Ram's தகவல் பெட்டகம் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » Ram's தகவல் பெட்டகம் (Ram's தகவல் பெட்டகம்)
Ram's தகவல் பெட்டகம்
ramsDate: Monday, 03 Feb 2014, 11:15 AM | Message # 11
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
அதிக விலைக்கு மருந்துகளை விற்றால் நடவடிக்கை: விலை நிர்ணய ஆணைய தலைவர் எச்சரிக்கை...!

மருந்துப் பொருட்களை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத் தலைவர் சிங் எச்சரித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிங் மேலும் கூறுகையில், “அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 348 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ளது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் மருந்து நிறுவனங்களிடம் இருந்து ரூ.3200 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Monday, 03 Feb 2014, 11:17 AM | Message # 12
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
Most expensive fruit in the world,the Ruby Roman grapes.

The worlds Most expensive fruit in the world is a grapes called ruby roman,According to Japan Real Time reports a small bag of 25 of the ruby roman grapes would cost about ¥500,000 in japan which would be 6400 dollars,“by far the most expensive grapes sold in Japan!!!
Attachments: 7343655.jpg (7.5 Kb)


endrum anbudan

vijiram
 
ramsDate: Monday, 03 Feb 2014, 11:18 AM | Message # 13
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில்,

செவ்வாயில் நீரோட்டம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அங்கு பெரிய ஏரி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் செவ்வாயில் உயிரினங்கள் வாழ தேவைப்படும் தகுதி வாய்ந்த நீர் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் தங்கள் அறிக்கை யில்தெரிவித்துள்ளதாவது:

செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து கிடைத்துள்ள புதிய மண் துகள்களை ஆய்வு செய்ததில், அதில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதுவரை சேகரிக்கப்பட்ட துகள்களை விட, இது மிகவும் பழமை வாய்ந்தது.

இந்த துகள்கள் 400 கோடி ஆண்டுகள் பழமையானவை. இந்த துகள்களில் ஏராளமான தனிமங்களின் கலப்பு காணப்படுகிறது.

இதை மேலும் வேதியியல் ஆய்விற்கு உட்படுத்துவதின் மூலம் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.

இந்த துகள்களை ஆய்வு செய்ததில் செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான தகுதி வாய்ந்த நீரோட்டம் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு,அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



endrum anbudan

vijiram
 
kvsureshDate: Monday, 03 Feb 2014, 3:35 PM | Message # 14
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Thanks viji,

for all ur useful infos. as usual kallakunga. v hands


Regards and Thanks

Kothai Suresh
 
nayagamDate: Monday, 03 Feb 2014, 6:28 PM | Message # 15
Sergeant
Group: Checked
Messages: 25
Status: Offline
hi ram

goodmorning

useful info

thank u

amukkuvaan peii  payamayirunthichchu
 
ramsDate: Tuesday, 04 Feb 2014, 4:32 PM | Message # 16
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline

Olive oil is perhaps the best home remedy for dandruff due to its natural moisturizing and clarifying properties.

  • Leave the olive oil in overnight and rinse it out with a mild shampoo in the morning.


Neem is a tree that contains effective anti-fungal properties. 

  • Neem leaves or neem oil can be applied to the scalp as an effective treatment for not only dandruff but also lice and other scalp infections.
  • Apply neem to the affected areas of your scalp and rinse an hour or two later.


Apple cider vinegar is one of those home remedies that are used for many ailments, including dandruff. 

  • Simply apply the apple cider vinegar to your scalp and massage for five minutes.
  • Next, rinse your hair with water and, if you wish, a mild shampoo.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 04 Feb 2014, 4:37 PM | Message # 17
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
Another effective remedy for dandruff is lemon juice mixed with either sandalwood or garlic (both of which have antimicrobial properties). 

  • Mix one part lemon juice to two parts garlic or sandalwood and apply as a paste to the affected area of your scalp.
  • The lemon juice will serve as an effective remedy against existing flakes, while the garlic or sandalwood will prevent against bacteria that can aid in flake growth.
  • Leave this treatment in for 20 to 30 minutes and then rinse with a mild shampoo.


Although many of us won't like the idea of applying raw eggs to your scalp, it is an effective treatment against dandruff. 

  • Simply beat two eggs and apply it to your scalp for one hour.
  • Following this, cleanse your hair and scalp with a mild shampoo.
  • As with the black pepper and yogurt, this is also an effective natural conditioner.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 04 Feb 2014, 4:42 PM | Message # 18
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
ஆழ்கடலில் 130 மீட்டர் ஆழத்தில் திருமணம்

தாய்லாந்தில் நீச்சல் வீரர்கள் இருவர் உலகிலேயே மிக ஆழத்தில் திருமணம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோயுகி யோஷிதாவும், அமெரிக்காவைச் சேர்ந்த சாண்ட்ரா ஸ்மித்தும் தாய்லாந்தில் நீச்சல் பயிற்சியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். காதலர்களான இவர்கள், தங்களது "ஆழமான' காதலை வெளிப்படுத்தும் வகையில் கடலுக்கடியில் சுமார் 130 மீட்டர் ஆழத்திலுள்ள குகை ஒன்றில் வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுடன் பணியாற்றும் சக பயிற்சியாளர்களில் ஒருவர் திருமணம் செய்து வைக்கும் மத குருவாகவும், 2 பேர் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை தோழர்களாகவும் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர். அனைவரும் பிராண வாயுக் கருவிகளைப் பொருத்தியிருந்தாலும், திருமணம் முடிந்ததும் மரபுப்படி ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்வதற்காக மணமக்கள் அந்தக் கருவிகளை கழற்றி எறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்தத் திருமணம், "உலகிலேயே மிக ஆழமான இடத்தில் நடைபெற்ற திருமணம்' என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 04 Feb 2014, 4:43 PM | Message # 19
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
10ஆவது ஆண்டில் ஃபேஸ்புக்

உலகம் முழுவதிலும் 120 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதளமான ஃபேஸ்புக், 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மார்க் சூக்கர்பெர்க் என்பவரால் ஃபேஸ்புக் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கும், இணையத்தில் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது உருவாக்கப்பட்டது.

உலக பணக்காரர்களில் ஒருவராக தன்னை மாற்றிய ஃபேஸ்புக், இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்று தான் கற்பனைகூட செய்ததில்லை என்று மார்க் தெரிவித்துள்ளார்.

மொபைல் சந்தையில் தனது கவனத்தை மந்தமான அளவிலேயே ஃபேஸ்புக் கொண்டிருந்தபோதிலும், பாதிக்கும் மேலான தனது விளம்பர வருவாய் மொபைல்களின் மூலம் பெறப்படுவதாக கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

மற்ற சமூக வளைத்தளங்களான பின்ட்ரெஸ்ட், டுவிட்டர், ஸ்னாப்சாட் போன்றவற்றின் வரவால் இளைஞர்களின் இடையே ஃபேஸ்புக்கிற்கான வரவேற்பு குறையும் என்று கருதப்பட்டது.

அடுத்த 3 ஆண்டுகளில் தனது 80 சதவீத வாடிக்கையாளர்களை ஃபேஸ்புக் இழக்கும் என்று அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த கணிப்புக்கு ஃபேஸ்புக் மறுப்பு தெரிவித்து சவால் விட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் 13 முதல் 17 வயதுக்கு உள்பட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஃபேஸ்புக் இழந்துள்ளதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 04 Feb 2014, 4:45 PM | Message # 20
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
இந்தியாவிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்:சீனாவுக்கு தலாய்லாமா வேண்டுகோள்



ஷில்லாங்:இந்தியாவிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திபத்திய தலைவர் தலாய்லாமா.இது குறித்து நேற்று நடந்த ஷில்லாங் பல்கலைகழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது இவ்வாறு கூறினார்.கூறுகையில், இந்திய வாழ்க்கைமுறை,மொழி மற்றும் பல்வேறுவிதமான மக்கள் இவ்வாறு இருந்தும் சகவாழ்வும் மகிழ்ச்சியோடும் இருப்பதை பார்த்து பயிற்சி எடுத்து கற்றுகொள்ளுமாறு சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்தால் தலாய்லாமா.

முதல் முறையாக மேகாலயா வந்த போது மனிதன் வாழ அற்புதமான ஊர் என்று எனது மனதுக்கு தோன்றியது.திபெத்தில் வாழும் மக்களுக்கு எதிராக வெறுப்பு ஒன்றி சீனா குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு அதன் ஒரு , பல கலாச்சார பல இன, பல மத சமூகம் தழுவிய உள்ள ஐக்கிய நாடுகளுடன் ஒப்பிட்டார்.

" சீனாவிடம் இருந்து நாம் பிரிக்க முயலவில்லை. நாம் பொதுவான நலன்களை மற்றும் பொதுவான பொருளாதார வளர்ச்சி சீனாவுடன் சொந்தம் கொண்டாட முயன்றுவருகிறோம் என தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.

காந்தி கொள்கையானஅகிம்சையே,இந்தியாவின் அமைதியான வாழ்க்கை கருத்து. அதன்மூலம் தான் ஒரு நல்ல ஆசியாவையும் மற்றும் நல்ல உலகத்தையே காணப்படவேண்டும் என விரும்புவதாக அவர் கூறினார். 

" 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அஹிம்சா ( அகிம்சை ) கருத்து இருந்தது. ஏனெனில் அது மரியாதையை குறிப்பிடுகிறது. இந்தியா, மத சகிப்புத்தன்மை மற்றும் கலாச்சாரம் , வாழ்க்கை எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று கூறினார் தலாய்லாமா.


endrum anbudan

vijiram
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » Ram's தகவல் பெட்டகம் (Ram's தகவல் பெட்டகம்)
Search: