வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் - Page 8 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் (வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்)
வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்
RAWALIKADate: Sunday, 01 Mar 2015, 8:00 AM | Message # 71
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
வீட்டுக்குள் விவசாயம் - 2

Thanks - Pasumai Vikatan

பழைய பொருட்களில் விதவிதமான செடிகள்..!

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்ய தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. இதழ்தோறும் வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம் பிடிக்கின்றன.

வீட்டு மொட்டைமாடியில் காய்கறி பயிர் செய்து வரும் ஈரோடு சரஸ்வதி, பழைய பொருட்களை வைத்து தொட்டிக் காய்கறிகளை வளர்க்கும் விதம் குறித்து இங்கே பேசுகிறார்.



'மாடித்தோட்டம் அமைப்பதற்கு அடிப்படைத் தேவை மண் மற்றும் தொட்டிகள். இவற்றை எங்கே சேகரிப்பது என்ற கேள்வியில் தொடங்கும் சோம்பல்தான், உங்கள் வீட்டில் விவசாயம் நடக்காமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம். யோசனை செய்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. எதுவுமே வீடு தேடி வந்து வாசல் கதவைத் தட்டாது. தற்போது கட்டட வேலை நடக்காத இடங்களே இல்லை. நமக்கு அருகே கட்டட வேலை நடக்கும் இடத்துக்குச் சென்று, அஸ்திவாரம் தோண்டி குவித்து வைத்திருக்கும் மண்ணில், மேல்மண்ணாகப் பார்த்து எடுத்து வரலாம். எந்த நகரத்தில் இருந்தும் அதிகபட்சமாக ஒரு மணி நேர பயணத்தில் விவசாய நிலங்களைக் காணலாம். அந்த நிலத்தின் உரிமையாளரைச் சந்தித்துக் கேட்டால் தேவையான மண் கிடைக்கும். அதேபோல மாட்டுச் சாணத்தையும் தேடிப் பெறலாம். இவை நகரங்களிலும் கூட கிடைக்கும்.



குறைந்த செலவில் தொட்டிகள்!

மண், சாணத்துக்கு அடுத்தது செடி வளரத் தேவையான தொட்டி. இதற்காக அதிக செலவு செய்து புதுத் தொட்டிகளை வாங்கத் தேவையில்லை. வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பழைய டப்பாக்கள், வாட்டர் கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம். லாரிப் பட்டறை, கார் ஒர்க் ஷாப் போன்ற மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் பழைய ஆயில், பெயின்ட் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள் கிடைக்கும். காயலான் கடைகளில் கிடைக்கும் பழைய சின்டெக்ஸ், தகரங்கள், பெரிய பி.வி.சி பைப்கள் மற்றும் பழங்களை அடுக்கப் பயன்படுத்தும் மரப்பெட்டிகள் ஆகியவற்றை வாங்கி வந்தும் செடி வளர்ப்புத்தொட்டிகளாகப் பயன்படுத்தலாம். இவற்றுக்கு அதிக செலவு பிடிக்காது. கிரீஸ் டப்பாக்களில் எண்ணெய் வாசம் போகும்படி நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.



புதிதாக வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள், அனைத்து காய்கறிகளையும் ஒரே நேரத்தில் நடவு செய்யாமல், 25 நாட்களில் அறுவடையாகும் கீரையிலிருந்து தொடங்கலாம். அதில் அனுபவத்தை வளர்த்துக் கொண்ட பிறகு மற்ற காய்கறிகளை விதைக்கலாம். மாடித்தோட்டத்துக்கும் பட்டம் உண்டு. எல்லா ஊரிலும் எல்லா காய்கறிகளும் வளரும் என்றாலும்... சில ஊரில் சில பயிர்களின் வளர்ச்சி மந்தமாக இருக்கும். அதை ஈடுசெய்ய நிழல்வலைப் பந்தல், மூடாக்கு போன்ற சில தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.



முதலில் கீரை சாகுபடியைப் பற்றி பார்ப்போம். வீட்டுத் தோட்ட விவசாயத்தில் மண் மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தொட்டிக்கு ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு எரு என்கிற விகிதத்தில்தான் கலந்து போட வேண்டும். செம்மண் அல்லது வண்டல் மண்ணைத் தரையில் கொட்டி, கல், கட்டிகளை அகற்றி பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், தென்னை நார்க்கழிவை (காயர் பித்) வாங்கி, மண்ணில் கலந்துகொள்ளலாம். ஒரு தொட்டிக்குத் தேவையான மண், மணல் மற்றும் உரத்துடன் 50 கிராம் அசோஸ்பைரில்லம், 25 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றையும் கொட்டிக் கலந்து தொட்டியில் முக்கால் பங்கு நிரப்ப வேண்டும். பிளாஸ்டிக் வாளிகளாக இருந்தால், அவற்றின் அடிப் பகுதியில், சுற்றிலும் கோணி ஊசி புகும் அளவுக்கு 12 இடங்களில் சிறு துவாரங்கள் இட வேண்டும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வடிய இந்தத் துவாரங்கள் அவசியம். தொட்டிகளில் மண் நிரப்பி தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்தால், மூன்றாவது நாள், மண் ஈரத்தன்மை குறைந்து காணப்படும். அதில் விதையையோ அல்லது நாற்றையோ நடவு செய்யலாம்.



கிச்சனில் இருக்கு, கீரை விதை!

அடுத்து 'விதைக்கு எங்கே போவது?’ என்ற கேள்வி எழும். ஆரம்ப கட்டத்தில் சமையலறையில் உள்ள வெந்தயத்தையே விதைக்கலாம். ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உடைய இந்தக் கீரையை விதைக்க... கையளவு வெந்தயத்தை எடுத்து சுத்தப்படுத்தி, மண் நிரப்பி தயாராக உள்ள பக்கெட்டில் தூவி விதை மறையும்படி மண்ணைக் கிளறி விட்டு பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும். அடுத்த நான்கு நாட்களில் கீரை துளிர்க்கும். இப்படித் துளிர்த்து வரும்போது வெந்தயக்கீரைக்கு வெயில் அதிகம் இருக்கக் கூடாது. தென்னை ஓலை அல்லது நிழல்வலை மூலமாக வெயிலைக் குறைக்கலாம். களைகள் தென்பட்டால் கையால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். 10-ம் நாளில், 100 கிராம் மண்புழு உரத்தை மேலுரமாகத் தூவிவிடவேண்டும் (இது நர்சரிகளில் கிடைக்கும்). தினமும் நீர் தேங்காத அளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், கீரை 'தளதள’ என வளர்ந்து, 25-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.



தொடர்ந்து, பாலக் கீரை, கொத்தமல்லித்தழை, அரைக்கீரை, சிறு கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகளையும் தொடர் அறுவடை கொடுக்கக்கூடிய செங்கீரை, புதினா போன்றவற்றையும் வளர்க்கலாம். கீரை விவசாயத்தை வெற்றிகரமாக முடித்து அனுபவம் பெற்ற பிறகு, காய்கறி விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்தலாம்.

நிழல்வலையில் கவனம்!

 மண் நிரப்பிய வாளியை மாடியில் வைக்கும் போது, நேரடியாகத் தரையில் வைக்கக்கூடாது. மூன்று செங்கற்களை அடுப்பு போல கூட்டி அதன் மீது வைக்கலாம். நிறைய தொட்டிகளை வரிசையாக வைக்கும்போது நீளமான மரப்பலகையின் மீது தொட்டிகளை வைக்கலாம். கீரைகள் வளர்க்க மிதமான சீதோஷ்ணம் தேவை. நன்றாக வெயில் கொளுத்தும் மாதங்களில் பகல் நேரங்களில் கீரைத் தொட்டிகள் மேலே நிழல் வலை அமைக்க வேண்டும். மாலை நேரங்களில் பந்தலை விலக்கிக் கொள்ளலாம்.



கோடை காலங்களில் நிழல்வலை பயன்படுத்தினால், அதிக மகசூல் எடுக்கலாம். 10 லிட்டர் ஆயில் பக்கெட்டில், 5 கிலோ கீரை மகசூல் கிடைக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வழியாதபடி தார்பாலின் பந்தல் அமைத்துக் கொள்ளலாம்.

 முட்டைஓடு... பூச்சியே ஓடு!

மாடித்தோட்டத்தில் பெரும்பாலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியும் தென்பட்டால், முட்டை ஓட்டுத்தூளுடன், சிறிது உப்பைக் கலந்து பக்கெட்டை சுற்றிலும் வளையம் போட்டால் பூச்சிகள் அண்டாது.

-செழிக்கும்

-நந்தினி செந்தில்நாதன்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி
 
vaisriDate: Sunday, 01 Mar 2015, 11:03 AM | Message # 72
Colonel
Group: *Checked*
Messages: 203
Status: Offline
Super Rawalika and Thank you
 
JanviDate: Monday, 09 Mar 2015, 5:41 PM | Message # 73
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
Super Rawali-ka
 
JanviDate: Thursday, 19 Mar 2015, 3:14 PM | Message # 74
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
ஆரோக்கிய அறுவடைக்கு வழி காட்டும் வீட்டுத் தோட்டம்

மக்களின் ஆரோக்கிய உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் வீட்டுத் தோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.வீட்டு முற்றத்தில், புழக் கடையில், மாடியில் தோட்டம் அமைக்க வழிகாட்டி வருகிறார் ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி ஒய்.ராஜகுமார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராஜகுமாரை ஒரு காலைப் பொழுதில் சந்தித்தோம்.“தூத்துக்குடி மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநராக பணியாற்றி ஒரு ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். ஓய்வுக்கு பின்பு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இயற்கை வழி வேளாண்மையில் வீட்டுத் தோட்டம் அமைத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். வீட்டு தோட்டம் அமைக்கும் போது முன்புறத்தை அழகு பூச்செடிகளுக்கு ஒதுக்க வேண்டும். அதிக இடமிருந்தால் சிறிய பாத்திகளாக பிரித்து காய்கறி சாகுபடி செய்யலாம். பாதை ஓரங்களில் கீரைவகை காய்கறிகளை வளர்க்கலாம். காய்கறி தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து அதில் படரும் கொடிவகை காய்கறி பயிர்களான பாகல், கோவைக்காய், பிரண்டை, தூதுவளை, பீர்க்கு, புடல் போன்றவைகளை பயிர் செய்யலாம். இது உயிர் வேலியாகவும் உபயோகப்படும். வீட்டுத் தோட்டம் அமைக்கும் முன்பு மண்ணை நன்கு பக்குவப் படுத்த வேண்டும்.அடியுரமாக தொழுவுரம், மக்கிய இலை, தழைகளை போட வேண்டும்.
தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி அவசியம். அதனால் நிழல் தரும் மரங்கள் அருகில் இருக்கக் கூடாது. தோட்டத்தில் நாம் பாய்ச்சும் தண்ணீரோ, மழை நீரோ தேங்கும் நிலையில் இருக்கக் கூடாது. எளிதில் வடிந்து ஓடும் வகையில் அமைக்க வேண்டும். பாத்திகளை மேடாக அமைக்க வேண்டும்.
காய்கறி தோட்டங்களை பொறுத்தவரை 15 நாள்களுக்கு ஒருமுறை உரம் இட வேண்டும். மண்புழு உரம், கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை ஒன்றாக கலந்து செடி ஒன்றுக்கு ஒருபிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு மண்ணை கொத்தி விட வேண்டும்.
இடையிடையே பஞ்சகவ்யா வளர்ச்சியூக்கியையும் தெளிக்க வேண்டும். திட்டமிட்டு காய் கறிகளை நடவு செய்தால் வீட்டுக்கு தேவையான காய்கறி களை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வீட்டு முன்பு இடம் இல்லாதவர்கள் மாடியிலும் மாடித் தோட்டம் அமைக்கலாம். பொதுவாக இப்போது சந்தைக்கு வரும் காய்கறிகள் பெரும்பாலும் ரசாயனத் தன்மை நிறைந்ததாக உள்ளது. உணவே மருந்து என்று இருந்த நிலை மாறி, இப்போது ரசாயன உரங்களின் பெருக்கத்தினால் சாப்பிட்ட உணவுக்கு மருந்து தேடி அலையும் சூழல் ஏற்பட்டுவிட்டது.
உலகத்துக்காக இல்லா விட்டாலும், அவரவர் உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட” என்று அழுத்தமான வார்த்தைகளில் முடிக்கிறார் ராஜகுமார்.​

--- Thanks to Hindu
 
JanviDate: Thursday, 19 Mar 2015, 3:18 PM | Message # 75
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்!

''காய்கறிகள் விலை விண்ணை முட்டுகிறது. அதை வாங்கினாலும், ரசாயன உரங்களில் விளைந்த அவற்றால் என்னென்ன கேடுகள் வருமோ என்று அஞ்சியே உண்ண வேண்டியுள்ளது. 'ஆர்கானிக்' என்று கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் வாங்கினால், எந்தளவுக்கு நம்பகமானது என்ற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் தீர்வு... வீட்டில், மாடியில் நாமே தோட்டம் போட்டு காய்கள் வளர்ப்பதுதான். இதற்கு உங்களுக்கு உதவும், எங்களின் இந்த நேச்சர் கேர் ஃபார்மிங் கிட்!'' என்று சிரிக்கிறார்கள், கோவை, பி.எஸ்.ஜி கல்லூரியின் எம்.பி.ஏ மாணவர்களான வினோதினி, ஜாஃபர் சாதிக் மற்றும் தினேஷ் சந்திரசேகர். இவர்களின் தயாரிப்பே, இந்த கிட்!
''நம் முன்னோர்களுக்கு 70 வயதில் வந்த நோய்கள் எல்லாம், நமக்கு 30 வயதிலேயே எட்டிப் பார்க்கின்றன. காரணம், நம் உணவில் கலந்திருக்கும் ரசாயனங்கள். இதற்கு மாற்று வழி, இயற்கை வழி விவசாயம். 'ஆனால், அதை எல்லோரும் செய்ய முடியுமா?' என்கிற தேவையற்ற அச்சம்தான், பலரையும் இயற்கை விவசாயத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிறது. அந்த அச்சத்தைப் போக்கி, இயற்கை விவசாயம் எளிதானது என்பதை புரிய வைப்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காக நாங்கள் தயாரித்திருக்கும் பொருட்கள் அடங்கியதுதான், இந்த கிட்!'' என்று வினோதினி நிறுத்த,
''தேங்காய் நாரால் ஆன மெத்தை போன்ற அமைப்பு 7 கிலோ, தவிட்டு படுக்கை 7 கிலோ, மண்புழு உரம் 7 கிலோ, இயற்கை விதைகள் (கீரை வகைகள், தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், வெண்டை, முள்ளங்கி, அவரை, பூசணி, வெள்ளரிக்காய், முருங்கை, பீர்க்கங்காய்) 5 கிராம்கள், விதை படுக்கை, வளர்ப்பு பைகள், வேப்பம் புண்ணாக்கு, மருந்து தெளிப்பான், வேப்பம் எண்ணெய், அமுதகரைசல் ஆகியவற்றோடு கையேடு மற்றும் சில பண்ணைக் கருவிகள் அடங்கியதுதான் இந்த நேச்சர் கேர் ஃபார்மிங் கிட். இதை வாங்குபவர்களுக்கு, தோட்டம் வளர்ப்பதற்கான வழிமுறைகளை இலவசமாகவே கற்றுத்தருகிறோம்!'' என்றார் ஜாஃபர்.
 
மாணவர்கள், விவசாயம் பக்கம் வந்ததன் பின்னணி சொன்னார் தினேஷ். ''மூவருமே எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படிக்கிறோம். இறுதியாண்டு புராஜெக்ட் பற்றி முதல் ஆண்டிலேயே யோசித்தோம். அதற்காக விவசாயத்தைக் கையில் எடுத்தோம். எங்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் உண்டாகக் காரணம், நம்மாழ்வார் அய்யா. அவர் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு பிரசாரங்கள்தான் விவசாயத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. உடனே அது தொடர்பாக நிறைய ஆய்வுகள் செய்தோம். அப்போது எங்களுக்கு தோன்றியதுதான் இந்த வீட்டு மற்றும் மாடித்தோட்ட வழிமுறைகள்.
வீட்டுத்தோட்டத்துக்கு முதலில் மண்ணை நன்கு கிளறி, காற்று செல்லும் வகையில் தயார் படுத்தவேண்டும். மாடித்தோட்டத்துக்கு வளர்ப்பு பைகளில் தேங்காய் நார் படுக்கை இடவேண்டும். இது தண்ணீரை நன்கு உறிஞ்சி மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கும். அடுத்து அரிசி தவிடு. இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்றவை தேவைக்கதிகமாகவே இருப்பதால், இது சிறந்த இயற்கை உரம்.  மேலும் சூரிய ஒளி நேராக மண்ணில் படாமலும் தடுக்கும். அடுத்து மண்புழு உரம். இது மண்ணை வளப்படுத்துவதோடு மண்புழு மண்ணைக் கிளறிக்கொண்டே இருப்பதால் காற்றோட்டமாகவும் இருக்கும்.
இப்படி மண்ணை தயார் செய்துவிட்டு, விதைகளை இடவேண்டும். வளர்ந்த பிறகு வேப்பெண்ணெய், வேப்பம்புண்ணாக்கு ஆகியவை பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்படும். அடுத்தது வளர்ச்சி ஊக்கியாக அமுதக் கரைசல் இடவேண்டும். இது, மாட்டுச் சாணம், கோமியம் மற்றும் வெல்லம் கலந்தது. ஒரு லிட்டர் அளவுக்கு இந்தக் கரைசலை தருவதுடன், அதை தயாரிக்கும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறுவதால், அடுத்த முறை சுயமாக தயாரித்துக்கொள்ளலாம்'' என்றார் தினேஷ்.
மீண்டும் ஆரம்பித்த வினோதினி, ''நாங்கள் இந்த முறையில் பயிரிட்டு அறுவடை செய்த முதல் விளைச்சல் பயிரான பசலைக்கீரையை உண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் லட்சியம்'' என்றார்.
''தற்போது, இந்த 'கிட்' எங்கள் வீடுகளில் வைத்தே தயாரித்து, கேட்பவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கிறோம். எங்களின் கிட், இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விலை 2,000 ரூபாய். ஒரு மாதத்துக்கு காய்கறிகளுக்கு செலவிடும் தொகையை செலவிட்டாலே இதை வாங்க முடியும். இதன் மூலம் விலைமதிப்பில்லா ஆரோக்கியத்தை சேமிக்கலாம். உங்கள் கைகளால் சமைத்த உணவை சாப்பிட்ட அனுபவம் ஏற்கெனவே அனைவருக்கும் இருக்கும். உங்கள் கைகளால் விளைவித்த உணவை உண்ணும் அனுபவத்துக்கு துணை புரிகிறோம் நாங்கள்! எங்களின் இந்த முயற்சிக்கு உதவிய கல்லூரி ஆசிரியர்களுக்கும், குறிப்பாக ஆசிரியர் நாச்சிமுத்துவுக்கும் நன்றி '' என்றனர் கோரஸாக.

--- Thanks to Vikatan
 
rampragashrDate: Thursday, 21 May 2015, 9:57 PM | Message # 76
Private
Group: Users
Messages: 2
Status: Offline
வீட்டு தோட்டம் அமைக்க யாரை அனுக வேண்டும்.
 
rampragashrDate: Thursday, 21 May 2015, 10:05 PM | Message # 77
Private
Group: Users
Messages: 2
Status: Offline
காண்டக்ட் நம்ம்பர் இருந்தால் கொடுங்கள்..

Rampragash
My contact number: 9940670277
 
RAWALIKADate: Saturday, 23 May 2015, 8:50 PM | Message # 78
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote rampragashr ()
வீட்டு தோட்டம் அமைக்க யாரை அனுக வேண்டும்


ஹாய் ராம் பிரகாஷ்

நீங்க எந்த ஊரில் இருக்கீங்களோ அங்கேயே யாராவது இருப்பாங்க.

சென்னை மற்றும் கோவை (கார்ப்பரேஷன்) என்றால் http://magalirkadal.ucoz.com/forum/42-78-9829-16-1421324420 பார்க்கவும்.

இங்கு சில பதிவுகளில் தொடர்பு எண் தரப்பட்டுள்ளது... அவர்களை நீங்கள் தொடர்பு கொள்ளவும்.
 
JanviDate: Friday, 05 Jun 2015, 7:59 PM | Message # 79
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா? உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டி லும் காய்கறித் தோட்டம் தயார். முதலில் கொஞ்சம் வெயில் அதி கம் படும் இடமாகத் தேர்வு செய்யுங் கள்.
எந்த வகை மண் நல்லது? களி மண் இல்லாத பட்சத்தில் சரி. மண் கட்டிகள்
இல்லாமல் சமன் செய்து கொள்ளவும். சிறந்த வடிகால் வசதி தேவை.

உங்கள் தோட்டத்தை நீங்களே வடிவமைக்கலாம். ஒரு சிறிய இடத்தில்
நாற்றங்கால் எனக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாற்றங்
காலில்தான் வெண்டை, மிளகாய், கத்திரி, தக்காளி எல்லாம் தன் முதல் 15 நாட்களைக் கழிக்கப்போகின்றன. இதுதான் உங்கள் "காய்கறிப்
பயிரின் குழந்தைப் பருவம்". நாற்றங்காலில் விதைகள் முளைத்து இலைகள்
பரப்பி ஒரு 10 செ. மீ. வளர்ந்த பின் சிறிய இடைவெளி விட்டுப் பிடுங்கி
நட்டுவிட லாம். ஒவ்வொரு காய்கறிக்கும் நடும் இடைவெளி வேறுபடும். வீட்டுத் தோட்டம் என்பதால் இடைவெளியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்
பொதுவாகக் கீரையை எடுத்துக் கொள்வோம். நாற்றங்கால் பெரிதாகத் தேவையில்லை. 25 முதல் 30 நாளில் வீட்டுத் தோட்டத்தில் கீரைதயார். கீரை விதைகளை விதைக்கும்போது கவனம் தேவை.எறும்புகள்
தொல்லை தரும். அடியுரமாக நன்கு மக்கிய கம்போஸ்ட் உரங்களை (இயற்கை உரம்)
இடுங்கள். தேவைப்பட்டால் கடலைப் பிண்ணாக்கு + வேப்பம் பிண்ணாக்கு கலந்து
இடலாம். உங்களுக்கு எந்தக் கீரை வகை பிடிக்கிறதோ அதை நீங்கள் வீட்டுத்
தோட்டத்தில் நடலாம் வெண்டை, கத்திரி, மிளகாய், தக்காளி இவை பொதுவாக ஒரு
வயதுடைய காய்கறிப் பயிர்கள். இடைவெளி விட்டு நட்டுப் பயன்பெறலாம். இவை 45
முதல் 120 நாள் வøμ காய்கள் தரும். பூச்சித் தொல்லை இருப்பின் வேப்ப
எண்ணெய் தெளிக்கலாம். இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் தவிர்ப்பது நலம்.
காய்கறி விதைகளைக் கடைகளில் விசாரித்து வாங்குங்கள். காய்கறிச்
செடிகளை வளர்ப்பதற்காகத் தற்போது கன்டைனர்கள் உள்ளன. அவற்றையும்
பயன்படுத்தலாம். புடலங்காய், பாகற்காய் இவையேயல்லாம் படரும் தாவரம். எனவே
படர்வதற்குப் பந்தல் தேவை. கம்பு மற்றும் ஸ்டீல் கொண்டு நீங்கள் பந்தல்
அமைக்கலாம். உங்கள் வீட்டின் வசதியைப் பொறுத்துப் படரும் தாவர காய்கறி
வகைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். பழைய சாக்கு, பயனற்ற டிரம் இவற்றில் மண்
நிரப்பி நீங்கள் வாழை, பப்பாளி வளர்க்கலாம். ஏன் மாமரம் கொய்யா கூட
வளர்க்கலாம். உங்கள் வீட்டு மண் பொல பொல தன்மையுடையதா, சேனைக்கிழங்கு
வளர்ப்பது நல்லது.
உங்களுக்குத் தேவையான உரத்தை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். எப்படி எனக் கேட்கிறீர்களா? வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய குழி (30
செ. மீ. ஆழத்தில்)எடுத்து அன்றாடம் வீட்டில் கிடைக்கும் மக்கும்
குப்பைகளை அதில் கொட்டுங்கள். 90 120 நாள்களில் நன்கு மக்கிய இயற்கை உரம்
தயார். சரி, வீட்டின் பின்புறத்தில் இடம் இல்லை என வருத்தப்படுகிறீர்களா?
கவலையை விடுங்கள். மொட்டை மாடியில் காய்கறி வளர்க்க வழி இருக்கிறது.
மொட்டை மாடியில் 30 45 செ. மீ. மண் கொட்டி காய்கறி வளர்க்கலாம். ஆனால்
உங்கள் வீட்டின் மேற்தளம் வாட்டர் புரூப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் ஷீட் 200 மைக்கரான் கனத்தில் மேற்கூரையில் பரப்பி பின் அதன்
மேல் மண் கொட்ட வேண்டும். இதெல்லாம் ரிஸ்க் என நினைத்தால் இருக்கவே
இருக்கிறது கன்டனைர்ஸ் மற்றும் பழைய சாக்கு, டிரம் போன்ற கருவிகள்.
மேற்கூரையில் மண் பரப்பி விட்டு நீங்கள் காய் கறித் தோட்டம் அமைக்கலாம்.
12'' உள் விட்டம் உள்ள தொட்டிகளைத் தேர்ந்தெடுத்துக் காய்கறி சாகுபடி
செய்வது சுலபம். தொட்டிகளைத் தேர்ந் தெடுக்கும்போது அதில் நிரப்பப்படும்
மண் கலவையை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
மூன்றில் ஒரு பகுதி செம்மண், ஒரு பகுதி சாதாரண மணல், மீதி ஒரு பகுதி
நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கடைகளில் கிடைக்கும் கம்போஸ்ட்.நீங்கள்
தேர்ந்தெடுக்கும் மண்தொட்டிகளின் அடியில் நீர் வெளியேற சரியான துளை உள்ளதா
என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொட்டிகளைக் கிழக்கு மேற்கு திசையில்
அடுக்கி வைத்தால் போதுமான சூரிய ஒளி கிடைக்கும். காய்கறித் தோட்டம்,
உடலுக்கு நல்லதென்றால் பூந்தோட்டம் மனதுக்கு சுகம் தரும்.
ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, குரோட்டன்ஸ் இவையெல்லாம் உங்கள் மாடித்
தோட்டத்திற்கு அழகு சேர்க்கும். பச்சைப் பசேல் எனப் புல்வெளி கூட
தோட்டக்கலை நிபுணர்களைக் கலந்தாலோசித்து நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். மாலை
வேளையில் குடும்பத்தோடு களிக்க இந்தத் தோட்டம் மிக நல்லது. துளசி,
இஞ்சி, புதினா போன்ற மருத்துவ குணம்கொண்ட மூலிகை செடிகளையும் தொட்டிகளில்
வளர்க்கலாம். தோட்டங்கள் மனிதனின் மனதிற்கு புத்துணர்வு தருகிறது. மன
அழுத்தத்தைக் குறைக்கிறது என ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளரும் காய்கறிகள் இயற்கையானதும் நச்சுத்
தன்மையற்றது என்பது மட்டுமல்லாமல், உங்கள் காய்கறித் தோட்டம் உங்களுக்கு
ஓர் உடற்பயிற்சிக் கூடம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தினமும்
காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள பைபர்
நார்ச்சத்து நம் ஜீரண சக்திக்கு மிகவும் அவசியம். சராசரியாக தினமும் 300
கிராம் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

Thanks to tamilthamarai.com
 
JanviDate: Friday, 05 Jun 2015, 8:03 PM | Message # 80
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மண் இல்லாத வீட்டு தோட்டம்

இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் அரை சென்ட் இடம் வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்த சூழலில் வீடு கட்டி,
காலியிடத்தில் அழகான தோட்டத்தை பராமரிப்பது என்பது வெறும் கனவு தான்.
ஆனால் 500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் வீட்டில் கூட அழகான தோட்டத்தை
அமைக்க முடியும் என வழிகாட்டுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா துரைசாமி.


இந்தியாவிலும் மண் இல்லாமல் தென்னை நார் கழிவு மற்றும் இடு பொருட்களை
பயன்படுத்திவீட்டிலேயே  காய்கறிகளை  உற்பத்தி செய்து பயன்படுத்துவதை நார்வே
சென்றிருந்தபோது பார்த்தேன். வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம்
ஆலோசனை பெற்று, “ மண் இல்லாத வீட்டுத்தோட்டம் “ என்ற முறையை செயல்படுத்த
தீவிரமானேன். எனது தந்தை ராமசாமி, தாய், சகோதரர் ஒத்துழைப்பு அளித்தனர்.

தென்னை நார் கழிவு, நுண்ணுட்டச்சத்து, இயற்கை உரம் உள்ளிட்ட இடு பொருட்களை
இணைத்து தேவையான பயிர்களின் உரங்களை போட்டு, இதற்கென பிரத்யேக பையில்
போட்டு காய்கறி உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் முறையை துவக்கினேன்.
கத்தரிக்காய், தக்காளி, வென்டைக்காய், மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து
காய்கறிகள், வெந்தயக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை
உள்ளிட்ட அனைத்து கீரை வகைகள், பிரண்டை, கற்பூரவள்ளி, பார்வதி இழை உள்ளிட்ட
அனைத்து மூலிகைச்செடிகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூ வகைகள் என
தங்களுக்கு தேவையான அனைத்தும் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி பைகள் வேண்டும்.

இந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும். வீட்டில் சூரிய வெளிச்சம் படும் பகுதி,
வீட்டு மொட்டை மாடி, வீடுகளுக்கு அருகிலோ என தங்களுக்கு தகுந்த இடத்தில்
காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டுப்
பெண்கள் காய்கறிகள் வாங்க அலைய வேண்டியதில்லை. அலைச்சல், பணவிரயம் போன்றவை
மிச்சமாகும். எங்கள் நிறுவனத்தின் சார்பில் இந்த எந்ததெந்த காய்கறி,
எந்தெந்த வாசனை பயிர், மூலிகை பயிர், கீரை வேண்டும் என கேட்கிறார்களோ அந்த
பயிரின் விதை போட்ட பை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை வழங்குவோம்.

தங்களது இடத்தில், தாங்கள் பயன்படுத்தும் காய்கறிகளை, தாங்களே சுகாதார முறையில்
விளைவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சித்ரா துரைசாமிகூறினார்.
இயற்கை விவசாயம் முறையில் பசுமை குடில் அமைத்து காய்கறி விளைவிக்கும் விதை
உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு தற்போது கோவை அருகே பாப்பம்பட்டியில் ஒரு
தனி நிறுவனத்தையே நடத்தி வருகிறார்.

ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தினர் வீட்டில் தங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும்
உற்பத்தி செய்ய மொத்தம் 15 பைகள் (ஒரு பயிருக்கு ஒரு பை) வாங்கினால்
போதும். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம். தங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ
அப்போதெல்லாம் உற்பத்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்



--- Thanks Dinakaran


Message edited by Janvi - Friday, 05 Jun 2015, 8:05 PM
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் » வீட்டு தோட்டம் / மாடி தோட்டம் (வீட்டு தோட்டம் / மாடி தோட்டம்)
Search: