தெரிந்த புராணம் தெரியாத கதை - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
தெரிந்த புராணம் தெரியாத கதை
PattuDate: Sunday, 02 Feb 2014, 5:49 PM | Message # 11
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline


”பார்பாரிக்கா உண்மையில் நீ ஒரு யக்‌ஷன்.முன் ஒரு சமயம்,பூமியில் அதர்ம சக்திகள் அட்டூழியம் நிகழ்த்தி வந்த நேரம்,பிரம்மாதி தேவர்கள் எல்லாம் என்னை வந்து பணிந்து தங்களைக் காபாற்றும்படி வேண்ட,நானும் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுப்பதாகக் கூறினேன்.அதற்கு அங்கிருந்த நீ,அதற்கு நான் தேவையில்லை என்றும் நீ ஒருவனே போதும் என்றும் கூறினாய்.

இதை கேட்ட பிரம்மதேவன் கோபமுற்று,நீ பூமியில் மகத்தான சக்திகளுடன் பிறப்பாய் என்றும்,அதர்ம சக்திகளை ஒழிக்க முற்படும் போது நீயே என்னால் கொல்லப்பட்டு முதல் பலி ஆகி விடுவாய் என்றும் உன்னைச் சபித்தார்,அதன் காரணமாகவே,இன்று உனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் போர் துவங்கும் முன் ஒரு மாவீரனை களபலி கொடுக்க வேண்டும்.உன்னை மிஞ்சிய மாவீரன் இத்தரணியில் இல்லை” என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் சக்ராயுதம் பார்பாரிக்காவின் தலையை கொய்தது.பரந்தமனின் பரம் பதம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன வேண்டும் என்று திருப்தி அடைந்த பார்பாரிக்கா”கிருஷ்ணா நான் போரினைக்காண  மட்டும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான். பார்பாரிக்காவின் தலையைப் போர் பூமியைப் பார்த்து நின்ற ஒரு குன்றின் மீது வைத்தான் கிருஷ்ணன்.

போர் நடந்து முடிந்தவுடன்,பாண்டவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.தங்களில் யார் பராக்கிரமத்தால் போரில் வென்றோம் என்பதே அது.கிருஷ்ணரிடம் வந்து “கிருஷ்ணா எங்களில் யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று கூறு” என்றனர்.”எனக்கு எப்படி தெரியும்,நானோ அர்ஜுனனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு அவன் சொன்னபடியெல்லாம் சென்று கொண்டிருந்தேன்.

போதாக்குறைக்கு எதிரிகளின் அம்புக்கணைகள் வேறு என் உடம்பை பதம் பார்த்து கொண்டிருந்தன.இந்த நிலையில் என்னால் வேறு எதையும் பார்க்க தோன்றுமா என்ன” என்றான் கிருஷ்ணன்.”அப்படியென்றால் வேறு யாரைத்தான் கேட்பது”என்று திகைத்தனர் பாண்டவர்கள்.”ஒரு ஆள் முழு போரையும் பார்த்திருக்கிறான்.அவனை வேண்டுமானால் கேட்கலாம்” என்றான் கிருஷ்ணன்.

”யாரது” என்று வினவிய பாண்டவர்களை பார்பாரிக்காவிடம் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.”என்ன பார்பாரிக்கா முழு போரையும் பார்த்தாயா?” கேட்டான் கிருஷ்ணன்.”பார்த்தேன் கிருஷ்ணா”என்றான் பார்பாரிக்கா.”பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம்,யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று” என்று கேட்டான் கிருஷ்ணன்.

”எனக்கு என்ன தெரியும் கிருஷ்ணா,யுத்த பூமியிலே ஒவ்வொரு தலை விழும் போதும் அங்கு உன் சக்ராயுதம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது”என்றான் பார்பாரிக்கா. பாண்டவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:03 PM | Message # 12
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தெரிந்த புராணம்... தெரியாத கதை!



எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும், அது தடையின்றி முழுமையாக நிறைவேற, விநாயகப் பெருமானை வழிபட்டுத் தொடங்குவதுதானே இந்து தர்ம கோட்பாடு!

ஸ்ரீவிநாயகர் புராணம் நமக்குத் தெரிந்ததுதான். அதில் அநேகம் பேருக்குத் தெரியாத கதை ஒன்றைச் சொல்கிறேன், கேளுங்கள்!

விரும்புகிற செல்வங்களை எல்லாம் வழங்கவல்ல பசு 'காமதேனு’; விருட்சம் (மரம்) கற்பக
விருட்சம். ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு இணையாகப் போற்றிப் பூஜிக்கப்படுவது காமதேனு;
மிக உயர்ந்ததும் புனிதமானதும், கேட்டதை வழங்கவல்லதுமான விருட்சம்-
கற்பகம். இந்த இரண்டுமே, திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவை எனத்
தெரிவிக்கின்றன புராணங்கள். இதில், கற்பக விருட்சம் உருவாகக் காரணமானது
ஸ்ரீகணபதியின் பேரருளே என்றால், ஆச்சரியப்படுவீர்கள்.

த்ரேதா யுகத்தின் ஆரம்ப காலம் அது. தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற
பகுதியில், விப்ரதன் என்று ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். மிருகங்களை
வேட்டையாடி, தன்னையும் தன் கூட்டத்தினரையும் பசியின்றிப் பாதுகாத்து
வந்தான். திடீரென மழை பொய்க்கவே, வனம் வறண்டது. பறவைகளும் மிருகங்களும்
புகலிடம் தேடி, வனத்தை விட்டு அகன்றன. விப்ரதன் தன் கூட்டத்தாருடன் உணவும்
தண்ணீருமின்றித் தவித்தான். வேறு வழியின்றி, வழிப்பறிக் கொள்ளையில்
இறங்கினான்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:06 PM | Message # 13
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
நல்லவர்கள், சந்தர்ப்பவசத்தால் கூடத் தவறு செய்யலாகாது என்பதால், அவர்களைத் தடுத்தாட்கொள்பவன் இறைவன். வழிப்பறியில் ஈடுபட்ட முதல் நாள், முதல் ஆளாக,
அந்தணன் ஒருவனைப் பின் தொடர்ந்தான் விப்ரதன். இதை அறிந்த அந்தணன் ஓட,
அவனைத் துரத்திக்கொண்டு விப்ரதனும் ஓடினான். அந்த வனத்தில் இருந்த பாழடைந்த
ஒரு விநாயகர் கோயிலுக்குள் நுழைந்து, மறைந்தான் அந்தணன்.

வேடன் கண்ணப்பனை ஆட்கொள்ள, காளஹஸ்தி தலத்தில் சிவனார் நடத்திய திருவிளையாடலைப் போலவே, இங்கு மகா கணபதி மகத்துவம் ஒன்றைப் புரிந்தார்.

அந்த கணபதி கோயிலும், அருகில் இருந்த தெய்விகப் பொய்கையும் விப்ரதனைப் பெரிதும்
கவர்ந்தன. அதனால், அவன் அங்கேயே தங்கி விட்டான். உணவுக்கும் தண்ணீருக்கும்
ஏதேனும் வழி பிறக்குமா என யோசித்தான். அப்போது, அங்கு முக்கால முனிவர்
என்பவர் வந்தார். அவரை வழிமறித்து, கூரிய அம்பால் குத்தி விடுவதுபோல்
பயமுறுத்தினான் விப்ரதன்.

ஆனால் முனிவரோ சற்றும் பதறாமல், கருணை பொங்கும் விழிகளுடன் அவனைப் பார்க்க... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல், அந்தக்
கருணைக்குக் கட்டுண்டு, அம்பைக் கீழே போட்டான் விப்ரதன். அவரின்
பாதங்களில் விழுந்து வணங்கிய வன், அப்படியே மூர்ச்சையானான். தன் கமண்டல
நீரால் அவன் முகத்தில் தெளித்த முனிவர், அவனது புறக்கண்களை மட்டுமின்றி
அகக்கண்களையும் திறந்தார். 'என் பாபங்களைப் போக்கி அருளுங்கள்’ என
வேண்டினான் விப்ரதன்.

உடனே முனிவர், அருகில் கிடந்த காய்ந்த மரக்கிளையை எடுத்து, அவனிடம் கொடுத்தார். ''இந்த மரக்கிளையை, இந்தத்
தடாகத்தின் கரையில் நட்டு, மகா கணபதி மந்திரத்தைத் தொடர்ந்து ஜபித்து வா!
இந்த மரக்கிளை துளிர்விடும்வரை, ஜபிப்பதை நிறுத்தாதே. இது துளிர்க்கும்போது
உன் பாவம் நீங்கி, புனிதனாவாய்; தேவர்களைப்போல் உயர்ந்தவனாய்!'' என அருளி,
மந்திரத்தையும் உபதேசித்தார்.

ஏற்கெனவே உணவின்றி உபவாசமாக இருந்து, தடாகத்தில் நீராடி, மகா கணபதியை விக்கிரக வடிவில் தரிசித்திருந்த விப்ரதன்,
உபதேசம் பெறத் தகுதியான நிலையில் இருப்பதை அறிந்து, அவன் தலை மீது கை
வைத்து, 'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், க்லீம், க்லௌம், கம், கணபதயே நமஹ!’ என்கிற
மகிமை மிகு மகா கணபதி மந்திரத்தை உபதேசித்தார், முனிவர்.

'வளைந்த துதிக்கையும், பேருடலும், கோடி சூரியனின் பேரொளியைக் கொண்டவருமான கணபதி
தேவா! எல்லா நற்காரியங் களும் தடையின்றி நடக்க அருள்புரி வீராக!’ எனும்
பொருள் கொண்ட, 'வக்ரதுண்ட மஹாகாய, சூர்ய கோடி ஸமப்ரபா, அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷ§ ஸர்வதா’ என்ற கணபதி காயத்ரியையும் உபதேசித்தார்.

பிறகு, முனிவர் சொன்னபடி ஜபத்தில் ஈடுபடலானான் விப்ரதன். காலங்கள் ஓடின. அன்ன
ஆகாரம் இன்றி, அவன் செய்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. காய்ந்த அந்த
மரக்கிளை, துளிர்க்கத் துவங்கியது.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Monday, 03 Feb 2014, 5:06 PM | Message # 14
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தன்னையே அனுமனாக பாவித்துக் கொண்டு, தீவிரமாக ராமஜபம் செய்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு வால் முளைத்ததாக ஸ்ரீராமகிருஷ்ண வரலாற்றில்
குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நம்பிக்கையுடன் கணபதி மந்திரத்தை இடையறாது
உச்சரித்த விப்ரதனுக்கு, கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது.

அவன் முன் தோன்றிய விநாயகர், ''மகனே, பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து
ஜபித்ததால், நீயும் என் போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு
மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால், நீ 'புருசுண்டி’ என அழைக்
கப்படுவாய். உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம், கற்பக
விருட்சமாகிவிட்டது.

எந்தச் செல்வத்தைக் கேட்டாலும், அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு. என்ன வரம் வேண்டும், கேள்!'' என அருளினார். இதில்
சிலிர்த்தவன், ''தங்களின் தரிசனமே கிடைத்து விட்டது. இதற்கு மேல் வேறு என்ன
வேண்டும், சுவாமி! தங்களின் திருவடியைச் சரணடைந்து தொண்டாற்றுகிற
பாக்கியம் மட்டுமே போதும்!'' என்றான்.

''சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கினைக் கடைப்பிடித்து, விரைவில் எம்மை அடைவாயாக!'' என்று அருளி
மறைந்தார் மகா கணபதி. அப்படியே செய்யத் துவங்கினார் புருசுண்டி.

அவரின் பெருமையை நாரதர் மூலம் அறிந்த தேவேந்திரன், புருசுண்டியைத் தரிசிக்க
பூலோகம் வந்தான். தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக, யாசகனாக
வந்து நின்றான் தேவேந்திரன். எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டி
யிடம், கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான்.

அதன்படி, கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் தந்தருளினார் புருசுண்டி. விநாயகர் தந்ததையே
மனமுவந்து தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில், அங்கு தோன்றிய மகா
கணபதி, புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக் கொண்டு, அவருக்குப்
பிறவா நிலையை அருளினார்.

'தவம் சிறந்தது. அதிலும், தவத்தின் பலனையே தானமாகத் தருவது மிகச் சிறந்தது’ எனும் உயரிய தத்துவத்தை இதன் மூலம்
உலகுக்கு உணர்த்தியுள்ளார் ஸ்ரீவிநாயகப்பெருமான்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Feb 2014, 4:54 PM | Message # 15
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தெரிந்த
புராணம்... தெரியாத கதை! :

இந்தபிரம்மா யார்?

இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும்
கடவுளர்களாக முறையே பிரம்மா, விஷ்ணு,
சிவன் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும்
தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு;
அழிக்கும் தொழில் கொண்டவர்
சிவன் என, இவர்களைப் போற்றி
வணங்குகிறது வேதம்.

பிரம்ம வைவர்த்தபுராணம், விஷ்ணு புராணம், சிவ
புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய
புராண நூல்களில் இந்த மூவரின் தோற்றமும்,
அவர்கள் தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும்,
அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப்படுகின்றன.
 
 பன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில்
இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு
கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறு
ஆலயங்கள் கிடையாது. சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள்
சைவர்கள் எனப்படுகின்றனர்.

விஷ்ணுவுக்குத்தனி வழிபாடு செய்பவர்கள் வைணவர்கள்
எனப்படுகின்றனர். பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும்
சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல
ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து ஹரிஹர
ஸ்வரூபமாகப் பூஜிக்கப்படுகின்றனர்.
'
ஹரியும்
ஹரனும் ஒன்று’ என்ற வாசகம்
உண்டு. ஆனால், பிரம்மாவை தனியாகவோ
அல்லது மூவருடன் சேர்த்தோ வழிபாடு செய்ய எந்த
சம்பிரதாயத்திலும் விளக்கங்கள் இல்லை.
 
முப்பெரும்
கடவுளர்களில் ஒருவராகப் பேசப்படும் இந்த பிரம்மா யார்?
அவர் எங்கிருந்து தோன்றினார்? அவருக்கு ஏன் தனி வழிபாடு
இல்லை?

 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Feb 2014, 4:55 PM | Message # 16
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தேவி மஹாத்மியம் என்கிற தேவி புராணத்தில்
ஒரு சம்பவம் விளக்கப்படுகிறது.
 
ஒரு யுகத்தில் மஹாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும்
நீரில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட
எந்த ஜீவராசிகளும், தாவர, விலங்கினங்களும் காணப்படவில்லை.
பார்க்குமிடமெல்லாம் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில்
ஒரு சிறு ஆலிலை மிதந்து
வந்தது. அதன் மேல் பகவான்
ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒரு குழந்தை வடிவில்
மிதந்துகொண்டிருந்தார்.
 
'நான் யார்? என்னைப் படைத்தவர்
யார்? எதற்காகப் படைத்தார்?’ என்ற சிந்தனையுடன் ஸ்ரீமஹாவிஷ்ணு
அனந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூல சக்தி
'மஹாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள்.
 
சங்கு,
சக்கரம், கதை, தாமரை ஆகிய
சின்னங்கள் அவள் கரங்களில் ஒளிர்ந்தன.
ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி,
மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா,
மேதா, ஸ்வேதா, ஸிதா, தந்த்ரா
ஆகிய 11 தேவியரும் காட்சி தந்தனர். அப்போது
மஹாதேவி அசரீரியாக அருள்வாக்கு தந்தாள்.
 
''மஹாவிஷ்ணுவே!
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும்
ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை
அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும்
அழியாமல் நிற்பாய். ஆதிசக்தியின் அம்ஸமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும்
ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய்.

சத்வ குணங்களின் பரிமாணமாகநீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து (தொப்புள்)
பிரம்மன் தோன்றுவான். அவன், ரஜோ குணங்களின்
பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் சிருஷ்டி
செய்வான். அவன் அழியாத பிரம்மஞானத்தின்
மொத்த உருவமாக இருந்து, மீண்டும்
அண்ட சராசரங்களை உருவாக்குவான்.

அவனது புருவ மத்தியில்ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன்
வடிவம்தான் சிவன். அவன், தமோ
குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று,
ஸம்ஹாரம் எனும் அழிக்கும் தொழிலை
ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல்,
அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும்
பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள்
மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும்
என் அம்ஸங்களான தேவிகளும் செயலாற்றுவோம்'' என்று அருளினாள் தேவி.

 

 



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Feb 2014, 4:56 PM | Message # 17
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன்
தோன்றிய வரலாறு மேற் கண்டவாறு
விளக்கப்படுகிறது.
விஷ்ணுவின்
நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு
வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத்
தாண்டி, அது நீண்டு வளர்ந்தது.

அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரைமலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன்
தோன்றினார். அப்போது அவருக்கு ஐந்து
முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின்னர்
சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அதனால் பிரம்மன் 'நான்முகன்’
என்றழைக்கப்பட்டார். அவருக்கு 'சதுரானன்’ என்ற பெயரும் உண்டு.
 
தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும்,
அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத்
தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி
மற்றும் மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார். சிருஷ்டி தொடங்கியது.

முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாகஅத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர்,
கௌதமர், காஸ்யபர், ஆங்கீரஸர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர்.
அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி,
கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன்
என சிருஷ்டி தொடர்ந்தது.
 
- இது,
தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பிரம்மனின் தோற்றம் பற்றிய புராணக்
கதை.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Feb 2014, 4:58 PM | Message # 18
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
'மனு ஸ்மிருதி’ எனப்படும் சாஸ்திரத்தில் பிரம்மன் தோன்றிய வரலாறு வேறு
விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
 
''பிரளயத்தின்
முடிவில் அண்டங்களை விடப் பெரியதாக ஒரு
முட்டை வடிவம் தோன்றியது. அது,
தங்கத்தைவிடப் பிரகாசமாக ஜொலித்தது. பல்லாயிரம் வைரங்கள்போல் அது மின்னியது. அண்ட
சராசரங்களை உருவாக்கும் அத்தனை சக்தியும், அதற்குரிய
தவமும் ஞானமும் அந்த முட்டையில்
அடங்கியிருந்தது.

பிரளய வெள்ளத்தில் விழுந்தமுட்டை வெடித்தது. அதிலிருந்து ஐந்து முகத்துடன் ஜெகஜ்ஜோதியாக
ஒரு தேவன் தோன்றினார். அவர்தான்
பிரம்மதேவன். அவரிடமிருந்து சிருஷ்டி தொடங்கியது. பிரமாண்டமான அந்த முட்டை உடையும்போது
ஒரு சத்தம் உருவானது.

அதுவே'ஓம்’ எனும் பிரணவம். அந்த
ஓம்கார நாதத்திலிருந்து மூன்று சப்த அலைகள்
வெளிப்பட்டன. அவை 'பூர்’, 'புவ’,
'ஸுவஹ’ என்பன. இந்த நாதத்திலிருந்தே
பூலோகம், புவர்லோகம், ஸுவலோகம் ஆகிய மூன்று உலகங்களும்
தோன்றின. மனு ஸ்மிருதியிலும், வாமன
புராணத்திலும் பிரம்மனின் தோற்றம் பற்றி மேற்கண்ட
விபரங்கள் தரப்பட்டுள்ளன.
 
இந்த எல்லா புராணங்களிலிருந்தும் ஓர் உண்மை
புலனாகிறது. 'பிரம்மதேவன்’ ஒரு ஸ்வயம்பூ. அதாவது,
தானாகத் தோன்றிய தெய்வம் என்பதே
அந்த உண்மை. அவர் அண்ட
சராசரங்களில் உள்ள அத்தனை ஆற்றல்,
அறிவு, ஞானம் ஆகியவற்றின் மொத்த
உருவம்.

அவர் மூலம் ஒன்றுபத்தாகி, பத்து நூறாகி, நூறு
ஆயிரமாகி, அது லட்சமாகி, கோடியாகும்.
பிரம்ம சிருஷ்டி ஒவ்வொரு விநாடியும் நிகழ்ந்துகொண்டே
இருக்கிறது. இந்த ஞானத்தையும், ஆற்றலையும் ஒரு கருவறைக்குள் அடைத்து
வைக்க முடியுமா? அப்போது சிருஷ்டி நிகழ்வது
தடைப்படாதா? அதனால்தான், பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லை
என பல்வேறு ஞானிகள் பல்வேறு
காலகட்டங்களில் விளக்கியுள்ளனர்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Tuesday, 04 Feb 2014, 4:59 PM | Message # 19
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
'ஞானம்’
என்பதற்கு வடிவமோ, வர்ணமோ, வாசனையோ
கிடையாது. அதற்குப் பரிமாணங்களும் இல்லை.அதனால், அதனை
ஓர் ஆலய உருவத்தில் அடக்க
முடியாது. ஆகவே பிரம்மன், உருவ
வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது.

ஒவ்வொருமனிதனும் ஞானத்தைத் தேடும்போது, அவனுள் அடங்கும் சக்தியை
பிரம்மஞானம் என்கிறோம். பிரம்மனுக்குரிய ஆலயம், ஞானிகளின் உள்ளம்தான்.
'அழியாத சத்யமும், பிறழாத தர்மமுமே பிரம்மஞானம்’
என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.
 
ஒருமுறை
சிவபெருமானின் திருவடி, திருமுடியைக் கண்டறிய பிரம்மாவும் விஷ்ணுவும்
முயன்றனர். வராக வடிவில் பூமியில்
ஆழச் சென்ற விஷ்ணு, சிவபெருமானின்
திருவடியைக் கண்டறிய முடியவில்லை என்பதை
ஒப்புக்கொண்டு அவரைச் சரணடைந்தார். ஆனால்
பிரம்மனோ, திருமுடியைக் கண்டறிந்ததாகப் பொய் கூறினார். அப்போது
சிவபெருமான், பிரம்மனுக்குப் பூவுலகில் ஆலய வழிபாடு இருக்காது
என சாபமிட்டார்.
 
இப்படியொரு
கதை அருணாசலேஸ்வர புராணத்திலும், சிவபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிவபெருமான்
பிரம்மனைச் சபித்தார் என்பதை அறிவுபூர்வமான கண்ணோட்டத்
துடன் பார்த்தால், ஒரு தத்துவம் புரியும்.
'பொய் வழியில் யாரும் சிவனைக்
காண முடியாது. பொய் வழியால் சிவனை
அறிந்ததாகக் கூறுபவர்கள் உலகோரால் பாராட்டப்பட மாட்டார்கள்’ என்பதே இதன் ஆழ்ந்த
கருத்து.
 
யார் பிரம்மன், அவர் எப்படித் தோன்றி
னார் என்பதை ஆராய்ந்து அறியும்போது
ஒரு தெளிவு ஏற்படுகிறது. யார்
பிரம்மன் என்பதைவிட, எது பிரம்மம் என்பதைக்
கண்டறிவதே உயர்ந்த ஞானம். பிரம்மன்
எப்படித் தோன்றினார் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, 'ஞானம்’ எப்படித் தோன்றுகிறது,
அதனை அடையும் வழி எது
என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 
சத்யமே
ஆன்மிகம்! தர்மமே தெய்விகம்!
 
இதனை உணர்ந்தால், அவன் பிரம்மஞானி ஆகிறான்.
அவனை வழிபடுவதே பிரம்மதேவன் வழிபாடாகும்.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Wednesday, 05 Feb 2014, 3:50 PM | Message # 20
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Pattu maamy ..... ungal puraana kathaikalukku nanri
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
Search: