பயனுள்ள தகவல்கள் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
பயனுள்ள தகவல்கள்
srkDate: Thursday, 23 Jan 2014, 9:48 AM | Message # 1
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்

Added (23 Jan 2014, 9:47 AM)
---------------------------------------------
பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

http://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்பதை கிளிக் செய்யலாம் அல்லது  Registration செய்ய https://portal2.passportindia.gov.in/AppOnli....cale=en என்ற லிங்க்ல் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

Added (23 Jan 2014, 9:48 AM)
---------------------------------------------
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால்

 “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், . அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· வாக்காளர் அடையாள அட்டை

· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்

· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.

பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.

போட்டோ பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே எடுப்பார்கள்.

நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்…


Life is God's Gift
 
RAWALIKADate: Thursday, 23 Jan 2014, 10:00 AM | Message # 2
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Thanks srk
 
shanDate: Thursday, 23 Jan 2014, 1:47 PM | Message # 3
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ths the useful info srk ......
 
RAWALIKADate: Thursday, 23 Jan 2014, 4:42 PM | Message # 4
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சி.எஃப்.எல். பல்பு ஜாக்கிரதை

Thanks - Vikatan'

குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.
சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.
சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

- மு.ஜெயராஜ்படம்: தி.குமரகுருபரன்


Message edited by RAWALIKA - Thursday, 23 Jan 2014, 4:45 PM
 
srkDate: Friday, 24 Jan 2014, 7:01 AM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Payanulla thagavalukku nanri, Rawalika

Life is God's Gift
 
shanDate: Friday, 24 Jan 2014, 8:25 AM | Message # 6
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
தகவலுக்கு நன்றி ரவளி
 
srkDate: Friday, 24 Jan 2014, 8:37 AM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline

Added (24 Jan 2014, 8:37 AM)
---------------------------------------------


Life is God's Gift
 
shanDate: Friday, 24 Jan 2014, 10:48 PM | Message # 8
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அருமையான  தகவல் srk
 
PattuDate: Saturday, 25 Jan 2014, 8:07 PM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Hi srk and rawalika
thanks  for the useful infos


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
kvsureshDate: Monday, 27 Jan 2014, 3:53 PM | Message # 10
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi srk n viji,
Thanks for the useful infos.

Added (27 Jan 2014, 3:48 PM)
---------------------------------------------

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...
நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ
பட்டையா கலர்
கோடு ஒன்னு இருக்கும் . பச்சை ,
ப்ளூ , சிவப்பு, கருப்பு போன்ற
கலர்களில் இருக்கும் ..
அந்த கலர்களின் அர்த்தம் ,
பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .
இனி டூத் பேஸ்ட் வாங்கும்
போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் .
ப்ளூவும் பச்சையும் தான்
சரியானா தேர்வாக இருக்க முடியும்..

Added (27 Jan 2014, 3:53 PM)
---------------------------------------------

பிரஷ் செய்த பின்னர் அதை கேப் போட்டு மூடி வைப்பது தவறு.
ஈரம்இருக்கும் இடங்களில் தான் பேக்டரியாக்கள் பெருகக்கூடும், 
அதே நேரம்டூத் பிரஷ்களை பேக்டிரியாக்கள் அதிகம் வசிக்கும் குளியலறையில்வைப்பதும் தவற ு.

அடுத்த முறை பிரஷ் செய்யும்போது நன்றாக பிரஷ்ஷைதண்ணீரில் கழுவி விட்டு பயன்படுத்த வேண்டும்.



Regards and Thanks

Kothai Suresh
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
Search: