பயனுள்ள தகவல்கள் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
பயனுள்ள தகவல்கள்
srkDate: Thursday, 23 Jan 2014, 9:48 AM | Message # 1
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்

Added (23 Jan 2014, 9:47 AM)
---------------------------------------------
பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

http://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்பதை கிளிக் செய்யலாம் அல்லது  Registration செய்ய https://portal2.passportindia.gov.in/AppOnli....cale=en என்ற லிங்க்ல் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

Added (23 Jan 2014, 9:48 AM)
---------------------------------------------
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால்

 “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், . அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· வாக்காளர் அடையாள அட்டை

· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்

· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.

பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.

போட்டோ பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே எடுப்பார்கள்.

நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்…


Life is God's Gift
 
shanDate: Monday, 27 Jan 2014, 9:45 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் கோதை ,
பற்பசை பற்றிய தகவலுக்கு நன்றி .இனி பார்த்து வாங்கணும் .
 
kvsureshDate: Tuesday, 28 Jan 2014, 2:45 PM | Message # 12
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
ammam shanthi,

idha parthathum mudhale poi tooth pasta chk pannen nallavela enga veetule ellame blue color le than irukku.

Added (28 Jan 2014, 2:44 PM)
---------------------------------------------

இரத்த தானம் செய்யலாமா?

ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது.

 இரத்ததானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம்.

அவ்வாறுகொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில்
 நாம் உண்ணும் சாதாரணஉணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும

3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவிதபாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள்போதும்.

Added (28 Jan 2014, 2:45 PM)
---------------------------------------------
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்:

வயது 17 முதல் 55 வரை. உடல் எடை 45 கிலோவுக்கு குறையாமல், 
எய்ட்ஸ், காமாலை,மலேரியா போன்ற வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்:
உங்கள் இரத்தப் பிரிவு, உங்கள் இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினைநோய் மற்றும் எய்ட்ஸ் 
கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு உங்க ளுக்குத்தெரிவிக்கப்படுகிறது.

Added (28 Jan 2014, 2:45 PM)
---------------------------------------------

அடிக்கடி இரத்த தானம் செய்பவர்களுக்கு, இரத்தக் கொதிப்பு (Blood pressure) நோய்வரும் வாய்ப்பு மிக குறைகிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில்தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது.
இரத்த அணு உற்பத்தி என்பது உடலில்எபபோதும் நடந்து கொண்டிருக்கும் பணி.
எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குபாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.


Regards and Thanks

Kothai Suresh
 
kvsureshDate: Wednesday, 29 Jan 2014, 12:22 PM | Message # 13
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Monday is world cancer day...
would you be interested in forwarding this request?


93% won't forward
A small request and it's just one line.


Dear God, I pray for a cure for cancer.

All you are asked to do is keep this circulating, even if it's
only to one more person. In memory of anyone you know
who has been struck by cancer or is still living with it.

A Candle Loses Nothing by Lighting Another Candle..

Please Keep This Candle Going...


Regards and Thanks

Kothai Suresh
 
shanDate: Wednesday, 29 Jan 2014, 1:51 PM | Message # 14
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் கோதை ,
சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாமா ?
 
kvsureshDate: Wednesday, 29 Jan 2014, 4:06 PM | Message # 15
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi shanthi,
adhu theriyalaye pa, theriyama solla koodathu illaya,


Regards and Thanks

Kothai Suresh
 
srkDate: Friday, 31 Jan 2014, 9:45 PM | Message # 16
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
பெப்சி, கோககோலா - அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது?

பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.

இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை.

எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.

மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.


Life is God's Gift
 
srkDate: Friday, 31 Jan 2014, 9:46 PM | Message # 17
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
தொடர்ச்சி...

பெப்சி, கோககோலா - அப்படி என்ன நச்சு பொருள் கலந்துள்ளது?


சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார்.

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன.

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.

மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.

சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.

இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.


Life is God's Gift
 
srkDate: Friday, 31 Jan 2014, 9:49 PM | Message # 18
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Quote shan ()
ஹாய் கோதை , சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாமா ?

சாந்தி,

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது. ஒருவருக்கு இரத்தம் ஏற்றும் முன் அதை நன்கு பரிசோதித்து எந்த கம்ப்ளைன்ட்டும் இல்லாமல் இருந்தால் தான் ஏற்றுவார்கள்.


Life is God's Gift
 
NathasaaDate: Sunday, 02 Feb 2014, 10:08 AM | Message # 19
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi srk , viji sis and kothai aunthy  smile
thnQ so much for the informative infos
 
ramsDate: Sunday, 02 Feb 2014, 11:26 AM | Message # 20
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
வருகின்ற 4ம்தேதி கேன்சர் தினம், உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மருந்து மாத்திரைகளை விட அன்பும், அரவணைப்பும் அதிகம் தேவைப்படுவது இந்த புற்றுநோய்க்குதான். 

இந்த நோய் தானாக வருவதை விட புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்களால் வலிய வரவழைத்துக் கொள்பவர்களே அதிகம்.அதிலும் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கம் பழக்கத்தால் குரல்வளை புற்று நோய் வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக, அந்த நோயின் பிடியில் சிக்கி திரும்பிய ஒருவர் தனது வாழ்வின் லட்சியமே இளைஞர்களை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்பதுதான் என்ற எண்ணத்தோடு எழுபது வயதிலும் இளைஞர்கள் இருக்குமிடமான கல்லூரி போன்ற இடங்களை தேடித்தேடிப்போய் பரப்புரை செய்துவருகிறார்.

அவரது பெயர் ஏ.சர்புதீன். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர். மாநில அரசு ஊழியராக இருந்த போது அவர் சார்ந்திருந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த பொறுப்புக்கு முக்கிய தேவையான பேச்சுக்கலையிலும் வல்லவர்.

இவருக்குள்ள ஒரே கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பதுதான். இவருக்கு பொழுது போகாத போதெல்லாம் சிகரெட் பிடிப்பார், நண்பர்கள் யாருக்கு பொழுது போகவில்லை என்றாலும் இவரிடம் வந்து சிகரெட் பிடித்து செல்வார்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பது என்பது இவரது அன்றாட அலுவலில் சேர்ந்துவிட்டது. இப்படி பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது சிகரெட் பழக்கம் விபரீதமாக வெளிப்பட்டது.

ஒரு நாள் காலை படுக்கைவிட்டு எழுந்தவர் பேசமுடியாது திணறினார். பக்கத்தில் இருந்த மருத்துவ மனைக்கு சென்ற போது அவர்கள் காது மூக்கு தொண்டை நிபுணரை கலந்து ஆலோசிக்க சொன்னார்கள். அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டபோது அது ஒரு வாரம் வேலை செய்தது, அதன் பிறகு நிலமை இன்னும் மோசமாகியது. பிரிதொரு மருத்துவ மனையின் ஆலோசனையின் பேரில் தொண்டை சதையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோதுதான், சர்புதீனுக்கு குரல்வளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

மனிதர் ஆடிப்போய்விட்டார். குணப்படுத்த முடியுமா? என்று எங்கெங்கோ போய் முட்டி மோதி பார்த்தார். இனிமேல் சிகரெட்டை தொடவே மாட்டேன் என்று சூளுரைத்தார். இதெல்லாம் தாமதமான முடிவு. நீண்ட நாள் சிகரெட் குடித்ததன் பலனாக கிடைத்த இந்த குரல்வளை புற்றுநோய்க்கு பலியாகிவிடாமல் உங்களை காப்பாற்றுகிறோம் ஆனால் இனிமேல் பேசுவது என்பதும் சுவாசிப்பது என்பதும் முடிந்து போன விஷயம் என்றார்கள். அதன்படியே நடந்தது. மூக்கு என்பது முகத்தின் ஒரு அங்கமாகத்தான் இன்று வரை இருக்கிறது, அதன் குணாதிசயமான நுகரும் தன்மை இழந்துவிட்டது. சுவாசம் தொண்டையில் போடப்பட்ட குழியின் வழியாகவே நடக்கிறது. இதெல்லாம் நடந்தது இவரது ஐம்பதாவது வயதில். விரக்தியான வாழ்க்கையில் இருந்த போதுதான் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் டாக்டர் விதுபாலாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் இவரிடம் நிறைய பேசி நம்பிக்கையை வளர்த்தார். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட குரல்வளை புற்று நோய் நமது இளைஞர்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக நீங்கள் ஏன் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களிலும் இளைஞர் கூடுமிடங்களிலும் பேசக்கூடாது என்று சொன்ன போது நான் எப்படி பேச முடியும் என்றார்.

முயற்சித்தால் எல்லாம் முடியும் என்று சொன்னதுடன் இது தொடர்பாக சிறப்பு பயிற்சி கொடுத்தனர். பின்னர் "எலக்ட்டோ ஸ்பீச் 'என்ற சிறிய கைக்கடக்கமான கருவியை கொடுத்தனர். பேட்டரியால் இயங்கும் இந்த கருவியை தொண்டையில் வைத்துக்கொண்டு இவர் பேசும்போது ரோபா என சொல்லப்படும் எந்திர மனிதன் பேசுவது போல பேச்சு வந்தது.

சர்புதீனுக்கு பெரிதும் சந்தோஷம் தனது தேவைகளை காலம் காலமாக பக்கம் பக்கமாக எழுதி காண்பித்த நிலைமைக்கு விடுதலை கிடைத்தது. இவர் பேசுவது முதலில் புரியாதது போல இருக்கும், சிறிது நேரம் கவனம் செலுத்தினால் பிறகு எளிதான புரிந்து விடும். முதன் முதலாக இவருடன் மொபைல் போனில் பேசும் போது ஒரு மெஷின் பேசுவது போலத்தான் உணருவார்கள் ஆனால் பிறகு போகப்போக இவரது பேச்சு பிடிபட்டுவிடும்.

யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதைக் கேட்டு அந்த நிமிடமே சிகரெட்டை தூக்கி எறிந்திருக்கின்றனர். இப்படி ஒருவரல்ல இருவரல்ல பல ஆயிரம் பேரை சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார் மீட்டு வருகிறார். இவரது இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் பாராட்டி விருதுகள் கொடுத்த போதும், எம்புள்ளைய சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டுக்கொடுத்த ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லும் ஏழை பெற்றோர்களின் வாழ்த்தையே பெரிதாக எண்ணுகிறார்.

இவரது போன் எண்: 9445170464. மீண்டும் சொல்கிறேன் இவரிடம் முதல் முறையாக பேசும்போது ஒரு எந்திரத்திடம் பேசுவது போலத்தான் இருக்கும். கொஞ்சம் புரிபடாது கவனத்தை சிதறவிடாமல் பேசினால் புரியும். உங்கள் பகுதி பள்ளி, கல்லூரியில் ஏதேனும் விழா நடக்கும் போது இவரை ஒரு பதினைந்து நிமிடம் பேசுவதற்காக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிகரெட் பிடிக்கும் இளைஞர்கள் மீட்டு எடுக்கப்படுவார்கள்.

வயதை மீறி தனது நோயைத்தாண்டி ஆரோக்கிய சமுதாயம் அமைய தனது வாழ்க்கை தொண்டுள்ளத்துடன் அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்பபுதீனின் சேவைக்காகவாவது இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை தந்தருளட்டும்.


endrum anbudan

vijiram
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
Search: