Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Tuesday, 04 Feb 2014, 4:46 PM | Message # 21 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| "அதிக தகவல்களாலேயே வயதானவர்களின் மூளை மெதுவாக செயல்படுகிறது'
அதிகமான தகவல்களை தெரிந்து வைத்திருப்பதன் காரணமாகவே வயதானவர்களின் மூளை மெதுவாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனி நாட்டில் உள்ள துபின்ஜென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் ராம்ஸ்கர் என்பவரின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர்.
சேமிக்கப்படும் தகவல்கள் அதிகமாகும்போது, கணிப்பொறியின் செயல்பாடு தாமதமாவது போன்று வயதானவர்களின் மூளையும் மெதுவாகச் செயல்படுவதாக அவர்கள் தங்களது ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
வயதானவர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட "ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ளுதல்' சோதனை அடிப்படையில் இந்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டதாக மிக்கேல் ராம்ஸ்கர் தெரிவித்தார்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 04 Feb 2014, 4:52 PM | Message # 22 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Cochin Shipyard Recruitment 2014 For 228 Workmen & Supervisory Posts
Job Location: Kochi, Kerala Last Date: February 22, 2014
Job Details
Cochin Shipyard Kochi invites applications for the follow posts
2014 Feb Advertisement from Cochin Shipyard
Accountant - 04 Assistant Engineer - 02 Technical Assistant (Mechanical) - 06 Laboratory Assistant - 01 Junior Technical Assistant - 15 Junior Commercial Assistant - 15 Storekeeper - 04 Instrument Mechanic - 02 Welder Cum Fitter - 101 Fitter (Electrical) - 30 Fitter (Electronics) - 02 Painter - 02 Shipwright Wood - 02 Machinist - 07 Crane Operator (Electrical) - 10 Crane Operator (Diesel) - 02 Serang - 01 Fireman - 06 Semi Skilled Rigger - 10 General Worker (Canteen) - 06
No. of Positions: 228
Educational Qualifications: Details of educational qualifications needed to work at Cochin Shipyard
How To Apply:
Applications to this job are to be filled online. Please follow the link given below to apply ( or visit original job details page)
http://cochinshipyard.com/
http://cochinshipyard.com/careers....20a.pdf
endrum anbudan
vijiram
Message edited by rams - Tuesday, 04 Feb 2014, 4:53 PM |
|
| |
rams | Date: Tuesday, 04 Feb 2014, 9:04 PM | Message # 23 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| சாமுத்திரிகா லட்சணம் பெண்ணுக்கு மட்டுமில்லை..., ஆணுக்கும் உண்டு. தலை: ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.
நெற்றி: அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வம். மிகச் சிறுத்திருப்பின் மூடன். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடம்.
கண்: ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.
மூக்கு: உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.
வாய்: அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..
உதடு: உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.
கழுத்து: ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமை.
தோள்: தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.
நாக்கு: நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரம்.
பல்: மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரம்..
காது: காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.
கைகள்: நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.
மணிக்கட்டு: மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரம்.
விரல்கள்: கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுள். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.
மார்பு: ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுள். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..
வயிறு: பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.
முதுகு: சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரம்.
கால்கள்: கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.
கால்பாதம்: கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 04 Feb 2014, 11:24 PM | Message # 24 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| 'ஒரேயொரு மிஸ்டு கால் ஓட்டாண்டியாய் வாழ்க்கை': நைஜீரிய கொள்ளையர்களின் புதுவகை கைவரிசை நாளுக்கு நாள் விரிவடைந்து, வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பலனாக பரந்து விரிந்த இந்த பெரிய உலகம் நமது உள்ளங்கை அளவிற்கு சுருங்கி விட்டது. இதன் பலனாக மின்னணு வர்த்தகம், மின்னணு வங்கியியல் என மனிதர்களின் அனைத்து தேவைகளையும் வீண் அலைச்சலின்றி அமர்ந்த இடத்தில் இருந்தே வெகுசுலபமாக் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.
இந்த தொழில்நுட்ப புரட்சி பல கோடி மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வரும் அதே வேளையில், சில ஊடுருவல் (ஹேக்கிங்) பேர்வழிகளுக்கும் காமதேனுவாக இருந்து வருகிறது.
குறிப்பாக நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சில சமூக விரோதிகள், இந்தியர்களை குறி வைத்து பல ஆண்டுகளாக இணையதள மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும்போது அவர்களின் ஏ.டி.எம். கார்டில் உள்ள விபரங்களை இந்த பலே பேர்வழிகள் திருடி விடுகின்றனர்.
இதற்காக, ஏ.ட்டி.எம். இயந்திரங்களில் பணம் போடும் ஊழியர்களை நட்பாக்கிக் கொள்ளும் இவர்கள், அவர்களின் துணையுடன் இயந்திரத்திற்குள் அட்டையை செலுத்தும் நுழைவாயில்களின் பின்புறத்தில் மிகவும் நுட்பமான ரகசிய 'மைக்ரோ கேமரா'க்களை பொருத்தி, பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களின் அட்டையில் உள்ள 12 இலக்க ரகசிய கணக்கு விபரங்களை அந்த மைக்ரோ கேமரா வழியாக அமர்ந்த இடத்தில் இருந்தே பதிவு செய்து கொள்கின்றனர்.
அதில் உள்ள தகவல்களின்படி, உடனடியாக போலி அட்டைகளை தயாரித்து, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக சுரண்டி, துடைத்து விடுகின்றனர். இது மோசடியில் முதல் ரகம்.
இரண்டாவது ரகமாக, 'ஆன்லைன்' மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் இணைய பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களை அவர்களது கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவுவதின் மூலம் உளவறிந்து, அந்த கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) பயன்படுத்தி அவரது பணத்தை சூறையாடுவதோடு மட்டுமின்றி, அவர் கொடுக்கல்- வாங்கல் செய்து வரும் வணிக நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 'ஆர்டர்' செய்து கடனாக வாங்கிக் கொண்டு, அந்த கடன் சுமையை ஏமாந்த வாடிக்கையாளர் தலையில் கட்டி விடுகின்றனர்.
இந்த வகையில் சுரண்டப்படும் பணம் முழுவதும் சில நிமிடங்களுக்குள்ளாகவே 10-15 வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு கைமாறி நைஜீரியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மோசடிப் பேர்வழிகளுக்கு சொந்தமான வங்கி கணக்குகளுக்கு பத்திரமாக போய் சேர்ந்து விடுகிறது.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ குறிப்பிட்ட அந்த வங்கிக்கு சென்று, மொத்த தொகையையும் துடைத்து எடுத்துவிட்டு, அந்த வங்கிக் கணக்கையும் மூடி விடுகின்றனர். பெரும்பாலும், போலி பெயர் மற்றும் முகவரிச் சான்றுகளை தந்தே சிலர் மோசடி என்ணத்துடன் இத்தகைய வங்கி கணக்குகளை தொடங்குவதால், கணக்கை முடித்துக் கொண்ட பின்னர் அவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது.
இதைப்போன்ற சில மோசடிகள் மட்டுமே ஊடக செய்திகளின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பல மோசடிகள் ஏமார்ந்தவருக்கும், ஏமாற்றியவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு போல், காதும் காதும் வைத்தாற்போல் ரகசியமாக மறைக்கப்பட்டு வருகின்றன.
இப்படி, ஏராளமான இந்தியர்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை சுரண்டி, ருசி கண்டுவிட்ட இந்த மோசடிப் பேர்வழிகள், மோசடிக் கலையின் மூன்றாவது உத்தியாக தற்போது புதிய கொள்ளை முறையை கையாண்டு வருகின்றனர்.
'ஒரேயொரு மிஸ்டு கால்- ஓட்டாண்டியாய் எதிர்முனை ஆசாமியின் வாழ்க்கை' என்பதுதான் இந்த புதிய கொள்ளை முறை. இதன்படி, 'மொபைல் பேங்கிங்' எனப்படும் செல்போன் மூலம் அதிகமாக பணப்பரிவர்த்தணை செய்துவரும் நபர்களுக்கு இவர்கள் 'மிகச் சிறியதொரு' மிஸ்டு கால் கொடுக்கிறார்கள்.
'ஏதோ முக்கியமான அழைப்புபோல் இருக்கிறது' என்று எதிர்முனையில் இருப்பவர் அழைப்பு வந்த எண்ணை திருப்பி அழைத்தால் போதும். அவரது சிம்கார்டில் இருந்து சுமார் ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை அழைப்புக்கான கட்டணமாக கரைந்து விடும்.
அதுமட்டுமின்றி, அவரது செல்போனில் உள்ள வங்கி கணக்கின் ரகசிய 'பாஸ்வேர்ட்' உள்ளிட்ட அனைத்து தொடர்புகளும் மூன்றே வினாடிகளுக்குள் மோசடிப் பேர்வழிகளை சென்றடைந்து விடும். அடுத்த சில நிமிடங்களில் அவரது மொபைல் பேங்கிங் கணக்கின் மூலம் அவரது வங்கி இருப்பு சுத்தமாக துடைக்கப்பட்டு, அவர் ஓட்டாண்டியாக தெருவில் நிறுத்தப்படுவார்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Tuesday, 04 Feb 2014, 11:28 PM | Message # 25 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| இவற்றில் பெரும்பாலான 'மிஸ்டு கால்' +375602605281, +37127913091 போன்ற எண்களில் இருந்தே வரும். சர்வதேச தொலைபேசி தொடர்பக குறியீடுகளின்படி பார்க்கப்போனால், 375-ல் தொடங்கும் எண் ஆப்கானிஸ்தானில் உள்ள பெலாரஸ் பகுதியையும், 371- என தொடங்கும் எண் வட ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த லட்வியா என்ற சிறிய நாட்டையும் சேர்ந்தது என தெரிய வருகிறது.
இங்கெல்லாம் தங்களது கைக்கூலிகளை நியமித்திருக்கும் நைஜீரியாவின் ஒரு இனத்தை சேர்ந்த மோசடிப் பேர்வழிகள் தற்போது இந்த 'மிஸ்டு கால்' மூலம் தங்களது கைவரிசையை அரங்கேற்றி வருகின்றனர். *இதைப்போன்ற கொள்ளையர்களிடம் பணத்தை பறிகொடுத்தவர்களில் வடசென்னை பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவரும் ஒருவர்.
பிரபல ஆடிட்டரான இவர், எருக்கஞ்சேரி பகுதியில் அலுவலகம் வைத்து தொழில் செய்து வருகிறார். அருகாமையில் உள்ள எருக்கஞ்சேரி ’யூகோ வங்கி’ கிளையில் கணக்கு வைத்துள்ள இவர், தனது வாடிக்கையாளர்களின் சார்பில் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பணப்பரிமாற்றம் செய்யவும், தனது தனிப்பட்ட அரசு சார்ந்த வரியினங்களை செலுத்தவும் மேற்படி வங்கியின் அனுமதி பெற்று ‘இ-பேங்கிங்’ வாயிலாக பணப்பரிமாற்றம் செய்து வந்தார்.
சமீபத்தில், இவரது வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவிய மோசடிப் பேர்வழிகள் அதில் இருந்த ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 34 ரூபாயையும் துடைத்து, வழித்தெடுத்து விட்டனர். இது தொடர்பாக, வங்கியின் கிளை அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தபோது, நடந்த சம்பவத்துக்கு வாடிக்கையாளரின் கவனக்குறைவே காரணம் என குற்றம் சாட்டிய வங்கி நிர்வாகம், இவ்விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறி, கையை விரித்து விட்டது.
நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சுபாஷ் சந்திரபோஸ் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்து கொண்ட போலீசாரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறி அனுப்பியுள்ளனர்.
மோசடிக்கான குற்றப்பிரிவு 420-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் தொடர்புடைய உள்நாட்டு குற்றவாளிகளில் யாரேனும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்து, அவர்களுக்கு அம்மாநிலத்தில் ஏகப்பட்ட சொத்து இருக்கும் பட்சத்தில், வேறொரு மாநிலத்தை சேர்ந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்வதில் பல அனுமதிகளுக்காக காத்துக் கிடக்க வேண்டிய நிலையும், பல சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலையும்தான் நடைமுறையில் உள்ளது.
உள்நாட்டிலேயே இப்படி ஒரு நிலை நீடித்துவரும்போது... கண்டம் விட்டு கண்டத்தில் அமர்ந்து கொண்டு, ஒரேயொரு மிஸ்டு காலின் மூலம் நம்மை ஓட்டாண்டியாக மாற்றும் மோசடி கும்பலை பிடித்து, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாத செயல் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதைப்போன்ற 'மிஸ்டு கால்' மோசடிப் பேர்வழிகளிடம் ஏமாந்துப் போகாமல் விழிப்புடன் இருப்பதன் மூலம் நமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதன்படி, +375602605281, +37127913091 போன்ற எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால்களை புறக்கணிப்பதுடன், உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிப்பதன் மூலமாகவும் தகவல் தொழில் நுட்ப புரட்சியின் தீய விளைவுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக, மிக அவசரமான- அவசியத் தேவையாகும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 0:43 AM | Message # 26 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| 1. உடலின் சராசரி வெப்பநிலை 36. 90 சி 2. மனித உடலில் குரோமோசோம்கள் 23 ஜோடிகளாக உள்ளன. 3. மனித உடலில் 639 தசைகள் காணப்படுகின்றன. 4. இதயம் கார்டியத் தசையால் ஆக்கப்பட்டது. 5. நியூரான் என்பது நரம்பு செல் ஆகும். 6. மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை 1400 ஆகும். 7. ஓர் உடல் 5 லிட்டர் இரத்தத்தைக் கொண்டுள்ளது. 8. உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.40 தி 9. மனித இதயம் 70 வருடத்தில் 3,000 மில்லியன் முறை துடிக்கும். 10. மனித வயிற்றின் கொள்ளளவு 1.5 லிட்டர். 11. எச்.அய்.வி. வைரஸ் எய்ட்ஸைப் பரப்பும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 0:44 AM | Message # 27 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பாம்பிற்கு பால் ஊற்றுவதன், முட்டை வைப்பதன் காரணம் என்ன ?
உண்மையும், விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.
பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள், மனித நடமாட்டம் மிக மிக குறைவு.
மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .
ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 0:46 AM | Message # 28 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| உலகத்தின் கிறுக்குத்தனமான 6 சட்டங்கள்!!!
--------------------------------------------------------------------
1)உள்ளாடை தெரியுமாறான பேண்ட் அணியக்கூடாது- மிச்சிகன் 2)நோயை வெளிக்காட்டக் கூடாது- வாஷிங்டன் 3)குண்டாக இருப்பது சட்ட விரோதம்- ஜப்பான் 4)கோடுபோட்ட சூட் அணிந்த ஆண்களின் மேல் கத்தி வீசக்கூடாது- கன்சாஸ் 4)அயல்நாட்டு மீன்களை விற்கும் பெண்கள் மட்டும் மேலாடை அணியாமல் நிர்வாணமாக இருக்கலாம்- லிவர்பூல் 5)போலியான கோகோயின் வைத்திருப்பது சட்ட விரோதம்- அரிசோனா 6)வயிறு நிறையாவிட்டால் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க தேவையில்லை- டென்மார்க் 6)வாஷிங்டனில் ஒரு குற்றவாளி குற்றம் புரிய நுழையும் முன் காவல் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 0:46 AM | Message # 29 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| ஒரு சிகிரெட்டை புகைப்பது உங்களின் வாழ்நாளின் 11 நிமிடத்தை குறைக்கிறது! . @. திருக்குறள் இது வரை 26 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ஆங்கிலத்தில் மட்டும் 40 தடவை வெவ்வேறு நபர்கள் மொழி பெயர்த்துள்ளனர்!!
@. தற்போது ஆப்பிள் நிறுவனத்திடம் அமெரிக்க அரசை விட அதிக பணமுள்ளது! . @. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது!!
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 0:48 AM | Message # 30 |
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| இப்படி ஒரு சவால்..!
* அமெரிக்கா வில் ஒரு பேருந்து நிலையத்தில் இந்த கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
* புல்லெட் ப்ரூப் கண்ணாடி தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரம். * முடிந்தால் கண்ணாடியை உடைத்து உள்ளிருக்கும் மூன்று மில்லியனை எடுத்துக்கொள்ளுங்கள் என்பது தான் சவால்..
Ishu
endrum anbudan
vijiram
|
|
| |