பயனுள்ள தகவல்கள் - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
பயனுள்ள தகவல்கள்
srkDate: Thursday, 23 Jan 2014, 9:48 AM | Message # 1
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்

Added (23 Jan 2014, 9:47 AM)
---------------------------------------------
பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

http://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்பதை கிளிக் செய்யலாம் அல்லது  Registration செய்ய https://portal2.passportindia.gov.in/AppOnli....cale=en என்ற லிங்க்ல் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

Added (23 Jan 2014, 9:48 AM)
---------------------------------------------
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால்

 “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், . அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· வாக்காளர் அடையாள அட்டை

· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்

· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.

பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.

போட்டோ பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே எடுப்பார்கள்.

நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்…


Life is God's Gift
 
shanDate: Sunday, 02 Feb 2014, 2:32 PM | Message # 21
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai srk&ram,
ths for the infos....
 
P_SakthiDate: Monday, 03 Feb 2014, 7:09 PM | Message # 22
Major general
Group: *Checked*
Messages: 374
Status: Offline
Thanks for your useful information friends.
 
srkDate: Tuesday, 04 Feb 2014, 11:01 AM | Message # 23
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
மின் இணைப்பு பெறுவது எப்படி?

மின் இணைப்பு பெறுவது அத்தியாவசியம். அதேபோல அதை சேமிப்பதும் மிக அவசியம். புதிய வீடு கட்டும்போது தண்ணீர் மோட்டார் இயக்குவதற்கும், இரவில் பூச்சு வேலை போன்றவற்றிற்கும் மின்விளக்கு தேவைப்படும். இதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். வீடுகளுக்கு மட்டுமின்றி கடைகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு, விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு பெறுவது எப்படி? எத்தனை நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும்? விவரங்கள் இங்கே. 

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகங்களிலும் இதற்கான விண்ணப்பத்தைப் பெறலாம். http://tnerc.tn.nic.in/ என்கிற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பெறலாம்.

விண்ணப்பத்தை எங்கே கொடுப்பது?

• பூர்த்தி செய்யப்பட்ட முழு வடிவிலான விண்ணப்பம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அந்தப் பகுதி பிரிவு அலுவலரிடம் (அல்லது பிரிவு அலுவலர் இல்லாதிருப்பாரானால் அதிகாரமளிக்கப்பட்ட நபரிடம் ) ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
• விண்ணப்பங்கள் / மனுக்கள் முழுமையடையாமல் இருந்தாலும்கூட மற்றும் அவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் கூட, பிரிவு அலுவலர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நபர் எழுத்து வடிவில் ஒப்புகை அளித்தல் வேண்டும்.
• விண்ணப்பங்கள்/மனுக்கள் முறைப்படி இருக்குமானால், அவை உடனடியாக பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு ஒப்புகை அளிக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பம் முழுமை அடையாதிருக்குமானால், குறைபாடுகளை எழுத்து மூலம் சுட்டிக்காட்டி விண்ணப்பத்தை, விண்ணப்பதாரரிடம் / மனுதாரரிடம் திருப்பியளித்தல் வேண்டும்.
• பதிவு செய்வதற்காகவும் மூப்புநிலையைக் கண்காணிப்பதற்காகவும் தனிப்பட்ட பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். பிரிவு அலுவலர் இல்லாதிருப்பாரானால், அதிகாரமளிக்கப்பட்ட நபர், மனுக்கள் / விண்ணப்பங்களைப் பெற்று, ஒப்புகை அளிப்பதற்காகவும், பதிவு செய்வதற்காகவும் அலுவலக நேரங்களில் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.
மின் இணைப்பு பெறுவதற்கான தகுதிகள்:
• வீட்டின் சொந்தக்காரராக இருக்க வேண்டும் அல்லது நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
• வீடு அல்லது நிலத்தின் உரிமையாளரிடமிருந்து அனுமதிக் கடிதம் வாங்கியிருக்க வேண்டும்.
மின் இணைப்பு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:
• வீடு, நிலம், தொழிற்சாலை போன்றவற்றின் பட்டா மற்றும் பத்திரத்தின் நகல்.
• வீடு மற்றும் தொழிற்சாலைகளின் கட்டிட அமைப்பின் நிழற்பட அச்சுமுறை நகல் (ப்ளூ பிரிண்ட்).
• ஒயரிங் முழுவதுவமாக செய்யப்பட்டுவிட்டது என்பதற்கான அரசு அனுமதி பெற்ற எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரின் கடிதம் (அரசு அனுமதி பெற்ற மின்பொறியாளர்தான் ஒயரிங் செய்ய வேண்டும். அவர்தான் இந்தக் கடிதத்தையும் கொடுக்க வேண்டும்).
கட்டணம்
• விண்ணப்பத்துடன் 50 ரூபாய் செயல்படுத்துவதற்கான தொகையாக டிமாண்ட் டிராஃப்ட் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
• தனி இணைப்பா, மும்முனை இணைப்பா என்பதைப் பொறுத்தும், போஸ்ட் அருகில் உள்ளதா? பில்லர் தேவைப்படுமா? டிரான்ஸ்ஃபார்மரில் லோடு போதுமானதாக இருக்கிறதா? கேபிள் இணைக்க வேண்டுமா என்பதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு தொகை மதிப்பீடு செய்து கூறப்படும். அந்தத் தொகையை மின் இணைப்பு பெறுவோர் செலுத்த வேண்டும்.

• சில சமயங்களில் டிரான்ஸ்ஃபார்ம், கேபிள், பில்லர், போஸ்ட் போன்றவற்றிற்கான செலவை மின் இணைப்பு பெறுவோரே கொடுக்க வேண்டியிருக்கலாம்.

எத்தனை நாளில் பெற முடியும்?

• அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் இருந்து 30 நாட்களுக்குள் மின் இணைப்பு கிடைத்துவிடும்.
• டிரான்ஸ்ஃபார்ம் போட வேண்டுமென்றால் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.

மின் இணைப்பின் பெயர் மாற்றம்:

ஒரு வீட்டை வேறொருவர் வாங்கும் பட்சத்தில் அதன் மின் இணைப்பையும் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு பட்டா, பத்திரம் மற்றும் உங்கள் பெயருக்கு ஒப்பந்தம் செய்த பதிவுகள் அனைத்தையும் கொடுத்து இணைப்பை உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். இதை 90 நாட்களுக்குள் செய்துகொள்ள வேண்டும்.


Life is God's Gift
 
srkDate: Tuesday, 04 Feb 2014, 11:02 AM | Message # 24
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
மற்ற செயல்பாடுகள்:

மின் நுகர்வோர், மின் வழங்குவதற்கான விண்ணப்பம் நீங்கலாக, பிரிவு அலுவலகத்தில் பின்வரும் சேவைகள் தொடர்பான விண்ணப்பங்கள்/ மனுக்களையும் கூட தாக்கல் செய்யலாம்.

மின் இணைப்பை இடமாற்றம் செய்தல், தற்காலிக மின் வழங்கல், மின் இணைப்பின் பெயர் மாற்றம், மின்கட்டண மாற்றம், பட்டியலிடலிலுள்ள முறையீடுகள், மின் அளவியை மாற்றிவைத்தல், மின் வழங்கல் தடை, மின் அழுத்தம் தொடர்பான முறையீடுகள், வைப்பீடுகளைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றிற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகத்தை அணுகலாம்.

மேலதிக தகவல் தொடர்புக்கு

மின்குறை தீர்ப்பாளர்,
எண்.19A, ருக்மினி லட்சுமிபதி சாலை,
எழும்பூர், சென்னை - 600 008
தொலைபேசி எண். 044-28411376
மின்னஞ்சல் – tnercnic.in


Life is God's Gift
 
srkDate: Tuesday, 04 Feb 2014, 11:09 AM | Message # 25
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
'பான்கார்டு' - புதிய நடைமுறைகள்....

புது 'பான்கார்டு' பெற இனி ரூ.105 கட்டணம்

புதுடில்லி:வருமான வரித்துறை வழங்கும், 'பான்கார்டு' பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்த வேண்டும்.பான்கார்டு பெறுவதற்கான நடைமுறைகளை, வருமான வரித்துறை சில கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒருவரே, பல பான் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் சான்றிதழின் நகல், முகவரி, பிறந்த தேதிக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.பின், விண்ணப்பத்தை பான்கார்டுக்கான விண்ணப்ப மையங்களில், அளிக்கும்போது, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு காட்ட வேண்டும்.

சரிபார்ப்புக்கு பின், அசல் சான்றிதழ்கள் விண்ணப்பத்தாரிடம் திரும்ப அளிக்கப்படும். இது, பிப்ரவரி, 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அத்துடன், புது பான்கார்டு வாங்குவதற்காக, வருமான வரித்துறை வசூலிக்கும் கட்டணம், வரிகள் உட்பட, 105 ரூபாய் ஆக உயர்கிறது. இப்போதுள்ள கட்டணம், 94 ரூபாய்; 11 ரூபாய் உயர்கிறது.

நன்றி :
தினமலர்.


Life is God's Gift
 
kvsureshDate: Tuesday, 04 Feb 2014, 12:33 PM | Message # 26
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi srk,
thanks for ur useful infos.


Regards and Thanks

Kothai Suresh
 
RiyaDate: Wednesday, 05 Feb 2014, 11:24 AM | Message # 27
Private
Group: Users
Messages: 7
Status: Offline
Disabling a Stolen Mobile Phone


To check your Mobile phone's serial number, key in the following digits on your phone:

* # 0 6 #

A 15 digit code will appear on the screen. This number is unique to your handset. Write it down and keep it somewhere safe. when your phone get stolen, you can phone your service provider and give them this code. They will then be able to block your handset so even if the thief changes the SIM card, your phone will be totally useless.

* You probably won't get your phone back, but at least you  know that whoever stole it can't use/sell it either.

* If everybody does this, there would be no point in people  stealing mobile phones.
 
RiyaDate: Wednesday, 05 Feb 2014, 5:26 PM | Message # 28
Private
Group: Users
Messages: 7
Status: Offline

 
THE BENEFITS FOR SENIOR CITIZENS IN INDIA
 
========================
I. Transportation:

Ministry of Road Transport and Highways:

i) Reservation of two seats for senior citizens in front row of the buses of the State Road Transport Undertakings.

ii) Some State Governments are giving fare concession to senior citizens in the State Road Transport Undertaking buses and are introducing Bus Models, which are convenient to the elderly.
 
Under Delhi Transport Corporation:

1. Special Hire Service: - Apart from the normal services, the Corporation also provides buses to the Citizen of Delhi on Special Hire for marriage parties, picnics, etc.

2. Free/Concessional Passes: - DTC also offers Free Passes to disabled persons, war-widows & their dependents, eminent sport personalities, Freedom Fighters etc. and Concessional Passes to various categories of commuters viz. Students, Senior Citizens, Residents of Resettlement Colonies, Journalists, etc.
For Senior citizens above the age of 60 years, Bus pass for all routes at Rs. 50 per month. Income has to be below Rs. 75000 per year.
 
Ministry of Railways:

1. Indian Railways provide 30% concession in all classes and trains including Rajdhani/Shatabadi trains for both males and females aged 60 years and above.

2. Indian Railways also have the facility of separate counters for Senior Citizens for purchase/booking/cancellation of tickets.

3. Wheel Chairs for use of older persons are available at all junctions, District Headquarters and other important stations for the convenience of needy persons including the older persons.

4.. Ramps for wheel chairs movement are available at the entry to important stations.

5. Specially designed coaches with provisions of space for wheel chairs, hand rail and specially designed toilet for handicapped persons have been introduced.
 
 
Ministry of Civil Aviation:

1. Indian Airlines is providing 50 per cent Senior Citizen Discount on Normal Economy Class fare for all domestic flights to Indian senior citizens who have completed the age of 65 years in the case of male senior citizens and 63 years in the case of female senior citizens subject to certain conditions.

2. Air India is offering discount of 55% to senior citizens of 60 plus on flights to USA, UK and Europe on economy class. Further, Air India has now decided to reduce the age of 60 plus for discount on their domestic routes as well with immediate effect. For Identity card, 2 passport sized photographs have to be submitted along with the form.

3. Jetlite offers a discount of 50% on economy class for citizens of 65 years or above. One passport sized photograph required on the form along with age proof.

4. Jet Airways offers discount to senior citizens of 65 years or above.

For availing discount in domestic flights, senior citizens have to fill up a discount form along with a passport sized photograph and Age proof certificate. Jet Airways also provides Senior Citizen I-Card which is available in all ticket counters and requires
passport sized photographs and age proof certificate. For the I-Card a very nominal amount is charged.

 
II. Telecommunications:

i) Faults/complaints of senior citizens are given priority by registering them under senior citizens category with VIP flag, which is a priority category.
ii) Senior citizens are allowed to register telephone connection under N-OYT Special Category, which is a priority category.

iii) MTNL in NCR offers a discount of 25% on Rs. 250 per month Plan. Age limit is 65 years or above.

 
III. Ministry of Consumer Affairs, Food and Public Distribution:

i) Under the Antyodaya Scheme, the Below Poverty Line (BPL) families which also include older persons are provided food grains at the rate of 35 kgs. per family per month. The food grains are issued @ Rs.3/- per kg. for rice and Rs.2/- per kg. for wheat. The persons aged 60 years above from the BPL category were given priority for identification.

(ii) Under the Annapoorna Scheme being implemented by the States/UT Administration, 10 kgs. of food grains per beneficiary per month are provided free of cost to those senior citizens who remain uncovered under the old age pension scheme.

iii) Instructions to State Governments for giving priority to the Ration Card holders who are over 60 years of age in Fair Price Shops for issue of rations.
 
RiyaDate: Wednesday, 05 Feb 2014, 5:26 PM | Message # 29
Private
Group: Users
Messages: 7
Status: Offline
IV. Ministry of Health & Family Welfare:
1. Separate queues for elderly persons in hospitals for registration and clinical examination.

2. Special Clinics, every Sunday between 10 am to 12 noon, for elderly
persons available at the following hospitals in New Delhi.

a) Lok Nayak Hospital
b) GTB Hospital
c) Deen Dayal Upadhyay Hospital
d) Aruna Asafjahan Ali Hospital
e) Sanjay Gandhi Memorial Hospital
f) Dr. Joshi Memorial Hospital
g) Babu Jagjeevan Ram Hospital
h) Ram Rao Tula Memorial Hospital
i) Lal Bahadur Shastri Hospital

The services include health check-ups, operations, treatment of physically
invalid, gynecology, ENT and ophthalmology along with pathological and
radio therapy facilities.

 
V. Income Tax (Ministry of Finance):
1. For senior citizens the exemption limit is Rs. 2,50,000 up to which
senior citizen pays no income-tax at all. The benefit of higher
exemption limit for a senior citizen is available only when a person has
completed 60 years of age.


2. The senior citizen should also take full advantage of section 80C of the Income Tax Act, 1961
whereby deduction up to Rs. 1.00 lakh is available for investment by way
of insurance premium, repayment of the housing loan or investment in
Senior Citizens Savings Scheme as also the Bank Fixed Deposit.


3. Similarly as also the Bank Fixed Deposit. Similarly, the citizen can
also take advantage of the Mediclaim Policy. In case senior citizen or
any member of his family suffers from serious medical problem of suffers
from some disability he can claim certain other deductions under the
tax law.

 
VI. MINISTRY OF SOCIAL & EMPLOYEMENT
1. Ministry of Social Justice & Empowerment is the nodal Ministry
responsible for welfare of the Senior Citizens. It has announced the
National Policy on Older Persons which seeks to assure older persons
that their concerns are national concerns and they will
 not live unprotected, ignored and marginalized. The National Policy aims to
strengthen their legitimate place in the society and to help older
people to live the last phase of their life with purpose, dignity and
peace. The National Policy on Older Persons inter alia visualizes
support for financial security, health care and nutrition, shelter,
emphasis upon education, training and information needs, provision of
appropriate concessions, rebates and discounts etc. to Senior Citizens
and special attention to protect and strengthen their legal rights such
as to safeguard their life and property. The National Policy on Older
Persons confers the status of senior citizen to a person who has
attained the age of 60 years.


2. The Ministry is also implementing following schemes for the benefit of Senior Citizens:
(a) An Integrated Programme for Older Persons (Plan Scheme) – This Scheme
has been formulated by revising the earlier scheme of “Assistance to
Voluntary Organizations for Programme relating to the Welfare of the
Aged”. Under this Scheme, financial assistance up to 90% of the project
cost is provided to NGOs for establishing and maintaining Old Age Homes,
Day Care Centers, Mobile Medicare Units and to provide
non-institutional services to older persons.


(b) The Scheme of Assistance to Panchayati Raj Institutions/ Voluntary
Organizations/Self Help Groups for Construction of Old Age
Homes/Multi-Service Centers for older persons (Non Plan Scheme) - Under
this Scheme, one time construction grant for Old Age Homes/Multi-Service
Centre is provided to non-governmental organizations on the
recommendation of the State Governments/ UT Administrations.

 
VII. Ministry of Rural Development:
1. Under the National Old Age Pension Scheme, Central Assistance of Rs.
75/- p.m. is granted to destitute older persons above 65 years. This
Scheme has been transferred to the State Plan w.e.f. 2002-03.


2. Under the Annapurna Scheme, free food grains (wheat or rice) up to 10
kg. per month are provided to destitute older persons 65 years or above
who are otherwise eligible for old age pension but are not receiving it.
 
RAWALIKADate: Tuesday, 11 Feb 2014, 8:32 AM | Message # 30
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
இம்பல்ஸ் ஷாப்பிங்கைத் தடுக்க 10 வழிகள்!

நன்றி: நாணயம் விகடன்
ச.ஸ்ரீராம்

எல்லாப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை? ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டில் நுழைவோம். வாங்க நினைத்த பொருளோடு,  வாங்க நினைக்காத நான்கைந்துப் பொருட்களை வாங்குவோம். கடையைவிட்டு வெளியே வந்தபிறகு ஏன் இத்தனை பொருட்களை வாங்கினோம் என்று தெரியாமல் முழிப்போம். இதற்குப் பெயர்தான் 'இம்பல்ஸ் பையிங்’. அதாவது, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், கண்ணுக்குப்பட்டதை எல்லாம் வாங்க நினைக்கிற மனநிலை. இந்த மனநிலையைத் தூண்டி, தங்கள் குவித்து வைத்திருக்கிற பொருட்களை விற்பதற்கான அத்தனை வேலைகளையும் பெரிய மால்களும், சூப்பர் மார்க்கெட்களும் பக்கவாகச் செய்கின்றன. இந்த வலையில் சிக்காமல், தேவையான பொருளை மட்டும் வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்கு இதோ பத்து வழிகள்..!
1. கிரெடிட் கார்டு வேண்டாம்!

பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஷாப்பிங் செல்லும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கப் பாருங்கள். ஏனெனில், கிரெடிட் கார்டுதான் இருக்கிறதே என்று பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குச் சட்டென வந்துவிடுவீர்கள். எனவே, முடிந்த மட்டும் ரொக்கமாக பணம் தந்து பொருளை வாங்குங்கள்.
 2. தேவையான பொருள் மட்டும்..!

நீங்கள் ஷாப்பிங் செல்லும்முன், உங்களுக்கு என்னென்ன பொருள் தேவை என்று பட்டியல் போடுங்கள். எது உடனடியாகத் தேவையோ, அது மட்டுமே ஞாபகத்துக்கு வரும். சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தவுடன் அந்தப் பொருட்களை மட்டும் வாங்குங்கள். அதுதவிர்த்து கண்ணில்படும் பொருட்களை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். பிற்பாடு தேவைப்பட்டால் வாங்குங்கள்.
3. டைம்பாஸ் ஷாப்பிங்!

வீட்டில் போரடிக்கிறது, ஷாப்பிங் போனால் பொழுதுபோறதே தெரியாது என்று நினைத்து ஷாப்பிங் போகாதீர்கள். ஷாப்பிங் போனால் பொழுதுபோகும்; கூடவே பர்ஸும் காலியாகும். எனவே, உங்கள் ஷாப்பிங்கை அதிகபட்சம் மாதம் இருமுறை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். 4. ஆஃபர் வலை!

இது வாங்கினால் அது ஃப்ரீ, அது வாங்கினால் இது ஃப்ரீ என ஆஃபர்கள் சூப்பர் மார்க்கெட்களில் அடிக்கடி போடப்படும். இந்த ஆஃபர் இன்னும் சிலநாட்கள் மட்டுமே என்பார்கள். இந்த ஆஃபரை நாம் சுதாரிப்போடு கேட்காவிட்டால், அதில் நாமும் சிக்கி, தேவை இல்லாத பொருட்களை வாங்குவோம். தினம் ஆஃபர் சேல்ஸ் இருக்கும்! அவசரப்பட வேண்டாம்!
5. விளம்பர மாயை!

50% தள்ளுபடி, 60% தள்ளுபடி என்கிற மாதிரியான அதிரடி விளம்பரங்களைப் பார்த்து ஷாப்பிங் செல்லாதீர்கள். விளம்பரங்கள் சொல்கிறமாதிரி 50%, 60% தள்ளுபடி சில பொருட்களுக்கு மட்டுமே  இருக்கும். குறைந்த எண்ணிக்கையில் எந்த சாய்ஸும் இல்லாமல் தரத்திலும் குறைவானதாக அந்தப் பொருட்கள் இருக்கும். கடைக்குப் போய் வெறுங்கையோடு திரும்ப மனமில்லாமல், வேறு ஏதேதோ பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவோம். அதேபோல்இணையதளத்தில் அதிரடி ஆஃபர் விளம்பரங்களை நீங்கள் பார்க்க நேரிடும். அதுபோன்ற சமயங்களில் கட்டுப்பாடு கட்டாயம் தேவை.   6. மளிகைக் கடைகளே பெஸ்ட்!

உங்கள் வீட்டுக்கு அருகில் மளிகைக் கடைகளில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குங்கள். அங்குதான் ஆளை விழுங்கும் ஆஃபர்கள் அடிக்கடி இருக்காது. எனவே, ஆஃபருக்காகத் தேவையில்லாத பொருளை வாங்கவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இருக்காது. பணமும் அதிகம் செலவழியாது.
 7. சரியான விலை தாருங்கள்!

நீங்கள் வாங்கப்போகும் பொருளுக்கான விலையை முதலில் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பெரிய கடைகளில் அதைவிடக் குறைந்த விலையில், ஆனால் அதே அளவு எடையில், அதே அளவு தரத்தில் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.  ஆஃபர் என்கிற பெயரில் விலை குறைந்த ஒரு பொருளோடு, தேவையில்லாத வேறொரு பொருளை நீங்கள் வாங்குவதைவிட, கொஞ்சம் அதிக விலை தந்து உங்களுக்குத் தேவையான பொருளை வாங்கிவிடலாமே!
 8. அவசரம் வேண்டாம்!

பெரிய கடைகளுக்குப் போய் அவசர அவசரமாக ஷாப்பிங் செய்யாதீர்கள். இந்த அவசரம் நமக்கான  தேவை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கவிடாமல், நஷ்டத்தில் நம்மை வாங்கவைத்துவிடும். அதேபோல, மிக நிதானமாகவும் ஷாப்பிங் செய்யவேண்டாம். ஒவ்வொரு பொருளையும் அதிகநேரம் பார்த்துக்கொண்டே இருந்தால், அதை வாங்காமல் வெளியே வரமாட்டோம்.
9. செல்ஃப் ஆடிட்டிங் தேவை!

அதிரடி ஆஃபரில் இதுவரை நீங்கள் உங்களுக்குத் தேவையான சரியான பொருளைத்தான் வாங்கி இருக்கிறீர்களா? எந்தெந்தப் பொருளைத் தேவையில்லாமல் வாங்கி இருக்கிறீர்கள்? அதனால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன? என்பதை என்றைக்காவது வீட்டில் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது உங்களுக்கு நீங்களே ஆடிட் செய்துபாருங்கள்! நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கே புரியும்!


10. தேவை, உடன் ஒருவர்!

நீங்கள் ஷாப்பிங் செய்யப்போகும் முன்பு உங்களைப் பற்றி நன்கு அறிந்த, உங்கள் நலனில் அக்கறைகொண்ட ஒருவர் (உங்கள் கணவரையோ/மனைவியையோ) உடன் இருந்தால், தேவையில்லாத பல பொருட்களை நாம் வாங்கத் துணிய மாட்டோம். நம் பர்ஸும் எப்போதும் கனமாகவே இருக்கும்!
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
Search: