விவசாய தொழில்நுட்பம் - Page 2 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya, Laya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
விவசாய தொழில்நுட்பம்
JanviDate: Tuesday, 02 Sep 2014, 9:09 PM | Message # 11
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
வைக்கோல் பெட்டி
வைக்கோல் பெட்டி என்ற எளிய குறைந்த செலவிலான எரிபொருள் சேமிப்பு சாதனத்தை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மனையியல் விரிவாக்கத்?துறை (மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை) உருவாக்கியுள்ளது. இப்பெட்டியில், வெப்பம் உள்ளிருந்து வெளியேறுவது தடுக்கப்பட்டு வெப்ப ஆற்றல் சேமிக்கப்பட்டு, உணவு பொருட்களைச் சமைப்பதற்கும், சூடு ஏற்றுவதற்கும் உதவுகிறது. வைக்கோல் பெட்டியில், உள்ளூரில் கிடைக்கக்கூடிய வைக்கோல் மற்றும் உமி போன்ற வேளாண் கழிவுகள் உபயோகப்படுத்தப்படுகிறது.

வைக்கோல் பெட்டி வடிவமைத்தல்:

கீழ்க்கண்ட அளவில் பெட்டி அமைக்கப்பட வேண்டும். நீளம்-45 செ.மீ., அகலம்-45 செ.மீ., உயரம் -45 செ.மீ. மரப்பெட்டி, கார்ட்போர்டு பெட்டி, மூங்கில் கூடை, சிமென்ட் தொட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வடிவமைத்தல்: கார்ட்போர்டு பெட்டியை தயாராக வைக்கவும். பெட்டியில் வைக்கோல் நிரப்பவும். பெட்டியின் அளவைப்போல் உள்ள சணல் பையில் வைக்கோல் நிரப்பவும்.

சமைக்கும் முறை (உதாரணம் - அரிசி)
* கழுவிய அரிசியை பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
* இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றவும்.
* 10 நிமிடம் அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும்.
வைக்கோல் பெட்டியின் நடுவில் பாத்திரம் வைக்கும் அளவிற்கு இடத்தை ஏற்படுத்தவும்.
* அடுப்பில் இருந்து பாத்திரத்தை எடுத்து வைக்கோல் பெட்டியில் வைக்கவும்.
* பெட்டியை வைக்கோல் நிரம்பிய சணல் பை கொண்டு மூடிவைக்கவும்.
* வைத்து 45 நிமிடத்திற்குள் அரிசி நன்கு சமைக்கப்பட்டும் (5-6 மணி நேரம் வரை சூடாக இருக்கும்).

நன்மைகள்:
* பாதுகாப்பானது, கையாளுவதற்கு எளிய முறை.
*குறைந்த செலவு
* சுலபமான பராமரிப்பு முறை
* சமைப்பதற்கு குறைவான நேரமே ஆகிறது.
* வெப்பநிலை பராமரிப்பு: தேவைப்படும் வெப்ப அளவை 6 மணி நேரத்திற்கு தக்கவைக்க முடியும். சமைக்கப்பட்ட அரிசியை 61 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 5 மணி நேரம் வரை வைக்கோல் பெட்டியில் வைக்கும்போது பராமரிக்கலாம். ஆனால் வெளியில் வைக்கும்பொழுது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையே பராமரிக்க முடிகிறது.
* உயர்தர உணவு வகைகள்: இம்முறையில் தயாரிக்கப்படும் உணவு, மற்ற முறையில் சமைக்கப் படுவதைக் காட்டிலும் மணம், நிறம், பதம், சுவை ஆகியவற்றில் நல்ல தரம் வாய்ந்ததாக உள்ளது.
* குறைந்த அளவு ஊட்டச்சத்து இழப்பு: சமைக்க பயன்படுத்தும் நீர் முழுமையாக பயன்படுத்தப் படுவதால் குறைந்த அளவு ஊட்டச்சத்தையே இழக்கிறோம். மூலப்பொருட்களை சேமிக்க முடிகிறது.
* இம்முறையில் எரிபொருள், பணம், நேரம், ஆள் செலவு ஆகியவற்றை சேமித்து, சுகாதார கேடுகளையும் தடுக்க முடிகிறது. 58% சமைக்கும் நேரமும், 44% எரிபொருளுக்கான பணமும் சேமிக்கப்படுகிறது
 
JanviDate: Wednesday, 03 Sep 2014, 4:51 PM | Message # 12
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
கிருஷ்ணகிரியை சேர்ந்த பெரியவர் இளைய தலைமுறை விவசாயிகளுக்கு தரும் வாழ்க்கை பாடம். 

https://www.youtube.com/watch?v=J1HKBCgKgx4
 
JanviDate: Wednesday, 03 Sep 2014, 5:00 PM | Message # 13
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
 
JanviDate: Friday, 05 Sep 2014, 8:47 PM | Message # 14
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
பண்ணைக் குட்டைகளில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு



நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் பண்ணைக் குட்டைகளில் மீன் குஞ்சுகள் வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது.
மானிய உதவிகள்: பண்ணைக்குட்டையில் வளர்ப்பதற்கான இளம் மீன்குஞ்சுகள் 30
ஆயிரம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
மீன் தீவனத்துக்காக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
இளம் மீன்குஞ்சுகளை 45 நாள்கள் வரை பண்ணைக் குட்டைகளில் விரலிகளாக
வளர்த்து ரூ.18 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம். மேலும், விரலிகள் அறுவடை செய்த
பின் மீன் வளர்ப்பு மேற்கொள்வதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்டலாம்.
நில மீன் விதை வங்கி அமைத்தல்: நில மீன் விதை வங்கியில் 3 நாற்றாங்கால்
குளங்கள், 6 மீன் வளர்ப்பு குளங்கல், தன்னிலைப்படுத்தும் தொட்டி, சிப்பக்
கூடம் ஆகியவை ரூ.2.55 லட்சத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். மேலும், ரூ.15
ஆயிரம் மதிப்புள்ள பண்ணை உபகரணங்கள் மானியமாக வழங்கப்படும். முதலாம் ஆண்டு
உள்ளீட்டு மானியமாக ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள நுண் மீன்குஞ்சுகள், ரூ.12
ஆயிரம் மதிப்புள்ள மீன் தீவனம் ஆகியவை மானியமாக வழங்கப்படும். இந்த இரு
திட்டங்களிலும் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மீன் வளத்துறை உதவி
இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்

--- Thanks to Dinamani


Message edited by Janvi - Friday, 05 Sep 2014, 9:10 PM
 
JanviDate: Friday, 05 Sep 2014, 8:52 PM | Message # 15
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் லாபம் ஈட்டும் வாய்ப்பு: சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்



தொடரும் வறட்சி, குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், குறைந்தளவு நீரைக்
கொண்டு லாபம் ஈட்டக்கூடிய சூரியகாந்தி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி
வருகின்றனர் திருச்சி மாவட்ட விவசாயிகள்.
திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, மண்ணச்சநல்லூர்
ஒன்றியப் பகுதிகள்,  ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள இனாம்புலியூர், சிறுகமணி,
பெருகமணி, முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 750 முதல் 1000 ஏக்கர்
பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்படும்.
ஆற்று, வாய்க்கால் பாசனத்தை நம்பியிருக்காமல், ஆழ்துளைக் கிணறுகளின்
மூலமாகக் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள்
ஈடுபட்டுள்ளனர்.
குறைவான செலவில் வருவாய்:  மற்றப் பயிர்கள் போல இல்லாமல் 90 முதல் 100
நாள்களில் சூரியகாந்தி சாகுபடி செய்யலாம். தினந்தோறும் பயிருக்குத் தண்ணீர்
பாய்ச்ச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர்
பாய்ச்சினாலே போதும். ஏக்கருக்கு 1 கிலோ வீதம், 2 ஏக்கருக்கு ரூ.1000-ல்
விதை,  நடவுக்கூலி, உழவு கூலி, உரம் என எல்லா செலவுகளும் ரூ.5000-க்குள்
அடங்கிவிடும். நோய் பாதிப்பு இல்லாமல் கண்காணித்து வந்தால் ஏக்கருக்கு 1000
கிலோ முதல் 1500 கிலோ வரை விளைச்சல் இருக்கும். நோய் பாதிப்பு இல்லாத
நிலையில் விளைச்சல் அதிகமிருந்து சூரியகாந்தி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு
ரூ. 20,000 வரை வருவாய் கிடைக்கும் என்கிறார் புலியூர் விவசாயி அ.நாகராஜன்.
தேவையும் அதிகமிருக்கிறது:  அறுவடை செய்யப்படும் சூரியகாந்தி வித்துகள்
வெள்ளக்கோவில், மணப்பாறை போன்ற பகுதிகளில் விற்பனையாகிறது. முதல் தரம் 1
கிலோ ரூ.40  என்ற விலையிலும், 2-ம் தரம் ரூ.35 என்ற விலையிலும்
விற்பனையாகிறது.
தற்போது சூரியகாந்தி தேவை அதிகம் இருக்கிறது.  ஜூன், ஜூலை மாதங்களில்
சூரியகாந்தி சீசன். இந்த காலத்தில் சாகுபடி அதிகளவில் நடைபெற்றிருக்கும்.
ஆனால், வறட்சியின் காரணமாக தற்போதுதான் சூரியகாந்தி சாகுபடியைத்
தொடங்கியிருக்கின்றனர்.  டிசம்பர், ஜனவரியில் சாகுபடி அதிகம் நடைபெறும் என
எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்சூரியகாந்தி வித்துகளைக் கொள்முதல் செய்யும்
வியாபாரிகள்.
அரசின் உதவி தேவை: சூரியகாந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு
விதைக்கு மட்டும் மானியத்தை அரசு வழங்குகிறது. சாகுபடியைத் தொடர்ந்து
மேற்கொள்ள மானிய உதவிகளை அதிகரித்து வழங்க வேண்டும். சில நேரங்களில் மயில்
போன்ற பறவைகள் சூரியகாந்தி தோட்டத்துக்குள் புகுந்து முழுமையாக
சேதப்படுத்திச் சென்றுவிடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர்
விவசாயிகள்.

--- Thanks to Dinamani
 
JanviDate: Friday, 05 Sep 2014, 8:56 PM | Message # 16
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மருத்துவக் குணம் கொண்ட மாதுளை சாகுபடி!



அறுசுவைகளில் துவர்ப்பு, இனிப்பு ஆகியவற்றை இரண்டறப் பெற்றுள்ள மருத்துவக் குணம் கொண்ட மாதுளை பயிர் சாகுபடி செய்து
பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அறுசுவைகளில் அரிதான துவர்ப்புச் சுவையும், இனிப்புச் சுவையும் கலந்து
உடல் நலனுக்கு உறுதுணையாக இருக்கும் மாதுளை, புனிகா கிரேனேடம் என்ற
தாவரவியல் பெயர் கொண்ட மாதுளை மருத்துவப்பயன்களைக் கொண்டது.
மருத்துவப் பயன்: நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆண்டி ஆக்சிடென்ட்களை
அதிகளவில் கொண்டுள்ளது. புனிகலாஜின்ஸ் என்ற மாதுளையில் மட்டுமே காணப்படும்
கூட்டுப் பொருள் இதயத்திற்கும், ரத்த நாளங்களுக்கும் இதமளிப்பதாக உள்ளது.
கொழுப்பு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
ரத்தக்குழாய் அடைப்பின் அளவைக் குறைக்கிறது. புற்று நோய் வருவதைத்
தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள பைட்டோகெமிக்கல் கூட்டுப்பொருள்
செரோட்டினின், ஈஸ்ட்ரோஜென் ஆகியன ஹார்மோன் சுரப்புகளை தூண்டுவதால் மன
அமைதிக்கும், எலும்பு பலத்துக்கும் உகந்தது.
அதிகளவில் வைட்டமின் - சி மற்றும், ஓரளவு வைட்டமின் -பி 5, ஏ, ஈ ஆகிய
இதர வைட்டமின்களையும் கொண்டுள்ளது. கால்சியம், பொட்டாசியம், இரும்பு ஆகிய
தாதுக்களை குறிப்பிடத்தக்க அளவில் கொண்டுள்ளது. வயிற்றுக் கடுப்பு, குடல்
புண்ணுக்கும் நல்ல மருந்தாகும். மலச்சிக்கலை நீக்கும்.
சாகுபடி குறிப்பு: கணேஷ், ரூபி, ஜோதி, அர்க்தா, ருத்ரா, மிருதுளா, பக்வா
போன்ற ரகங்களை பயிரிடலாம். கார அமிலத் தன்மையும், வறட்சியையும் தாங்கி
வளரக் கூடியது மாதுளை. கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரை
வளரும். குளிர்ச்சி மிகுந்த குளிர் காலமும், வறண்ட கோடை காலமும் தரம்
மிகுந்த பழங்களை உருவாக்கத் தேவையான பருவமாகும். வேர்ச்செடிகளாகவோ அல்லது
பதியன்களாகவும் நடலாம். 2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழமுள்ள குழிகளில்
நடவு செய்ய வேண்டும். ஜூன் முதல் டிசம்பர் வரையான காலம் சாகுபடி
பருவமாகும். வரிசைக்கு வரிசை 8 அடி, செடிக்கு செடி 8 அடி என்ற அளவில் ஒரு
ஏக்கரும் 640 செடிகள் நடலாம்.
உரப்பாசனத்துடன் கூடிய சொட்டு நீர் பாசன முறையைக் கடைப்பிடிப்பது, நீர்
சிக்கனம், நிறைந்த மகசூலுக்கும் ஒரு சேர வழிவகுக்கும். சொட்டுநீர் பாசனம்
அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை 100 சதவிகிதம் மானியம்
அளிக்கிறது.
உரமிடுதல்: முதலாண்டில் செடிக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா,
600 கிராம் சூப்பர் பாஸ்பேட், 650 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். 2
ம் ஆண்டு முதல் 5 ம் ஆண்டு வரை ஆண்டுக்கு செடிக்கு 20 கிலோ தொழு உரம், 900
கிராம் யூரியா, 1500 கிராம் சூப்பர் பாஸ்பேட், 1300 கிராம் பொட்டாஷ்
உரங்களை இட வேண்டும். 6 வது ஆண்டு முதல் செடிக்கு 30 கிலோ தொழு உரம், 1350
கிராம் யூரியா, 3 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ பொட்டாஷ் உரங்களை இட
வேண்டும்.
இந்த சாகுபடியில் பழந்துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த
பயிர்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றலாம். அதாவது புல்லிவட்ட இதழ்களை
நீக்குவது பழந்துளைப்பான் முட்டை வைப்பதைத் தடுக்கும். பூக்கும் தருணத்தில்
5 செ.மீ. விட்டமுடைய மாதுளம்பிஞ்சுகளைச் சுற்றி வேப்பெண்ணெய் நனைத்த
துணிப் பைகளால் மூட வேண்டும்.
மூன்று சதவிகித வேப்பெண்ணெய் அல்லது 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாற்றைத்
தெளிக்கலாம். பிஞ்சு பிடிக்கும் தருணத்தில் ஏக்கருக்கு ஒரு லட்சம்
டிரைகோடெர்மா கலானிஸ் ஒட்டுண்ணியை விடலாம். செதில் பூச்சியைக்
கட்டுப்படுத்த குயினோல்பாஸ் 25 ஈசி யை ஒரு லிட்டர் நீரில் இரண்டரை மில்லி
கலந்து தெளிக்கலாம்.
முறையான சாகுபடி முறையை மேற் கொண்டால், ஆண்டுக்கு 8 முதல் 10 டன் மகசூல்
கிடைக்கும். ஆகவே விவசாயிகள் மாதுளை சாகுபடியில் உயரிய தொழில்நுட்பங்களை
கடைப்பிடித்து உயர் மகசூல் பெறுவதுடன் உன்னத லாபமும் பெறலாம் என்றார் அவர்.

--- Thanks to Dinamani
 
JanviDate: Friday, 05 Sep 2014, 9:02 PM | Message # 17
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
மானியத்துடன் துவரை சாகுபடி



பயறு வகை பயிர்களில் துவரை மிகவும் முக்கியமான பயிராகும். துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பத்தின்
மூலம் துவரை உற்பத்திóத் திறனைப் பெருக்கவும் வேளாண்மைத் துறை மூலம்
மானியம் வழங்கப்படுகிறது.
துவரை சாகுபடியின் முக்கியத்துவம்: தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி
செய்யும்போது சில சத்துக்கள் மண்ணில் பற்றாக்குறை ஏற்படும். துவரையின்
வேர்கள் மண்ணில் ஆழத்துக்குச் சென்று மண்ணின் அடிப் பகுதியில் உள்ள
சத்துக்களை பயன்படுத்துவதால், பிற பயிர்கள் பயிரிடும்போது மண்ணில் உள்ள
ஊட்டசத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
துவரையின் வேர் முடிச்சுகள் தழைச்சத்தின் தன்மையை அதிகரிக்கிறது.
துவரையின் வேர்ப் பகுதியில் இருந்து சுரக்கும் அமிலங்கள் மண்ணில்
மணிச்சத்தைக் கரைத்து மற்ற பயிர்களுக்கு கிடைத்திடச் செய்ய உறுதுணையாக
உள்ளது.
துவரை முதிர்ச்சி அடையும்போது அதிலிருந்து உதிரும் இலைகள் நிலத்துக்கு ஊட்டச்சத்து அளிக்கும்.
இந்தியாவில் இப்போதைய உணவு உற்பத்திசுதந்திரத்துக்குப் பிறகு 5 மடங்காக
அதிகரித்துள்ளது. ஆனால், பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. எனவே,
வெளிநாடுகளில் இருந்துதான் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
உள்நாட்டில் பருப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே
விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது.
சாகுபடி குறிப்புகள்: நீர்ப் பாசன வசதியுடைய செம்மண் மற்றும் வண்டல் மண்
துவரை சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் மண்ணில் வடிகால் வசதி மிகவும்
அவசியமானது. அதிக மகசூல் பெற விதைகளை மண் கலவை நிரப்பப்பட்ட பாலித்தீன்
உறைகளில் விதைத்து நாற்றாங்கால் பராமரிக்க வேண்டும். 30 நாள் நாற்றுகளை நட
வேண்டும். நடுத்தர கால துவரையின் வயது 130 முதல் 135 நாள்களாகும்.
மானியம்: துவரை சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளுக்கு இலவச பயிற்சி
அளிக்கப்படும். விதைகள் மற்றும் இடுபொருள்கள் மானிய விலையில்
வழங்கப்படும். விருப்பமுள்ல விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள
வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.

---- Thanks to Dinamani
 
JanviDate: Friday, 05 Sep 2014, 9:27 PM | Message # 18
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
அதிக வருவாய் ஈட்ட சிறு தானியங்கள் பயிரிடலாம்!



சிறு தானியப் பயிர்களான சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளத்தைக் குறைவான நீரைப் பயன்படுத்தி பயிரிட்டு அதிக வருவாய் ஈட்டலாம்.இதுகுறித்து மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் (பொ)
பி. வேணுகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உடல் நலத்திற்கு
சிறுதானியங்களின் பங்கு முக்கியமாகி விட்டதை மக்கள் உணர்ந்துள்ளதால்,
தற்போது அதற்கு மவுசு அதிகரித்துள்ளது.
கம்பு: மானாவாரியிலும், இறவையிலும் செம்மண், குறுமண் மற்றும் இருமண்
நிலங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. ஆடிப் பட்டத்தில் கோ 7, கோ (சியு)
9, எக்ஸ் 7 மற்றும் ஐசிஎம்வி 221 ஆகிய ரகங்கள் சிறந்தவை. நிலத்தை இரும்புக்
கலப்பை மற்றும் நாட்டுக் கலப்பைக் கொண்டு இரு முறை உழுது, நிலத்தில்
கட்டிகள் இல்லாமல் தயார் செய்ய வேண்டும்.
ஏக்கருக்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 4 பொட்டலம் மற்றும் பாஸ்போ
பாக்டீரியா 4 பொட்டலம் ஆகியவற்றை மக்கிய தொழு எருவுடன் கலந்து மண்ணில் இட
வேண்டும். 45 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும் அல்லது நீர்
அளவைப் பொறுத்து 10 அல்லது 30 செ.மீட்டர் பாத்திகள் அமைக்க வேண்டும்.
ராகி: கோ 12, கோ 13, ஜிபியு 28, ஜிபுயு 67 ரகங்களைப் பயிரிடலாம். சான்று
பெற்ற விதைகளைப் பயன்படுத்துவது நல்லது. வறட்சியைத் தாங்கி வளர,
பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த
கரைசலில் விதைகளை ஆறு மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலர்த்திய பின்
விதைத்தால் வறட்சியைத் தாங்கி வளரும்.
விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், ஒரு
பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களைத் தேவையான அளவு ஆறிய அரிசிக்
கஞ்சியுடன் கலந்து, ஏக்கருக்கு 4 கிலோ விதையுடன் கலக்கி நன்கு நிழலில்
உலர்த்தி பின் விதைக்க வேண்டும். மண் பரிசோதனை முடிவுகளின்படி உரமிடுதல்
சிறந்தது. இல்லையெனில், பொதுப் பரிந்துரையான ஏக்கருக்கு 16:8:8 கிலோ தழை,
மணி மற்றும் சாம்பல் சத்துக்களைத் தரும் உரங்களான 35 கிலோ யூரியா, சூப்பர்
பாஸ்பேட் 50 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஸ் 13 கிலோ இடலாம்.
மக்காச்சோளம்: நீர்த் தேவை அதிகமுள்ள அனைத்துப் பயிர்களுக்கும் சிறந்த
மாற்றுப் பயிராக மக்காச்சோளம் பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த காலத்தில்
விவசாயிக்கு உடனடி வருவாயை இந்தப் பயிர் அளிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை
நிலவுவதால் 90-100 நாள்களில் உயர் விளைச்சலும், கூடுதல் வருவாய் பெற நவீன
தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்.
மானாவாரியில் ஆடிப் பட்டத்திலும், இறவையில் ஆடி, புரட்டாசி மற்றும் தைப்
பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். கோ 1, கோ.எச்.3, கோ.எச்.4 ரகங்கள்
அனைத்துப் பகுதிகளிலும் பயிரிட ஏற்றதாகும். ஏக்கருக்கு ரகங்களுக்கு 8 கிலோ
விதை, வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ போதுமானது. விதைகளை செடிக்கு செடி 20
செ.மீ. மற்றும் பாருக்கு பார் 45 செ.மீ இடைவெளி இருக்கும் வகையில் 4 செமீ
ஆழத்தில் விதைக்க வேண்டும்.
சாமை: வறட்சியைத் தாங்கி உயர் விளைச்சல் தரக்கூடிய சாமை ரகங்களான கோ 3,
கோ (சாமை) 4, பையூர் 2 மற்றும் கே 1 ஆகிய ரகங்களைச் சாகுபடி செய்ய
வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ விதை போதுமானது. பயிரின் வளர்ச்சி ஒரே சீராக
இருக்க விதைப்பான் மூலம் வரிசை விதைப்புச் செய்ய வேண்டும்.
இதன்மூலம் அதிக பரப்பளவில் மண் ஈரம் காய்வதற்கு முன் விதைப்புச்
செய்யலாம். விதைகளை 2.5 செ.மீ. ஆழத்தில் வரிசைக்கு வரிசை 25 செ.மீ.
இடைவெளியும், பயிருக்கு பயிர் 10 செ.மீ. இடைவெளியும் இருக்கும் வகையில்
விதைக்க வேண்டும் என்றார் அவர்.

--- Thanks to Dinamani
 
TamilMadhuraDate: Saturday, 06 Sep 2014, 2:43 AM | Message # 19
Lieutenant
Group: Checked
Messages: 58
Status: Offline
பயனுள்ள தகவல்கள். விவசாயம் என்பது உண்மையிலேயே அற்புதமான விஷயம்.  சிட்டியில் இருக்கும் நாம் அப்பப்ப கிராமத்துக்கு விசிட் விட்டா நல்லாருக்கும்.
ஹாய் இந்தத்  தகவல்களில் வைக்கோல் பெட்டி என்னை ரொம்ப கவர்ந்துடுச்சுப்பா. நம்ம ஊர்ல பவர்கட் ஆகும், காஸ் சிலிண்டர் விலை வருஷத்துக்கு ஒரு தடவை ஏறும்ன்னு தெரிஞ்சே உருவாக்கி இருப்பாங்களோ?
வெளிநாட்டிலும் ஹே பாக்ஸ் இருக்காம். இதைப் பத்தி படிச்சதும் ஒரு  ஆர்வக் கோளாறுல youtube-ல பார்த்தேன். நூறே ரூபாய்தானாம். சூப்பர் இல்ல. சென்னைல கெடச்சா சொல்லுங்கப்பா


தமிழ் மதுரா

Message edited by TamilMadhura - Saturday, 06 Sep 2014, 2:52 AM
 
JanviDate: Sunday, 07 Sep 2014, 4:21 PM | Message # 20
Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
நன்றி தமிழ்மதுரா
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பசுமை - இயற்கையின் கொடை » விவசாய தொழில்நுட்பம் » விவசாய தொழில்நுட்பம் (விவசாய தொழில்நுட்பம்)
Search: