KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Thursday, 06 Mar 2014, 2:43 PM | Message # 81 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| இலையின் மகிமை.
விருந்தாளிக்கு விருந்து படைப்பது -.வாழை இலை,
உணவில் வாசத்தை ஏற்படுத்துவது -கருவேப்பிலை,
உணவாக சமைக்கப்படுவது -கீரை இலை,
உண்ட பின் போடுவது -வெற்றிலை,
வாசலில் அலங்கரிப்பது - மாவிலை,
நோய் நீக்குவது - துளசி இலை
நன்றி -மங்கையர் மலர்,
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 06 Mar 2014, 3:03 PM | Message # 82 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| தலை படும் பாடு
தலை நகர் -முதன்மையான நகரம்.
தலைமை ஆசிரியர் -பள்ளியின் முதல்வர்
தலைப்பிரசவம் -முதல் பேறுகாலம்
தலைச்சன் - முதல் குழந்தை
தலைமைப்பொறுப்பு -முக்கியமான வேலை
தலை போகிற வேலை - அவசரமான வேலை
தலை உருளுகிறது - பலருடைய ஏச்சு
தலை சுற்றுகிறது - குழப்பம்
தலையெழுத்து - விதி
தலையங்கம் -முதற் பக்கச் செய்தி
நன்றி -மங்கையர் மலர்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
vaideesh | Date: Thursday, 06 Mar 2014, 9:50 PM | Message # 83 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Dear KVsuresh, thanks for a wonderful infomation!
|
|
| |
kvsuresh | Date: Friday, 07 Mar 2014, 12:15 PM | Message # 84 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| காலி பிளவரின் குணங்கள்:
கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.
இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால்நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம்,பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். காலிபிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக்கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Friday, 07 Mar 2014, 12:16 PM | Message # 85 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| இளமைக்கு மெருகூட்டும் வெந்தயம்!
வெந்தயத்தின் தாவரயியல் பெயர் 'ட்ரிகோனெல்லா போனும் 'ட்ரிகோனெல்லா போனும் 'க்ரேகம் என்பதாகும். வெந்தயம், கசப்புச் சுவை கொண்டது. து அதிக பலன் தரும் உணவுப் பொருளாகும். பல நூற்றாண்டுகளுக்குமுன்பே மகத்துவத்தை உணர்ந்து முன்னோர்கள் சமையலில் சேர்த்து ஆரோக்கியத்தை பெற்றார்கள்.
ஆயுர்வேத, சீன மருத்துவத்தில் வெந்தயம் மருந்தாக பயன்படுத்தப்படு வந்தது. வெந்தயத்தில் புரோட்டீன்,வைட்டமின் சி, பொட்டாசியம், நியாசின், டையாஸ்ஜெனின் ஆகியவை உள்ளன. நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
வயிற்றுவலி, நீக்கடுப்பு ஆகியவற்றுக்கு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். பூப்பெய்திய பெண்களுக்கு வெந்தயத்தை உண்ணத் தரலாம். உளுந்து சேர்த்து களி செய்து கொடுத்தால், பருவமடைந்த பெண்கள் வலுவடைவார்கள். உடலும் மின்னும். வெந்தயத்தில் உள்ள டயாஸ்ஜெனின் எனும்வேதிப்பொருள் ஈஸ்ட்ரோஜனாக செயல்பட்டு பெண்களின் உடல் வளர்ச்சி முழுமையடைய உதவுகிறது. பெண்களுக்கு உதிரப்போக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, தொந்திரவுகளுக்கும் வெந்தயம் மருந்தாகபயன்படுகிறது.
வெந்தயத்தின் இலைகளை அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் முகம் பொலிவுபெறும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Monday, 10 Mar 2014, 1:39 PM | Message # 86 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு 0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்).
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 20 Mar 2014, 5:07 PM | Message # 87 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| மருந்தாகும் உணவு வகைகள் - * சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல்அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. - * சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சா ப்பிடலாம்.
* பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச்சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 20 Mar 2014, 5:08 PM | Message # 88 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| * அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிவைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக ்கியத்துக்கும்தீங்கினை ஏற்படுத்தும்.
* தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம்சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
* பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
* கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சைகொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும்தூண்டுகின்றன.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 20 Mar 2014, 5:11 PM | Message # 89 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சீரகத்தின் தாரக மந்திரம் -
அகத்தைச் சீராக வைக்கும் "சீர் + அகமே சீரகம்!!!
சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று பலருக்கும் தெரியும், ஆனால் அதனைஎந்த விடயத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரிவதில்லை.
வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் கடாயில் சீரகத்தைப் போட்டு வறுத்து அதில்தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த கஷாயத்தைக் கொடுக்க வாந்தி நிற்கும்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Thursday, 20 Mar 2014, 5:12 PM | Message # 90 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம்நீங்கி விடும்.
திராட்சை பழச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தைகட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால்மனநோய் குணமாகும்.
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல்நோய்கள் குணமாகும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |