தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » தர்பார்...நையாண்டி தர்பார்! » தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! (தர்பார் .... நையாண்டி தர்பார்! Second Story Page 50)
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
srkDate: Monday, 17 Feb 2014, 9:19 AM | Message # 11
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
நீயின்றி நானும் இல்லை 

பகுதி - 2
 

காதில் ஒலித்த பாட்டை கேட்டபடியே யாரடா அது நம்ம ஸ்கூட்டியை இடிக்கிறமாதிரி வர்றதுன்னு நினைத்துக்கொண்டே நிமிர்ந்து பார்த்த நந்தினியின் அழகு கண்களில் விழுந்தது நீண்ட நெடிய கால்களே.

கால்களே இவ்வளோ அழகா இருக்கே என்ற வியப்புடன் நிமிர்ந்து பார்த்தவள் இமைக்க மறந்தாள். காதில் ஒலித்த பாடல் இப்போது அவள் இதயத்தில்...........

ஆடி காரிலிருந்து ஆடாமல் இறங்கிய நந்தனும் எதிரில் நின்றிருந்த சந்தனச் சிலையை இமைக்காமல் பார்த்தான். ஹப்பா!!

என்ன அழகு எத்தனை அழகு 
கோடி மலர் கொட்டிய அழகு
 

சில பல யுகங்கள் கடந்தும் இருவரின் மோன நிலையும் கலையவில்லை. செல்வதற்கு வழியில்லாமல் ஆடி காரின் பின்னே நின்று கொண்டிருந்த வாகன ஒட்டி இவர்களின் மோன நிலையில் கடுப்படைந்து எழுப்பிய சத்தத்தில் இருவரின் கண்களும் மனமில்லாமல் பிரிந்தது.

அவசரமாக தன் ஆடி காரில் ஏறி புயலென பறந்த நந்தனின் மனம் ரோடில் கண்ட தேவதையை சுற்றி கொண்டிருந்தது. ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த நந்தினியோ தான் கண்ட கிரேக்க சிலையை மீண்டும் மனதில் நிறுத்தி அளவேடுத்துக் கொண்டிருந்தாள். 

அலை கடலென புரளும் பட்டு போன்ற கேசமும், அடர்ந்த மீசையும், கருப்பிலே வெளுப்பான நிறமும் கண்ணிலே தெரிந்த மின்னலும் இப்போது நினைத்தாலும் அவளின் கன்னங்களை சிவக்க வைத்தது.

உலகப்புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவன வளாகத்தில் நுழைந்த அந்த பளபளக்கும் ஆடி காரை கண்ட வாயில் காப்பாளர் கேட்டை திறந்து விட்டு விரைப்புடன் ஒரு சலியுட் வைத்தார். அதை ஒரு புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட நந்தன் " என்ன அண்ணே எப்படி இருக்கீங்க, உங்க பையன் இப்போ நல்லா படிக்கிறானா? உதவி ஏதும் தேவைப்பட்டா கூச்சப்படாம கேளுங்க ",என்றான்.

"நீங்க இருக்கும் போது எங்களுக்கு எந்த தேவையும் வராது தம்பி, எல்லாமே நாங்க கேக்குறதுக்கு முன்னமே நீங்க செய்துவிடுவீங்களே!! அப்புறம் எங்களுக்கு என்ன குறை தம்பி" என்று குரல் தழுதழுக்க கூறியவரிடம் புன்னகை மன்னனாக விடை பெற்று அலுவலக வாயிலில் சென்று காரை நிறுத்தினான்.

அந்த பன்னாட்டு நிறுவனத்தை ஒற்றை ஆளாய் நின்று தாங்கி இவ்வளவு புகழுடன் நடத்தி வருவது வேறு யாருமில்லை.

பிஸினெஸ் உலகில் எல்லோரும் வியந்து நோக்கும் நந்தனேதான். இந்த சிறிய வயதில் அவன் இந்த நிலைக்கு வர காரணம் அவனது அயராத உழைப்பே உழைப்பே...

வெற்றிக்கொடி கட்டு
மலைகளை முட்டும் வரை முட்டு .....


(பாட்டு தெரியவில்லை.....ஹி..ஹி..)


Life is God's Gift
 
NathasaaDate: Monday, 17 Feb 2014, 9:39 AM | Message # 12
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Quote RAWALIKA ()
நீயின்றி நானில்லை நான் இன்றி நீயில்லை அப்படினா ....


"ஓருயிர் ஈருடல்" னு அர்த்தம் tongue
no more questin biggrin
 
NathasaaDate: Monday, 17 Feb 2014, 9:45 AM | Message # 13
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Quote SS ()
பகுதி  - கடைசி


Hi SS smile

Xcellent start & sounding very well

rockon
 
NathasaaDate: Monday, 17 Feb 2014, 9:48 AM | Message # 14
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Quote SS ()
நல்ல இருக்கே தலைப்பும். நன்றி chiko .. நீங்க தலைப்பு expert ஆகிடீங்கங்கோ..... பரவாயில்லை பா.. நம்ம கதைக்கு ரெண்டு மூணு தலைப்பு இருந்தாலும் ஓகே. இதுலேயும் புதுமை செய்வோம்...

நந்தினி என் சர்வம் நீ wacko
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 9:51 AM | Message # 15
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote srk ()
கால்களே இவ்வளோ அழகா இருக்கே என்ற வியப்புடன் நிமிர்ந்து பார்த்தவள் இமைக்க மறந்தாள். காதில் ஒலித்த பாடல் இப்போது அவள் இதயத்தில்...........
ஆடி காரிலிருந்து ஆடாமல் இறங்கிய நந்தனும் எதிரில் நின்றிருந்த சந்தனச் சிலையை இமைக்காமல் பார்த்தான்.
 செல்வதற்கு வழியில்லாமல் ஆடி ...கடுப்படைந்து எழுப்பிய சத்தத்தில் இருவரின் கண்களும் மனமில்லாமல் பிரிந்தது.

அவசரமாக தன் ஆடி காரில் ஏறி புயலென பறந்த நந்தனின் மனம் ரோடில் கண்ட தேவதையை சுற்றி கொண்டிருந்தது. 

அலை கடலென புரளும் பட்டு போன்ற கேசமும், .... தெரிந்த மின்னலும் இப்போது நினைத்தாலும் அவளின் கன்னங்களை சிவக்க வைத்தது.


அந்த பன்னாட்டு நிறுவனத்தை ஒற்றை ஆளாய்.. உலகில் எல்லோரும் வியந்து நோக்கும் நந்தனேதான்.  இந்த சிறிய வயதில் அவன் இந்த நிலைக்கு வர காரணம் அவனது அயராத உழைப்பே உழைப்பே...


எனக்கு ஒரு (பல) டவுட்டு

எப்படி நாயகிக்கு X-ரே கண்களோ....அழகான கால்களை பார்க்க முடியுது.

சந்தன சிலை..சந்தன சிலைன்னு சொல்லுறாங்களே...
 அது சந்தனமரக்கட்டை கொண்டு செஞ்சதுதானே.... அப்போ லீகல்/ இல்லீகல்

ஓரமா கடலை வறுத்தால் யாரும் கடுப்பாகி ஹோர்ன் அடிக்க மாட்டாங்களே!

புயலா வண்டிய ஓட்டாமலே சடன் பிரேக் போடுறாங்க..இவிங்க புயல் மாதிரி பறந்தால் நிலைமை என்ன ஆகும்?

நம்ப நாட்டுல ...தமிழ் நாட்டுல எத்தனை பன்னாட்டு நிறுவனம் இருக்கணும்..அதுவும் நம்ப ஆளுங்களுக்கு சொந்தமா! அதுவும் திருமணம் ஆகாத வயசு பசங்களுக்கு!

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்!

மத்தவங்க எல்லாம் உழைக்கறது இல்லை...அதுனால தான் அவங்களுக்கு சொந்தமா பன்னாட்டு நிறுவனம் இல்லை!
 
NathasaaDate: Monday, 17 Feb 2014, 9:54 AM | Message # 16
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Quote srk ()
நந்தினியோ தான் கண்ட கிரேக்க சிலையை மீண்டும் மனதில் நிறுத்தி அளவேடுத்துக் கொண்டிருந்தாள்.

நந்தினி கணக்கு பாட டீச்சரா இருப்பாங்களோ ....... குத்து மதிப்பா கேட்டேன்  smile

Jay & srk
உங்க ரெண்டு பேரோட அப்டேட் உம் சூப்பர்பா ....கலக்கிட்டிங்க
 

waiting for the nxt update
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 9:59 AM | Message # 17
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Nathasaa ()
waiting for the nxt update

நீங்களும் போடலாம்
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 10:02 AM | Message # 18
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote chiko ()
கதைக்கு தலைப்பு யாரும் வைக்காததால் " நந்தினி என் உயிர் நீ" அப்படின்னு வச்சிக்கலாமா? இல்லை "கண்ணில் ஒரு மின்னல்"இப்படின்னு வச்சிக்கலாமா?

சிக்கோ எல்லா தலைப்பும் வெச்சிக்கலாம்...slide ஷோ மாதிரி மாத்தி மாத்தி வரட்டும்
 
benziDate: Monday, 17 Feb 2014, 10:06 AM | Message # 19
Lieutenant
Group: *Checked*
Messages: 68
Status: Offline
hai frnds ennaku onnumae puriyaliyae Inga enna nadakkuthunu yaaravathu sollungapa. first yaeduttha udanae kadaisi pathivunu pottu start panni irukkinga.next ennadana pakuthi 1 ,2 nu poitu irukku.naanum yaetho stryya kindal pannuringaanu paarthalum puriyaliya.ithu varai padiccha kathai ellam saerthu yaezhthina mathiri irukku.ellarum nalla irukkingalla frnds.ennaya ippadi pulamba vittutingalae.
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 10:08 AM | Message # 20
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote benzi ()
first yaeduttha udanae kadaisi pathivunu pottu start panni irukkinga.next ennadana pakuthi 1 ,2 nu poitu irukku.naanum yaetho stryya kindal pannuringaanu paarthalum puriyaliya.ithu varai padiccha kathai ellam saerthu yaezhthina mathiri irukku.ellarum nalla irukkingalla frnds.ennaya ippadi pulamba vittutingalae.

benzi

யாரு வேணும்னாலும் அடுத்த எபிசொட் எழுதலாம்.. நீங்களும் கதைய கொண்டு போகலாம்.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » தர்பார்...நையாண்டி தர்பார்! » தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! (தர்பார் .... நையாண்டி தர்பார்! Second Story Page 50)
Search: