Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Wednesday, 19 Feb 2014, 12:12 PM | Message # 171 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| அன்னாசி பழ பச்சடி:
அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இதுவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.
வேளைக்கீரை, குடை மிளகாய், பூண்டு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக கொழுப்பு குறையும்.
பூண்டு இரண்டு பல், ஓமம் கால் ஸ்பூன், மிளகு 3 மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்
லெட்டூஸ் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தொப்பையைக் குறைக்கலாம்.
லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
உலர்ந்த ரோஜா இதழ், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.
முள்ளிக் கீரை சாறு எடுத்து அதில் நெல்லிக்காயை ஊற வைக்கவும். அதை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தொப்பை குறையும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 19 Feb 2014, 12:13 PM | Message # 172 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Eggplant a Good Food for Weight Loss
Eggplant is a great food to help you lose weight. Eggplant is a low-carb, nutrient-dense, calorie-poor food, meaning that it contains high levels of nutrients but not a lot of calories or carbohydrates. One cup of eggplant contains only eight grams of carbohydrates, two of those coming from fiber. It is also a low glycemic food, meaning that the small amount of carbohydrates in eggplant doesn't cause much of an impact on your blood sugar levels (another key for optimizing weight loss).
If you're looking for a great way to prepare eggplant, here is a healthy recipe
Middle Eastern Inspired Eggplant Ingredients: 2 large eggplant, peeled and cut into ½-inch cubes 1 small onion, small dice 2 cloves garlic, minced 1 14 oz can whole plum tomatoes Olive oil 2 Tbps tomato paste 1 ½ T Garam Masala 1 T Madras curry powder ¼ t ground clove 2 Tbsp balsamic vinegar 1 Tbsp honey ½ cup chicken broth
Servings: 4
Directions: Add olive oil to coat the bottom of a large, hot skillet. Add onion and eggplant, salt and pepper generously. Add garlic and toss frequently until the eggplant has a little color to it. Next add the tomato paste, allowing to heat and toast just a bit from the heat of the pan. Pour in <a class="link" href="http://u.to/fe5OBg" title="http://www.shape.com/weight-loss/food-weight-loss/ask-diet-doctor-eggplant-good-food-weight-loss#" rel="nofollow" target="_blank">balsamic vinegar and heat until the liquid reduces by half. Stir in the spices, honey and raisins. Add tomatoes, crushing by hand as adding, reduce heat to a simmer. Add chicken broth and allow the dish to simmer until thickened to almost a stew consistency. Taste and adjust to liking.
Nutrition Information</a> (per serving): 150 calories, 4 gram fat, 29 grams carbohydrates, 10 gram fiber, 5 grams protein
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 19 Feb 2014, 12:14 PM | Message # 173 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Here are some weight loss tips shared by me.. 1. Don’t skip any meals 2. Learn about how to prepare foods Instead of deep frying, try grilling, stir frying, microwaving and baking. 3. Avoid a lot of sugar and use to little as you can. 4. Increase the use of water 5. Use freash fruits and vegetables 6. Use salads 7. Decrease the use of the Fats 8. Take exercise daily 9. Try to walking and cycling daily. 10. Have a cup of green tea daily after the launch.
endrum anbudan
vijiram
|
|
| |
Meenatchi | Date: Wednesday, 19 Feb 2014, 1:31 PM | Message # 174 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| hi rams,
thaqnks for weightloss tips....
Meenatchi .S
|
|
| |
rams | Date: Wednesday, 19 Feb 2014, 5:24 PM | Message # 175 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| அரியவகை கனிமவளம் கண்டுபிடிப்பு: எட்டு நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைவு
ஐதராபாத்: அணுசக்திக்கு தேவையான யுரேனியம் வகையை சேர்ந்த இயாந்தினைட் கனிமம் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அணுசக்திக்கு தேவையான அரிய வகை கனிமமான யுரேனியம்(யு6 மற்றும் யு4+ ) வகையை சேர்ந்த யுரேனியம் ஆக்ஸைடின் மற்றொரு வகையான இயாந்தினைட் ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் அச்சம்பேட் மண்டல் பகுதியை சேர்ந்த அக்காவரம் கிராமத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் அரியவகை கனிமங்களை கொண்டுள்ள நாடுகளின் வரிசையி்ல இந்தியா இணைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, ஜெர்மனி , பிரான்ஸ் உட்பட எட்டு நாடுகளில் மட்டுமே இந்த வகையான கனிம வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின்வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 90 ஆண்டுகளில் இந்தியாவில் இத்தகைய கனிம வளம் இருப்பது கண்டுப்பிடித்திருப்பது இது தான் முதல் முறையாகும்.
இயாந்தினைட் கனிம வளம் முதன் முறையாக காங்கோவில் 1920-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இருப்பினும் இந்தியாவில் இதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. தற்போது அணுசக்தி இயக்குனரகத்தை சேர்ந்த பி.எஸ். பாரிகர், எஸ்.கே. ஸ்ரீவத்சவா, யமுனாசிங், கே.கே. பரஸ்கார், பி.வி.ரமேஷ்பாபு, மற்றும் ஆர். விஸ்வநாதன் ஆகியோர் இதனை கண்டு பிடித்துள்ளனர். இயாந்தினைட் கனிம வளம் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் அகாடமியின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் அனாடைஸ்,ருட்டில், மைக்ரோலைன், பயோடைட், மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிம வகைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 19 Feb 2014, 5:24 PM | Message # 176 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| எருமை மாடுகளில் இருந்து ஆணிகள்
எருமை மாடுகளின் பெரிய கொம்புகளின் உறுதியான நுனிப்பகுதியில் இருந்து, ஆணிகள் தயாரிக்கப்படுகின்றன.இந்த ஆணிகள், கடற்படைத் துறைக்கு முக்கியமானவை. கப்பல்களின் அடிப்பாகத்தில் உள்ள ஸ்டீல் தகடுகளை இணைக்க, இரும்பு ஆணிகளைப் பயன்படுத்தினால், அவை கடல்நீரில் துருப்பிடித்து விடும். ஆனால் இந்த எருமைக் கொம்பு ஆணிகள் துருப்பிடிக்காதவை.ஆணிகள் தயாரித்த பிறகு, மீதி உள்ள கொம்பு சுத்தப்படுத்தி உருக்கி, கொதிக்க வைத்து உயர்ந்த வகை மருந்துகளை அடைக்கும் "கேப்ஸ்யூல்' தயாரிப்பில் பயன்படுகின்றன.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 19 Feb 2014, 5:26 PM | Message # 177 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| சாக்லேட் பொக்கே'யில் சாதித்தேன்!
வித்தியாசமாக சிந்தித்து, 'சாக்லேட் பொக்கே'யில் சாதித்த, ராஜராஜேஸ்வரி:
என் சொந்த ஊர் சிவகங்கை. தற்போது, மதுரையில் வசிக்கிறேன். ஒரு முறை எதார்த்தமாக, இரண்டு மணி நேரத்திலேயே சாக்லேட் செய்ய கற்றேன். அதை வைத்தே, சாக்லேட் தொழில் பண்ணலாம் என, தைரியமாக முடிவெடுத்து, களத்தில் இறங்கினேன்.ஆரம்பத்தில், நான் தயாரித்த சாக்லெட்டுகளை, வீட்டு பிரிட்ஜில் இருந்து எடுத்துட்டு போய், வாடிக்கையாளர் கடைகளில் உள்ள பிரிட்ஜில் வைப்பேன். அதற்குள் எல்லா சாக்லெட்டுகளும் உருகிடும். அதன் பின்னரே, மாலை நேரங்களில் டெலிவரி கொடுக்க ஆரம்பித்தேன்.இப்படி, இத்தொழிலில் அடிபட்டு அடிபட்டே, பல அடிப்படைகளை கற்றுக் கொண்டேன். என் சாக்லேட்டின் தரமும், ருசியும் வாய்மொழி விளம்பரமாகவே பரவ, தொழில் வளர்ச்சி பெற்றது.தற்போது, சென்னை, விருதுநகர், சிவகாசி போன்ற ஊர்களில் இருந்தெல்லாம், எனக்கு ஆர்டர் கிடைக்குது. குறிப்பாக, சென்னையில் உள்ள மால்கள், பெரிய ஸ்வீட் கடைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும், நல்ல வரவேற்பு உள்ளது.ஒரு முறை, என் தோழியின் திருமணத்திற்காக, பிளவர் பொக்கே வாங்க நினைத்தேன். அப்போது தான், நான் செய்யும் சாக்லெட்டுகளையே பொக்கேவாக செய்து தந்தால் என்ன என, யோசித்தேன். அத்திருமணத்தில், என் தயாரிப்பை பார்த்து, பலரும் பாராட்டினர்.பல நூறு ரூபாய்கள் செலவழித்து வாங்கும் பொக்கே மலர்கள், இரண்டொரு நாளில் வாடிடும். ஆனால், சாக்லேட் பொக்கே, வீணாகாது என்பதால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், ராமநாதபுரத்தில் ஒரு விழாவுக்கு கலெக்டரை வரவேற்க, என் சாக்லேட் பொக்கேயை வாங்கிட்டுப் போனதுல, எனக்கு ரொம்ப சந்தோஷம்.பொக்கேவில் அதிக மாக, 'ஹார்ட் மாடலை' தான் விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. குழந்தைகளின் பிறந்தநாளுக்கு டெடிபியர், பறவைகள் மற்றும் பழங்களின் வடிவங்களில் சாக்லேட் செய்வேன். திருமண சீர் தட்டில் வைக்க, விசேஷங்களில் வரவேற்பில் வைக்க என, வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப, புதிய மாடல்களிலும் செய்கிறேன். பெரும்பாலும், டார்க் பிரவுன் சாக்லேட்டை, 'நட்ஸ்' சேர்த்து தான் பொக்கே செய்வேன். அப்போது தான், 'டேஸ்ட்டாவும், ரிச்சா'கவும் இருக்கும். மூணு மாதங்கள் வரை, இந்த பொக்கே சாக்லேட்டை உண்ண பயன்படுத்தலாம்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 19 Feb 2014, 5:26 PM | Message # 178 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பொது அறிவு...!
*ஒரு மனிதனுக்கு முதன் முதலில் செயல்படத் துவங்குவது காது.
*அதே போல் மரணத்திற்கு முன் கடைசியாக செயலிழக்கும் உறுப்பும் காதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
*முத்ன் முதலில் பூட்டு சாவியை ரோமானியர்கள் தான் அறிமுகப்படுத்தினர்
*வலராற்றுப் புகழ் பெற்ற மகத நாட்டின் இன்றைய பெயர் பீகார்
*முதன் முதலில் பிரான்ஸ் நாட்டில் கார்களில் நம்பர் பிளேட்டுகள் அறிமுகப்படுத்தினர்
*முதன் முதலில் 17 ஆம் நூற்றாண்டில் முதலாம் சார்லஸ் மன்னரின் சமையற்காரர் ஐஸ்கிரீமை உருவாக்கினார்..
*முதன் முதலில் உலகத்தைச் சுற்றி வந்த கப்பல் விக்டோரியா ஆகும்
endrum anbudan
vijiram
|
|
| |
vaideesh | Date: Wednesday, 19 Feb 2014, 6:23 PM | Message # 179 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Dear Rams, thanks for the wonderful informations.
|
|
| |
rams | Date: Wednesday, 19 Feb 2014, 8:31 PM | Message # 180 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| ஆச்சரியப்படும் உண்மைகள்:
1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.
2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.
3. டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.
4. சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.
5. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.
6. ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.
67. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.
8. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வின் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.
9. கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்
10. வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்...
endrum anbudan
vijiram
|
|
| |