்து இத்தொட்டியை நிரப்ப வேண்டும். பின்னர் பாறை வெடிப்புகளில் வளருகின்ற
அல்லது தோட்டங்களில்  வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்ற மரங்களை
வேருடன் பெயர்த்து இத்தொட்டியில் நட வேண்டும். பிறகு செம்பு, அலுமினிய
கம்பிகளை  கிளைகள் மீது சுற்றுவது அவசியம். இதன் மூலம் அதன் வளர்ச்சியை
தடுக்க முடியும். 6 முதல் 8 மாதங்கள் வரை இக்கம்பிகளை நீக்கக் கூடாது. 
வளரும் நுனிகளை கிள்ளுதல், தேவையற்ற கிளைகளை வெட்டுதல், வருடத்துக்கு
ஒருமுறை புதிய தொட்டிக்கு மாற்றுதல் ஆகியவற்றை விடாமல்  செய்ய வேண்டும்.
கோடைகாலங்களில் வீடுகளின் பால்கனி பகுதியிலும், குளிர் காலங்களில் தெற்கு,
கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் இத்தொட்டிகளை  வைக்க மறக்கக் கூடாது.
அப்போதுதான் 4 முதல் 6 மணி நேரம் வரை சூரிய ஒளி போன்சாய் மரங்கள் மீது
விழும். அதேபோல் மூன்று நான்கு  வருடங்களுக்கு ஒருமுறை வேர்களை தேவையான
அளவு வெட்டி தொட்டியில் புதிய மண்ணை நிரப்ப வேண்டும்.
--- நன்றி தினகரன்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் (வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்)
Search: