தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » தர்பார்...நையாண்டி தர்பார்! » தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! (தர்பார் .... நையாண்டி தர்பார்! Second Story Page 50)
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
SSDate: Sunday, 16 Feb 2014, 10:27 PM | Message # 2
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பகுதி  - கடைசி
அறையின் உள்ளே வந்த நந்தன் , நந்தினியை அவள் நின்றிருந்த இடத்தில இருந்து இழுத்தான். பளார் என்ற சத்தமும், காதினில் கேட்ட "கொய்ங்" என்ற ரீங்காரமும் தன்னை நந்தன் அறைந்து உள்ளான் என்று நந்தினிக்கு புரிந்தது.

திரு திரு என்று கண்ணீருடன் விழித்த நந்தினி சற்று சுதாரித்து, "என்னை மன்னியுங்கள் நந்து" என்றாள்  மெல்லிய குரலில். நந்தனோ , "நந்து, நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்... " என்று சொல்வதற்குள் அதிர்ந்தவள்  " ஐயோ  அத்தான் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள். என் தெய்வம் என்னிடம் மன்னிப்பு கேட்பதா. நான் அல்லவா  நன்றி சொல்லி மன்னிப்பும் கேட்கணும் " என்று அவனது பாதம் பணிந்தாள்.

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே.

நந்தனோ , " சரி விட்டுவிடு, நம் இருவருக்குள் மன்னிப்பும் நன்றியும் தேவையில்லை . நடந்தது என்னை மீறி நடந்துவிட்டது. எனக்கு தெரிந்திருந்தால் உன்னை இதிலிருந்து காத்து இருப்பேன்" என்று அவளை தூக்கி நிறுத்தி அணைத்தான் . நந்தினி அவனது பரந்த மார்பில் சாய்ந்து , " என்ன செய்வேன், என் விதி இப்படி ஆகிவிட்டது" என்று அழுதாள். அந்த அழகிய செப்பு சிலையின் அழுகையில்  கிரேக்க சிலையாய் மாறி நின்றிருந்தான் ஆறடி உயரம் இருக்கும் அஞ்சாநெஞ்சன் .

அவன் மனது ஒரு முடிவு எடுத்து அவளிடம் சொல்லவும் செய்தது  " இனி இந்த ஆறடி மனிதன் உனக்கு தான், அழகு சிலை எனக்கு தான். உன் கண்ணில் கண்ணீரே இருக்ககூடாது. என்னுடைய ரதி நீயின்றி யாருமில்லை. இனி நீயின்றி நானுமில்லை ". அதனை கேட்டவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், அவன் கண்ணில் ஒரு மின்னல், இவள் கண்ணிலும் அதே மின்னல். இரு மின்னல்களின் சங்கமத்தில் இந்த இரு இதயமும் இணைந்தது .

நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா எந்நாளும், இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க.

அவர்கள் ஒன்றாக நன்றாக வாழுவார்கள் என்று நம்பி நாம் விடைபெருவோமாக.

Message edited by SS - Sunday, 16 Feb 2014, 11:36 PM
 
JayDate: Sunday, 16 Feb 2014, 10:45 PM | Message # 3
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
நீயின்றி நானும் இல்லை

பகுதி 1

நந்தினி.  அழகின் வடிவம், அன்பின் உருவம்.  மற்றவர்க்கு உதவுவதில் மற்றட்ட மாணிக்கம்.  மீன் போன்ற கண்களை உடையவள்.  சிறு சத்ததிற்கும் அஞ்சும் பேதை இவள்.  நீண்ட கருநிறக் கூந்தல் உடையவள்.   விஸ்வநாதன், ஹேமா தம்பதியருக்கு மூத்தப் பெண்.  கல்லூரியில் இன்ஜினியரிங் முதல் வருடம் படிக்கிறாள் .  இவளுக்கு ஒரு தம்பி கௌதம்.

கல்லூரிக்குச் செல்லத் தயாராகி வந்த தன் மகளைப் பார்த்த ஹேமா, இத்தனை அழகா இருக்காளே.  எந்தக் கெடுதலும் வராமல் நீதான் காக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டார்.

கடவுள் என்ன வைத்திருக்கிறார் என்று பார்ப்போம். 

உணவு மேஜைக்கு வந்து அமர்ந்த தன் அக்காவைப் பார்த்த கெளதம் வழக்கம் போல தன் கிண்டலை ஆரம்பித்தான்.  "அக்கா நீ இப்படி பென்சில் போல் இருப்பதால்தான் என்னை எல்லாரும் கிண்டல் செய்கிறார்கள்"

"டேய் என்னை பென்சில் சொல்லாதடா"

"ஏன் அக்கா நீ போடும் மொக்கை பென்சிலைவிட சில சமயம் படு ஷார்ப்பாக இருப்பதால் அப்படி சொல்ல வேண்டாம் என்கிறாயா"

"அம்மா, இவனைப் பாரும்மா, என்னைக் கிண்டல் பண்றான்."

"கெளதம் என்ன இது அடுத்த வீட்டுக்கு போகப் போகும் பெண்ணிடம் வம்பு வளர்த்துகிட்டு, பேசாமல் சாப்பிட்டுக் கிளம்பு", என்று ஹேமா சொல்ல, இவ காலேஜ்க்குத் தானே போறா அம்மா ஏன் அடுத்த வீடுன்னு சொல்றாங்க என்று தெரியாமல், கெளதம் குழம்பினான்

"அம்மா நான் காலேஜ் போயிட்டு வரேம்மா", என்றுத் தன் ஸ்கூட்டியைக் கிளப்பி வீதிக்கு வந்து தன் காதில் போன் ஹெட் செட்டை மாட்டியபடியே பிரதான சாலையிலிருந்து கிளைச் சாலையை சென்று அடைந்தாள்.

ஆளில்லா சாலையில் அவள் திரும்ப எதிரே வந்த ஆடி கார் அவள் ஸ்கூட்டியுடன் மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டு நின்றது.

அதே நேரத்தில் சரியாக அவள் காதில் இருந்த ஹெட் செட்டில் "தம்தன தம்தன தாளம் வரும்", என்ற பாட்டு வந்தது .
 
chikoDate: Sunday, 16 Feb 2014, 11:06 PM | Message # 4
Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
கதைக்கு தலைப்பு யாரும் வைக்காததால் " நந்தினி என் உயிர் நீ" அப்படின்னு வச்சிக்கலாமா? இல்லை "கண்ணில் ஒரு மின்னல்"இப்படின்னு வச்சிக்கலாமா?

ஜெய் உங்க தலைப்பை நான் பார்க்கலை yes

Message edited by chiko - Sunday, 16 Feb 2014, 11:10 PM
 
SSDate: Sunday, 16 Feb 2014, 11:20 PM | Message # 5
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
நல்ல இருக்கே தலைப்பும். நன்றி chiko .. நீங்க தலைப்பு expert ஆகிடீங்கங்கோ.....

பரவாயில்லை பா.. நம்ம கதைக்கு ரெண்டு மூணு தலைப்பு இருந்தாலும் ஓகே. இதுலேயும் புதுமை செய்வோம்... tongue

Message edited by SS - Sunday, 16 Feb 2014, 11:22 PM
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 8:20 AM | Message # 6
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote SS ()
அந்த அழகிய செப்பு சிலையின் அழுகையில்  கிரேக்க சிலையாய் மாறி நின்றிருந்தான் ஆறடி உயரம் இருக்கும் அஞ்சாநெஞ்சன் .

" இனி இந்த ஆறடி மனிதன் உனக்கு தான், அழகு சிலை எனக்கு தான். உன் கண்ணில் கண்ணீரே இருக்ககூடாது. என்னுடைய ரதி நீயின்றி யாருமில்லை. இனி நீயின்றி நானுமில்லை "

எனக்கு ஒரு (பல) டவுட்டு

கிரேக்க சிலை கிரேக்க சிலைன்னு சொல்லுறீங்களே....

அப்படின்னா என்னாங்கோ?

கிரேக்கர்கள் பத்தி படிக்கும்போது வீரர்கள் ன்னு படிச்சதுதான் ஞாபகம் இருக்கு. அப்போ நாயகிய அடிச்சி துவைக்கறது தான் வீரமா...அதா இது???

ஆறடி உயரமா இருந்தா அஞ்சாநெஞ்சனா இருப்பாங்களா????

அந்த அழகு சிலைய வெச்சி என்ன செய்வான் அந்த ஆறடி மனிதன்?????

நீயின்றி நானில்லை நான் இன்றி நீயில்லை அப்படினா ....ரெண்டு பேரும் ஒரே சமயத்துல டிக்கேட் வாங்குவாங்களா??????

Message edited by RAWALIKA - Monday, 17 Feb 2014, 9:57 AM
 
SSDate: Monday, 17 Feb 2014, 8:26 AM | Message # 7
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
விஜி நான் தான் சொன்னேன்ல கொஞ்சம் ஓவரா இந்த வாரம் கதை படிச்சோமா அந்த effect பா.... biggrin

ஹீரோனா ஆறடி இருக்கணும், தைரியமா இருக்கணும்... தமிழ் படம் மற்றும் கதைகள் எத்தனை பார்த்து இருப்போம் . ஹீரோயின்னா தூங்கும் போது  கூட அழகா இருப்பாங்க பா.. உங்களுக்கு தெரியாததா  பச்சை புள்ள மாதிரி கேள்வி வேற கேக்கறீங்க....

எகிப்துல தான் பா மம்மி எல்லாம் .. கிரேக்க சிலைனா வேற அர்த்தம்... வீரன்னு அர்த்தம்.... நிறைய இங்கிலீஷ் கதைல எல்லாம் ஹீரோவ இப்படி தான் சொல்லுவாக...

ஆமாங்க equality  வேண்டாமா.. நீயின்றி நானில்லைனு விட்டுடா அதுக்கு வேற சவுண்ட் விட்டு ரௌசு பண்ணுவீங்க.. அதுவுமில்லாம rhyming வேற இருந்தது பா... அதான் dry

Message edited by SS - Monday, 17 Feb 2014, 8:27 AM
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 8:36 AM | Message # 8
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Jay ()
நந்தினி.  அழகின் வடிவம், அன்பின் உருவம்.  மற்றவர்க்கு உதவுவதில் மற்றட்ட மாணிக்கம்.  மீன் போன்ற கண்களை உடையவள்.  சிறு சத்ததிற்கும் அஞ்சும் பேதை இவள்.  நீண்ட கருநிறக் கூந்தல் உடையவள்.  
கல்லூரிக்குச் செல்லத் தயாராகி வந்த தன் மகளைப் பார்த்த ஹேமா, இத்தனை அழகா இருக்காளே.  எந்தக் கெடுதலும் வராமல் நீதான் காக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டார்.
 "கெளதம் என்ன இது அடுத்த வீட்டுக்கு போகப் போகும் பெண்ணிடம் வம்பு வளர்த்துகிட்டு, பேசாமல் சாப்பிட்டுக் கிளம்பு", என்று ஹேமா சொல்ல,
 ஆளில்லா சாலையில் அவள் திரும்ப எதிரே வந்த ஆடி கார் அவள் ஸ்கூட்டியுடன் மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டு நின்றது. அதே நேரத்தில் சரியாக அவள் காதில் இருந்த ஹெட் செட்டில் "தம்தன தம்தன தாளம் வரும்", என்ற பாட்டு வந்தது .

எனக்கு ஒரு (பல) டவுட்டு

அன்பின் உருவம் இப்படி தான் அழகா, மீன் கண்ணோட அஞ்சும் பேதையா இருக்குமா???? (இதுகூட நீண்ட கருநிறக் கூந்தல் + பண்ணுங்க)

அழகா இருந்தா கெடுதல் வருமா???? (அதுனால தான் நமக்கு கெடுதல் வரலையோ)

அடுத்த வீட்டுக்கு போற பெண்ணோட மட்டும் வம்பு வளர்க கூடாது...ஒரே வீடுனா வம்பு வளர்க்கலாம் (அதுனால தான் கணவன் & மனைவி / கணவன் மனைவி ஆகபோகிற உறவு (அத்தை மகன்/ மகள்; காதலர்கள்) வம்புல முடியுதா???

இவிங்க வண்டி மட்டும் ஆளில்லா ரோடுல போகுது..அதுவும் காலையில் கல்லூரி, ஆபீஸ் போகும் நேரம்.... அந்த ரோடு எங்கன்னு தெரிஞ்சா நம்பளும் போகலாம்..... 

ஏங்க ஆளில்லா ரோடுலையே ஒழுங்கா வண்டி ஒட்டாதவங்க டிராபிக் ஜாஸ்தி இருக்கும் ரோடுல எப்படி ஓட்டுவார்கள்?????? 

அது எப்படித்தான் சடன் பிரேக் போடும்போது இந்த தம்தன தம்தன கரெக்ட்டா பாடுமோ??? (பாரதிராஜா டைரக்ஷன்???? அப்போ வெள்ளை / கலர் கௌவுன் போட்ட தேவதைகள் எங்கே???????)
 
shanDate: Monday, 17 Feb 2014, 9:13 AM | Message # 9
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote RAWALIKA ()
எனக்கு ஒரு (பல) டவுட்டு

அன்பின் உருவம் இப்படி தான் அழகா, மீன் கண்ணோட அஞ்சும் பேதையா இருக்குமா???? (இதுகூட நீண்ட கருநிறக் கூந்தல் + பண்ணுங்க)

அழகா இருந்தா கெடுதல் வருமா???? (அதுனால தான் நமக்கு கெடுதல் வரலையோ)

அடுத்த வீட்டுக்கு போற பெண்ணோட மட்டும் வம்பு வளர்க கூடாது...ஒரே வீடுனா வம்பு வளர்க்கலாம் (அதுனால தான் கணவன் & மனைவி / கணவன் மனைவி ஆகபோகிற உறவு (அத்தை மகன்/ மகள்; காதலர்கள்) வம்புல முடியுதா???

இவிங்க வண்டி மட்டும் ஆளில்லா ரோடுல போகுது..அதுவும் காலையில் கல்லூரி, ஆபீஸ் போகும் நேரம்.... அந்த ரோடு எங்கன்னு தெரிஞ்சா நம்பளும் போகலாம்.....

ஏங்க ஆளில்லா ரோடுலையே ஒழுங்கா வண்டி ஒட்டாதவங்க டிராபிக் ஜாஸ்தி இருக்கும் ரோடுல எப்படி ஓட்டுவார்கள்??????

அது எப்படித்தான் சடன் பிரேக் போடும்போது இந்த தம்தன தம்தன கரெக்ட்டா பாடுமோ??? (பாரதிராஜா டைரக்ஷன்???? அப்போ வெள்ளை / கலர் கௌவுன் போட்ட தேவதைகள் எங்கே???????)

மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு

ippai kelvi kettal eppadi rawali?
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 9:17 AM | Message # 10
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
ippai kelvi kettal eppadi rawali?

தெரிஞ்சிக்கற ஆவல் தான்
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » தர்பார்...நையாண்டி தர்பார்! » தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! (தர்பார் .... நையாண்டி தர்பார்! Second Story Page 50)
Search: