தெரிந்த புராணம் தெரியாத கதை - Page 3 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Laya, Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
தெரிந்த புராணம் தெரியாத கதை
PattuDate: Wednesday, 05 Feb 2014, 4:48 PM | Message # 21
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அகலிகையை கௌதமர் மணந்த கதை!

அகலிகை! பஞ்ச கன்னியருள் ஒருத்தியான இவள், மகரிஷி கௌதமரின் தர்மபத்தினி. இந்திரனால் கபடமாக வஞ்சிக்கப்பட்ட அகலிகையைக் கல்லாக மாறுவதற்கு கௌதமர் சாபமிட்டார். பின்பு ராமரால் சாப விமோசனம் பெற்று, அகலிகை மீண்டும் தன் கணவருடன் இணைந்தாள் என்பதை நாம் அறிவோம்.

தவ வலிமை வாய்ந்த கௌதமர் எப்படி அகலிகையைக் கரம் பற்றினார் என்பதைப் பார்ப்போம்.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டது காமதேனு என்கிற தெய்வீகப் பசு. அதை மகரிஷிகள் எடுத்துக் கொண்டனர். அடுத்ததாகத் தோன்றிய உச்சைசிரவஸ் என்ற வெண்ணிறக் குதிரையை மஹாபலி சக்ரவர்த்தி கைக்கொண்டான். பிறகு வெளிவந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பாரிஜாத மரத்தையும் தேவேந்திரன் ஏற்றான்.

பின்னர், அப்ஸர ஸ்திரீகள் புடைசூழ மகாலட்சுமி தோன்றினாள். அவளையும் கௌஸ்துபம் என்ற ரத்தின ஹாரத்தையும் ஸ்ரீமந் நாராயணன் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு மயக்கம் தரும் மதுவுக்குத் தலைவியான வாருணிதேவி தோன்றினாள். அவளை ஹரியின் அனுமதியுடன் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னும் பாற்கடலைத் தொடர்ந்து கடைந்தபோது, திவ்யாலங்கார பூஷிதையாக அழகான கன்னியொருத்தி தோன்றினாள். மேகக் கூட்டத்தில் ஒளிரும் நட்சத்திரமாகப் பிரகாசித்த அவள்தான் அகலிகை!

அவளுடைய அழகில் மதிமயங்கிய இந்திரன், அவளைத் தன்னுடையவள் ஆக்கிக் கொள்ள விரும்பினான். அதே நேரம் மகா தவசீலரான கௌதம முனிவரும் அகலிகையைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார்.

இந்த இருவரும் தங்கள் விருப்பத்தைப் பிரம்மதேவரிடம் தெரிவித்தனர். உடனே பிரம்மதேவர், 'ஒரு போட்டியின் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்!’ என்று கருதி, இருவரையும் நோக்கி, ''மகத்தானவர்களே... உங்கள் ஆசை நியாயமானதே! ஆனால், உங்களில் ஒருவர் மட்டுமே இந்த கன்னியை அடைய முடியும்.

நான் கூறும் நிபந்தனையை ஏற்று, யார் அதை முதலில் நிறைவேற்றுகிறீர்களோ அவருக்கே இவள் உரியவள். உங்களில் யார் முன்னும் பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!'' என்றார்.

அதைக் கேட்ட தேவேந்திரன், ''முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட பசுதானே... இதோ, இப்போதே புறப்படுகிறேன். மூவுலகிலும் அப்படிப்பட்ட பசு எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து, வணங்கி இந்த அழகியின் கரம் பற்றுகிறேன்!'' என்று கூறித் தனது மேக வாகனத்தில் ஏறி உலகங்களைச் சுற்றி வரப்புறப்பட்டான். கௌதமரோ பிரம்மனின் நிபந்தனையைக் கேட்டுச் சோர்வடைந்தார்.

'முன்புறமும் பின்புறமும் முகங்கொண்ட பசு எங்குள்ளது? அதை இதுவரை நான் கண்டதே இல்லை. நான் எப்படி அதைக் காண முடியும்?’ என்று எண்ணியவர், 'சரி! நம்மால் ஆவது எது? ஈசன் விட்ட வழி!’ என்று தீர்மானித்து ஈஸ்வர தியானத்தில் அமர்ந்தார்.

அப்போது நாரதர் அங்கே வந்தார். கௌதமர் அவரை வரவேற்று உபசரித்தார். அப்போது நாரதர், ''மகரிஷி! தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசையையும் பிரம்மதேவரின் நிபந்தனையையும் நான் அறிவேன், வாருங்கள். அருகில் ஒரு கோசாலை உள்ளது. அங்கே சென்று முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு உள்ளதா என பார்க்கலாம்!'' என்றார்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Wednesday, 05 Feb 2014, 4:49 PM | Message # 22
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
இதைக் கேட்டு கௌதமர் சந்தோஷமடைந்தார். பசுக்கள் நிறைந்த அந்த கோசாலைக்கு இருவரும் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் தேடிய பசு தென்படவில்லை. கௌதமர் மனம் சோர்ந்தார். நாரதரைப் பார்த்து, ''கர்ப்பத்தில் உண்டாகும் மாற்றங்களினால் அபூர்வமாக ஒன்றிரண்டு பசுக்கள் இரண்டு தலை கொண்ட கன்றை ஈனுவதைக் கண்டுள்ளேன். ஆனால், முன்னும் பின்னும் சிரங்கள் உள்ள பசுவை நான் கண்டதில்லை!'' என்றார் விரக்தியுடன்.

தான் விரும்பிய அகலிகை தனக்குக் கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஆதங்கம் ஒரு புறம். போட்டியில் இந்திரன் வெற்றிகண்டால், அதனால் தான் அடையவிருக்கும் சிறுமை மறுபுறம். இதை எண்ணி பெரும் கலக்கத்தில் இருந்தார் கௌதமர்.

அப்போது, ''கௌதமரே! கவலைப்படாதீர். நான்முகன் கூற்று தவறாகாது. அதோ பாருங்கள், முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட கோமாதா!'' என்று குதூகலத்தோடு ஒலித்த நாரதரின் குரலைக் கேட்ட கௌதமர், அவர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்.

அங்கே பசு ஒன்று, கன்றை ஈன்று கொண்டிருந்தது. பசுவின் பின்புறம் வெளிப்பட்ட கன்றின் முகம் பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. முன்னும் பின்னுமாக இரு பசு முகங்கள் தெரிவதுபோல் அந்தக் காட்சி சட்டென உணர்த்தியது.

அதைக் கண்டு உளம் பூரித்த கௌதமர், நாரதருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, விரைந்து சென்று அந்தப் பசுவை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்தார். பின்னர் நாரதர் உடன்வர, பிரம்மதேவரைச் சந்தித்து, முன்னும் பின்னும் முகம் கொண்ட பசுவைத் தான் பார்த்து வந்த விவரத்தைக் கூறினார். நாரதரும் கௌதமரின் கூற்றை ஆமோதித்தார். அதைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த பிரம்மன், அகலிகையை கௌதமருக்கு வேதமுறைப்படி மணம் முடித்து வைத்தார்.

அப்போது, மூவுலகைச் சுற்றி வந்தும் பிரம்மன் குறிப்பிட்ட பசுவைக் காண முடியாமல் மனச் சோர்வுடன், பிரம்மனது இருப்பிடத்தை இந்திரன் அடைந்தான். அங்கே கௌதமர், பிரம்மனின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றி பெற்று அகலிகையின் கரம் பற்றி ஆனந்தமாக இருப்பதைக் கண்டான்.

'எனக்குக் கிடைக்க வேண்டிய இந்த எழிலணங்கு போயும் போயும் மரவுரியணிந்து, தாடியும் மீசையுமாக ரோமக் காடாக இருக்கும் இந்த முனிவருக்கு மனைவியாகிவிட்டாளே! இது எந்த வகையில் நியாயமாகும்? இவள் இருக்க வேண்டியது தேவலோகமல்லவா?’ என்று பொருமினான்.

ஆயினும் அகலிகை மீது இந்திரன் கொண்ட வேட்கை சற்றும் தணியவில்லை. அது அவனுள் கனன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் விளைவுதான் பின்னர் ஒருநாள் அவன் அகலிகையின் இருப்பிடத்துக்குச் சென்று நெறிதவறி நடந்த அந்தச் செயல்!



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
kvsureshDate: Wednesday, 05 Feb 2014, 4:55 PM | Message # 23
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi pattu,
thanks ma nalla purana kadhaigalukku nandri. hands


Regards and Thanks

Kothai Suresh
 
PattuDate: Thursday, 06 Feb 2014, 5:07 PM | Message # 24
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline


தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தலைகுனிந்த பரமாத்மா




பரமாத்மாவான குழந்தை கிருஷ்ணன் படுசுட்டி. அவனைக் கட்டுப்படுத்துவது
யசோதாவின் முக்கிய சவால்களில் ஒன்று. உறியில் இருக்கும் வெண்ணெய்யைத்
தனக்குத் தெரியாமல் கிருஷ்ணன் எடுப்பதைத் தடுக்க யசோதா ஒரு காரியம்
செய்தாள். உறியில் சில மணிகளைக் கட்டிவைத்தாள். வெண்ணெய்யை எடுக்கக்
கிருஷணன் முயன்றால், மணிகள் அசைந்து ஒலித்து காட்டிக்கொடுத்து விடுமல்லவா!
அதற்காக.

அன்றைக்கும் வழக்கம்போல் கிருஷ்ணனை உரலில் கட்டிவைத்திருந்தாள் யசோதா.
சமையலறைக்குள் அவள் மும்முரமாக இருந்தபோது, கிருஷ்ணனுக்கு ஒரு திட்டம்
தோன்றியது. சுற்றும்முற்றும் பார்த்தான். உரலிலிருந்து தன்னை
விடுவித்துக்கொண்டு (பரமாத்மா ஆயிற்றே!) உறியின் அருகே சென்றான்.

மணிகளைப் பார்த்துக் கேட்டான், "மணிகளே.. நான் யார் தெரியுமா? ".

மணிகள் பவ்யத்துடன் கூறின, "தாங்கள் பரமாத்மா ஆயிற்றே ".

உடனே மணிகளுக்குக் கட்டளையிட்டான் கிருஷ்ணன், "மணிகளே.. நான் வெண்ணெய் சாப்பிடப்போகிறேன். யாரும் ஒலிக்கக் கூடாது!”

"அப்படியே ஆகட்டும்எ"ன்றன மணிகள்.

உரலை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்தான். அதன் மீது ஏறினான். உறியில்
கைவைத்தான். அதிலிருக்கும் பானையில் துழாவினான். வெண்ணெய்யை கைநிறைய
எடுத்து வாயில் வைக்கப்போனான், அப்போது பார்த்து மணிகள் கணகணவென்று
ஒலித்தன. ஓடிவந்த யசோதா கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து
நையப்புடைத்தாள்.

யசோதா மீண்டும் சமையல்கட்டுக்குப் போன பின், மணிகளைப் பார்த்துக் கேட்டான்
கிருஷ்ணன், "மணிகளே, ஒலிக்க மாட்டோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு
ஒலித்தீர்களே, சத்தியத்தை மீறிய பாவத்துக்கு என்ன தண்டனை தெரியுமா? "

"தெரியும் ஸ்வாமி! ஆனால், பகவானுக்கு நைவேத்யம் ஆகும்போது ஒலிப்பதுதானே
எங்கள் சுதர்மம்? அதற்காகத்தானே பிறப்பெடுத்தோம்? சுதர்மத்தை மீறுவது
பெரும் பாவமல்லவா! அதற்கான தண்டனையும் அதிகமல்லவா" என்று பதில் கூறின
மணிகள். பரமாத்மா தலைகுனிந்தாராம்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Friday, 07 Feb 2014, 0:06 AM | Message # 25
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi Maamy
Unga puraana kathaikal read panrathukku arumaiya irukku.... innum niraiya pakirnthu kollunga...
anaivarum therinthu kondu payan perattum....
 
PattuDate: Friday, 07 Feb 2014, 5:02 PM | Message # 26
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பெண் இனத்துக்கே உதாரணமாகவிளங்கிய குந்திதேவி! 

அதிர்ஷ்டசாலியை ஈன்றெடு; வீரனோ அறிஞனோ வேண்டாம்!'- தன்னை வணங்கி, ஆசி தருமாறு
வேண்டிய நிறைமாத கர்ப்பிணிப் பெண்
ஒருத்திக்கு குந்திதேவி தந்த வாழ்த்து இது!

பாரதப் போரில் வீரர்களது சூரத்தனம்
பயனளிக்கவில்லை. அகங்காரம் மேலிட, அண்ணன்- தம்பி
என்று பார்க்காமல், வீரத்தை வீணடித்தார்கள். அறிஞர்களது
செயல்பாடுகளும் திருப்தி அளிக்கவில்லை.

கௌரவ அவையில் திரௌபதியின்துன்பத்தைக் கண்டும் பீஷ்மர், துரோணர்,
விதுரர் முதலான அறிஞர்கள் மௌனமாகவே இருந்தனர். இதுபோன்ற சம்பவங்களைக் கண்டு நொந்து போன
குந்திதேவியின் மன ஆதங்கமே இப்படியொரு வாழ்த்தாக வெளிப்பட்டது!

குந்திபோஜன் எனும் மன்னனுக்கு மகளாகப்
பிறந் தவள் குந்திதேவி. தன்
மகளுக்கு, 'பிருதா' என்று பெயரிட்டார்
குந்திபோஜன். எனினும், 'குந்தி' என்ற பெயரே
பிரசித்தம் ஆயிற்று. இளம் வயதிலேயே நன்னடத்தையுடன்
திகழ்ந்தாள் குந்தி!ஒருமுறை, குந்திபோஜனின்
அரண்மனைக்கு விஜயம் செய்தார் துர்வாச
முனிவர்.

அவரை சிறப்புற வரவேற்றுஉபசரித்தார் குந்திபோஜன். அத்துடன், முனிவருக்குத் தங்கும் இடம் அளித்து,
அவருக்குப் பணிவிடை செய்யும் பொறுப்பைத்
தன் மகளிடம் ஒப்படைத்தார்.

சிறுமியாக இருந்தாலும் பக்தியுடன் உளப்பூர்வ மாகத் தனக்குப் பணிவிடை
செய்த குந்தியின் செயல்பாடு, துர்வாசரை நெகிழச் செய்தது. ''என்ன
வரம் வேண்டும்? கேள்!'' என்றார் முனிவர்.

அதற்கு, ''தாங்களும் என் தந்தையும் என்னிடம்
மிகுந்த அன்பு கொண்டவர்கள். தங்களுக்குப்
பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
தவிர, எதுவும் கேட்காமலேயே எனது
தேவைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன.

தங்களிடம் பிரார்த்தித்துப் பெறுவதற்கு எதுவும் இல்லையே!'' என்றுபதிலளித்தாள் சிறுமியான குந்தி. 'தேவைக்கு மேல் சேமிப்பவனை திருடன்'
என்கிறது தர்மசாஸ்திரம். இதை, குந்தியும் அறிந்திருந்தாள்.
குந்தி மறுத்தாலும் அதையும் மீறி அவளுக்கு
ஏதாவது தர வேண்டும் என்று
முனிவர் விரும்பினார்.

எனவே, ''சரி... வரம்வேண்டாம். நினைத்தபோது தேவர்களை வரவழைத்து, அவர்களை உனது கட்டுப்பாட்டில்
இயங்க வைக்கும் மந்திரத்தை உனக்கு ஓதுகிறேன்... அதையாவது
பெற்றுக் கொள்!'' என்று வற்புறுத்தினார்
துர்வாசர்.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 07 Feb 2014, 5:04 PM | Message # 27
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
எதிலும் பற்றற்றவள் குந்திதேவி. எனினும் தனது நலன் கருதி செயல்படும் முனிவரது உள்ளத்தை மகிழ்விக்க, அவரது உபதேசத்தை ஏற்றாள்.

காலங்கள் கடந்தன. பாண்டுவுக்கு மனைவியா னாள் குந்தி. ஒருமுறை கிந்தம முனிவரது சாபத்துக்கு ஆளானான் பாண்டு. இதனால் மனம் வருந்திய பாண்டு, அரசைத் துறந்து காட்டுக்குச் செல்ல ஆயத்தமானான். குந்தியும் அவனைப் பின்தொடர்ந்தாள்; கணவனைப் போல தானும் புலனடக்கத்தை மேற்கொண்டாள்.

துர்வாசரது மந்திரோபதேசம், தெய்வாம்சம் பொருந்திய புதல்வர் களை குந்திதேவிக்குப் பெற்றுத் தந்தது. மாத்ரியின் (பாண்டுவின் மற்றொரு மனைவி) புதல்வர்களையும் சேர்த்து ஐந்து குழந்தைகளுக்கும் தானே தாயானாள்.

பாண்டுவின் மறைவுக்குப் பிறகு புதல்வர்கள் ஐவரையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றாள். ஆம், 'கணவன் இறந்து போனால், அவரது பொறுப்பையும் ஏற்று மனைவியானவள் செயல்பட வேண்டும்' என்ற தர்மசாஸ்திர அறிவுரைக்கு ஏற்ப, குடும்பப் பாரத்தை ஏற்றாள் குந்திதேவி.

பிற்காலத்தில், துரியோதனனால் ஏற்பட்ட அனைத்து இன்னல்களையும் பொறுத்துக் கொண்டாள். மௌனம் கலகத்தை அகற்றும் என்பது தர்மசாஸ்திரத்தின் கூற்று. அரக்கு மாளிகைக்குத் தீயிட்ட துரியோதனனின் சதித் திட்டத்தில் இருந்து புதல்வர்களுடன் தப்பித்த குந்தி, 'ஏகசக்ரா' எனும் நகரில் வசிக்கலானாள். அங்கு வாழ்ந்த மக்கள், பகாசுரன் எனும் அசுரனது கொடுமைகளால் அவதிப்பட்டு வந்தனர்.

தினமும் வீட்டுக்கு ஒருவர், அசுரனுக்கு உணவு பதார்த்தங்களை வண்டியில் சுமந்து செல்ல வேண்டும். உணவுப் பதார்த்தங்களுடன், அதைக் கொண்டு செல்லும் நபரையும் விழுங்கி விடுவான் அசுரன். ஒருவரும் அவனது இருப்பிடத்துக்குச் செல்லவில்லை எனில், அவன் ஊருக்குள் புகுந்து விடுவான்!

இந்த அப்பாவி மக்களை, பகாசுரனிடமிருந்து காப்பாற்ற விரும்பினாள் குந்தி. மகாத்மாக்கள் தங்களது துயரத்தை மறந்து, மற்றவர்களது துயரை துடைப்பார்கள் என்று சாஸ்திரம் சொல்லும். குந்தியும் அப்படித்தான்!
அவளும் அவளின் மைந்தர்களும் பிக்ஷை எடுத்து உண்ணும் அவல நிலை!

ஒரு நாள், அந்த ணர் ஒருவரது வீட்டுக்குச் சென்று பிக்ஷை கேட்டனர் பாண்டவர்கள். ஆனால், அந்தணரது வீடே சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அன்று அவர்களது வீட்டில் ஒருவர், பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டிய முறை. இதையறிந்த குந்தி வருந்தினாள்.

அந்தணரை அணுகியவள்,''தங்களின் ஒரே மகனை பகாசுரனிடம் அனுப்பினால் உங்களின் வம்சம் அழிந்து போகும். எனவே, உங்கள் வீட்டு சார்பாக என் புதல்வர்களில் ஒருவனை அனுப்புகி றேன்!''
என்றாள். கண்ணீரோடு ஒப்புக் கொண்டார் அந்தணர். இதையடுத்து, தன் மகன் பீமனை அனுப்பி வைத்தாள் குந்திதேவி.




Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Friday, 07 Feb 2014, 5:06 PM | Message # 28
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
'அரச போகமோ, மறு பிறவியற்ற
மோட்சமோ வேண்டாம். துன்பப்படுவோரது துயரத்தை நான் ஏற்று, அவர்களை
விடுவிக்கும் வாய்ப்புக் கிடைத்தால்... அதுவே எனக்கு மகிழ்ச்சி'
என்பது நந்திதேவனின் வாக்கு (ப்ராணினாம்... ஆர்த்தினாசனம்).
இந்த உயரிய பண்பை குந்திதேவி
யிடமும் காண முடிந்தது.

உணவுப்பதார்த்தங்களுடன் சென்ற பீமன், அசுரனை
அழித்தான். ஏகசக்ரா நகரவாசிகள் துன்பத்தில்
இருந்து மீண்டனர்.

சுயம்வரத்தில் அர்ஜுனன் வெற்றி பெற்றுவிட... திரௌபதியுடன் பாண்டவ சகோதரர்கள் ஐவரும்
அன்னையைச் சந்திக்க வந்தனர். வாயிலில் நின்றபடி, ''இன்று ஒரு பிக்ஷை
எடுத்து வந்திருக்கிறோம்!'' என்றனர். திரும்பிப் பார்க்காமலேயே... ''ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்!''
என்றாள் குந்திதேவி.

பின்னர்... தன் மைந்தர்கள், 'பிக்ஷை'
என்று சொன்னது திரௌபதியையே என்பதை
அறிந்ததும் மனம் கலங்கினாள். கூறிய
வார்த்தையைத் திரும்பப் பெறுவது ஸனாதன தர்மத்துக்கு
எதிரானது. அதே நேரம்... 'பெண்ணைப்
பகிர்ந்து கொள்ள கூடாது' என்கிறது
தர்மசாஸ்திரம்.

செய்வதறியாமல் திகைத்தாள் குந்திதேவி! தருமரிடம் ஆலோசித்தாள். சத்தியத்தைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தினார் தருமர். ஆனால், திரௌபதியின்தந்தையான துருபத மன்னனோ தர்மசாஸ்திரப்படி
நடக்குமாறு நிர்பந்தித்தார்.இந்த நிலையில், அங்கு
வந்த வியாச முனிவர், திரௌபதியின்
முற்பிறவிக் கதையை விவரித்தார்.

அத்துடன்,''ஈசன், 'ஐந்து பேர் உன்னை
மணப்பார்கள்' என்று திரௌபதிக்குத்
தந்த வரம், குந்திதேவியின்
மூலம் பலித்தது; குந்தியின் வாக்கும் உண்மை என்பது நிரூபணமானது!''
என்று குந்தியை ஆறுதல்படுத்தினார் வியாசர்.
பாண்டவர்களது அஞ்ஞாதவாச காலத்தில், குந்திதேவி அஸ்தினாபுரத்தில் இருந்தாள்.

க்ஷத்திரிய தர்மத்தில் நிலைத்து நிற்கும்படி ஸ்ரீகிருஷ்ணர் மூலம் தன் புதல்வர்களுக்குஅறிவுரை வழங்கினாள். 'க்ஷத்திரிய குலப்பெண்கள் எதற்காக புதல்வர்களை ஈன்றெடுக்கிறார்களோ...
அதை செயல்படுத்தும் தருணம் வந்து விட்டது!'
என்று வரப்போகும் போர் குறித்து சூசகமாகத்
தெரிவித்தாள் (யதர்த்தம் க்ஷத்ரியா சூதெ தஸ்ய காலோயமாகத:).
ஆம், அரசியல் அறிவும் தீர்க்க
தரிசனமும் ஒருங்கே குடியிருந்தன குந்திதேவியிடம்!

பாரதப் போர் முடிந்து, தர்மருக்கு
பட்டாபிஷேகம் நடந்தது. ராஜ மாதாவாக இருக்க
வாய்ப்பு கிடைத்தும் குந்திதேவி ஏற்கவில்லை. புத்திர சோகத்தில் தவிக்கும்
காந்தாரி போன்றவர்களை ஆறுதல்படுத்தி, சேர்ந்து வாழுமாறு அவர்களை வற்புறுத்தினாள். இறுதியாக
வனவாசம் ஏற்கவும் தயாரானாள் குந்திதேவி.''தங்களது முடிவு இதுவானால்...
எங்களை எதற்காக போரில் ஈடுபடத்
தூண்டினீர்கள்? இப்படியரு பேரழிவை நிகழ்த்தாமல் இருந்திருக்க
லாமே? இத்தனை சிரமங்களும் எதற்காக...
உயிரினும் மேலான உங்களைப் பிரிவதற்காகவா?''
என்று பீமன் வினவினான்.

அதற்கு, ''நீங்கள் க்ஷத்திரிய தர்மத்தில்
ஊன்றி இருக்கவும். அறத்தை நிலைநாட்டி நல்லாட்சியை
அமைப்பதற்காகவும்தான் இத்தனை சிரமங்களும்! எனக்கு
அரச போகங்களில் பற்று இல்லை. தவத்தில்
ஆழ்ந்து கணவனுடன் இணைய விரும்புகிறேன்!'' என்றாள்
குந்திதேவி.

பொறுப்பு, பொறுமை, வாய்மை, பிறரது
துன்பத்தைத் தீர்க்க துடிக்கும் நல்ல
மனம், இக்கட்டான தருணங்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம், தீர்க்கதரிசனத்துடன் கூடிய அறிவுரைகள் வழங்கும்
திறன்... என்று பெண்ணினத்துக்கே முன்னுதாரணமாகத்
திகழும் குந்திதேவியின் சரிதம், நம் அனைவருக்கும்
வாழ்க்கைப் பாடம்!

இல்லறத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும் ஆசையையும் அகங்காரத்தையும் விலக்கி வாழ்வில் நலம் பெற, இன்றைய பெண்களுக்கு குந்திதேவியின் கதை நிச்சயம் உதவும்!



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
NathasaaDate: Tuesday, 11 Feb 2014, 4:17 PM | Message # 29
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi maamy smile
pakirnthu konda anaithu puraana kathaikalukkum nanri
 
PattuDate: Tuesday, 11 Feb 2014, 5:09 PM | Message # 30
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline


ஜெய் சீதாராம்!




இது அயோத்தி!

ராவண வதம் முடிந்து, நாடு திரும்பி, பட்டாபிஷேகம் நடந்து விட்டது. வந்த
விருந்தினர்கள், அனைவரும் திரும்பிவிட்டார்கள், ஹனுமனைத் தவிர. ஏன்?

‘தங்களை தரிசித்தபடி தங்கள் திருநாமத்தை ஜபித்தபடி, இங்கேயே இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டான் ஹனுமன். ராமனும் சம்மதித்துவிட்டான்.

பிரம்மச்சர்யம், ஞானம், ஆற்றல், வீரம், சாதுர்யம், பக்தி... என்று
விரும்பத்தக்க குணங்களின் கூட்டாக இருந்தாலும் அடக்கமே உருவாக, பணிவே
தோற்றமாக விளங்கிய ஹனுமனின் செயல், ராமனை இளக்கியது. தொண்டுக்கு ஒரு
தூயவனாய், பலனை எதிர்பார்க்காத பவித்ரமாய் திகழ்கிறான். அதனால், வெண்ணெய்
இளகுவதுபோல் ராமனின் இதயமும் இளகியது. அதைக் கவனித்துதான் சீதையும் கேள்வி
எழுப்பினாள்.

“பிரபு, தாங்கள் இன்னமும் தங்களை ஒளித்துக்கொள்ள வேண்டியது அவசியமா? தங்களை யாரென்று வெளிப்படுத்திக்கொள்ளலாமே...!”

“ஆம் தேவி. வெளிப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். என்னவென்று வெளிப்படுத்த?
அதைத்தான் யோசிக்கிறேன்...” என்று மர்மமான புன்னகையை அடுத்துச் சொன்னான்
கருணையே வடிவான காகுத்தன்!

“தேவி, இந்த ஹனுமன் எந்தவிதமான களங்கமும் இல்லாதவன்; பரிபூரண ஞானத்தை
அடையத் தகுந்தவன்; நம்மிடம் மாசில்லாத பக்தி கொண்டவன்; பலன் கருதாது பணி
செய்யும் பெரும் யோகி; இவனுக்கு நீ ஏன் தத்துவோபதேசம் செய்யக்கூடாது?”

சீதையின் முகம் ஆனந்தத்தால் விகசித்தது. ஸ்ரீராமனை தன் விழிகளால் நோக்கிச்
சொன்னாள்: “தங்கள் நோக்கம் புரிகிறது பிரபு. நானும் உபதேசிக்க வேண்டும்
இல்லையா?” என்று கேலி இழையோடக் கேட்டவள், சொல்ல ஆரம்பித்தாள்.

அந்த ‘உம்’காரத்தில் ஒளிந்திருக்கும் உட் பொருள்தான் என்ன? பெருமானும்
தேவியும் உரிமையால் பேசிக்கொள்வதன் பொருள் புரியாமல், இலக்குவனும் ஹனுமனும்
பார்த்தபடி நின்றார்கள்.

“ஹனும! ஸ்ரீராமனின் திருவுள்ளம் உன் மேல் கனிந்திருக்கிறது. அவர் யார்?
அவர்தான் பரம் பொருள்! அனைத்துமாகவும், அனைத்துக்குள் ஊடுருவியுள்ள
உட்பொருளாகவும், அவற்றில் பந்தப் படாமலும் இருக்கும் முதற்பொருள்.
மாறுதலற்றவர். அவருடைய சக்தியின் விசேஷமாகவே நான் செயல்படுகிறேன் என்பதை
அறிந்துகொள்வாயாக...”

சீதை பேசப்பேச, லக்ஷ்மணன் கரங்குவித்து நின்றான். ஹனுமன், மேலும் பவ்யமாக வணங்கிக் கேட்க ஆரம்பித்தான்.

ஜனகனின் மகளாக உலவிய சீதை, மாயாஸ்வரூபிணி. பரம் பொருளின் செயல்கள் அவள்
மூலமாகவே நிகழ்கின்றன என்பதை அதுவரை உணர்ந்திராததால், ஆச்சர்யமும்
பிரமிப்புமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் இருவரும்.

சீதையைத் தொடர்ந்து ஸ்ரீராமனே பேச ஆரம்பித்தான்:

“ஹனும, பரம்பொருளான ஒரே ஆத்மாதான் எல்லா வடிவங்களிலும் தனித்தனி ஆத்மாவாகத்
தோன்றுகிறது. உண்மையில் இருப்பது ஒன்றுதான். வெவ்வேறாகத் தோன்றுவது மாயை
காட்டுகின்ற அற்புதம்! இதை உணர்ந்து கொள்பவனே என் பக்தன். அவனே என்னை
உணர்கிறான். இதைப் புரிந்து கொள்ளாத எந்த சாஸ்திர அறிவும், பூஜைகளும்,
தவங்களும் என்றும் என்னை அடைய வைக்காது.”

பெருமானும் பிராட்டியும் சொல்லச் சொல்ல வணக்கமுடன் கேட்டுக் கொண்டிருந்தான் ஹனுமன். தேவி கேட்டாள்:

“பிரபு, தாங்கள் ஹனுமனுக்கு உபதேசம் செய்ய நினத்ததது சரி. என்னையும் சொல்லப் பணித்தீர்களே, அது ஏன்?”

குறும்புச் சிரிப்புடன் சொன்னான் ராமன்:

“தேவி, ஹனுமன் பரமபக்தன், அவனுக்கு என்னுடைய அருள் பரிபூரணமாகக்
கிடைக்கும். ஆனால், உன்னுடைய அருளும் அவனுக்குத் தேவை. மாயாஸ்வரூபிணியான
நீயே அவனுக்கு உபதேசம் செய்து, குருவாகவும் ஆகிவிட்டாய். இனி வேறு எது அவனை
தடுமாற வைக்க முடியும்?” சீதை தொடர்ந்து கேட்டாள்:

“அப்படியானால், தாங்களும் ஏன் உபதேசம் செய்தீர்கள்?”

“புரியவில்லையா? யார் மாயைக் கடந்து நிற்கிறார்களோ, யார் ஞானத்தை
எய்திவிட்டார்களோ, அவர்கள் முன் பரம்பொருள் தாமாகவே, குருவாக வந்து
குடிகொள்ளும். சீடனின் பக்குவமே குருவை அவனிடம் சேர்ப்பிக்கிறது.
அதனால்தான், நானும் உபதேசித்தேன்.”

ஹனுமனின் விழிகளில் ஆனந்தப் பரவசம்!

ஸ்ரீராமனின் கருணைதான் எவ்வளவு பெரியது? நினைத்த மாத்திரத்தில் எதையும்
செய்யும் வல்லமை கொண்டவன். தன்னையும் ஒரு பொருட்டாகக் கருதி கணையாழி
தந்தனுப்பினான். அவன் தேவியோ, மரத்தடியில் ஏதுமே அறியாத பெண்போல கண்ணீர்
சிந்தி இளைத்தாள். தான் செய்த உதவியை எண்ணி மகிழ்வதாகச் சொல்லி
பூரித்தாள்...

கடல் கடந்தது, போர்க்களம், ராவணன் மரணம், பட்டாபிஷேகம்... என்று அடுத்தடுத்த சம்பவங்கள், சீடனின் மனத்திரையில் ஓடின...

“எல்லாம் செய்ய வல்ல அவர்கள், என்னை ஒரு கருவியாகக் கொண்டு, என் மூலமே
அந்தச் செயல்களைச் செய்தார்கள். ஆனால், நான் செய்ததாகச் சொல்லி, என்னைப்
புகழ்ந்தார்கள். ஆ... தன்னை ஒளித்துக்கொண்ட இந்தத் தெய்விகத்தின் சக்திக்கு
முன்னால், நான் இன்னமும் குழந்தைதான்...”

ஹனுமனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. தன்னை
மறந்து, ‘ஜெய் சீதாராம்’ என்று பாட ஆரம்பித்தான். கணீரென்று ஒலித்தக்
அந்தக் குரல், திசையின் முகடுகளில் பட்டு, காற்றை நிறைக்க ஆரம்பித்தது.



Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » ஆன்மீகம் / நல்வழி » ஆன்மிகம் » தெரிந்த புராணம் தெரியாத கதை (புராண கதைகள்)
Search: