விவசாய தொழில்நுட்பம் - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
விவசாய தொழில்நுட்பம்
JeniliyaDate: Friday, 07 Feb 2014, 9:22 AM | Message # 1
Private
Group: Moderators
Messages: 19
Status: Offline
விவசாய தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை பகிரவும்
 
JanviDate: Thursday, 28 Aug 2014, 1:04 AM | Message # 2
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வணக்கம் பயனுள்ள பகுதியை உருவாக்கிய மகளிர் கடலுக்கு நன்றி. நான் படிக்கும் விவசாய செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 

மண் பரிசோதனை பற்றிய தகவல்களை உங்களோட பகிர்ந்துகிறேன். இதை தினமணில படிச்சேன்.

பரிசோதனைக்காக மண் சேகரிப்பது எப்படி? 



உரிய பருவத்தில் அதற்குரிய பயிரை விதைத்து விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற, மண் பரிசோதனை என்பது மிகவும் அவசியமான ஒன்று.
இந்த ஆய்வுக்காக, மண் சேகரிக்கும் முறை குறித்து மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விவசாயிகள், தங்களது அனுபவத்தால் பருவத்துக்கேற்ற பயிர்களை பயிர்செய்து லாபமடைந்து வந்தனர்.
ஆனால், நாளடைவில் ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை விஷமாக மாறியுள்ளது.
இதனால் போதிய அளவு விளைச்சலும் இல்லாமல், விளைவிக்கும் பொருள்களில் போதிய
லாபமும் இல்லாமல் விவசாயிகள் நலிவடைந்து வருகின்றனர்.
தங்கள் நிலங்களின் மணலை ஆய்வுக்கு உள்படுத்தி, எந்தப் பயிரை பயிரிடலாம்,
எந்த வகையான உரம் இட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். இதற்கு மண்
பரிசோதனை மிகவும் அவசியமாகிறது.

மண் சேகரிப்பு வரைமுறை:
ஆய்வுக்காக மண்ணை சேகரிப்பதில் சில வரைமுறைகள் உள்ளன. பயிர் அறுவடை
செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் மண்
மாதிரி எடுக்க வேண்டும். ஒரே நிலத்தில் மண் வெவ்வேறாக இருந்தால் அந்த
பகுதிகளில் தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.
மேட்டுப் பகுதி, தாழ்வான பகுதியில் தனித்தனியாக மண் சேகரிக்க வேண்டும்.
வரப்பு வாய்க்கால் அருகிலும், எடுக்குழி அருகிலும், மர நிழலில் உள்ள
இடங்களிலும் மண் மாதிரி எடுத்தல் கூடாது.
மண் மாதிரி எடுக்கும் இடத்தில் உள்ள இலை, சருகு, புல் ஆகியவற்றை அதன் மேல் உள்ள மண்ணை ஒதுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
பயிருக்கு ஏற்றவாறு மண் மாதிரி எடுக்கும் ஆழம் வேறுபடும்.
நெல், சோளம், கம்பு, கடலைப் பயிர் ஆகியவற்றுக்கு அரை அடி ஆழமும்,
மிளகாய், பருத்தி, கரும்பு, வாழை, காய்கறிகளுக்கு முக்கால் அடி ஆழமும்,
தென்னைக்கு 3 அடி ஆழமும் (ஒரு அடி ஆழத்துக்கு ஒரு மண் மாதிரியும்
எடுக்கலாம்) பழ மரங்களுக்கு 4 முதல் 5 அடி ஆழம் வரை மண் சேகரிக்க வேண்டும்.
மண் சேகரிக்க வெட்டப்படும் குழியை ஆங்கில எழுத்தான "வி' வடிவில் அமைக்க
வேண்டும். குழியின் இரு ஓரங்களிலும் மண்வெட்டியின் தகட்டால் மேலிருந்து
கீழ்வரை மண்ணை சுரண்டி சேகரிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மண்ணை சேகரித்து சுத்தமான பிளாஸ்டிக்
அல்லது கோணியின் மீது கொட்டி அதை நான்கு சம பாகமாக கலந்து, அரை கிலோ மண்ணை
எடுத்து துணிப்பையில் போட்டுக் கட்ட வேண்டும்.
மண் ஈரமாக இருந்தால், நிழலில் உலர்த்தி நான்கு சமபாகமாக பிரித்து மாதிரி எடுக்க வேண்டும்.
மண் மாதிரியுடன் விவசாயியின் பெயர், கிராமம், வீட்டு முகவரி, நிலத்தின்
பெயர், அடுத்து பயிரிடப் போகும் பயிர், பாசனப் வசதி, இதற்கு முன்
பயிரிடப்பட்ட பயிர் குறித்த விவரம் உள்ளிட்ட விவரங்களை மண் ஆய்வுக்
கூடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுபோன்ற முறையில் மண் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கூடத்தில் கொடுத்து
விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Message edited by Janvi - Thursday, 28 Aug 2014, 1:36 AM
 
JanviDate: Thursday, 28 Aug 2014, 1:11 AM | Message # 3
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
நன்றி - தினமணி 

வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்!






கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும்,
வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது
அதிகரித்து வருகிறது.
இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப்
பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம் என
தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள்.
இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப்
பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப்
பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத
தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை
வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி
சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.
இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின்
சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில்
வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை
உரம் தயாரிக்கலாம்.
இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால்
கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை
தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும்.
இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.
பூங்கா கழிவுகள்: மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில்
உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு
மூலையில் குவித்துவைக்க வேண்டும். அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு
துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து
விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.
எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும்.
அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை
காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த
புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச்
செய்ய முடியும்.
ஆக்சிஜன் அவசியம்: கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான்
நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம்
ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான
நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை
குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும்,
மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும்
நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.
ஈரப்பதம் தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின்
எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.
இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும்
கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு
குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும்.
முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ.
சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான
தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ்,
அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம்
ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி
20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும். இது சாதாரண
மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய
நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும்.
வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை
இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.
அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த
உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும்
அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்கின்றனர்
தோட்டக்கலைத் துறையினர்.
 
JanviDate: Thursday, 28 Aug 2014, 1:20 AM | Message # 4
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பஞ்சகாவ்யா தயாரிப்பு முறையும், இயற்கை  பூச்சி விரட்டி தயாரிப்பு முறையும் இயற்கை விவசாயி கலைவாணி விளக்கம். 

 
JanviDate: Thursday, 28 Aug 2014, 1:33 AM | Message # 5
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
800ரூபாயில் ஒரு தொழில் சாத்தியமா? சாத்தியமே சிறு விவசாயிகளுக்கு வரப்ரசாதமாய் இயற்கை உரத் தயாரிப்பு. செய்முறை விளக்கத்துடன் தரப்பட்டிருக்கிறது. 

 
JanviDate: Friday, 29 Aug 2014, 8:47 PM | Message # 6
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline


கட்டழகு தரும் கறிவேப்பிலையை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும் என, மதுரை மாவட்டம் மேலூர் நீர்மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: கறிவேப்பிலை உணவு செரிமானத்திற்கு உகந்தது. வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளது. முதுமையில் எலும்புத்தாது அடர்த்தி குறைவு (ஆஸ்டியோபோரோசிஸ்) வராமல் பாதுகாக்கிறது. கெட்ட கொழுப்பை கரைத்து, உடலுக்கு கட்டழகை தருகிறது. பூச்சிக்கடி, ஒவ்வாமையால், தோலில் ஏற்படும் அரிப்பை தணிக்கிறது. கண்பார்வை கூர்மை, கருகரு தலைமுடிக்கு கறிவேப்பிலை சிறந்தது.
கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்க்கலாம். இதனை அரைத்து, மோருடன் கலந்து குடித்தால், இளநரை மறையும்.
வறட்சியான வாந்திக்கு கறிவேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் அல்லது சர்க்கரை கலந்து அருந்தலாம். கர்ப்பகால வாந்திக்கு, தலா ஒரு ஸ்பூன் அளவில் கறிவேப்பிலைச் சாறு, தேன் சேர்த்து குடித்தால் மாற்றங்கள் ஏற்படும்.
இதில் செங்காம்பு, பச்சைக்காம்பு என 2 ரகங்கள் உள்ளன. அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள மண் அவசியம். நீர் தேங்கினால் இலைகள் பழுத்து உதிரும். ஏக்கருக்கு 6500 முதல் 7000 நாற்றுக்கள் (8 கிலோ பழங்கள்) தேவைப்படும்.
நாற்றின் வயது 60-70 நாட்கள். 120 நாட்களுக்குள் நடவு செய்துவிட வேண்டும். குழி அளவு 45 செ.மீ., நீள, அகல, ஆழத்தில் இருக்க வேண்டும். செடிக்கு செடி 2.5 அடி நெருக்கி நடுவதன் மூலம் அதிக விளைச்சல் இருக்கும். இயற்கை உரம் பயன்படுத்தினால் இயற்கை மணம், குணம் மாறாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
-Thanks to Dinamalar Daily
 
 
JanviDate: Friday, 29 Aug 2014, 8:52 PM | Message # 7
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline


இயற்கை இவ்வுலகத்தைப் பல்வேறு வளங்களின் உறைவிடமாக உருவாக்கியிருக்கின்றது. இயற்கை தந்த வளத்தை நாம் பல்வேறு வகைகளில் பயன்படுத்திக் கொள்கிறோம். இவற்றில் காளான்கள் முக்கியமானவை. காளான்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டு வந்துள்ளன. காளான்களில் அடங்கியுள்ள மணம், சுவை, ஊட்டச்சத்து ஆகியவை எல்லோரையும் கவர்ந்திழுக்கும் இயல்பினை பெற்றிருக்கின்றன.
காளான்களின் சிறப்பம்சங்கள்:
* புரதச்சத்து நிறைந்தவை. * அமினோதிரவம் அடங்கியது. * மாவுச்சத்து குறைவாக (5.3 சதம்) உள்ளது. * கொழுப்புச்சத்து குறைவாக (0.36 சதம்) உள்ளது. * வைட்டமின் B, C, D உள்ளது. * இரத்தக்கொதிப்பு மற்றும் இருதயநோய்க்கு நல்லது. * நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. * எளிதில் ஜீரணிக்கக் கூடியது. * எத்தரப்பினரும் விரும்பி உண்ணும் வகையைச் சேர்ந்தது.
தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் சிப்பிக்காளான் இயற்கையிலேயே நிலவும் தட்பவெப்ப நிலையைப் பயன்படுத்தி வளர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பண்ணைக்கழிவுப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி காளான்களை வளர்க்க முடியும். உணவுக் காளான் உற்பத்தி ஒரு குடிசைத் தொழிலாகப் பெருகி வளர்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகளுக்கு உபரி வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்பு.
மேலும் சிப்பிக்காளான் வளர்ப்பில் பயிற்சி பெற விரும்புவோர் தங்கள் பெயர், முகவரியுடன் நேரிலோ, ரிப்ளை கார்டு தபால் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூபாய் 250/- (ரூபாய் இருநூற்றி ஐம்பது மட்டும்) குறைந்தது 25 நபர்கள் முன்பதிவு செய்தவுடன் பயிற்சி தேதி முடிவு செய்யப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு திருவில்லிபுத்தூர், பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப.அமலா பாலு தெரிவித்துக் கொள்கிறார்.

- Thanks to Dinamalar Daily.
 
 
Friends please if you know the contact address of the concerned person, please post it. It will be helpful for the needful.
 
JanviDate: Friday, 29 Aug 2014, 9:00 PM | Message # 8
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline

 
 
ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு

 
 
நன்னீர் மீன் வளர்ப்பினை ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் அடிப்படையில் மேற்கொண்டால் நல்ல வருமானம் ஈட்டிடலாம். மீன் வளர்ப்புடன் நெற்பயிர், கால்நடைகள் மற்றும் கோழி, வாத்து ஆகிய பறவையினங்களையும் சேர்த்து வளர்த்திட்டால் கூடுதல் வருமானம் பெற்றிடலாம் என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து மீன், கால்நடை, கோழி, வாத்து போன்றவைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம் அதிகலாபம் பெறலாம்.
நெற்பயிரோடு மீன் வளர்ப்பு: நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற்பயிரோடு மீன் வளர்த்தல் முறை, நெல் அறுவடைக்குப் பின் மழை காலங்களில் பெருமளவு நீர் வயல்களில் நிரப்புவதால் அவற்றில் மீன் வளர்த்தல் மற்றொரு முறை. பொதுவாக வயல்களில் நெல், உளுந்து, கேழ்வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோம். ஆனால் வெவ்வேறு இடங்களின் சூழ்நிலைக்கேற்ப ஒருமுறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரையும் முழுமையாகப் பயன்படுத்துதல் ஒரு புதுமுறை சுழற்சி எனலாம். இம்முறை பயிர்- மீன் சுழற்சியால் அதிக பயனடைவதோடு பயிர்களை தாக்கும் பூச்சி புழுக்களையும் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை தொடர்ந்து கிளறிவிடுவதோடு, மீனின் கழிவில் நிறைந்துள்ள தழைச்சத்து பயிர்களுக்கு தொடர்ந்து கிடைக்கின்றது. நெல் மணியோடு விலை குறைந்த புரதம் நிறைந்த மீனும் கிடைப்பதால் புரதப்பற்றாக்குறை நீங்குகிறது.
நெல்லையும் மீனையும் சேர்த்து வளர்க்க, விளையும் வயல்களில் குறைந்தது நான்கைந்து மாதங்களாவது நீர் தேங்கி இருக்க வேண்டும். இவ்வகை வயல்களின் வரப்புகள் உறுதியாகவும் உயரமாகவும் இருப்பது அவசியம். வயலின் பள்ளமான பகுதிகளில் ஆழமான குளங்களும் அவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பல வாய்க்கால்களும் அமைத்தால் வயலின் நீர் குறைந்து தரைமட்டத்தை அடையும் காலங்களில் மீன்கள் மடிந்துபோகாமல் வாய்க்கால்கள் வழியாக குளத்தை வந்தடைந்து பிழைக்கக்கூடும். வாய்க்கால்கள் 50 செ.மீ. அகலமும், 30 செ.மீ. ஆழமும் கொண்டதாய் இருக்க வேண்டும். வயலுக்கு நீர் பாய்ச்சும் வழியின் மூலமாகவும், வெளியேறும் வழி மூலமாகவும் மீன்கள் தப்பிச்செல்வதை தடுக்க வலைகளைப் பொருத்த வேண்டும்.
மேற்கூறிய வசதிகளைக் கொண்ட வயல்களில் உறுதியான வேர்களுடன் குறைந்த வெப்பத்தையும், தேங்கி நிற்கும் நீரையும் தாங்கக்கூடிய நீண்ட காலப்பயிர்களை பயிரிடலாம். நெற்பயிரின் நடவுக்குப் பின் விரலளவு மீன் அல்லது அதற்கு மேல் வளர்ந்த மீன்களை நெல்வயல்களில் எக்டருக்கு 2000 வரை இருப்பு செய்யலாம். இத்தகைய பயிர் வகைகளை பயிரிட்டால் நான்கைந்து மாதங்களில் எக்டர் ஒன்றுக்கு 500 கி.கி. மீன்கள் கிடைக்கிறது. இம்முறையில் நெற்பயிர்களுடன் சாதாக் கெண்டை, திலேப்பியா, விரால் போன்ற மீன் இனங்களையும் நன்னீர் இறால்களையும் வளர்த்தெடுக்கலாம். (தகவல்: -பா.கணேசன், உதவி பேராசிரியர், வெ.பழனிச்சாமி, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288.)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


-- Thanks to Dinamalar
 
srkDate: Tuesday, 02 Sep 2014, 8:49 PM | Message # 9
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
ஜான்வி,

ஒவ்வொரு பகிர்வும் பயனுள்ளது. நன்றி ப்பா....... smile


Life is God's Gift
 
JanviDate: Tuesday, 02 Sep 2014, 8:57 PM | Message # 10
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
Nandri srk.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
Search: